இன்றைய கல்வியும் இணையப் பயன்பாடும்

இன்றைய கல்வியும்  இணையப் பயன்பாடும்

அ.தனலட்சுமி,

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

மேட்டமலை, சாத்தூர்.

மின்னஞ்சல்முகவரி – dhanalakshmia01011993@gmail.com

 

முன்னுரை

ஒரு நாட்டினை உலகநாடுகளின் மத்தியில் முன்னேற்றம் அடைந்த நாடாகக் காட்டுவதற்கு அடிப்படையாக விளங்குவது கல்வி ஆகும்.  கல்வியே இந்தச் சமூகத்தை அறிவுடையதாகவும் நாகரீகமானதாகவும் மாற்றுகிறது. இத்தகைய கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களையும் அந்த மாற்றங்களினால் விளையும் நன்மை, தீமைகளையும் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டைய கால கல்வி

பண்டைய காலத்தில் மக்கள் கல்வியை மிகவும் முக்கியமானதாகக் கருதினர்.  ஏனெனில் கல்வி கற்றவன் நாட்டை ஆளும் மன்னனை விடச் சிறப்பானவன் என்று கருதப்பட்டான்.  மன்னனுக்கு தன்நாட்டைத் தவிர வேறுநாட்டில் சிறப்பில்லை ஆனால் கற்றவர்களுக்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்ற பழமொழிக்கு ஏற்ப மனிதர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை பின்வரும் பாடலின் மூலம் அறியலாம்.

”மன்னனும் மாசற கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்ற விடமெல்லாம் சிறப்பு.” (மூதுரை – 26, ஔவையார்,

தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்)

பண்டையகால மக்களிடம் குருகுலக் கல்வி முறையே வழக்கில் இருந்தது. இங்கு மாணவர்கள் ஏதேனும் ஒரு கலையைக் கற்பதற்கு குருவின் இல்லத்திற்கேச் சென்று கல்வி கற்றனர். இத்தகைய கல்வி முறையில் மாணவர்கள் ஆசிரியரின் அருகில் அமர்ந்து கல்வி கற்கும் சூழல் நிழவியது. இதன் மூலம் மாணவன் தான் கற்க விரும்பியதை நன்கு கற்றுத்தேர்ந்தான். இத்தகைய கல்வி முறையில் ஆசிரியர்களுக்கு எந்தவித சம்பளமும் தரவில்லை. மாணவர்கள்தாங்கள்கல்விகற்பதற்காககுருவிற்குகாணிக்கைசெலுத்தியுள்ளனர். அவ்வாறுகொடுக்கப்படும்பொருள்எந்தகணக்குமின்றிகொடுக்கவேண்டும்என்பதையும் பின்வரும்பாடல்வழிஅறியலாம்.

”உற்றுழிஉதவியும், உறுபொருள்கொடுத்தும்,

பிற்றைநிலைமுனியாது, கற்றல்நன்றே!” (புறம் – 183, அ.முருக சுவாமிநாதன்,

மத்திய தமிழாய்வு நிறுவனம்.)

என்ற பாடலின்வழி ஆசிரியருக்கு கொடுக்கும் போது மிகுதியாக கொடுக்க வேண்டும் என்பதை அறியமுடிகிறது.

நவீனகல்விமுறை

ஐரோப்பியர்களின் வருகையால் இந்தியாவில் நவீனகல்விமுறை நடைமுறைக்கு வந்தது எனலாம். அவர்கள் வாணிபம் செய்வதற்காகவும், தங்களுடைய சமயத்தைப்பரப்புவதற்காகவும் நவீனகல்விமுறையை அறிமுகம் செய்துள்ளனர். இதில் ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுவான ஓர் இடத்தில் கூடிகல்விகற்க ஆரம்பித்தனர். இதன் மூலம் கல்வி நிறுவனங்கள் தோன்றின. கல்விநிறுவனங்கள் தோன்றிய பின்பு இன்றைய கல்விமுறை நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் கற்கவிரும்பும் கல்வி முழுமையாக கற்கவில்லை என்றே கூறலாம். இங்கு பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகின்றது. அதன்மூலம் அவர்கள் அந்த அறிந்து கொள்வதற்கு மட்டுமே முடிகின்றது. தான் கற்றக் கல்வியை கல்வி நிறுவனத்தை  விட்டுவெளியே வந்த பின்பு தான் நடைமுறைப்படுத்தி அறிந்து கொள்கின்றனர். இங்கு அனுபவக் கல்விக்கு வழியில்லை. ஏட்குக் கல்வி மட்டுமே தரப்படுகின்றது. இதன்மூலம் அவன் முழுமையாக கற்றுக்கொள்வதற்கு முன்பே அவனுடைய கல்லூரி காலம் முடிவடைகின்றது. பொதுவான இடங்களில் கல்வி கற்பதற்கு செல்லும் பொழுது பல்வேறு இனமக்களுடன் நட்புகொண்டு அவர்களின் கலாச்சாரம், பண்பாட்டையும் அறிந்துகொள்கிறான். பின்பு பல்வேறு நூல்களை கற்பதன் மூலம் சிறந்த அறிவுடையவனாகவும் திகழ்கிறான். இதற்கு அடுத்தநிலையில் கல்வியில் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.

கணினிவழிக்கல்வி

கணினியின் மூலமாக கல்வி கற்கும் முறை மாணவர்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது. கணினிக்கல்விமுறை சிறப்பானதாக கருதினர். மாணவர்கள் ஆசிரியர் கற்றுக்கொடுக்க நினைக்கும் பாடத்தை கணினியில் பதிவு செய்து அதன்மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தனர்.  இது மாணவர்களிடையே கற்றலில் ஆர்வத்தைதூண்டி அவர்களை நன்கு கற்க வழிவகுக்கும் என்று எண்ணி கல்வியில் கணினியை அறிமுகப்படுத்தினர்.

இணையவழிக்கல்வி

இணையம் (Internet) கணினிவழி கல்விக்கு அடுத்தபடியாக இதனை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் கல்விக்கான புதிய இணையதளங்களை உருவாக்கினர். இந்த இணையதளங்களில் சென்று மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கருத்துக்காளை தாங்களே அறிந்து கொண்டனர். இதன் மூலம் ஓர் இடத்தில் இருந்தே பல்வேறு கருத்துக்களை mwpe;Jகொண்டனர். கணினி பயன்படுத்தி இணையதளத்தில் சென்று தேடுபொறி மூலமாக தேடி கற்றுக்கொண்டதற்குமாறாக கைபேசி மூலம் Online வகுப்பு என்னும் Digtal கல்வி முறையை நடைமுறைப்படுத்தினர். மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத காலங்களில் இந்த இணையதள கல்விமுறை பயன் தருகிறது. இதன் மூலம் ஒரு மாணவன் தான் இருந்த இடத்திலிருந்தே கல்வி கற்கும் சூழல் உருவாகியது.

இணையவழிக் கல்வியின் நன்மைகள்

மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற நிலை மாறி தற்போது அவர்கள் இருக்கும் இடத்திலிருந்தே பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில்  கல்வி கற்க முடியும்.மாணவர்கள் பள்ளி பாடங்களுடன் இணைந்து அவர்களுக்கு விருப்பமான பல்வேறு துறைகளைப் பற்றி அறிந்து கொண்டு படிப்பதற்கும் ஏதுவாக உள்ளது.

இது மாணவர்களுக்கு ஒருசில வேளைகளை எளிமையாக்குகிறது. அதவாது மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றுவரக்கூடிய நேரத்தையும், பயணச்செலவையும்  குறைக்கிறது. இயற்கைப் போரிடர் காலங்களிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க இணையவழிக்  கல்வி உதவுகின்றது.

இணையவழிக் கல்வியின் தீமைகள்

பள்ளிக்குச் சென்று கல்வி கற்கும் பொழுது மாணவர்கள் தன் அருகில் இருக்கும் சகமாணவர்களுடன்  நட்புகொள்ளும் நிலை இருக்கும். இந்த நட்பு கொள்ளும் முறை குறைகின்றது. இதன் மூலம் சமூகத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதை அறியமுடியாத நிலை அவர்களிடம் உருவாகிறது.

மாணவர்களிடம் விட்டுகொடுக்கும் திறன் குறைகின்றது. கவனச்சிதறல் அதிகமாகின்றது. அவர்கள் ஆசிரியர் நடத்தும் பொழுது வகுப்பினை கவனிக்கின்றார்களா என்பதை அறியமுடியாத நிலை உள்ளது.நேரடிவகுப்பு முறையில் ஆசிரியர் நடத்தும் பொழுது புரியவில்லை என்றால் மாணவர்கள் ஆசிரியர்களிடம் தனியாகச் சென்று தங்களுடைய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்கின்றனர். ஆனால் இணைய வழிவகுப்பறையில் அவ்வாறன நிலையில்லை.ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு இடைவெளி காணப்படுகின்றது.

மாணவர்கள் அதிகநேரம் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் அவர்களின் சிந்தனைத்திறன் குறைகின்றது. மற்றவர்கள் ஏதேனும் கேள்விகேட்டால் சிந்தித்து பதில் கூறாமல் இணையத்தைப் பார்த்து பதில் கூறுகின்றனர். இதன் மூலம் அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் குறைகின்றது.அதிகநேரம் இணையத்தில் செலவிடுவதால் மாணவர்கள் சிறுவயதிலேயே தவறான வழிக்குச் சென்று விடுகின்றனர். இந்த இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

முடிவுரை

கல்வியில் கலந்தோறும் ஒரு சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. குருகுலக் கல்வியில் மாணவர்கள் ஆசிரியரின் அருகில் அமர்ந்து கல்வி கற்றனர். பின்பு ஆசிரியர்களும் மாணவர்களும் பொதுவான ஓர் இடத்தில் கூடி கல்வி கற்றனர். ஆனால் இப்பொழுது ஆசிரியர்களும் மாணவர்களும் வெவ்வேறு இடங்களில் கல்வி கற்கும் சூழல் உறுவாகி உள்ளது.

துணைநூற்கள்

  1. புறநானூறு மூலமும் உரையும்  – அ.முருக சுவாமிநாதன்மத்திய தமிழாய்வு நிறுவனம்.
  2. மூதுரை ஔவையார்தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடநூல்
  3. இருபத்தோராம் நூற்றாண்டில் மக்கள் தகவல் தொடர்பியல் முனைவர் இரா. மருதநாயகம்
error: Content is protected !!