அன்றாட வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு

முனைவர் ஜெ.கவிதா

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

பிஎச்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை

Summary

உயிருள்ளவற்றிற்கும் மற்றவற்றிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை அனைவரும் அறிந்திருப்போம். உயிருள்ளவை எல்லாம் உணர்ந்து கொள்கின்றன, கற்றுக்கொள்கின்றன, முடிவெடுக்கின்றன. அதனால்தான் அவை உயிரற்றவற்றிலிருந்து வேறுபடுகின்றன. தாவரங்கள் உயிர்வாழ தங்கள் வேர்களை நீர் நோக்கி அனுப்புகின்றன. விலங்குகள் உணவைக் கண்டுபிடிக்கவும் ஆபத்தைத் தவிர்க்கவும் தங்கள் புலன்களைப் பயன்படுத்துகின்றன. இந்தக் கற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறனைத்தான் நுண்ணறிவு என்கிறோம். ஒருவேளை, இதே போன்ற நுண்ணறிவைஇயந்திரங்களுக்கோ, கணினிகளுக்கோ கொடுக்கமுடிந்தால் உயிருள்ளவைபோல, கணினிகளும் கற்றுக்கொண்டு, புத்திசாலித்தனமாக முடிவெடுத்து,பிரச்னைகளைத் தீர்க்க முடிந்தால் என்னவாகும்?அவ்வாறு

புத்திசாலித்தனமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரங்களையே செயற்கைநுண்ணறிவு -Artificial Intelligence(AI)

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் புத்திசாலித்தனமான இயந்திரங்களை உருவாக்குவது பற்றி கனவு கண்டு வருகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கணினிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்கள் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், மனிதர்களுக்கு உதவவும் கூடிய வகையில் இயந்திரங்களைப் பற்றிய அற்புதமான கதைகளைச் சொல்லியிருந்தார்கள். இவை வெறும் கற்பனைக் கதைகளாக மட்டும் அல்ல, அவையெல்லாம் தற்போது நனவாகிக் கொண்டிருக்கும் கனவுகளாக மாறியுள்ளன.

The use of computer-based AI is increasing in daily life. Today, the use of AI is slightly higher among educated people. The knowledge of artificial intelligence is currently common among people. All sectors and its application functions and innovation are growing rapidly. Let us look at its development stages in the article. In the past, it was said that a god would be in every place and each part of this world, and accordingly, the impact and use of artificial intelligence is similar and will be high in all sectors in the future. The next generation and Tamil language professors should learn artificial intelligence to develop the Tamil language and make it known to the world. Carrying the messages told in Sangam literature through artificial intelligence is a personality trait of the best Tamil scholars.

  1. முன்னுரை

அன்றாட  வாழ்க்கையில் கணினிவழி AIயின் பயன்பாடு அதிகமாக இருக்கின்றது. இன்று படித்த கல்வியறிவு பெற்ற நாட்டு மக்களிடையே AI பயன்பாடு சற்று அதிகம். செயற்கை நுண்ணறிவின் அறிவு மக்களிடையே தற்போது வழக்கத்தில் உள்ளன.எல்லா துறைகளும் இதன் பயன்பாட்டு மற்றும் செயல்பாடுகளும்  கண்டுபிடிப்பு வளர்ச்சியும் அதிகமாகவே உள்ளன. இதன் வளர்ச்சி நிலைகளைப் பற்றி கட்டுரையில் பார்ப்போம்

இராவணனின் புஷ்பக விமானம்

பண்டைய இந்தியக் காப்பியங்களின் படி இராவணனின் புஷ்பக விமானம் ஒரு சாதாரண வாகனம் அல்ல.  அதில் பயணிப்பவர்களை  அவர்கள் விரும்பும் எந்த இடத்திற்கும் தானாகவே இயங்கி  அழைத்துச் செல்லக்கூடிய மேம்பட்ட அமைப்புடன் இருக்ககூடிய விமானம்.இது AIக்கு முன்னோடியாக அமைந்துள்ளது என்பதனை இராமயண காப்பியங்களின் வழிநின்று அறியப்படுகின்றது.(கம்பராமயணம் மீட்சிப்படலம் -பாடல் 10096)

மகாபாரத அஸ்வத்தாமனின்  பிரம்மாஸ்திரம்

மகாபாரதப் போரின் போது, அஸ்வத்தாமன் பாண்டவர்கள் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவினான் . துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தன் தந்தை கொல்லப்பட்டதற்கு பழிவாங்குவதற்கு எண்ணி, பாண்டவர்கள் மீது பிரம்மாஸ்திரத்தை ஏவச்செய்தான்.  இதனால் அர்ஜுனனின் மருமகளான உத்தரா தேவியின் வயிற்றில் இருந்த குழந்தைக் கருவை அழிக்கும்படி பிரம்மாஸ்திரத்தை செலுத்தினான்.அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரம் ஒரு வலிமையான ஆயுதமாக தன்கையில் வைத்துக்கொண்டிருந்தார். 

ஒரு  மந்திரத்தால் செயல் படுத்தப்பட்டவுடன், இந்த ஆயுதம் தானாகவே இலக்கு இருக்கும் இடத்தை அறிந்து, தான்  செல்ல வேண்டிய  வழியைத்  துல்லியமாகக் கண்டுபிடித்து அதன்வழி சென்று இலக்கைத் தாக்கும்.

மகாபாரதம் துரோண பருவம் பகுதி 17 ) 

கோலெம் (Golem) 

ஒரு களிமண்பூதம் ஒன்றின் யூதக் கதைகளில், களிமண்ணால் ஆன கோலெம் எனப்படும் ஒரு சிறப்பு இயந்திரம் பற்றிய கதை உள்ளது.   கோலெம் அதன் சமூகத்திற்கு உதவ அதற்குச் சொல்லும் அறிவுறுத்தல்களைப்  பின்பற்றும், ஆனால் அதைக் கவனமாகக்   கையாள  வேண்டும்.

இந்த பண்டைய கதைகள் புத்திசாலித்தனமான இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசை காலமற்றது என்பதைக் காட்டுகிறது. ஆனால் இந்த கனவுகள் எப்படி சாத்தியமானது என்றால் AI மூலம்தான் .

 ( மாய யூத உருவங்கள்  அக்டோபர் 24,2022 கிரிஸ்டல் ஷில்.)

AI இன் பிறப்பு

ஆலோசனை வழங்கும் கணினிகள், நோய்களைக் கண்டறிய உதவும் மருத்துவர்கள் அல்லது இயந்திரங்களைச் சரிசெய்யும் பொறியாளர்கள் போன்ற குறிப்பிட்ட துறை பகுதிகளில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க நிபுணர்  உதவியுடன் AI உருவாக்கப்பட்டன. அவை நிபுணர்களின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தக்கூடிய  அறிவுறுத்தல்  குறிப்புக்கள்  போல AI யானது வேலை  செய்கின்றன.

உலக சதுரங்க சாம்பியனான கேரி காஸ்பரோவை தோற்கடித்து டீப் ப்ளு என்ற கணினி உலகையே ஆச்சரியப்படுத்தியது. விளையாட்டுகளில் கணினிகள் பல முன்னேற்றங்களைச் சிந்திக்க முடியும் என்பதை இது காட்டியது.  எவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கும் என்பதை மக்கள்   இதனை உணரத்  தொடங்கினர்.

AI அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியது. கணினிகள் குரல்களை (Siri மற்றும் Alexa போன்றவை) அடையாளம் காணவும், கார்களை ஓட்டவும், இசை மற்றும் படங்களை உருவாக்கவும் கற்றுக்கொண்டன. கணினிகள் மேலும் மேலும் கற்பதன் மூலம் மேம்படும்  ஒரு வழியான “இயந்திர கற்றல்” என்பதனையெல்லாம் AIதான் சாத்தியமாக்கியது.(செயற்கைநுண்ணறிவு பற்றிய ஓர் அறிமுகம் வைகாசி 2025)

AI இன் இயந்திர கற்றல்  

  AI தரவுகளில்  மீண்டும் மீண்டும் வரும் வடிவங்களைக் கண்டுபிடித்து காலப்போக்கில் தன்னைத்தானே மேம்படுத்த முடியும். பல்வேறு வகையான பழங்கள், பறவைகளை அடையாளம் காண நீங்கள் கற்றுக்கொள்வது போல, ஒரே மாதிரியான வடிவங்களை மீண்டும் மீண்டும் கொடுத்து அதனைக் கற்றுக்கொள்ள வைக்க முடியும். வானிலை மாறும் போக்கு  மற்றும் மண் தன்மை, சந்தை விலைப்  போக்குகளின் அடிப்படையில் பயிர்களைப் பயிரிடுவதற்கு சிறந்த காலத்தைக் கணிக்க  AI  விவசாயிகளுக்கு பெரிதும் உதவுகின்றன.

(AI) செயற்கை நுண்ணறிவின் செயல்பாடுகள்

  1. எழுத்து மொழிஅடிப்படையிலான AI

தட்டச்சு செய்வதன் மூலம் கேள்விகள் கேட்க, வீட்டுப் பாட உதவிக்கு, 

கணித விளக்கங்களுக்கு இவற்றைத் தொடர்புகொள்ளலாம். உதாரணத்திற்கு ChatGPT, Gemini, Claude எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளை அறிந்து, திருத்தி  உங்கள் எழுத்தாக்கங்களை மேம்படுத்த இவை உதவுகின்றன. உதாரணத்திற்கு Grammarly, QuillBo .

குரல் மொழிஅடிப்படையிலான AI

உங்கள் செயல்களை நினைவூட்டிட, இலகுவான தகவல்களை பெற, ஸ்மார்ட் சாதனங்களைக் கட்டுப்படுத்த உங்கள் குரலின் மூலம் இவற்றைத் 

தொடர்புகொள்ளலாம்.உதாரணத்திற்கு Google Assistant, Alexa, Robot Vacuum Cleaner.

 

குரல் உணரும் அமைப்புகள்: 

பேச்சை உரைக்கு மாற்றுவதற்கும் வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதற்கும் இவை குரல் அடிப்படையான தகவல்களை ஏற்றுக்கொள்கின்றன. EX. Google Translate. (கணினித்தமிழில் ஆய்வுநெறிமுறைகளும் அணுகுமுறைகளும்,2025)

AI கையாளும் முறைஅமைப்புகள்

திட்டவட்டமாக இருந்து கையாளுதல்

 நீங்கள் அறிவுறுத்தல்களை வழங்கும்போது, நீங்கள் சேர்க்கக்கூடிய அனைத்து விவரங்களையும் பற்றி சிந்தியுங்கள். ஒரு நண்பருக்கு வழிமுறைகளை விளக்குவது போல, நீங்கள் எவ்வளவு திட்டவட்டமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக AI உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு வழிகாட்டும்.

  சரியான சொற்களைப் பயன்படுத்துதல்

 திறவுச்சொற்களையும் சரியான பதில்களை வழங்கினால் AI சரியாக வழிகாட்டும். குறிப்புகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சொற்களை இணையத்தில் தேடவேண்டும். தேடினால் சரியான பதில் AI மூலம் பதில் கிடைக்கும் தெளிவான மற்றும் கவனம் செலுத்திய முக்கிய சொற்களைப் பயன்படுத்தினாலும்   AI தன் சிறந்த முடிவுகளை வழங்கி உதவி செய்யும்.

ஒரு கணினியைப் போல சிந்தித்தல்

AI ஆனது மனிதர்களைப் போல உணர்ச்சிகளையோ தெளிவற்ற கருத்துக்களையோ புரிந்து கொள்ளாது. இது ஒரு புதிரைத் தீர்ப்பது போல படிப்படியாகவே தகவல்களைச் செயலாக்கும் திறம்பட தொடர்பு கொள்வதற்கு  உங்கள் கோரிக்கையை கணினி சிந்திப்பது போன்று தர்க்கரீதியான படிகளாக உங்கள் கருத்தை உடைத்து கேட்டால் எளிதில் பதில் கிடைக்கும். Artificial intelligence in predicting the evolution of tamil language and literature PSGRKCW, 27.01.2025)

(AI) செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள்

கல்வி

 Duolingo மற்றும் Khan Academy போன்ற AI இன்இயங்கும் கருவிகள், மாணவர்களின் வேகம் மற்றும் நடைக்கு ஏற்றவாறு கற்றலை பிரத்தியேகமாக்குகின்றன . மாணவர்களுக்கு மேம்பட்ட கருத்துக்களையும்  பயிற்சிகளையும் பரிந்துரைக்கும் போது இச்செயலி சிறப்பாக வேலை செய்யும்.

மருத்துவம் 

மருத்துவத் தரவை துல்லியமாக பகுப்பாய்வு செய்யும் IBM Watson Health AI போன்ற கருவிகளைப் பயன்படுத்தி புற்றுநோய் போன்ற நோய்களைக் கண்டறிய உதவுகிறது. da Vinci Surgical System போன்ற அமைப்புகளால் இயக்கப்படும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மிகவும் மேம்பட்டதாகி வருகிறது. வெளிநாடுகளில் AI தொலை-மருத்துவத் தளங்கள் மூலம் மெய்நிகர் ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் கிராமக்களுக்கு உதவிட முடியும்.

விவசாயம் 

 புகைப்படங்கள் மூலம் பயிரில் உள்ள நோய்களைக் கண்டறிய விவசாயிகளுக்கு உதவும் Pantix போன்ற கருவிகளைக் கொண்டு AI மூலம் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. 

போக்குவரத்து

 Google Maps மற்றும் Waze Nghd போன்ற Smartஅமைப்புகளைப் பயன்படுத்தி போக்குவரத்து ஓட்டத்தை AI மேம்படுத்துகிறது. Tesla போன்ற நிறுவனங்களின் தன்னியக்க வாகன தொழில்நுட்பம், பொது போக்குவரத்தை மேம்படுத்துவது போன்றவை  ஏற்கனவே உலகளவில் 

நடந்து வருகிறது.

வனவிலங்கு பாதுகாப்பு

 விலங்குகளின் எண்ணிக்கையைக் கண்காணிக்கவும், வேட்டையாடும் அச்சுறுத்தல்களைக் கண்டறியவும்  Wildbook போன்ற AI கருவிகள் படங்களை பகுப்பாய்வு செய்கின்றன. 

நிதி

HSBC போன்ற வங்கிகள் மோசடியான பரிவர்த்தனைகளைக் கண்டறியவும்  தனிப்பட்ட நிதி ஆலோசனைகளை வழங்கவும்  AI பயன்படுத்துகின்றன.

பொறியியல்

 கார்கள், பாலங்கள் மற்றும் வானளாவிய கட்டிடங்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கு  ரோபோக்களை உபயோகிப்பதன் மூலம் AI பொறியியலை மாற்றுகிறது. AI உதவியுடன் கூடிய AutoCAD போன்ற கருவிகள் வேகமாகவும் துல்லியமாகவும் வடிவமைப்பதில்   பொறியியளாளர்களுக்கு  உதவுகின்றன.

விண்வெளி ஆய்வு 

பிரபஞ்சத்தை ஆராய விஞ்ஞானிகளுக்கு AI உதவுகிறது! நாசாவின் Perseverance போன்ற Mars rovers செவ்வாய் கிரகத்தில்  நகர்ந்து செல்லவும் தரவுகளை சேகரிக்கவும் AI ஐப் பயன்படுத்துகின்றன. மேலும் செயற்கைக்கோள்களை கட்டுப்படுத்தவும் விண்வெளி வானிலையை கணிக்கவும் AI உதவுகிறது. புதிய கிரகங்களைக் கண்டறிய அல்லது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் உயிர்வாழ்வதற்கு இந்த  AI பயன்படுக்கின்றன. (கணினித்தமிழில் ஆய்வுநெறிமுறைகளும் அணுகுமுறைகளும் -FDP,PSGRKCW,14.10.2024)

முடிவுரை  

அன்றாட வாழ்க்கையில் கணினிவழி AI பயன்பாடு அதிகமாக இருக்கின்றது. இன்று படித்த கல்வியறிவு பெற்ற நாட்டு மக்களிடையே AI பயன்பாடு சற்று அதிகம். செயற்கை நுண்ணறிவின் அறிவு மக்களிடையே தற்போது வழக்கத்தில் உள்ளன.எல்லா துறைகளும் இதன் பயன்பாட்டு செயல்பாடுகளும்  கண்டுபிடிப்பு வளர்ச்சி அதிகமாக உள்ளது. முன்காலங்களில் கடவுள் ஆனவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்கள். அதன்படி  எல்லா காலங்களில் எல்லா துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் பயன்பாடு அதிகமாக இருக்கின்றன. அடுத்த தலைமுறையினர் மற்றும் தமிழ்மொழி பேராசிரியர்கள் தமிழ்மொழியை வளர்க்க செயற்கை நுண்ணறிவின்  கற்றலை கற்று அதனை உலகறிய செய்ய வேண்டும். சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட செய்திகளை செயற்கை நுண்ணறிவின்  வாயிலாக எடுத்துச் செல்வது சாலச்சிறந்த தமிழறிஞர்களின் ஆளுமை பண்பாகும் என்பதனை இக்கட்டுரையின் வழியாக அறியப்படுகின்றது.

துணைநூல் பட்டியல்

  1. ஆசிரியர்ப.முகுந்தன்,செயற்கைநுண்ணறிவு பற்றிய ஓர் அறிமுகம்    வைகாசி 2025,மாத்தனை,இலங்கை.

  2. கம்பராமயணம் மீட்சிப்படலம் -பாடல் எண் 10096

  3. மகாபாரதம் துரோண பருவம் பகுதி 17 - march 25,2020.

  4.  மாய யூத உருவங்கள்  அக்டோபர் 24,2022 கிரிஸ்டல் ஷில்.

  5. கணினித்தமிழில் ஆய்வுநெறிமுறைகளும் அணுகுமுறைகளும் - FDP,PSGRKCW,14.10.2024.

  6. Artificial intelligence in predicting the evolution of tamil language and literature PSGRKCW, 27.01.2025.


Author
கட்டுரையாளர்

முனைவர் ஜெ.கவிதா

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

பிஎச்ஜி கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, கோவை