பன்முகத் துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும்
திருமதி.க.அருணா தேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
மேட்டமலை – சாத்தூா்
தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு ஆகும். ஆதிகாலத்தில் மனிதர்கள் அனைவரும் தன்னுடைய உணவு தேவைக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அத்தொழிலினை செய்ய கருவிகள் தேவைப்பட்டன. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம், வணிகம், போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயத்திற்கு தேவைப்படும் அனைத்து தொழில்களுக்கும் கருவிகள் வந்துள்ளன. கல்வி மனிதன் இணையதளம் வழியாக தான் இருக்கும் இடத்தில் இருந்து கல்வி பயிலும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மருத்துவம் துறையிலும் பல்வேறு கருவிகள் மற்றும் மருந்துகள் அனைத்து வகையான நோய்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துறைகளிலும் தரைவழி, கடல்வழி, வான்வழி போன்ற பாதைகளின் வழியாக இயங்கும் அளவிற்கு போக்குவரத்து துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆய்வாக இக்கட்டுரை அமைய உள்ளது.
விவசாயம்
மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு வகையான கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளான். வேளாண்மைக்காக மண்வெட்டி. ஏர், கத்தி(அரிவாள்), கோடாரி, உழவு இயந்திரம், துலா, கடப்பாரை போன்ற கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். வேளாண்மை – வேள் + ஆண்மை , வேள் – மண், ஆண்மை – ஆளுதல் (மண்ணை ஆளுதல்) என்பதாகும்.
உழவர்கள் பண்டை காலத்தில் உழவிற்காக பயன்படுத்திய கருவிகள் இயற்கை கலப்பை, சட்டிக்கலப்பை, சட்டிபப்பலுகுகள், சுழல்கலப்பை போன்ற பெரும்பாலானவற்றை விவசாயிகள் பயன்படுத்தியுள்ளார்கள். நாற்றுநடுவதற்கு, களை எடுப்பதற்கு, பயிர்; வகைகளை விதைக்க கோனாவீடர் மற்றும் இயந்திர களையெடுப்பனை பயன்படுத்துகிறார்கள். மினி டிராக்டர் என்னும் இயந்திரம் களையெடுக்கவும், மண் அணைக்கவும், பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். ‘ஜப்பான் நாட்டில் யான்மார் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் ஆறுவரிசை மற்றும் எட்டுவரிசை அமைத்து உழவரின் தேவைக்காகவும் பயன்படுத்துகின்றனர்’1; என்பதை அறிய முடிகின்றது. (உ.வ.வே.ப.13, உழவரின் வளரும் வேளாண்மை – ஹெ.பிலிப் – பக்கம்.13)
இதன்மூலம் விவசாயத்திற்க்காக பல்வேறு கருவிகள் வந்துள்ளதையும் மனிதர்களின் வேலை பளு குறைந்துள்ளதையும் விவசாயத்துறையின் முன்னேற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது.
கல்வி
கல்வி என்பதற்கு ‘கல் என்பது வேர்ச்சொல் ஆகும். கல்வி; என்ற சொல்லிற்க்கான ஆங்கிலசொல் Edcation என்பதாகும். இச்சொல் edcatio என்ற இலத்தின் சொல்லில்’2 இருந்து பெறப்பட்டதாகும். (ta.m.wikipedia.org)
அரசர்கள் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக குருவின் வீட்டில் சென்று கல்வி கற்று வந்துள்ளர்கள். பின்பு அவர்களுக்கு கோயில்கள், மடங்கள் போன்ற இடங்களில் பாடம் கற்றுள்ளார்கள். இன்றைய தகவல் தொடர்பின் வளர்ச்சியால் கல்வியினை மாணவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்து கல்வி கற்கும் அளவிற்கு கல்விதுறை வளர்ச்சி கண்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான தகவல் தெரிந்து கொள்ள வானொலி, தொலைகாட்சி, தொலைபேசி, இணையதளம், கணினி பல்வேறு மின்னணு பொருட்கள் மூலம் தகவலை அறிந்து கொள்ள முடிகின்றது.
மனிதன் முந்தைய காலத்தில் ஒரு தகவலை தெரிந்து கொள்ள நூலகம் நூலகமாக சென்ற காலம் போய் இன்றைய வளர்ச்சியால் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து தகவலை தெரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி துறை வளர்ச்சி கண்டுள்ளதை அறியமுடிகின்றது.
மருத்துவம்
மருத்துவத்துறை என்பது மற்ற துறைகளைப்போன்று வளா்ச்சி கண்டுள்ளது. ‘மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இதனை நோய் கண்டுபிடிக்கவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு ஆகும். இவ்வகையான செயல்பாடுகள் மூலம் மனிதா;களின் உடல்நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றிற்க்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற்செயல்முறைகள்’3 உள்ளடக்கும். (ta.m.wikipedia.org)
மருத்துவம் நம்முன்னோர்கள் காலத்தில் மருத்துவச்சி கொண்டு நோய்க்கு கைவைத்தியம் மற்றும் பெண்களுக்கு பிரசவம் பார்த்தார்கள்.இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியால் மருத்துவத்துறை வளா்ச்சி கண்டுள்ளது. கற்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கவும், புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, இருதயநோய், கண்பார்வை குறைபாடு, அறுவைசிகிச்சை, முடிவளருதல் போன்ற அனைத்து நோய்களுக்கும் இயந்திரங்களும், மருத்துவப் பொருட்களும் அறிவியலாளா்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது.
வாணிபம்
வணிகம் அல்லது வா்த்தகம் என்ாது மனிதனது தேவைகளையும், விருப்பக்கங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்க ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.
ஒரு பொருளையோ சேவையோ பஒணத்திற்கு விற்பனை செய்வது எணிகம் ஆகும். இவ்வணிகத்தை வணிக வளாகம், கடல் வணிகம், தடையிலா வணிகம், மரபு வணிகம், சில்லரை வணிகம், உலக வணிகம், உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம் என்று பல்வேறு முறைகளில் அமைந்துள்ளன. “சில்லறை வணிகம் என்பது உற்பத்தியாளா்களிடமிருந்து பொருட்களை மொத்த வியாபாரிகள் பொருட்களை பெறுகின்றனா். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் அந்த பொருட்களை பெறுகின்றனா். நுகா்வோா்கள் தத்தம் தேவைகேற்ப பொருட்கள் சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கி கொள்கின்றார்கள்“4 (ta.m.wikipedia.org) என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
வணிகத்துறையில் நாம் நேரடியாக சென்று பொருட்களை வாங்கி வந்துள்ளோம். இன்றைய வணிகத்தின் வளா்ச்சியால் மனிதன் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு தனக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவிற்கு வணிகத்துறை வளா்ச்சி அடைந்துள்ளதை அறிய கொள்ள முடிகின்றது.
போக்குவரத்து
முந்தைய காலங்களில் ஒருவா் மற்றொருவருக்கு ஒரு தகவலை சொல்லவேண்டுமானால் அவா் யாரிடம்தகவலை தெரிவிக்க வேண்டுமோ அவரை தேடி அந்த இடத்திற்கு கால்நடையாக சென்று சொல்லுவர்கள். அடுத்த கட்டமாக தோ், குதிரை, கழுதை, மாடு போன்ற வண்டிகள் மனிதனின் அறிவு வளா்ச்சியால் தோன்றியுள்ளன.
“மோட்டார் வாகனங்கள் சைக்கிள்கள், பேருந்துகள், தொடர் வண்டிகள், லாரிகள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், விண்வெளி ஊர்திகள் உள்ளிட்டவை அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடித்து மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள்“5 (ta.m.wikipedia.org) என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது..
இன்றைய அறிவியல் வளா்ச்சியால் மனிதன் மின்சார வழியாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் அளவிற்கு போக்குவரத்துத்துறை வளா்ச்சி கண்டுள்ளது.
தொழிநுட்ப தீமைகள்
தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு நன்மை என்று கூறிவிட முடியாது. இதனால் மக்கள் விவசாயத்தில் வெலை பார்க்கமுடியாமல் போகிறது. இணையதளம் எந்த அளவிற்கு மனிதனுக்கு நன்மை தருகிறதோ அதே அளவிற்கு தீமையும் தருகிறது. தொழிலுக்காக பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்துவதள் மூலம் நிலத்தடிநீா், நிலம் , மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
தொகுப்புரை
தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல்நுட்பம் ஆகும். இத்தொழில்நுட்பமானது அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது.விவசாயத்துறையில் மனிதா்களை விவசாயத்திற்கு பயன்படுத்திய காலம் சென்று இன்றைய தொழில்நுட்பத்தால் இயந்திரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அளவிற்கு வளா்ந்துள்ளது. கல்வியை மனிதன்தான் இருக்கும் இடத்தில் இருந்து பயிலும் அளவிற்கு இணையதளத்தில் கல்விமுறை முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவம் கைவைத்தியம் பார்த்த காலம்போய் இன்றைய மருத்துவம் இயந்திரங்களும் மருந்துப் பொருட்களும் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்க்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. வாணிபம் நேரடியாக சென்று பொருட்களை வாங்கிய காலம் சென்று அவா்களின்வீட்டிற்கு வந்து பொருட்களை தரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடையாக சென்ற காலம் சென்று இன்றைய அறிவியல் வளர்ச்சியால் மின்சாரத்தின் வழியாக வாகனங்களை இயக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.
சான்றெண் விளக்கம்
- .உழவரின் வளரும் வேளாண்மை – ஹெ.பிலிப் – பக்கம்.13
- . m.wikipedia.org
- .m.w;kipedia.org
- .m.wikipedia.org
- .m.wikipedia.org