கல்வியியல் மாநாடு 2020

Educational conference 2020 digital editions

One can download the pdf form of the educational conference book 2020 here.

கல்வியியல் மாநாடு 2020 மின்னிதழ்கள்

இங்கு 2020 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதல் கல்வியியல் மாநாட்டின் கல்வியியல் மாநாட்டு இதழை இங்குத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 முதலாம் கல்வியியல்  மாநாடு 2020ன் அழைப்பும் அறிவிப்பும்

கொரானத் தொற்றினால் உருவான பேரிடச்சூழலில் தமிழ் நாட்டுத்  கல்விநிலையங்கள்,  இணைய வழி  கற்றல் கற்பித்தலில் அதிரடியாக  ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் முதல் இணையவழி கல்வியியல் மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. குறுகிய காலத்தில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் பங்கு கொண்டு தங்கள் கல்வி முறையில் ஏற்பட்டப் பிரச்சனைகள் பற்றியும் அதற்காக அவர்கள் கண்ட தீர்வுகளையும்  இம்மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். அவர்களின் கட்டுரைகள் பட்டியலிட்டு வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்அநிதம், இணையவழிக் கற்றல் கற்பித்தல் பணியில் தென்தமிழகத்தில் உள்ள பல கல்லூரிகளில் பயிலரங்கங்களை நிகழ்த்தி தமிழாசிரியர்களைக் கணினிக் கல்வித் தொழில்நுட்பத்தில் சிறப்புடன் இயங்கச் செய்ய வழிகாட்டியாய் இருக்கின்றது. இணையவழிக் கல்வி வளர்ச்சியை ஓங்கச்செய்வதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்றைய நவீனச் சூழலில் கணினி, மாணவர்களையும் ஆசிரியர்களையும் தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் புதுமையான அறிவியல் பூர்வமான கற்றலுக்கும் தயார் செய்கிறது. கற்பித்தலுக்கான கலைத் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், கல்வி ஆய்வு செய்வதற்கும், கல்விசார் கணக்கெடுப்பு செய்வதற்கும், கணினி வழிக் கற்றல் கற்பித்தல் பயன்பட்டு வருவதை வெளிப்படுத்தும் விதமாக தமிழ்அநிதம் (அமெரிக்கா) மேற்கண்ட நிறுவனங்களுடன் இணைந்து எதிர்வரும் அக்டோபர் 2,3,4 ஆகிய மூன்று நாட்கள் “கல்வியியல்” என்ற பொருண்மையில் பதிவு கட்டணம் ஏதும் இன்றி பன்னாட்டு மாநாட்டினை இணைய வழியாக நடத்த உள்ளது. உலக நாடுகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், கணினியியல், மொழியியல், கல்வியியல் சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், நிரலாளர்கள் அனைவரையும் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் படி மாநாட்டுக்குழு அன்புடன் அழைக்கின்றது.

அன்புடன் மாநாட்டுக்குழு

error: Content is protected !!