தமிழ் இணையக் கருவிகள் - ஓர் பார்வை

முனைவர்.இரா.தனசுபா

இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்

சைவபானு சத்திரிய கல்லூரிஅருப்புக்கோட்டை- 626101

Summary

Tamil and Chinese are among the eight languages which are the most ancient languages in the world namely Greek, Latin, Arabic, Chinese, Hebrew, Persian, Tamil and Sanskrit. Computer Tamil is growing as fourth Tamil along with Muthamizh. A situation is developing today where the language that is not used in the computer is disappearing. A situation is developing today where the language that is not used in the computer is disappearing. To enrich and stabilize the Tamil language, the Tamil language is making progress on the Internet through the computer through the efforts of the migrant Tamils. Tamil language has seen rapid growth on the internet after the corona period. Many web tools are being developed and used especially for the teaching-learning process. Internet tools are being developed and used for learning Tamil in many ways such as Tamil Apps, spell checkers and text editors, game learning tools. Thus, this article is designed to analyze the functionality of internet tools that we are using for Tamil language learning.

Key Words:

Internet tools, spell checkers, text editors

ஆய்வுச்சுருக்கம்:

உலகில் மிகவும் தொன்மையான மொழிகளாகக் கருதப்படும் கிரேக்கம், இலத்தீன், அரபி, சீனம், ஹீப்ரு, பாரசீகம், தமிழ், சமஸ்கிருதம் ஆகிய எட்டு மொழிளளுள் தமிழும் சீனமும் இன்றளவும் மக்களின் பயன்பாட்டில் உள்ள மொழியாக உள்ளது. முத்தமிழோடு நான்காம் தமிழாய் கணினித்தமிழ் வளர்ந்து வருகிறது. கணினியில் பயன்படுத்தப்படாத மொழி காணாமல் போய்விடும் சூழ்நிலை இன்று உருவாகி வருகிறது. இதனை மனதில் கொண்டு தமிழ் மொழியை வளப்படுத்தி நிலை நிறுத்தும் முயற்சியாக புலம் பெயர்ந்த தமிழர்களின் உழைப்பால் தமிழ்மொழி கணினி வழியாக இணையத்தில் வெற்றிநடை போடுகிறது. கொரோனா காலத்திற்குப் பின்பு இணையத்தில் தமிழ்மொழிஅதிவேக வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டிற்கு இணையக் கருவிகள் பல உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழ் மொழிக்கான எழுத்துணரிகள், பேச்சுணரிகள், பிழை திருத்திகள் மற்றும் குறுஞ்செயலிகள், விளையாட்டுமுறை கற்றல் கருவிகள் என பல வழிகளில் இணையக் கருவிகள் உருவாக்கப்பட்டு தமிழ் கற்றலுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அவ்வாறு நாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பயன்பட்டு வரும் இணையக்கருவிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்யும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்:

இணைய கருவிகள், பிழை திருத்திகள் , எழுத்துணரிகள், பேச்சுணரிகள், குறுஞ்செயலிகள்.

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பங்கு: 
https://www.tamilvu.org/ 
 “தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3] இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் உலகளாவிய கல்விக்காக நிறுவப்பட்ட முதல் மற்றும் இணையில்லா அமைப்பாக இது விளங்குகிறது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அறிவித்தார். தமிழ் இணையப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பட்டு, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது.” (விக்கிபீடியா)

வ.எண்

கணினிக் கருவிகள் - பதிவிறக்க(.Zip வடிவம்)

மென்பொருள் மூல வடிவம்

உருவாக்கம்


அனைத்து எழுத்துருக்கள் (புதிய வெளியீடு)

பதிவிறக்க(.Zip வடிவம்)

08-2018


வானவில் ஔவையார் ⇌ ஒருங்குறி (புதிய வெளியீடு)

பதிவிறக்க(.Zip வடிவம்)

08-2018


தமிழிணையம்–ஒருங்குறி எழுத்துருக்கள்

----------

02-2019


தமிழிணையம்–சொல் பேசி

பதிவிறக்க (.Zip வடிவம்)

12-2017


தமிழிணையம்–விவசாயத் தகவி

பதிவிறக்க (.Zip வடிவம்)

12-2017


தமிழிணையம்–தொல்காப்பியத்தகவல் பெறுவி

பதிவிறக்க (.Zip வடிவம்)

01-2017


தமிழிணையம்–தமிழ்ப் பயிற்றுவி

பதிவிறக்க (.Zip வடிவம்)

12-2018


தமிழிணையம்–நிகழாய்வி (- நிகழாய்வி செயலி)

பதிவிறக்க (.Zip வடிவம்)

06-2018


தமிழிணையம்–பிழைதிருத்தி

பதிவிறக்க (.Zip வடிவம்)

02-2018


தமிழிணையம்–அகராதி தொகுப்பி

பதிவிறக்க (.Zip வடிவம்)

02-2018


தமிழிணையம்–கருத்துக்களவு ஆய்வி

பதிவிறக்க (.Zip வடிவம்)

06-2017


தமிழிணையம்–சொற்றொடர் தொகுப்பி

பதிவிறக்க (.Zip வடிவம்)

03-2018


தமிழிணையம்–தரவு பகுப்பாய்வி

பதிவிறக்க (.Zip வடிவம்)

02-2018


தமிழிணையம்–விளையாட்டுச் செயலி

பதிவிறக்க (.Zip வடிவம்)

02-2018


தமிழிணையம்–தமிழ்த்தரவகம்

பதிவிறக்க (.Zip வடிவம்)

05-2018


தமிழிணையம்–தமிழ் கல்வெட்டியல் தரவகம்

பதிவிறக்க (.Zip வடிவம்)

05-2018


தமிழ் இலக்கண ஆய்வி – Beta

பதிவிறக்க (.Zip வடிவம்)

10-2018


Objective வினாவிற்கான மென்பொருள்

பதிவிறக்க (.Zip வடிவம்)

07-2019



 தமிழ் இணையக் கல்விக்கழகம் பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி தமிழ்மொழிக்குச் சிறந்த தொண்டாற்றி வருகிறது. இந்த வலைதளத்தின் ஆய்வு மற்றும் உருவாக்கம் என்ற பகுதியில் உள்ள கணினிக் கருவிகள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் தமிழ்மொழியைக் கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் இலக்கணங்களைப் பிழையின்றி அறிந்து கொள்வதற்கும் என பலவகையில் துணைசெய்கின்றன. தமிழ் இணையக் கல்விக்கழகம் பணிகளைப்பற்றி, “தமிழ்ச் சமுதாயம் மற்றும் தமிழ்க் கணினி ஆராய்ச்சியாளருக்கும் பயன்படுவதற்காக தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு, அரசாணை எண் (2D) 26, நாள் 15.10.2015 மூலம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamilnadu Innovative Initiatives scheme)  திட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டிற்காக ரூ. 1.5 கோடி தொகை வழங்கியுள்ளது. இந்நிதி உதவியுடன் 15 மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் கண்டறியப்பட்டு திட்டச் செயலாக்கம் நடைபெற்று வருகின்றது. அதில் தமிழிணையம் ஒருங்குறிமாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி  எழுத்துருக்கள் என்ற  2 திட்டங்கள் முடிவுற்று       அத்திட்டங்களை  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.05.2017 அன்று தொடங்கி வைத்தார்.  தற்போது கீழ்க்கண்ட 10 திட்டங்கள் முடிவுற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.” என்று குறிப்பிட்டுள்ளது.

அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் : 
https://tamilvalarchithurai.tn.gov.in/ 
தலைமைச் செயலகத்தில் 16.05.2017 அன்று ‘அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்” தமிழ் மின்பொருள் குறுந்தகட்டினை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் சோ.இராமச்சந்திரன் பெற்றுக் கொண்டார். அரசு அலுவலகங்களின் அனைத்து செயல்பாடுகளும் முழுமையாகத் தமிழில் அமைய வேண்டும். அந்த வகையில் கணினி தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒற்றுப்பிழை, சந்திப்பிழை, இலக்கணப்பிழைகள் ஏதுமின்றி வரைவுகளைத் தயார் செய்யும் வகையில் அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் - ஆங்கில அகராதி, அயற்சொல் அகராதி, மயங்கொலி சொல் அகராதி, தமிழ்நாடு ஆட்சிச் சொல்லகராதி ஆகியவை மின்னகராதிகளாக இம்மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியில் மாற்றிக் கொள்ள உதவி செய்கிறது. அனைத்து துறை அரசு அலுவலர்களுக்கும் இம்மென்பொருள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. (தமிழ் வளர்ச்சிக் கழகம்)

சொற்பிழை திருத்தி:
இயங்குதளம் முதல் இணையம் வரை வன்பொருள் மென்பொருள் என பல்வேறு நிலைகளில் தமிழ் எழுத்துருச் சிக்கல் பெரிதாக இருந்தது. ஒருங்குறி அதற்கு நல்ல தீர்வாக அமைந்தது. இன்று சொற்பிழை திருத்தி சந்திப்பிழை திருத்தி இலக்கண பிழை திருத்தி வட்டார வழக்கு பயிற்றுவித்தல் எந்திர மொழிபெயர்ப்பு நுட்பங்கள்  எழுத்துக்களைப் பேச்சாகவும் பேச்சை எழுத்தாகவும் மாற்றுதல் ஒளி எழுத்துணரி (OCR) இயற்கை மொழி ஆய்வு (Natural Language Processing) செயற்கை நியுரல் கட்டமைப்புகள் (Artificial Neural networks) ஆழக் கற்றல்     (Deep Learning) வரை பல்வேறு நுட்பங்கள் கணினிக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. வளர்ந்துவரும் ஒவ்வொரு நுட்பங்களுக்கும் ஏற்ப தமிழ் மொழியை நாம் தகவமைத்துக்கொள்ளவேண்டும். அதற்கான கலைச்சொல் வளங்களை உருவாக்கவேண்டும். தமிழ் வழி நிரலாக்கம் சராசரி மக்களின் பயன்பாட்டுக்கும் வரவேண்டும்.

ஆங்கிலச் சொற்களைத் தட்டச்சு செய்யும் போது சொற்களில் எழுத்துப் பிழை இருந்தால் அதனைத் திருத்தம் செய்யும் சொற்பிழை திருத்திகளைப் (Spell Checker) போலத் தமிழிலும் பல சொற்பிழை திருத்திகள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்த பலருக்கும் உண்டாகும் எழுத்துப் பிழைகளைக் கண்டறியத் தெரியாது. ரகர, றகர வேறுபாடு, ணகர, நகர வேறுபாடு, லகர, ளகர, ழகர வேறுபாடு, ஒற்றுப்பிழை, கொம்புகள், குறில், நெடில் போன்றவற்றைச் சரியாகத் தட்டச்சு செய்ய இந்த சொற்பிழை திருத்திகள் பயன்படுகின்றன.   

வாணி தமிழ் எழுத்துப்பிழை திருத்தி:
http://vaani.neechalkaran.com/ 
நீச்சல்காரன் என்ற ராசாராமன் வாணி என்னும் எழுத்துப் பிழை திருத்தியை உருவாக்கியுள்ளார். சொற்களில் உள்ள எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க இது உதவுகின்றது. இந்தத் தமிழ் எழுத்துப் பிழைதிருத்தி பல்வேறு இலக்கண விதிகளைப் பயன்படுத்தி இயங்குவதால் சுமார் 70 மில்லியனுக்கு மேற்பட்ட சொல் வடிவங்களைப் புரிந்து கொள்ளும் என்று இராசாராம் கூறுகிறார். 
இம்மென்பொருளில் ஒருங்குறி எழுத்துரு உள்ளீடுகள் மட்டுமே திருத்த இயலும். நேரடியாக உள்ளீடு செய்து பிழையைத் திருத்திக் கொள்ளலாம். அல்லது வெட்டி ஒட்டியும் பிழைதிருத்திக் கொள்ளலாம். ‘வாணி எழுத்துப்பிழை திருத்தியை உருவாக்க நான்கு வருடம் ஆகிவிட்டது. வார்த்தைகளைத் திருத்துவதற்காக இதை வடிவமைத்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இது முந்நூறுக்கும் மேற்பட்ட பிறமொழிச் சொற்களையும் அடையாளம் கண்டு கொள்ளும். அந்தப் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் இந்தத் திருத்தி பரிந்துரைக்கும்” என்று ராசாராமன் இச்சொல் பிழை திருத்தி பற்றிக் கூறியுள்ளார். 
வாணி சொல்திருத்தி வழியாக ஒரே நேரத்தில் இரண்டாயிரம் சொற்களைத் திருத்திக் கொள்ளலாம். இந்த அளவிற்குமேல் சொற்கள் உள்ளிடப்படும் போது அதனை இம்மென்பொருள் ஏற்காது.http://vaani.neechalkaran.comஎன்ற பக்கத்திற்குள் நுழைந்து வாணி சொல் பிழை திருத்தியைப் பயன்படுத்தலாம்.

சந்திப்பிழை திருத்தி:
கணினியில் தட்டச்சு செய்யும் போது இரண்டு சொற்களுக்கு இடையே தோன்றும் ஒற்றுப் பிழைகளைச் சரிசெய்ய தமிழ் சந்திப்பிழை திருத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. நாவி, மென்தமிழ் சந்திப்பிழை திருத்தி போன்றவை இன்று பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நாவி: 
http://dev.neechalkaran.com/p/naavi.html 
நாவி என்ற இந்த சந்திப்பிழை திருத்தியும் நீச்சல்காரன் என்ற இராசராம் என்பவரால் உருவாக்கப்பட்டதே ஆகும். 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தனது வலைப்பதிவில் சந்திப்பிழைகள் காணப்படுவதாகச் சரிசெய்வதற்கான ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கும் முயற்சியில் நாவியை உருவாக்கியதாக நீச்சல்காரன் கூறுகிறார். 

தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள நெறிமுறைகளையும,; ஞானச் செல்வனின் ‘பிழையின்றி தமிழ் பேசுவோம் எழுதுவோம்” என்ற நூலையும், தமழ் இணையக் கல்விக் கழகப் பாடங்களையும் அடிப்படையாகக் கொண்டு இம்மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ் சொற்பட்டியலை மூலமாகக் கொண்டு இம்மென்பொருள் பிழையைத் திருத்துகிறது. தமிழில் வல்லொழுத்து மிகும் இடங்களுக்கான விதிகளின் அடிப்படையில் இது பிழைகளைத் திருத்துகிறது. வல்லெழுத்து மிகாத இடங்களில் தவறாக மிகுந்து தட்டச்சு செய்தாலும் கண்டுபிடித்துக் காட்டும்.

வாணி, நாவி என்ற இரண்டு பிழை திருத்திகளையும் உருவாக்கிய இராசாராமன் மதுரையில் பிறந்தவர். இளங்கலை இயற்பியல் படித்தவர். பிரபல பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் தமிழின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக இவற்றை உருவாக்கியுள்ளார். கணினித் துறையில் வல்லுநகராக இருக்கும் ஒருவர் தமிழ் இலக்கணத்தில் புலமை பெறாமலேயே இவ்வரிய சாதனையைச் செய்தது பெரும் வியப்பாகும்.

சுளகு - எழுத்தாய்வுக் கருவி:  
http://apps.neechalkaran.com/sulaku 
இதனை உருவாக்கியவரும் இராசாராமனே. இக்கருவியை அறிமுகம் செயதபோது இராசாராமன் “மொழிக் கருவிகள் என்பது பொதுவாக நேரடியாகப் பயனர்களுக்குப் பயன்படாவிட்டாலும் ஆய்வாளர், எழுத்தாளர் போன்றவர்களுக்கு இது இன்றியமையாதது. இதற்குமுன் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் ஒரு சொல்லின் மீள்பயன்பாட்டை எண்ணிக்காட்டும்ஒருகருவியைவெளியிட்டுள்ளது.

 http://www.ciilcorpora.net/frequency.asp ஆனால் அதைவிட எளிதாகத் தமிழுக்கு ஏற்ப கூடுதல் வசதிகளுடன் சுளகு என்ற ஒரு சிறிய தமிழ் எழுத்தாய்வுக்கருவி அறிமுகம் செய்யப்படுகிறது.” என்று கூறியுள்ளார். தமிழ் உள்ளடக்கத்தில் உள்ள எழுத்து,  சொல், அடிச்சொல் குறித்த ஆய்வுகள் செய்ய உதவும் இணையச் செயலி. இதில் அகரவரிசைப்படுத்தல், சொல் எண்ணிக்கை காட்டல் போன்ற இதர வசதிகளும் உள்ளன.        

முடிவுரை:
இவற்றைப்போல இன்னும் பல யாப்புயணரிகளும் எழுத்துணரிகளும் பிழை திருத்திகளும் உருவாக்கப்பட்டு சிறப்பாக பயனபடுத்தப்பட்டு வருகின்றன. ஏறகனவே உள்ள தமிழ. இணையக் கருவிகளைப் பயன்படுத்துற்கு மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். மேலும் ஆங்கில மொழிக்கு இணையாக இன்னும் தமிழ் இயைணக் கருவிகள் பலவற்றை உருவாக்கிப் புழக்கத்திறகுக் கொண்டு வரும் முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும்.   

ஆய்விற்குத் துணைசெய்த இணையப் பக்கங்கள்:
  • விக்கிபீடியா (Wiki Pedia)
  •  :https://www.tamilvu.org/ 
  • https://tamilvalarchithurai.tn.gov.in/ 
  • http://vaani.neechalkaran.com/ 
  •  http://dev.neechalkaran.com/p/naavi.html
  •  http://apps.neechalkaran.com/sulaku 

Author
கட்டுரையாளர்

முனைவர்.இரா.தனசுபா

இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்

சைவபானு சத்திரிய கல்லூரிஅருப்புக்கோட்டை- 626101