இணைய வழியில் தமிழ் இலக்கணம் கற்பித்தலுக்கான பாடத்திட்டம்

முனைவர் இரா. அருணா

உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி,

ஒத்தகுதிரை,கோபிசெட்டிபாளையம் - 638 455

Summary

Acting as an important tool in learning and teaching In today's growing society, communication technology has created many changes in the society and progress in the economy.Information technology supports learning, for example in computer pedagogy, the computer is used as a learning tool and learning medium. New information technology is paving the way for innovations in the curriculum as per the modern example. The education level of the students has been developed through technology. Information technology is used to motivate the trainees and bring out their creativity. Information technology is a tool to create a student-centered education system.In today's environment, students are learning through the internet. So the purpose of this study is to design a curriculum for teaching students Tamil grammar through Internet.

ஆய்வின் பொருண்மை:
 கற்றல் கற்பித்தலில் முக்கிய கருவியாக செயல்படுவது தகவல் தொடர்பு தொழில் நுட்பம். வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் கற்றல் நுட்பம் சமுதாயத்திற்கு பல மாற்றங்களையும் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தையும் உருவாக்கியுள்ளது. கற்றலுக்கு தகவல் தொழில் நுட்பம் உறுதுணையாக உள்ளது எடுத்துக்காட்டாக கணினி கற்பித்தலில் கணினியானது கற்பதற்கு உதவும் கருவியாகவும், கற்கும் ஊடகமமாகவும் பயன்படுகிறது. நவீன உலகத்திற்கேற்ப பாடத்திட்டத்தில் புதுமைகளை புதுத் தகவல் தொழில் நுட்பம் வழி வகுக்கின்றது. மாணவர்கள் கல்வித்தரம் தொழில் நுட்பத்தில் மூலம் வளர்ச்சி அடைந்துள்ளது. பயிற்சி பெறும் மாணவர்கள் ஊக்கப்படுத்தவும், அவர்களின் ஆக்கத்திறனை வெளிப்படுத்தவும் தகவல் தொழில்நுட்பம் பயன்படுகிறது. மாணவர் மைய கல்வி முறையை உருவாக்கும் கருவியாக தகவல் தொழில் நுட்பம் உள்ளது. இன்றைய சூழலில் இணையத்தின் வழியாகவும் மாணவர்கள் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை இணையம் வழியாகக் கற்பித்தலுக்கானப் பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இவ்ஆய்வின் பொருண்மை ஆகும்.

ஆய்வின் குறிப்புச்சொற்கள்:
இணையம், கணினி, மாணவர்கள், ஆசிரியர்கள், பாடத்திட்டம், காணொளி, தேர்வு, உளவியல், வரைபடம், அட்டவணை.
Reference words:
Internet,Computer,Students,Teachers, Syllabus, Video, Examination, Psychology, Map, Schedule.

ஆய்வின் குறிக்கோள்:
மாணவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் இலக்கணத்தை எளிய முறையில் இணையத்தின் வழியாக கற்றலுக்கான பாடத்திட்டதை எளிய முறையில் அமைத்துத் தானே கற்றலை  ஊக்குவித்தல். மேலும் மாணவர்களின் தமிழ் இலக்கணம் கற்றலை மேம்படுத்துவதே இவ்ஆய்வின் குறிக்கோள் ஆகும்.

முன்னுரை:
தமிழ் மொழியை சிறப்பாக கற்க வேண்டுமானால் இலக்கணத்தைக் கற்க வேண்டும் என்பது கட்டாயம் தான் ஆனாலும் முழுவதுமாக இலக்கணத்தை மட்டும் படித்து நாம் அறிய விழைந்தால் அது மனச்சோர்வை தரும் என்பதோடு அதன் விளக்கத்தை முற்றிலும் உணர முடியாது. ஏன்? மேலும் மேலும் இலக்கணம் படிக்கும் ஆர்வமும் குறைந்து விடும் எனவேதான் இலக்கணத்தை கற்க வேண்டுமானால் அதற்கான பாடத்திட்டத்தை வடிவமைத்தல் மிகவும் முக்கியம் ஆகும். கீழே கணினியில் வழியாக இணையத்தைப் பயன்படுத்தி கற்றல்-கற்பித்தலுக்கான  பாடத்திட்டத்தை எவ்வாறு? அமைப்பது பற்றி ஆய்வின் மூலம் காணலாம்.

இணையத்தில் தமிழ் இலக்கணம் கற்பித்தலுக்கான பாடத்திட்டத்தில் ஆசிரியரின் பங்கு:
இணையம் வழியாக கணினியின் துணை கொண்டு கற்றல் – கற்பித்தல்:
கற்றல் - கற்பித்தல் என்பது ஆசிரியருக்கும், மாணவருக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. அதாவது கருத்துகளின் வெளிப்பாடு அறிவுப்பூர்வமாக அமைந்து அது கற்றலில் சிறப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மாணவனின் திறன் மேம்படுத்தப்படுகிறது. எனவே இதற்கேற்க பாடத்திட்டத்தை ஆசிரியர் அமைப்பது அவசியம் ஆகும்.

கற்றல் கற்பித்தலில் கருவிகளைப் பயன்படுத்துதல்:
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இந்நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் முதல் கருவி கணினி ஆகும். கணினியைக் கொண்டு தெளிவாகவும், நுட்பமாகவும், விரிவாகவும், விரைவாகவும் கற்றல் - கற்பித்தல் அமைகிறது. எனவே ஆசிரியர் கணினியின் வழியாக இணையத்தைப் பயன்படுத்தி கற்பிப்பதை ஒரு கற்பித்தல் கருவியாகப் பயன்படுத்த இயலும்.

ஆசிரியர்கள் கட்டாயமாக இணையத்தில் அறிய வேண்டியவைகள்
தமிழ் தட்டச்சு மென்பொருள்கள், யூடியூப், காணொளிகளை உருவாக்குதல், வலைப்பூ, கட்டுரைகள் எழுதுதல் போன்றவைகளை ஆசிரியர் கணினியில் இணையத்தைப் பயன்படுத்தி செயல்படுத்த தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

உளவியல் நோக்கில் தமிழ் இலக்கணம் இணையத்தில் கற்றல் - கற்பித்தல்
மாணவர்கள் தானே கற்றலை ஊக்கிவிக்கும் உளவியல் உத்திகள்:
“கல்வி உளவியல் என்பது மாணாக்கரின் கற்றல் என்னும் நடத்தையை திட்டமிட்டபடி செம்மைப்படுத்தி அவர்களின் ஆளுமையை மேன்மையுறச் செய்தலே ஆகும்” - என்று பேராசிரியர் கி.நாகராஜன் கூறும் கல்வி உளவியல் அடிப்படையிலேயே தமிழ் இலக்கணம் எளிய முறையில் கற்பிக்கத் திட்டமிட்டு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும். இதன் அடிப்படையில் இலக்கணத்திற்கான பாடத்திட்டத்தை அமைத்து எளிய முறை கற்றல்-கற்பித்தலுக்கு வழிவகுக்கிறது என்பதை இப்பகுதியில் காண்போம்.
“கணினியில் எளிய முறையில் மாணவர்களுக்கு இலக்கணம் கற்பிக்க முதலில் மாணவர்களுக்கான பாடபொருள்களை திட்டமிட வேண்டும்”. இதனை எச்.சி.லிண்ட்கிரேன் கற்றல்-கற்பித்தல் என்னும் செயல்பாட்டின் ஐந்து முக்கியக் கூறுகளாக கூறுவன.
  • கற்பவர்
  • கற்கும் முறைகள்
  • கற்கும் அனுபவங்கள்
  • கற்கும் சூழ்நிலைகள்
  • கற்பிப்பவர்

(உளவியல் நோக்கில் கற்றலும் மனித மேம்பாடும் - பேராசிரியர் கி.நாகராஜன், தேவ சீத்தாராமன் – பதிப்பு - செப்படம்பர் , 2013 - ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை, பக்கம்-17, பக்கம்-19)
இதன் அடிப்படையில் இலக்கணம் கற்றல் திட்டமிடபட்டுள்ளது. 


இந்த உளவியல் காரணத்தைப் பயன்படுத்தி கற்றல் நடக்கும் போது மாணவன் தானே கற்றலை ஊக்குவிக்கும் விதமாக இப்பாடத்திட்டம் அமைகிறது.

காக்னேயின் படிநிலைக் கற்றல் கோட்பாடுபாட்டின் படி இலக்கணப் பாடத்திட்டத்தை கட்டமைத்தல்
இராபர்ட் காக்னேயின் கோட்பாடுபடி எல்லா வகைக் கற்றல்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எளிய கற்றலிலிருந்து சிக்கலானப் பிரச்சனைகளையும் தீர்க்கக் கற்றுக் கொள்வது வரை கற்றலில் எட்டு வகைகள் உள்ளன. இவர் கூறிய கற்றலின் எட்டு படிநிலையில் நான்காவது சொற்கள் இணைத்தலைக் கற்றல். அதாவது சொற்களைப் பொருத்தமான இணைத்தலைக் கற்றுக்கொள்வதன் மூலம் மொழிப்பயிற்சியைப் பெற முடியும் என்கிறார் காக்னே.
A diagram of a company

Description automatically generated

(உளவியல் நோக்கில் கற்றலும் மனித மேம்பாடும் - பேராசிரியர் கி.நாகராஜன், தேவ சீத்தாராமன் - பதிப்பு-செப்படம்பர்,2013 - ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை, பக்கம்-391)

இவரின் கூற்றின் படி மாணவர்களுக்கானப் பாடத்திட்டத்தில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் முறையும், ஒலி-ஒளி அமைப்பின் மூலமும் அமைக்க வேண்டும். இவ்வாறு வடிவமைக்கப்படும் பாடத்திட்டத்தினால் மாணவர்களுக்கு கணினியைப் பயன்படுத்தி இணையம் வழி கற்றலில் ஆர்வம் ஏற்படுகிறது.
  • சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் உத்திகள்
  • ஒவ்வொரு உரைநடையின் பத்திகளையும் சங்கிலித் தொடர்முறை மூலம் மன வரைபடமாக சுருக்கி விளக்குதல்.
  • அட்டவணை முறையின் மூலம் விளக்குதல்
  • வரைபடங்கள் மூலம் விளக்குதல்.
இவ்வாறாக இலக்கண விளக்கத்தை மாணவர்களுக்கு எளிமைப்படுத்திக் கொடுப்பதன் மூலம் இலக்கணத்தைக் கற்க ஆர்வம் உண்டாகும். எனவே இவ்வழிமுறைகளில் பாடத்திட்டம் அமைவது அவசியம் ஆகும்.

காணொளி வழியாக இலக்கணத்தின் விதிகளை எழுதும் முறையை கற்றல்
மன வரைபடம் உருவாக்க பயன்படும் மென்பொருள்கள்
  • https://www.lucidchart.com
  • https://www.edrawsoft.com
  • https://www.ayoa.com
  • https://www.mindmapper.com
  • https://venngage.com

மாணவர்கள் காணொளியில் படைப்பைக் பார்த்தும், கேட்டும், பல்லூடகத்தின் வழி கற்றலை எளிமையாக்கி இடைவெளி குறைந்த மனநிலைக்குக் கொண்டு செல்கிறது. எனவே மாணவர்களின் கற்றல் பாடத்திட்டத்தில் காணொளி முக்கியப்பங்கு வகிக்கிறது. 

காணொளிகளை உருவாக்கும் விதம்:
காணொளியை உருவாக்கத்தில் கணினி அல்லது திறன்பேசி முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் பல்வேறு மென்பொருள்கள் இக்காணொளி உருவாக்கத்திற்கு உறுதுணையாக உள்ளது. அதைப்பற்றி கீழே காண்போம்.

காணொளிகளை உருவாக்கப் பயன்படும் மென்பொருள்கள்
  • https://obsproject.com
  • https://filmora.wondershare.net
  • https://www.videowinsoft.com
  • https://clideo.com
  • https://biteable.com

தேர்வின் மூலம் தமிழ் இலக்கணம் கற்றலை மதிப்பிடுதல்.

  • தேர்வுக்கான மதிப்பீடு பட்டியலில் கேட்கப்படும் வினாக்களை வரையறுத்தல்
  • இலக்கணம் கற்கும் ஒவ்வொரு மாணவனின் கற்றல் திறனுக்கு ஏற்பத் தேர்வு வினாக்களை அமைக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட நிலைக்கான அடிப்படைத் திறன்களைக் கற்ற பின் தேர்வு வினாக்களை கொடுக்க வேண்டும்.
  • இலக்கண வினாக்கள் மாணவர்கள் கற்ற பாடப் பொருளுக்கு ஏற்ப அமைதல் அவசியம் ஆகும்.
  • மாணவர்கள் இலக்கணத் தேர்வில் விடையளித்தவுடனே அவனின் சுய மதிப்பீட்டை அறியும் வகையில் தேர்ச்சியை அறிய வழிவகை செய்தல் அவசியம் ஆகும்.

மதிப்பீடு பட்டியலை உருவாக்கப் பயன்படும் மென்பொருள்
  • http://www.Googleforms.com
  • http://www.Quizizz.com
  • http://www.classmarker.com

ஆய்வின் முடிவு:
 இவ்ஆய்வில் மாணவர்கள், இணையத்தில் மிக எளிய முறையில் கற்றல் அடைவுக்கு ஏதுவாக உள்ள பாடத்திட்டத்தினை உருவாக்கபட்டமை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 

ஆய்வுக்குத் துணை கொண்டவை::
  1. உளவியல் நோக்கில் கற்றலும் மனித மேம்பாடும் - பேராசிரியர் கி.நாகராஜன், தேவ சீத்தாராமன் - பதிப்பு-செப்படம்பர்,2013 - ஸ்ரீராம் பதிப்பகம், சென்னை.
  2. கல்வி(2013-தமிழ்நாடு ஆசிரியர் கல்விலியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)-க.சாந்தகுமாரி- சாரதா பதிப்பகம்.
  3. மின்னிதழ் – முனைவர் துரை. மணிகண்டன் – 06 ஏப்ரல் 2011.
  4. india tamil – முனைவர் மு. இளங்கோவன் – 20 ஜீலை 2010.
  5. packiam.wordpress.com - S. Edward Packiaraj, M.Com.,M.Phil.,B.Ed., BLIS., PGD PGDCA

Author
கட்டுரையாளர்

முனைவர் இரா. அருணா

உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் கல்லூரி,

ஒத்தகுதிரை,கோபிசெட்டிபாளையம் - 638 455