இணையம் வழித் தமிழ்கல்வி

இணையம் வழித் தமிழ்கல்வி

பெ.செங்கோட்டையன்

உதவிப்பேராசிரியர்

வேளாண்மைக் கல்லூரி&ஆராய்ச்சி நிலையம்

 

முன்னுரை

தமிழ் மொழி மிக நீண்ட வரலாற்றையும் சிறந்த இலக்கண இலக்கிய வளங்களையும் தன்னகத்தைக் கொண்டது.

திங்களொடும் செம்பரிதி தன்னோடும்

விண்ணோடும் உடுக்களோடும்

பொங்கு கடல் இவ்வற்றோடும் பிறந்த தமிழ்

என பாவேந்தர் பறைசாற்றிய  நம் தாய்த் தமிழினைக் கற்பதற்கும் கற்பிப்பதற்கும இன்றைய காலகட்டத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மிக அவசியமாகக் கருதப்படுகிறது.

ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி வரை இணையம்

பரந்த இவ்வுலகில் அறிவியலின் வளர்ச்சி அளப்பெரியது. வேகமான அறிவியல்  புரட்சியில் கணினியின் பயன்பாடு மிக முக்கியத் தேவையாகிறது . தகவல் தொழில்நுட்பத் துறையில் அனைவரையும் இணைக்கும் ஒரு துறையாக இணையதளம் விளங்குகிறது என்றால் அது மிகையல்ல .உலகில் எந்த மூலையில் இருக்கும் மக்களும் இணையத்தின் மூலம் அனைத்து துறை குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.  சங்ககாலம் முதல் இன்று வரை எண்ணிலடங்கா நூல்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஆதிகாலத்தில்  மணல் ,கல்பாறை, ஓலைச்சுவடிகளில் தான்  பதிப்பித்தனர் .இன்று கணினியின் துணைகொண்டு பதிப்பித்து உலகில்  நமக்கான தேவைகளை அந்த நொடிப் பொழுதே வாசித்து தெளிவு பெற முடிகிறது .

இதற்கு காரணம் கணினியும் இணையும் என்றால் அது மிகை ஆகாது.

ஒருவர் ஆராய்ச்சி தொடர்பாகவோ, தமது இலக்கண, இலக்கிய அறிவை வளர்த்துக்கொள்ள ஒருவர் நூலகத்திற்குச் சென்று தனக்கு வேண்டிய ஒரு நூலை தேடுவது மிக எளிதானதல்ல, பொறுமையும், நேரமும் மிக அவசியமாகிறது.  ஆனால்

இணையம் வழியாக கணிப்பொறியிலோ, கையடக்க பேசியிலோ தேடும்போது  தேடியதைக் கண் முன்னே கொண்டு வந்து குவித்துவிடும். சில வேளைகளில் நாம் ஒன்றைத் தேட அதைனைக் கொண்டு வந்து தருவதோடு  அதனோடு தொடர்புடைய மேலும் பல அரிய தகவல்களை நமக்கு அளிக்கும். ஆய்வுப் பணியில்  ஈடுபடுவோருக்கு இணையம் மிகச்சிறந்த வழிகாட்டுதலாகவும் அமைகிறது. நமது தேடல் மட்டுமன்றி கூடுதலாகவும் அதே வேளையில் தனியொரு மனிதனோ அல்லது ஒரு குழுவினரோ தேடிக் கண்டுபிடிக்க முடியாதவற்றையும் மிகுந்த காலம் தேவைப்படுகின்ற தேடுதல்களைக்கூட மிக எளிதாகவும் விரைந்தும் செய்து முடிகின்ற ஆற்றல் வாய்ந்ததுதான் இணையம்.

இணையத்தில் தமிழ் கற்பித்தல்

தமிழ்மொழியினை ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்விவரை படிப்பதற்கான வாய்ப்புகள் இணையம் வழியாக குவிந்து கிடக்கின்றன். தமிழ் கற்க வேண்டும் என்று  விசைப்பலகையில் தட்டச்சு செய்து கூகுளில் (இணையம்) உள்ளீடு செய்தால் ஆயிரமாயிரம் தளங்கள் தமிழ் மொழி கற்றுத்தர ஆயத்தமாகி நிற்கின்றன.

தமிழ் மொழியின் உயிர், மெய், உயிர்மெய் என வரிசைப்படுத்தி அறிமுகம் செய்து, எழுதும் முறைமை, உச்சரிக்கும் முறையையும் ஒளி, ஒலிப் பல்லூடகக் காட்சிகளாக திரையில் தெரிகிறது. இதன் மூலம் உலகில் எந்த நாட்டில் இருப்பவரும் நம் தாய்மொழியை மிக எளிதாக இணைய உதவியுடன் கற்று , உற்று, உணரமுடியும்.

தமிழ் மென்பொருள்கள்

கணினியில் முதன்முதலில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் அளவிலேயே சாஃப்ட்வேர்கள் அமைந்திருந்தனர் 1983-84 காலகட்டத்தில் கணினி வல்லுநர்கள் தமிழ் மொழியையும் கணினியில் புகுத்த திட்டமிட்டு அதற்கான முயற்சி ஈடுபட்டனர். அதேபோல ஆவணங்கள் வரைதல்கள் கணக்குகள் என்று பலதரப்பட்ட சிறப்பு இயக்கத்திற்கும் ஆங்கில மென்பொருளை உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை அப்படியே தமிழிலும் கொண்டு வருவதற்கான தமிழ் கணினி வல்லுநர்கள் ஆதமி என்ற சாப்ட்வேரை முதன்முதலாக உருவாக்கினார்கள்.1984 ஆம் ஆண்டு கனடாவில் வாழும் சீனிவாசன் என்பவரால் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டது.

தமிழ் எழுத்துருக்கள்

பாமினி, அவ்வையார், செந்தமிழ், லதா, கபிலன், பூபாலம், போன்ற எண்ணிலடங்கா எழுத்துருக்கள் இணையத்தின் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து தமிழ் நூல்களை அச்சேற்றம் செய்யலாம் விரும்பியவடிவில் எழுத்துக்களை மாற்றம் செய்துகொள்ளவும் இணையம் துணை புரிந்து வந்தது.ஆனால் எழுத்துருக்கள் வேறுபட்டு இருந்தால் பல பிரச்சனைகள்  இருந்தன. இப்பிரச்சனைகளை  தமிழ் மொழி மட்டுமில்லாமல்,உலகின் பல மொழிகளும் சந்தித்தன. இப்பிரச்சனைகளைக் களைவதற்காக தொழில்நுட்ப நிறுவன ங்கள் கையாண்ட  முறை ஒருங்குறி  எழுத்துரு ஆகும்.

ஒருங்குறி

ஒருங்குறி எழுத்துரு என்பது யுனிவர்சல் கோடட் கேரக்டர் செட் (யுசிஎஸ்)-ல் இருந்து எழுத்துக்களை உள்ளடக்கியது-பல மொழிகளிலிருந்து எழுத்துகள் மற்றும் கிளிஃப்களின் விரிவான தொகுப்பு-அந்த எழுத்துகள் இயங்குதளங்கள் மற்றும் அமைப்புகளில் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் குறியிடப்பட்டது. ASCII எழுத்துரு போன்ற ஒருங்குறி அல்லாத எழுத்துரு, ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது எழுத்து குறியாக்கத்திற்கு குறிப்பிட்டது மற்றும் எழுத்துகளின் சிறிய துணைக்குழுவை மட்டுமே கொண்டுள்ளது. இது ஆங்கிலத்தில் அழகாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் மொழிபெயர்ப்பின் அடிப்படையில் நினைத்தால் அது மிகவும் வரம்புக்குட்பட்டதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உச்சரிப்பு எழுத்துக்கள் இல்லாததால் ASCII எழுத்துருவைப் பயன்படுத்தி உங்கள் உள்ளடக்கத்தை மொழிபெயர்க்கும்போது, எந்த உச்சரிப்பு எழுத்துகளும் தோன்றாது. அந்த சமயங்களில், விடுபட்ட எழுத்து பெரும்பாலும் கேள்விக்குறியாகவோ அல்லது சதுரப் பெட்டியாகவோ உரையில் தோன்றும்.

இது தொழில்சார்ந்ததாகத் தோன்றுவது மட்டுமல்லாமல், அவற்றில் போதுமான அளவு இருந்தால், அது உரையைப் படிக்க முடியாததாக மாற்றும். ஒரு ஒருங்குறி எழுத்துருவில் சாத்தியமான அனைத்து ஒருங்குறி எழுத்துக்களையும் சேர்க்க முடியாது என்றாலும், UCS இல் தற்போது 136,000 எழுத்துக்கள் உள்ளன, 1.1 மில்லியனுக்கும் அதிகமான இடங்களைக் கொண்ட ஒருங்குறி எழுத்துருக்கள் முடிந்தவரை விரிவானதாக இருக்க முயல்கின்றன மற்றும் நிச்சயமாக அதை விட பரந்த அளிவிலான எழுத்துக்கள் உள்ளன. ஒருங்குறி அல்லாத எழுத்துருக்கள். ஒருங்குறி அல்லாத எழுத்துருக்களும் இயங்குதளம் சார்ந்ததாக இருக்கலாம், அவற்றின் பயனை மட்டுப்படுத்துகிறது. ஒருங்குறி எழுத்துருக்கள் Windows, Mac மற்றும் பிற இயக்க முறைமைகளில் வேலை செய்கின்றன, எனவே நீங்கள் மொழிபெயர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை எளிதாகப் பகிரலாம் அல்லது மீண்டும் பயன்படுத்தலாம். விண்டோஸ் இயங்குதளத்தின் பன்முகத்தன்மையை யாராவது விரும்பினாலும் அல்லது ஹார்ட்கோர் ஆப்பிள் ரசிகராக இருந்தாலும் பரவாயில்லை, யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்தி மொழிபெயர்க்கப்பட்ட ஆவணம் வேலை செய்கிறது.

தமிழக அரசும்  பல தனியார் நிறுவன ங்களும் பல்வகை ஒருங்குறி எழுத்துருக்களை தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளன. அவற்றின் தொகுப்பும்,பயன்படுத்தும் முறையும் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. தமிழில் ஒருங்குறி எழுத்துக்களைப் பயன்படுத்துவது தமிழை இன்னும் அதிக அளவு இணையத்தில் எடுத்துச் செல்ல உதவும்.

இணையத்தின் வழி தமிழ் கற்பிக்கும் பணி

ஆசிரியை ஆதிக்கத்திலும் கட்டுப்பாட்டிலும் முறை இன்று மாணவர்கள் மையப்படுத்தி மாணவரின் கற்றல் சிந்தனையை உலகப்போக்கு கற்றல் திறன் சூழல் வாய்ப்பு இவற்றை அடிப்படையாகக் கொண்டு கற்பித்தல் ஆர்வத்தையும் தன்னம்பிக்கையும் தானே தன்னை மதிப்பீடு  வழங்கும் தன்மை கொண்டது இனியவதி கல்வியும் கட்டணம் ஆகும் இணையமும் இனிய தமிழகம் பக்கம் 34 என்ற மேற்கோள் என் மேற்கோள் வழி இணைய வழி கல்வியின் சிறப்பை அறியலாம்.

முடிவுரை

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் கனவு இணையத்தின் வழி சாத்தியமாகியுள்ளது .இணையம் உலகம் முழுவதையும் இணைக்கின்றது. இணையத்தின் மூலம் தமிழ் உள்ள மொழியியல் கூற்றுக் கோட்பாடுகளையும் மொழியின் பிற சிந்தனைகளையும் உணர முடிகிறது. .அது கற்பதற்கும் கற்பிப்பதற்கும் எளிதாகிறது .

error: Content is protected !!