ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகள் - ஓர் பார்வை
- 2020
- கட்டுரை
- By முனைவர். த. சகாய சைலா
முனைவர். த. சகாய சைலா
என். கே. தி. தேசிய பெண்கள் கல்வியியில் கல்லூரி (தன்னாட்சி)
எண்.41, டாக்டர். பெசன்ட் ரோடு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005
Summary
அண்மையில் உலகெங்கும் கவனத்தைப் பெற்ற ஒரு துறையாக ஐ.சி.டி துறை விளங்குகிறது. அசாதாரணமான இந்த காலகட்டத்தில் தொன்றுதொட்டு வரும் கல்வி முறைகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்வி செயல்பாட்டில் ஐ.சி.டியின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளது. சுயபயிற்சி, சுயகற்றல் மற்றும் ஆசிரியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்கான ஒரு பகுத்தறிவு வழியாகவும் இது செயல்படுகிறது. தொழில்நுட்பங்களின் முக்கிய கல்வி மதிப்பு என்னவென்றால் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் இருவருக்குமிடையே பல உணர்ச்சிகரமான ஊடாடும் கல்விச் சூழலை உருவாக்குவது. ஐ.சி.டி கருவிகள் ஆசிரியர்களின் அறிவுசார் ஆக்கப்பூர்வமான திறன்களையும் புதிய அறிவையும் சுயாதீனமாக பெறுவதற்கான அவர்களின் செயல்திறனையும் பல்வேறு தகவல்களுடன் பணியாற்றுவதற்கும் அனுமதிக்கின்றது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உயர்தரமான ஐ.சி.டி கருவிகளின் அறிமுகம் இச்சூழ்நிலையில் கிடைத்திருக்கின்றது. ஆகவே இக்கட்டுரையானது ஆசிரியர்களுக்கான கல்வியியல் ஐ.சி.டி கருவிகளை அறிமுகப்படுத்தும் ஒரு களமாக அமைகின்றது.
குறிப்புச்சொற்கள்:
புத்தொளிர் திறன் பலகை, மெய்நிகர் கற்றல் வகுப்பறை, கற்றல் மேலாண்மை அமைப்புகள், ஊடாடும் வெண்பலகைகள், மன வரைபடங்கள், மதிப்பீட்டுக் கருவிகள்