இணையத்தில் மருத்துவம்

நெறியாளர் D. ராஜசீலி & ப.கனகவள்ளி

உதவிப்பேராசிரியர் & பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

Summary

இன்றைய உலகத்தில் நாட்டுப்புற மருத்துவம் என்பது அழிந்து வரும் நிலையில் ஒரு புத்துணர்ச்சி வழக்கும் முறையில் இணையதலத்தில் மூலமாக மருந்துவ பதிவுகள் மிகவும் பயன் உள்ள நிலையில் என்றும் நின்று நிலைப் பெற்றுள்ளது. இன்றைய கொரானா காலகாட்டத்தில் இணையத்தின் மூலம் நாட்டுப்புற மருத்துவம் மக்களுக்கு நன்மைபயக்கும் வகையில் பலன் அளிக்கும் நிலையில் சிறப்பாக செயல்பாட்டு வருவது இணையத்தில் மருத்துவம் என்பது இவ்வாய்வு கட்ரையின் வழி முறையாகும்.

வயிற்று பொருமல் (https://www.femina.in>tamil), இருமல் (https://patient.info)> சளி (https://ta.vikaspedia.in), மூலம் (https://handehospita.org)> கால் வீக்கம் (https://m.dinamalar.com)> கண்ணு வலி (https://tamil.boldsky.com), மஞ்சள் காமாலை (https://www.vikatan.com), மூக்குவலி (https://www.vondt.net), காது வலி (https://www.myupchar.com), வயிற்று வலி (https://tamil.asianetnews.com), தலைவலி (https://www.aboutkidsHealth.ca), கை வலி (https://www.vondt.net), கழுத்து வலி (https://tamil.news18), முதுகு வலி (https://ta.m.wikipedia.org), பாத வலி (https://www.maalaimalar.com), பொடுகு தொல்லை(https://tamil.samayam.com), உடம்பு வலி ((https://zha.co.in), முகப்பருப் போக்க (https://www.yogaatral.com), பல் வலி (https://www.pothunalam.com), மறதிநோய் (https://www.rcpsych.ac.uk), அரிப்பு ஏற்படுவது (https://www.hindutamil.in), நெஞ்சு எரிச்சல் (https://www.toptamilnews.com), கொழுப்பு கட்டி (https://www.seithipunal.com), உதடு வெடிப்பு (https://tamil.boldsky.com), விரல் நகங்களில் வெள்ளை புள்ளிகள் (https://toowa.ru.com), கொரோனா (https://www.bbc.com) என்னும் இணையத்தின் வழி நோய்காண காரணம், நோய்காண தீர்வுகளை அறிந்து பயன் பெறும் வகையில் இவ்வாய்வு கட்டுரை அமைந்துள்ளன.

இன்றைய சூழலில் இணையத்தின் மூலம் கைமேல் பயன் அளிக்கும் வகையில் கையில் வைத்து பயன் பெறும் நிலையில் அமைந்துள்ளன. இந்த இணைய மருத்துவ முறைகள் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையில் அனைவருக்கும் உதவும் மருத்துவம் முறைகள் ஆகும். இம் மருந்தினால் உடலுக்கு எவ்வித பக்க விளைவும் ஏற்படாது வகையில் அமைந்துள்ளன. அன்று ஆணிவேர் போல் வேரூரின்றி மருத்துவ முறைகள். இன்று ஆலமரம் போல் இணையத்தில் வளர்ந்துள்ளன.

முன்னுரை 

இன்றைய உலகத்தில் நாட்டுப்புற மருத்துவம் என்பது அழிந்து வரும் நிலையில் ஒரு புத்துணர்வு வழங்கும் முறையில் இணையதளத்தின் மூலமாக மருத்துவ பதிவுகள் மிகவும் பயன் உள்ள வகையில்  நிலைப்பெற்றுள்ளது. இன்றைய கொரோனா காலகாட்டத்தில் இணையத்தில் நாட்டுப்புற மருத்துவம் மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் பலனளிக்கும் நிலையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை இவ்வாய்வுக் கட்டுரை ஆராய்கிறது..   

தலைவலி  

தலைவலி : இன்று சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும்  வரக்கூடிய ஒரு நோய் ஆகும். இந்நோய்க்கு நமது கிராமப்புற, நகர்ப்புற மக்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் இணையத்தின் வழியாக எளிதில் வீட்டில் உள்ள மருந்துவப் பொருட்களை கொண்டு மருந்து தயாரிக்கிலாம். 

   இதில் 11 விதமான தலைவலிகள் உள்ளன.  அவை குறைந்த தலைவலி, தீவிர தலைவலி என்று பாகுபாடின்றி  தலைவலி எப்படி ஏற்பட்டாலும் அது அதிக அசவுகரியத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. இந்த தலைவலி காரணமாக பெரும்பாலும் குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. 

தலைவலி தீர்ப்பாதற்க்கான மருந்து 

   இஞ்சி ஒற்றை தலைவலியை சரி செய்ய உதவுகின்றது. 

   புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்துக்கொண்டால் தலைவலி      சரியாகி விடுகின்றன.   

காது நோய்கள்  

   ஒருதுண்டுச் சக்கைத் தோல்நீக்கிக் கால் லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிப்  பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வரக் குத்தல் தீரும். 

 எலுமிச்சம் பழச்சாறு நான்கு துளிகள் காதில் விட்டு வரக் காதுவலி தீரும். 

   பிரண்டைச்சாறு ஓரிரு துளி காதில் விட்டு வர சீழ்ப்பிடித்தல் தீரும். 

வயிற்றுப் பொருமல் 

   புதினா துவையல் வயிற்றுக் கோளர்றுகளுக்கு நல்ல மருந்தாகும். 

   ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாகும்.  

இருமல் சளி 

   ஆடாதோடை இலை பாதி எடுத்து வெதுவெதுப்பான வெந்நீரில் சுத்தம் செய்து இடித்து அதன் சாறை பிழிந்து எடுத்து;. மூன்று துளித்தேனில் மூன்று துளி இந்த சாறை விட்டு நன்றாக தடவி விடவும். இது சளியை முறித்து தீவிரத்தைத் தடுக்கும். இருமல் மட்டுப்படும். தினமும் மூன்று வேளை கொடுத்தால் போதுமானது ஆகும். 

   கல்யாண முருங்கை இலையை கொண்டு வந்து வெந்நீரில் அலசி இடித்து அதன் சாறை எடுக்கவும். இதையும் மூன்று துளி தேனோடு மூன்று துளி சாறு கலந்து கொடுத்தால் சளியோடு உள்ளிருக்கும் கிருமியையும் வெளியேற்றும், இருமலுக்கும் நல்லது.    

மூலம்  

    இந்நோய் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் 100 கிராம் வேகவைத்த கருணைக்கிழங்கு ஒரு ஸ்பூன் வேகவைத்த வெந்தயம் மற்றும் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை ஒரு சுத்தமான கிண்ணத்தில் சேர்த்து நன்றாக மசித்து கொள்ளுங்கள். இந்த கலவையை இரவு உறங்குவதற்கு முன் தயார் செய்து சாப்பிட்டு வர வெகு சீக்கிரம் இந்த மூலநோய் குணமாகும். 

   பசலைக்கீரை, சுக்காங்கீரை, மீன், பீன்ஸ், வெண்டைக்காய், அவரைக்காய் ஆகிய உணவுப்பொருட்கள் மூலநோய்க்கு சிறந்த உணவாகும். 

கால் வீக்கம்  

   வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல்லுப்பு கலந்து காலை ஊறவைத்தால் வீக்கம் நீடித்தால் வீக்கம் மற்றும் வலி குறையும். 

   காயம் காரணமாக கணுக்கால் மற்றும் பாதத்தில் ஏற்படும் வீக்கத்திற்கு ஐஸ் பேக் வைத்தால் சரியாகிவிடும். 

கண் வலி 

   கண் வலி உள்ளவர்கள் இரண்டு கை பிடி அளவு புளியம்பூவை பறித்து அதை நீர் விட்டு நன்கு அரைத்து கண்களை சுற்றி பற்று போடவேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் வலி குணமாகும். அதோடு கண்கள் சிவந்திருந்தால் அதுவும் குறையும். 

   சிலருக்கு கண்களில் அடிக்கடி அல்லது தொடர்ந்து நீர் வடிதல் பிரச்சனை இருக்கும். அது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இஞ்சி, வெள்ளம், மிளகு மற்றும் வேளைக்கீரை ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவிற்கு சாப்பிடடு;. அதை தொடர்ந்து செய்வதன் மூலம் சில நாட்களில் கண்ணில் நீர் வடிதல் பிரச்சனை சரியாகும். 

மஞ்சள் காமாலை  

   கீழாநெல்லி ஒரு கைப்பிடி, சீரகம் ஒரு ஸ்பூன் எடுத்து இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை,மாலை இரு வேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழிந்துவிடும்.  

   கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையும். 

மூக்குவலி 

    சைனஸ் தொந்தரவு உடையவர்கள் தினமும் ஆவிபிடித்தால் சரியாகவிடும். 

   மாதுளம்பூ சாறு, அருகம்புல் சாறு இவைகளை கலந்து ஒரு டம்ளர் அளவு தினமும் இருவேளை அருந்தி வர மூக்கிலுpருந்;து இரத்தம் வடிவது நிற்கும். 

காது வலி 

    துளசி இலையை சிறிதளவு பறித்து நசுக்கி அதன் சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்து அதை இரண்டு சொட்டுகள்; காதில் விட்டால் காது வலி சரியாகிவிடும். 

   காதுகளில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த வெற்றிலையைப் பயன்படுத்தலாம். வெற்றிலையைச் சாறுப் பிழிந்து ஒரு சில சொட்டுகளை வலியுள்ள காதுகளில் விட்டால் காது வலி குறையும். 

வயிற்று வலி 

     மாதுளம் பழத்தோலை நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும். புpன்னர் இரவு மாதுளைத் தோலை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை அந்தத் தண்ணீரை வடிகட்டி குடிக்க வேண்டும். அப்படி செய்தால் வயிறு வலி உடனே குணமாகும். ஆண் பெண் ஆகிய இருவருமே இந்த குடிநீரைக் குடிக்கலாம். 

   ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிறு வலி குணமாகும். 

தலைவலி 

   இஞ்சி ஒற்றை தலைவலியை சரிசெய்ய உதவுகிறது. 

   புதினா எண்ணெயை, நெற்றி மற்றும் தலையில் நன்றாக தேய்த்துக் கொண்டால் தலைவலிக்கு அது சிறந்த வலி நிவாரணியாக இருக்கும். 

கை வலி  

   வேலி பருத்திச் சாறு, சுண்ணாம்பு கலந்து கை வலியுள்ள  இடததில் தடவ வலி குறையும். 

   சீந்தில் கொடி இலைகளைப் பாலுடன் கலந்து வர கை வலி குறையும் 

கழுத்து வலி  

    ஒரு சிறிய டவலில் ஐஸ் கட்டியை சுற்றி வைத்து கழுத்தில் வலி இருக்கும் இடத்தில் 2 நிமிடம் ஒத்தடம் கொடுத்து வந்தால் கழுத்து வலி குணமாகும். 

  கழுத்து வலி நீங்க நல்லெண்ணையில் நொச்சி இலையை சேர்த்து நன்றாக காய்ச்சி தலையில் அரைமணி  நேரம் ஊறவைத்து அதன் பிறகு வெந்நீரில் குளித்து வர கழுத்து வலி நீங்கும். 


முதுகு வலி  

    விளக்கெண்ணையை சிறிது சூடுபடுத்தி பாதிக்கப்பட்ட முதுகுpல் தடவ குணமாகும். 

   பூண்டு ஐந்து பல்களை எடுத்து ஐம்பது மில்லி நல்லெண்ணையில் இட்டு, காய்ச்சி ஆற வைத்து, இளம் சூட்டில், பாதிக்கப்பட்ட வலியுள்ள இடங்களில் தடவலாம். 

 

பாத வலி 

   நொச்சி இலை மற்றும் வாத முடக்கி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து கொண்டு, ஒரு வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றி இந்த இலையை போட்டு வதக்கி வைத்தால் பாத வலி குறையும். 

   கால்களில் ஷாக்ஸ் அணிந்து நடக்க வேண்டும். இதனால் குளிரில் பாதமும் நரம்புகளும் பாதிக்காமல் இருக்கும்.   

பொடுகு தொல்லை 

   முதல் நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும். 

   தோங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு மறைந்து விடும்.  

உடம்பு வலி  

வாதநாராயணன் இலையைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்க உடல்வலி குறையும் 

உடல் வலி அதிகமாக இருப்பவர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், செரி ஜீஸை பருகலாம். இது சதைகளில் உண்டாகும் வலியை குறைக்கிறது. இது ஓட்டபந்தய வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்து உடல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு மிகச்சிறந்தது.   

முகப்பருப் போக்க 

   எலுமிச்சை சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமத்தில் உள்ள எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தி, பருக்கள் வராமல் செய்யும். அதற்கு எலுமிச்சை சாற்றினை பருக்கள் மீது தடவி உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 

ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அல்கலைன் தன்மை, முகப்பருவைப் போக்க உதவும் அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 1 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இச்செயலால் பருக்கள் மறைவதோடு, பருக்களால் ஏற்படும் தழும்புகளும் நீங்கும்.  

பல் வலி 

பல் வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பரித்க்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். 

   கடுகு எண்ணெய், பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி கடுகு எண்ணையுடன் ஒரு சட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும். 

மறதிநோய் 

வல்லாரை, அதிமதுரம், மண்டுக பரணி, சங்குபூ, கொட்டம், திப்பிலி, அவண்தாமரை, வசம்பு, கல்யாணப்பூசணிச்சாறு, நெய், சிற்றமிர்து, பால், தயிர், தியானம், மந்திரம், தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளித்தல் போன்றவை ஆயுர்வேதத்தில் நினைவாற்றலைப் பெருக்கும் மருந்துகள்  நினைவாற்றல் ஆகும். 

பத்து பாதாம் பருப்பை ஊறைவைத்து இரவு சாப்பிட வேண்டும். மறதி மறையும். 

அரிப்பு  

துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீ;ண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும். 

தேங்காயெண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்ய கூடியது. அது அரிப்பு போன்று நமைச்சலுக்கும்  இவை மிகவும் பயனளிக்க செய்யும். தினமும் வெதுவெதுப்பான நீரில் குளித்த உடன் உடலை துடைத்து உலர விட்டு உடல் முழுவதும் தேங்காயெண்ணெய் தடவி விட வேண்டும். தினசரி இதை செய்து வந்தால் நாளடைவில் சரும அரிப்பு சரியாக கூடும். 

நெஞ்சு எரிச்சல் 

நமக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் கண்ட டானிக்குகளை குடிக்க வேண்டியதில்லை. மாறாக நீரில் இரண்டு ஏலக்காயை கசக்கி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்ட பின்னர் இந்த நீரை குடிக்கவும். இவ்வாறு செய்து வந்தால் உடனடியாக நெஞ்செரிச்சலை குணப்படுத்தி விடலாம். 

   மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட மூலிகைகளில் துளசி முதன்மையான இடத்தில் உள்ளது. நெஞ்செரிச்சலால அவதிப்படுவோருக்கு இது அருமையாக உதவும். ஆறு துளசி இலைகளை மென்றால் நெஞ்செரிசிசல் பறந்து போய் விடும். மேலும், இவை வயிற்றில் உண்டாக கூடிய வாயுக்களை தடுத்து வயிற்று பகுதியில் எரிச்சல் ஏற்படாதவாறு காத்து கொள்கிறது. 

கொழுப்புக் கட்டி 

ஆரஞ்சு பழத்தில் ஏராளமான வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் உள்ள அமிலத்தன்மை, உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பயன்படுகின்றது. எனவே கொழுப்புக் கட்டிகள் கரைய தினமும் ஆரஞ்சுப் பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதை உள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். 

ஒரு பருத்தித் துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயில் அந்த முடிப்பை தோய்ந்து, ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து தாங்கும் அளவுக்கு சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஓத்தடம் கொடுத்து வர வேண்டும். 

உதடு வெடிப்பு 

தினமும் காலை மாலை இருவேளை பசும்பாலின் பாலேட்டை உதடுகளின் மீது தடவ வேண்டும். மேலும் கரும்பின் இலைகளைச் சுட்டு சாம்பலாக்கி அதனுடன் பசுமாட்டின் வெண்ணையைக் குழைத்து தடவ உதடு வெடிப்பு நீங்கும். 

 நெல்லிக்காய்ச் சாற்றை அதன் சம அளவு தேனுடன் கலந்து தடவிவர நல்ல பலன் தெரியும். கேரட் சாறு, கிளசரின், பசும்பாலாடை ஆகிய மூன்றையும் கலந்து தடவ வேண்டும். இதன் மூலம் உதடு வெடிப்பு குணமாகும். 

கொரோனா 

கபசுர குடிநீர் பொடி, ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு டம்பர் தண்ணீரில் கலந்து, 15 முதல் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் கால் டம்ளராக வற்றியப்பின் அதனை, வடிகட்டி குழந்தைகள் 30 மி.லி., பெரியவர்கள், 60 மி.லி., அளவு காலை ஒரு வேளையில் அருந்த வேண்டும். 

நாட்டு நெல்லிக்காய் 50 மி.லி., துளசி 50 மி.லி., எலுமிச்சை 5 மி.லி., இஞ்சி 10 மி.லி., மஞ்சள் கால் ஸ்பூன், தண்ணீர் 150 மி;லி., ஆகிய அளவில் எடுத்து இயற்கை பானம் தயாரித்து, குடிக்கலாம்.   

முடிவுரை 

இவ்வாறாக நமக்கு தேவையான அனைத்து மூலிகைப் பொருட்;கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவம் சார்ந்த  மருத்துவ குறிப்புகள் போன்ற எல்லா செய்திகளையும் இன்று இணையம் வழியாக நமக்குக் கிடைக்கிறது. அவை கிடைத்ததோடு மட்டுமல்லாமல் அதன் நன்மை தீமைகளையும் எடுத்துரைப்பதோடு இணையம் மருத்துவத்திலும் நம்மை வழிநடத்துகிறது. இவ்வாறு மக்கள் தங்கள் வாழ்வில் பயன்பெற்று அனுபவத்தில் கூறிய செய்திகளை இக்கட்டுரை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது. 
Author
கட்டுரையாளர்

நெறியாளர் D. ராஜசீலி & ப.கனகவள்ளி

உதவிப்பேராசிரியர் & பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்