விரல்களே கண்கள்

விரல்களே கண்கள்

முனைவர் சி.தேவி

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.

ஆய்வுச்சுருக்கம்

தமிழில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் கருத்தரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் நூல்களாகவும் பல தளங்களில், பெரும்பாலும் ஆய்வு இதழ்களாகவும் வருகின்றன. இப்போது உள்ள தளங்கள் வரையறைக்குட்பட்டு மிகச் சிலவே உள்ளன. எந்த மாநாட்டுக் கருத்தரங்க வெளியீடுகளைக் கண்டாலும், பொருண்மைகள் மீளுருவாக்கத்துடன் இருப்பதைக் காணும் போது ஆய்வாளர் மீண்டும் மீண்டும் ஒரே பொருண்மையை அதே வழியில் செய்து தங்கள் திறன்களை மற்ற பொருண்மைகளில் செலுத்தாமல் இருப்பதைக் காண முடிகிறது. ஓர் ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும்போது அந்த பொருண்மைகள் முன்பு எவ்வளவு தூரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ஏதுவாக ஒரு பொதுவான தளம் நம் தமிழ்மொழி ஆய்விற்குத் தேவை என்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்த விரும்புகின்றது. இக்கட்டுரை பிற மொழியில் இருக்கும் ஆய்வு தளங்களை அறிமுகப்படுத்தி,  அதைப் போன்று  தமிழிலும்  இருக்க வேண்டும் என்று  இதற்கு ஒரு வழியையும் நிறுவ முயல்கிறது.

Abstact

Human disabilities have been divided into major categories such as sensory impairment, intellectual disability, neurological disability, and physical disability. In 1784 Valentine Havé established a school for the blind in Paris. Maths through Taylor Frame – calculating device, Louis Braille – through tactile reading device, language lessons, music and handicrafts – basket making, seat weaving, weaving, bamboo carving etc. were taught. Braille – for literature reading, Tyler frame – for math reading, raised diagrams – for science reading, 3D model, screen reader, keyboard, audio book are learning tools for the blind.

அறிமுகம்

இறைவன் படைப்பில்  அரிய படைப்பு மானுடப்பிறப்பு. அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்றார் ஔவையார். குயவன் தான் செய்யும் பானைகள் அனைத்தையும் சரியாகச் செய்ய வேண்டும் என்றே விரும்புவான். இருப்பினும் அவ்வப்போது சில பிழைகள் ஏற்படும். அது போல இறைவன் படைப்பில் ஏற்பட்ட பிழைகளே  மாற்றுத்திறனாளிகள் என்று சுட்டப்படுகின்றனர். இவர்களுக்கான கல்வி முறை இங்கே கண்ணுறப்படுகின்றன.

மனிதனின் குறைபாடுகள்

 • புலன் குறைபாடு
 • அறிவுத்திறன்குறைபாடு
 • நரம்பியல் குறைபாடு
 • உடலியக்கக்குறைபாடு என்று மனிதனின் குறைபாடுகள் பெரும்பகுப்பாக  பகுக்கப்பட்டுள்ளது.
 • புலன் குறைபாடு – பார்வைக்குறைபாடு, கேட்கும் திறனில் உள்ள குறைபாடு மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள்என்று வகைப்படுத்தப்படுகிறது.
 • அறிவுத்திறன் குறைபாடு – மனநோய்கள் மற்றும் மனவளர்ச்சிக் குறைவைப் பற்றியது.
 • நரம்பியல் குறைபாடு – ஆடிசம் மற்றும் கற்றல் குறைபாடுகள்
 • உடலியக்கக் குறைபாடுகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட குறைபாடுகள்

இக்குறைபாடு உடையவர்கள் ஊனமுற்றோா் என்று சுட்டப்படுகின்றனர். முன்னாள் முதல்வா் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.மு.கருணாநிதி அவர்கள் மாற்றுத்திறனாளி எனும் பெயர் சூட்டினார். அது உண்மை தான். ஒரு உறுப்பில் குறை உள்ளவர்களுக்கு அத்திறன் மாற்று உறுப்பில் சேர்ந்து இரட்டிப்பாக இருக்கும். கண் குறை உள்ளவர்களுக்கு காதும், மூக்கும் மிகவும் கூர்மையாக இருக்கும்.

ஒரு குறைபாட்டுடன் மன வேதனையளிக்கும் சூழ்நிலையும் ஒன்றிணையும் ஊனம் என்பது ஏற்படுத்தப்படுவது, பெறப்படுவது அன்று எனச்சொல்லலாம்.

ஹெலன் கெல்லர் கூறுவது போல பார்வை குறைபாட்டினைப் பற்றிய மக்களின் மனப்பான்மை தாங்க இயலாத சுமையாகும். குறைபாடுள்ள ஒருவரின் மீது காட்டப்படும் அதீத இரக்கம் பல சமயங்களில் எதிர்மறையான மனப்பான்மையை ஏற்படுத்தி குறைபாடுள்ளவர் மேலும் மற்றவர்களைச் சார்ந்திருக்குமாறு செய்கிறது. சிலசமயம் இம்மனோபாவம் சலிப்பூட்டும் படியாக ஒரே மாதிரியாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் பழுதுபடுதல் குறைபாடு மற்றும் ஊனம் என்ற சொற்கள் கல்விக் கண்ணோட்டத்தில் வெவ்வேறு பொருள் கொண்டவை.

ஊனம் என்பது உடலில் தான் மனதில் இல்லை என்று மாற்றுத்திறனாளிகள் ஊக்கத்தோடு செயல்பட பல்வேறு திட்டங்கள், தீட்டப்பட்டன சட்டங்கள் இயற்றப்பட்டன. கல்வி மாற்றுத்திறனாளிகளுக்கு உற்ற துணையாக முடியும் என்பது முன் வைக்கப்பட்டது. தொடக்க காலத்தில் கொல்லப்பட்டு பின்னா் புறக்கணிக்கப்பட்டு, கேலிப்பொருளாக, பரிதாபத்திற்குரியவர்களாக பார்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக பயிற்சி அளிக்கவும் கல்வி வழங்கவும் சிறப்புப் பள்ளிகளும் கல்விநிறுவனங்களும் பல்வேறு நாடுகளில் நிறுவப்பட்டன.

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி

                        பிரான்சு  போர் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கண்பார்வையற்றவர்களான மாியதெரிசா மற்றும் வின் பேரடைஸ் ஆப் வியனா என்பவர்களின் அசாத்தியமான வியப்பூட்டும் சங்கீத அரங்கேற்றமானது வேலன்டைன் ஹவே என்பவரை வெகுவாக ஊக்குவித்தது.

அதன் விளைவாக அவர் 1784 ஆம் ஆண்டில் பேரிஸ் நகரில் கண்பார்வையற்றோருக்கான பள்ளியை நிறுவினர். அதைத்தொடர்ந்து மேற்கு ஐரோப்பாவில் பல பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டது. மேலும் இந்த எண்ணம் 1880 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளிலும் பரவியது.

எளிமையான தொழில்நுட்பத்துடன் கூடிய பயிற்சி நிரம்பிய அடிப்படை கல்வி சார்ந்த பாடம் வழங்கப்பட்டது. பார்வை இழந்தோர்க்கு இலக்கியங்களை  தடித்த ரோமன் எழுத்துகளில் கொடுத்தனர். 1834 இல் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த லூயி பிரெயில்

தடித்த புள்ளிகளின் தொகுப்பு

முழு நிறைவான தொகுப்பு என்ற முறைகளை உருவாக்கினார். அவர் கண்டுபிடித்த தடித்த புள்ளித் தொகுப்பிற்கு “பிரெயில்“ என்று அவர் பெயரே வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி நிறுவனம்

1791 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லிவர்பூல் என்னும் இடத்தில் முதல் பார்வையற்றோர் பள்ளி நிறுவப்பட்டது.  அமெரிக்க மதப்பிரசாரகர்கள் மூலம் 1883 இல் காது கேளாதோருக்கான முதல் கல்வி நிறுவனம் மும்பையிலும் 1887 ஆம் ஆண்டு பார்வையற்றோருக்கான முதல் கல்வி நிறுவனம் அமிர்தரசிலும் நிறுவப்பட்டது. பார்வையற்றோருக்கான இரண்டாம் பள்ளி செல்வி.ஏ.கே.ஆஸ்க்வித் என்பவரால் தமிழ்நாட்டில் பாளையங்கோட்டை என்னுமிடத்தில் நிறுவப்பட்டது. தொடர்ந்து 1947 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பார்வையற்றோருக்கான 32 பள்ளிகள் நிறுவப்பட்டன. இன்று இந்தியாவில் 3200க்கும் மேற்பட்ட சிறப்புப்பள்ளிகள் செயல்படுகின்றன.

பார்வையற்றோருக்கான கற்பிக்கும் பாடங்கள்

டெய்லர் பிரேம் –கணக்கிடும் கருவி மூலம் கணிதமும்

லூயி பிரேயில் – தொட்டுணர்ந்து படிக்கும் கருவி மூலம் மொழிசார் பாடங்களும்

இசை மற்றும் கைத்திறன் வேலைப்பாடுகள்-கூடைமுடைதல் இருக்கைபின்னுதல்,நெய்தல், மூங்கில் வேலைப்பாடுகள் போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டன.

பார்வையற்றோருக்கான கற்பித்தல் முறைகள்

பார்வையற்றோருக்காக சிறப்புக்கல்வி. உள்ளடங்கிய கல்வி,உயர்கல்வி  கல்வி இணைச்செயல்பாடுகள் என கற்பித்தல் முறைகள் உருவாக்கப்பட்டன.

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம், பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு  செயல்படுத்தப்படும் “சிறப்புக்கல்வி“

சக மாணவர்களோடு இணைந்து கற்கும் உள்ளடங்கிய கல்வி  என்று இரு வகை கற்பித்தல் முறைகள் உள்ளன.

” கோத்தாரி கல்விக்குழுவின் உற்று நோக்குதலின் இலக்கானது,உலகு தழுவிய துவக்ககல்வி சிறப்புக்குழந்தைகளின் தொகுதிகளையும் இக்கூட்டமைப்பில் இணைப்பதையே சார்ந்துள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கை 1992 –இன் மதிப்பீட்டின்படி ஒரு சதவீதம் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் பட்டியலில் சேர்ந்துள்ளனர். சிறப்புப் பள்ளிகளின் மூலம் சட்டரீதியான கல்விக் கட்டமைப்பானது குறைந்த நிலையிலேயே வளர்ச்சியை ஊனமுற்றோருக்கு அளித்தது. இருப்பினும் 90 சதவீத வளர்ச்சியை பொது பள்ளிகளின் மூலமாக தான் அடைய இயலும் என்ற உண்மையும் புரிந்தது.”

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் பார்வைக்குறையுடைய மாணவர்கள் பொதுப்பள்ளியில் பயிலும் போது சிறப்புக்குழந்தைகளுக்கான சிறப்பு ஆசிரியர்களும் பயன்படுத்தப்பட்டனர். கற்றல் திறனும் மேலோங்கிக் காணப்பட்டது.

உள்ளடங்கிய கல்வியானது எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துக் குழந்தைகளையும் சமமாக பாவிப்பதாகும். அந்த கல்வி அமைப்பானது குறைபாட்டை மட்டும் சரிசெய்வது அன்று. மாறாக சக மாணவர்களுடன் இணங்கி பயில்வதற்கான கற்றல் சூழ்நிலையையும் ஏற்படுத்தித் தருகிறது. ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தினால் பயனடைந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளடங்கிய கல்வித்திட்டம் உதவியது. மேலும் அவர்களை அதிகத்திறன் படைத்தவர்களாக மாற்றுகிறது.

உள்ளடங்கிய கல்விக்கு ஆயத்தப்படுத்துதல்

உள்ளடங்கிய கல்வியில்  மாற்றுத்திறனாளிகளை இணைக்கும் முன் சில பயிற்சிகள் கொடுத்து அவர்களை ஆயத்தப்படுத்த வேண்டும். அவை,

புலன்களுக்குப்பயிற்சி

முன்பருவ ப்ரெயில்பயிற்சி

பிரெயில் வாசித்தல் மற்றும் எழுதுதல்

புலன்களுக்குப்பயிற்சி

                        புலன்களின் பயிற்சி உள்ளடங்கிய கல்வியின் முதல்படி எனலாம். அதாவது மீதமிருக்கும் பலன்களை கேட்டல், தொடுதல், சுவைத்தல் மற்றும் நுகரும் திறன்களுக்கு பயிற்சி அளித்து செயல்பட வைத்தலாகும். எளிமையான முறைகளில் அங்கு கிடைக்கும் பொருட்களை கொண்டே பயனுள்ள பயிற்சி அளிப்பதே இதன் திட்டமாகும்.

முன்பருவ ப்ரெயில்பயிற்சி

                        முன்பருவ ப்ரெயில்பயிற்சி கொடுக்கும் பொழுது நேரடியாக எழுத்துக்களை கற்பித்தல் தவிர்க்க வேண்டும் என்பதை ஸ்டெயின் வலியுறுத்தினார். அதற்கு பதிலாக  இப்பயிற்சியில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்துகின்றனர். இப்பயிற்சியின் நோக்கம் தொடுஉணர்வின் மூலம் கூர்ந்தறியும் திறனை குழந்தைக்கு பழக்கப்படுத்துவது ஆகும். பாடக் கருத்துக்களை புடைப்பு எழுத்துகள் மற்றும் தடவிப் பயிலும் படிவங்கள் (ப்ரெயில்) பயிற்சி மூலம் படித்துக் கற்றனர்.

பிரெயில் வாசித்தல் மற்றும் எழுதுதல்

முன் பருவ ப்ரெயில் பயிற்சியோடு ப்ரெயிலை கற்பிக்க வேண்டு்ம். அறிவியல் முறையில் ப்ரெயில் கற்பிப்பதை ஆதரித்து ஸ்டெயின் என்பவர் 1995 ஆம் ஆண்டு  ப்ரெயில் வாசித்தல் – முதல்படி

ப்ரெயில் புள்ளி எழுத்துகளை அறிதல்

ப்ரெயிலில் எழுதும் கடைசி நிலை  என்ற 3 உற்று நோக்குதலைக் கூறியுள்ளார்.

கற்றல் உபகரணங்கள்

பிரெயில் பலகை – இலக்கியம் படிக்க

டைலர் பிரேம் – கணிதம் படிக்க

மேடுறுத்தப்பட்ட வரைபடங்கள்  – அறிவியல் படிக்க

முப்பரிமாண மாதிரி

திரை வாசிப்பான்

தட்டச்சு பலகை

ஒலிப்புத்தகம்

பிரெயில் பலகை – ஆகியவை பார்வையற்றோருக்கான கற்றல் உபகரணங்கள் ஆகும்.

புற்றெழுத்து அல்லது பிரெயில் எனும் எழுத்துமுறை ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக்கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26) அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் அமைக்கப்படும். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையும்.

o o                       oo                                 oo

o o       — A1        oo    – – முற்றுப்புள்ளி    oo — ஆச்சரியக்குறி

o o                       oo                                  oo

பாரதி புடையெழுத்து அல்லது பாரதி பிரெயில் என்பது லூயி பிரெயில் உருவாக்கி ஆறு புள்ளி அமைப்பை அடிப்படையாகக் கொண்டு இந்திய மொழித் தன்மைக்கேற்ப உருவாக்கப்பட்ட முறையாகும். ஆறு புள்ளிகள் மூன்று இடைவரிசைகளாகவும், இரண்டு நெடு வரிசைகளாகவும் அமைக்கப்படும் தன்மையுடையது. 64 எழுத்துருக்கள் இந்தியமொழிகளின் ஒலிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்து.

டைலர் பிரேம்

பெர்க் குச்சிகளால் எண்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு வடிவம் உருவாக்கப்பட்டிருக்கும். குச்சிகள் அமைக்கப்பட்டுள்ள திசை மற்றும் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு எண்கள் மற்றும் குறியீடுகள் அடையாளம் காணப்படுகின்றன. அதைத் தொட்டுணர்ந்து கணிதம் கற்கின்றனர்.

திரைவாசிப்பான்

பார்வையற்றோர் கணினியை இயக்க பயன்படுத்தும் பேச்சொலி மென்பொருள் திரைவாசிப்பான். இம்மென்பொருள் திரையில் தோன்றும் அனைத்து ஒருங்குறி எழுத்துருக்களை படித்துக்காட்ட. தமிழ் ஒருங்குறி எழுத்துகளை படிக்க திரைப்பேசி உள்ளது. இது திரை நவிலி என்றும் திரைப்பேசி என்றும் அழைக்கப்படுகிறது.

பிரித்தானிய நிறுவனமான பிரிஸ்டல் பிரெய்லி டெக்னாலஜி பார்வையற்றவர்களுக்கான  ஒரு மின் – ரீடரை அறிமுகப்படுத்தினர். இது அவர்களது வாசிப்பு அனுபவத்தை அதிகரிப்பதோடு அவர்களது இன்னல்களை அறவே களைவதாக அமைகிறது எனலாம்.   Canute 360 என்று இச்சாதனத்திற்கு பெயரிடப்பட்டது. இது ஒரு நேரத்தில் ஒன்பது வரிகளை அல்லது வழக்கமான அச்சின் ஒரு பக்கத்தில் மூன்றில் ஒரு பகுதியைக் காட்டுகிறது.

ஸ்கிரீன் ரீடர்

ஸ்கிரீன் ரீடர்என்பதுஉதவிதொழில்நுட்பத்தின் ஒரு வடிவமாகும் ( AT ) [1] இது உரை மற்றும் பட உள்ளடக்கத்தை பேச்சு அல்லது பிரெய்ல் வெளியீடாக வழங்குகிறது.  ஸ்க்ரீன் ரீடர்கள் என்பது மென்பொருள் செயலி ஆகும்,  அவை சாதாரண கண்பார்வை உள்ளவர்கள் காட்சியில் என்ன பார்க்கிறார்கள் என்பதை காட்சி அல்லாத வழிகளில், உரையிலிருந்து பேச்சு ,  ஒலி ஐகான்கள், அல்லது பிரெய்லி சாதனம் . என்று பலவிதமான நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பார்வைத்திறனற்றவர்கள் அறிய உதவுகிறது. எடுத்துக்காட்டாக, அர்ப்பணிக்கப்பட்ட  அணுகல் தன்மை APIகளுடன் தொடர்பு கொள்வது, பல்வேறு  இயக்க முறைமை  அம்சங்களைப் பயன்படுத்துதல் ( இடை-செயல்முறை தொடர்பு மற்றும் பயனர் இடைமுக பண்புகளைவினவுதல் போன்றவை) மற்றும் ஹூக்கிங் நுட்பங்களைப் பயன்படுத்துதல்.

அணுக முடியாத, படிக்கக்கூடிய மற்றும் அணுகக்கூடிய ஆவணங்களைக் காட்டும் ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்தும் ஒருவரின் உதாரணம்

மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்க முறைமைகள் விண்டோஸ் 2000 முதல் மைக்ரோசாப்ட் நேரேட்டர் ஸ்கிரீன் ரீடரைச் சேர்த்துள்ளன , இருப்பினும் ஃப்ரீடம் சயின்டிஃபிக்கின் வணிக ரீதியாகக் கிடைக்கும் JAWS ஸ்கிரீன் ரீடர் மற்றும் ZoomText திரை உருப்பெருக்கி மற்றும் என்வி அணுகல் மூலம் இலவச மற்றும் திறந்த மூல திரை ரீடர் என்விடிஏ போன்ற தனித்தனி தயாரிப்புகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இயக்க முறைமை.  Apple Inc. இன்  iOS , மற்றும் tvOS ஆகியவை வாய்ஸ்ஓவரை உள்ளமைக்கப்பட்ட திரை ரீடராக உள்ளடக்கியது , அதே

Talk Back சேவை

பார்வையற்றோர் பயன்படுத்தும் பிரெய்லி முறையை மொபைல்களிலும் கூகுள் நிறுவனத்தினர்  Talk Back சேவை  என்ற பெயரில் வழங்கி வருகின்றனர். ப்ரெய்லியின் ஆறு புள்ளிகளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி பார்வையற்றோர்களும் நேரடியாக மொபைலில் தட்டச்சு செய்யலாம். Talk Back சேவைபார்வையற்றோருக்காக ஏற்படுத்தப்பட்தால், வாசித்துக் காட்ட வேண்டிய தேவையிருப்பதாலும் திரையில் தோன்றும் அமைத்தும் கண்காணிக்கப்படுகிறது. ப்ரெய்லி கீபோர்டு ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கு மேலுள்ள இயங்குதளங்களில் பயன்பாட்டிற்கு வரும்.

இச்சேவை மூலம் மாற்றுத்திறனாளிகள் இணையத்தைப் பயன்படுத்தவும், சாட் செய்யவும்,மெயில் அனுப்புவதும், புத்தகங்கள் வாசிப்பதும், போட்டித்தேர்வுகளில் பங்கேற்கவும் செய்கிறார்கள்.

கூகிளின் ஆண்ட்ராய்டு  Talk Back திரைரீடர் மற்றும் அதன் ChromeOS ChromeVox ஐப் பயன்படுத்தி பயன் பெறுகின்றனர்.  இதேபோல், அமேசானின் ஆண்ட்ராய்டு சார்ந்த சாதனங்கள் வாய்ஸ்வியூ ஸ்கிரீன் ரீடரை வழங்குகின்றன. ஸ்பீக்கப் மற்றும்  ஓர்கா போன்ற  லினக்ஸ் மற்றும் யூனிக்ஸ் போன்ற அமைப்புகளுக்கு இலவச மற்றும் திறந்த மூல திரை வாசகர்கள் உள்ளனா் .

திரை உருப்பெருக்கி

திரை உருப்பெருக்கி  என்பது ஒரு கணினியின் வரைகலை வெளியீட்டுடன் இடைமுகப்படுத்தி விரிவுபடுத்தப்பட்ட திரை உள்ளடக்கத்தை வழங்குவதற்கான மென்பொருள் ஆகும். திரையின் ஒரு பகுதியை (அல்லது அனைத்தையும்) பெரிதாக்குவதன் மூலம், பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் சொற்களையும் படங்களையும் சிறப்பாகப் பார்க்க முடியும். இந்த வகையான உதவி தொழில்நுட்பம் சில செயல்பாட்டு பார்வை உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்; பார்வைக் குறைபாடுகள் மற்றும் குறைவான அல்லது செயல்பாட்டு பார்வை இல்லாதவர்கள் பொதுவாக ஸ்கிரீன் ரீடரைப் பயன்படுத்துகின்றனர் .

உருப்பெருக்கத்தின் எளிமையான வடிவம், அசல் திரை உள்ளடக்கத்தின் விரிவாக்கப்பட்ட பகுதியை, ‘ஃபோகஸ்’ வழங்குகிறது, இதனால் முழுத் திரையில் சில அல்லது அனைத்தையும் உள்ளடக்கும். இந்த விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் பயனருக்கு ஆர்வமுள்ள உள்ளடக்கம் மற்றும் சுட்டிக்காட்டி அல்லது கர்சரும் இருக்க வேண்டும். பயனர் சுட்டிக்காட்டி அல்லது கர்சரை நகர்த்தும்போது, ​​திரை உருப்பெருக்கி அதனுடன் கண்காணிக்க வேண்டும் மற்றும் புதிய விரிவாக்கப்பட்ட பகுதியைக் காட்ட வேண்டும்.  இந்த கண்காணிப்பு ஜெர்க்கியாகவோ அல்லது ஃப்ளிக்கர்களாகவோ இருந்தால், அது பயனரைத் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது. மேலும், சுட்டி அல்லது கர்சர் ஆர்வமுள்ள உள்ளடக்கமாக இல்லாமல் இருக்கலாம்: எடுத்துக்காட்டாக, மெனுவைத் திறக்கும் விசைப்பலகை குறுக்குவழிகளை பயனர் அழுத்தினால், பெரிதாக்கப்பட்ட பகுதி அந்த மெனுவுக்குச் செல்ல வேண்டும். பாப்-அப் விண்டோக்கள் மற்றும் சிஸ்டம் நிலை மாற்றங்களும் இந்த விரைவான மாற்றத்தைத் தூண்டலாம்.

திரை உருப்பெருக்கிகள் குறிப்பாக வயதான பயனர்கள் உட்பட குறைந்த பார்வை கொண்டவர்களுக்கு உதவியாக இருக்கும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு ஒரு ஆய்வறிக்கையில், குறைந்த பார்வை கொண்டவர்கள் பெரும்பாலும் நடுக்கம் போன்ற கூடுதல் குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக விக்கி ஹான்சன் குறிப்பிட்டார்.

அம்சங்கள்

ஒன்று முதல்முதல் பதினாறு  மடங்கு பெரிதாக்கம் செய்வதற்கான வரம்புகள் பொதுவானவை. பெரிதாக்கப்பட்டால் பார்க்கக்கூடிய அசல் திரை உள்ளடக்கத்தின் விகிதமும் சிறியதாக இருக்கும், எனவே பயனர்கள் தாங்கள் நிர்வகிக்கக்கூடிய மிகக் குறைந்த உருப்பெருக்கத்தைப் பயன்படுத்துவார்கள்.

திரை உருப்பெருக்கிகள் பொதுவாக குறிப்பிட்ட பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு வேறு பல அம்சங்களை வழங்குகின்றன:

வண்ண தலைகீழ் . பார்வைக் குறைபாடுள்ள பலர் வண்ணங்களைத் தலைகீழாக மாற்ற விரும்புகிறார்கள், பொதுவாக உரையை கருப்பு-வெள்ளையிலிருந்து வெள்ளை-கருப்புக்கு மாற்றுகிறார்கள். இது திரையின் கண்ணை கூசுவதை குறைக்கலாம் மற்றும் வயது தொடர்பான மாகுலர் சிதைவு உள்ள வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .

மென்மையாக்கும் . உரை அடைப்பு மற்றும் பெரிதாக்கப்படும்போது அடையாளம் காண கடினமாக இருக்கும். சில திரை உருப்பெருக்கிகள் இடைக்கணிப்பைப் பயன்படுத்தி , உரையை மென்மையாக்கும்.

கர்சர் தனிப்பயனாக்கம் . மவுஸ் மற்றும் டெக்ஸ்ட் கர்சர்கள் பெரும்பாலும் பல வழிகளில் மாற்றியமைக்கப்படலாம், எடுத்துக்காட்டாக, பயனர் அதை திரையில் கண்டுபிடிக்க உதவுவதற்காக அதை வட்டமிடுதல்.

வெவ்வேறு உருப்பெருக்க முறைகள் . திரை உருப்பெருக்கிகள் பெரிதாக்கப்பட்ட பகுதியை எவ்வாறு வழங்குகின்றன என்பதை மாற்றலாம்: முழுத் திரையை மறைத்தல், பெரிதாக்கப்படாத திரையைச் சுற்றி நகர்த்தப்படும் லென்ஸை வழங்குதல் அல்லது நிலையான பெரிதாக்கப்பட்ட பகுதியைப் பயன்படுத்துதல்.

குறுக்கு நாற்கள் . உருப்பெருக்கத்துடன் கூட, சில பயனர்கள் மவுஸ் பாயிண்டரைப் பார்ப்பதற்கு கடினமாகக் காணலாம். குறுக்குவெட்டுகள் – குறிப்பாக அவற்றின் அளவு, நிறம் மற்றும் ஒளிபுகாநிலை ஆகியவை தனிப்பயனாக்கக்கூடியதாக இருக்கும்போது – சுட்டிக்காட்டும் சாதனத்தைப் பயன்படுத்துவதை எளிதாக்கலாம்.

ஸ்கிரீன் ரீடர் . சில உருப்பெருக்கிகள் அடிப்படை ஸ்கிரீன் ரீடருடன் தொகுக்கப்பட்டுள்ளன, பயனர் சுட்டிக்காட்டும் அனைத்தையும் படிக்க அனுமதிக்கிறது.

இயக்க முறைமையுடன் கூடிய திரை உருப்பெருக்கிகள்

இயக்க முறைமையுடன் கூடிய திரை உருப்பெருக்கிகள் கணினித் திரையில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் படிக்க ஏதுவாக திரைப் பெருக்கம் செய்யப்படுகின்றது. அவற்றில் சில நிறுவனங்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அவை கீழே பட்டியலிடப்படுகின்றன.ஹைக்கூவில் Magnify  எனப்படும் பயன்பாடு உள்ளது. லினக்ஸ் அடிப்படையிலான இயக்க முறைமைகளிலும் த்ரை உருப்பெருக்கம் நடக்க வழி உள்ளது.

Compiz-Fusion சாளர மேலாளர் “மேம்படுத்தப்பட்ட ஜூம் டெஸ்க்டாப்” என்ற பெயரில் மிகவும் உள்ளமைக்கக்கூடிய செருகுநிரலைக் கொண்டுள்ளது.க்னோம் க்னோம்-மேக் கொண்டுள்ளது, இது 2015 இல் உள்ளதுக்னோம் ஷெல்லின் ஒரு பகுதியை உருவாக்குகிறது KDE இல் KMagnifier (KMag) உள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்க முறைமை விண்டோஸ் 98 (1998 இல் வெளியிடப்பட்டது) முதல் “பெருக்கி” பயன்பாட்டை உள்ளடக்கியது . இது ஒரு மவுஸ்-பொத்தான் நிலைமாற்றத்துடன் ஒருங்கிணைக்க முடியும்.

OS X இல் , விசைப்பலகை குறுக்குவழிகளைப் பயன்படுத்தி அல்லது மவுஸ் அல்லது டிராக்பேடுடன் ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் உள்ளமைக்கப்பட்ட திரை உருப்பெருக்கம் அம்சத்தை எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம்.  திரை உருப்பெருக்கம் iOS சாதனங்களிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தனித்த திரை உருப்பெருக்கி தயாரிப்புகள்

தனித்த திரை உருப்பெருக்கி தயாரிப்புகள் இயங்குறைகளிசார்ந்திருக்காமல் தனிக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. டால்பின் லூனார் , மெய்நிகர் உருப்பெருக்கி , பெரிதாக்கு உரை என்று சிலவற்றைப் பட்டியலிடலாம்.

டால்பின் லூனார் – இப்போது சூப்பர்நோவா உருப்பெருக்கி, பேச்சு அல்லது சூப்பர்நோவா அணுகல் சூட் கொண்ட உருப்பெருக்கி என அழைக்கப்படுகிறது மெய்நிகர் உருப்பெருக்கி – குறுக்கு-தளம், திறந்த மூல உருப்பெருக்கி பயனாளிகளுக்கு உதவி செய்கின்றது.

இயங்குமுறை சார இத்தகைய உபகரணங்களின் வசதியைக் கொண்டு தமிழ்  மொழிக்கும் இந்தியாவின் பிறமொழிக்குமான  கருவிகளை உருவாக்க இயலும். அப்படி உருவாக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் சரியாக ஆய்விற்குக் கிடைக்கவில்லை.

குறைபார்வைக்கான உபகரணங்கள்

கிட்டபார்வை உபகரணம்(உருப்பெருக்கி),தூரப்பார்வை உபகரணம் மின்னணு சாதனம் – மூடிய சுற்று தொலைக்காட்சி மற்றும் மின்னணு உருவ உருப்பெருக்கி,கண்ணாடி  அல்லாத உபகரணம்,ஒளியை உட்கிரகிக்கக் கூடிய கண்ணாடி வில்லை, ஒளி அளவு,வாசிக்க மற்றும் எழுத உதவும் உபகரணங்கள்பெரிய அச்சு எழுத்து,கோளகமற்ற ஆடிகளின் பயன்கள் மற்றும் பார்வையைப்பயன்படுத்தும் பயிற்சிக்குப் பயன்படும் மின்னணுக் கருவிகள் தேர்வு எழுத உதவும் செயலி போன்ற பல செயலிகள் குறைபார்வைப் பிரச்சனையைக் குறைக்க வழி செய்கின்றன ஆனால் இச்செயலிளில் கணினி நிரலாக்கத்தைப் பயன்படுத்தி பல மொழிகளுக்கும் பயன்படுத்த இயலுமா என்ற விவரமும் குறைவாக உள்ளது.

கோவை தன்னார்வ நிறுவனம் YESABLE என்ற ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். தற்பொழுது ஆங்கில மொழியில் மட்டும் இயங்கும் இச்செயலியானது கூடிய விரைவில் பல மொழிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றன.

பார்வையற்றோருக்கான பயிற்சிகள்

அமெரிக்காவின் “விஷன் எய்ட்“ மற்றும் ட்ரீஸ் பார் லைப் நிறுவனங்களுடன் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவசமாக பயிற்சியும், ஸ்மார்ட் போனும் வழங்குகிறார்கள். ஸ்மார்ட் போன் உதவியோடு குரல் வழி கற்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

 • மும்பை பயிற்சி மையம்
 • ”புரோ பிரெய்லி பிரிண்டர்
 • கலிலியோ டெஸ்ட் ரீடர்
 • பிரெய்லி மொழிபெயர்ப்பு சாப்ட்வேர்

கிராபிக்ஸ் கருவிகள் போன்ற கருவிகள் மூலம் பயிற்சி அளிக்கிறது. மைக்ரோசாப்ட் விண்டோஸ் அடிப்படையில் இயங்கும் ஸ்கிரீன் ரீடிங் சாப்ட்வேரான, “ஜாஸ்“ சாப்ட்வேரும் பயன்பாட்டில் இப்பயிற்சி மையத்தில் உள்ளது.

பார்வைத்திறன் அற்ற ஆசிரியர்களுக்கு DELL நிறுவனத்தினர் தொடர்ந்து கணினிப்பயன்பாட்டிற்கான  பயிற்சி வழங்கி வருகிறது. அவர்கள் பயன்படுத்தத்தக்க வகையில்  விசைப்பலகை மற்றும் சில உபகரணங்களையும் வழங்கியுள்ளனர்.

வானோலி

பார்வையற்றோருக்கான முதல் வானொலி “அக்ஷ்“ என்ற பெயரில் நாக்பூரில் தொடங்கப்பட்டது. பார்வையற்றோர் கல்வி வளங்கள் மற்றும் ஒலிநூல்களை தடையின்றி பெற்றுக்கொள்ள இது உதவும்.

தொகுப்புரை

கல்வி  தான் நம்மை சொந்தக் காலில் நிற்க துணை புரிவது. பிறர் துணைநாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி, கண்ணை விட உயர்ந்தது. இக்கல்வியை மாற்றுத்திறனாளிகள் சிறப்பாக பெற்றுக் கொள்வதற்கு அறிவியல் மேலும் துணை நிற்கின்றது. இறைவன்  படைப்பின் பிழையாகிய மாற்றுத்திறனாளிகளின்  கல்வித்தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய இன்னும் பல தொழில்நுட்பங்கள் வரமாக வரவேண்டும்.

error: Content is protected !!