இணையமும் தமிழ்ப் பயன்பாடும்
பேரா. இ.ஹேமமாலா , எம்.ஏ.,எம்ஃபில்.,நெட்,பி.எட்.டி.ஜி.டி.பி.ஜி.டி.சி.ஏ.
தமிழ்த்துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,
பார்வதீஸ் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
திண்டுக்கல்.
Summary
உலகில் கணினி வரலாற்றுக்குள் முக்கியமான திருப்புமுனையாக உருவெடுத்தது இணையம் ஆகும். இணையத்தின் மூலம் உலகத் தமிழர்கள்; எல்லாம் மின்னஞ்சல் மூலம் ஒன்றிணைந்தனர். உலகத் தமிழர்கள் ஒன்றிணைய அடிப்படையாக இருந்தது தமிழ் மொழி. இம்மொழியின் மூலம் ஒன்றிணைய ஓரே மாதிரியான தமிழ் எழுத்துருக்கள் தேவைப்பட்டன. இவ்வெழுத்துருக்களான மயிலை, இணைமதி, போன்ற எழுத்துருக்கள் இணையத்தின் வழி இலவசமாக வழங்கப்பட்டன. இவை போன்ற எழுத்துருக்களின் வளர்ச்சியால் இணையத்தமிழ்ப் பயன்பாடு என்பது உலக அளவில் உச்சத்தை தொட்டதை இக்கட்டுரையின் வழி காணமுடியும்.
முன்னுரை
உலகில் கணினி வரலாற்றுக்குள் முக்கியமான திருப்புமுனையாக உருவெடுத்தது இணையம் ஆகும். இணையத்தின் மூலம் உலகத் தமிழர்கள்; எல்லாம் மின்னஞ்சல் மூலம் ஒன்றிணைந்தனர். உலகத் தமிழர்கள் ஒன்றிணைய அடிப்படையாக இருந்தது தமிழ் மொழி. இம்மொழியின் மூலம் ஒன்றிணைய ஓரே மாதிரியான தமிழ் எழுத்துருக்கள் தேவைப்பட்டன. இவ்வெழுத்துருக்களான மயிலை, இணைமதி, போன்ற எழுத்துருக்கள் இணையத்தின் வழி இலவசமாக வழங்கப்பட்டன. இவை போன்ற எழுத்துருக்களின் வளர்ச்சியால் இணையத்தமிழ்ப் பயன்பாடு என்பது உலக அளவில் உச்சத்தை தொட்டதை இக்கட்டுரையின் வழி காணமுடியும்.
வையவிரிவலை (W.W.W)
1990 கால கட்டத்தில் வையவிரிவலை இணையத்தோடு இணைந்தது. கணினியோடு இணையம் இணைந்தது. இணையத்தோடு வையவிரிவலையும் விண்டோஸ் 95 யும் இணைந்தன. இவ்வாறு இணைந்ததன் மூலம் ஏhhளமான தமிழ் வலைதளங்கள் வளம் வந்தன. தமிழ்நாட்டில் தமிழ் அச்சில் வெளிவந்த நாளேடுகள், வார இதழ்கள், மாத இதழ்கள், இணையத்தில் இடம் பிடித்தன. தின மணி, தின மலர், தினத்தந்தி போன்ற நாளிதழ்களும் ஆனந்த விகடன் , கல்கி, குமுதம் , கணையாழி போன்றவை மின்னிதழ்களாக இணையத்தில் மின்னின. மின்னிதழ்கள் இணையத்தில் வெளியிடப்பட்டபோது கணிப்பொறியின் உதவி இல்லாமலே வெளிவந்தன1. கணித் தமிழின் வளர்ச்சியை அடுத்து இணையத்தமிழ் வளர்ச்சி தோன்றியது.
தமிழ்மொழயின் வளர்ச்சியும் இணையதளங்களும்
உலகில் தொழில்;புரட்சி , வேளாண்மைப்புரட்சி , அறிவியல்ப்புரட்சி ,போன்ற புரட்சிகளுக்கு அடுத்து தகவல் தொழில் நுட்பப்புரட்சி ஏற்றம் பெற்றுள்ளது. இதனுடைய பயனாக உலகமே இன்று “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்னும் வரிகளில் வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனாலும் இன்றைய தேவைகளும், எதிர்பார்ப்புகளும் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகின்றன. இத்தேவைகளை இணைய தளங்கள் நமக்கு வழங்கி வருகின்றன2. தமிழை வள்ப்பதற்கும். புதுமைசெய்வதற்கும் இணைய தளங்கள் இணையில்லா பங்காற்றி வருகின்றன. தமிழ் வளர்ச்சியில் பங்கு கொள்ள பல இணைய தளங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில இணைய தளங்களின் பங்கை பார்ப்போம்.
கணியன் இணையதளமும் எழுத்துருவும்
உலகில் வலைதளத்தில் தமிழை முதன் முதலாக ஏற்றி வைத்தவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நா. கோவிந்தசாமி ஆவார். இணையத்தில் தமிழை உள்ளீடு செய்வதற்கு ஆழமாக யோசித்து விசைப்பலகை ஒன்றையும் உருவாக்கிக் காட்டியவர் இவரே ஆவார். அதற்கு கணியன் என்ற பெயரையும் சூட்டினார்3. இந்திய மொழிகளில் தமிழ் முதன் முறையாக 1995 அக்டோர் 27 ஆம் தேதி வலைதளத்தில் ஏற்றப்பட்டது. இந்த கணியன் இணைய தளத்தில் தமிழ் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளும் படைப்புகளும் தொகுக்கப்பட்டன. இவ்விணையம் முழுக்க முழுக்க கணியன் என்ற எழுத்துருக்களால் அமைந்துள்ளது.
இணையம் என்னும் சொல்
முதன் முதலில் இணையம் என்ற சொல்லை தமிழ் இணையம் கூறியது. இவ்விணையத்தை ஆஸ்திரேலியா வாழ் தமிழரான பால பிள்ளை என்பவரால் தொடங்கப்பட்டது. தமிழ் சார்ந்த கருத்துக்களும் அறிவியல் விளக்கங்களும் இவ்விணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன4. உலகில் உள்ள பல நாடுகளின் மொழிகளின்; அகராதிகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்விணையத்தின் வழி தமிழ், தமிழர், தமிழ்நாடு, பற்றி செய்திகளை உலகத்தில் உள்ள யாவரும் அறியுமாறு இடம்பெற்றுள்ளன.
பாரதி
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பிரிவிற்கான பகுதியே பாரதி இணையமாகும். வாசு ரங்கநாதன் அவர்களின் முயற்சியால் உருவானது. பெனசில்வேனியா பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பதற்கான பகுதியாக இவ்விணையம் செயல்படுகிறது.5 மேலும் தமிழ் எழுத்துக்கள், தமிழ் சொற்கள் , இலக்கணம், இலக்கியம் மற்றும் தமிழ் கற்பித்தல் ஆகிய பிரிவுகளில் இவ்விணையம் இயங்குகிறது. தமிழை எல்லா நாட்டவரும் கற்கும் விதத்தில் எளிமையாக கற்றல் முறை கையாளப்பட்டுள்ளது.
கணித்தமிழ்ச் சங்கம்
தமிழ் மென்ம தயாரிப்பு நிறுவனங்கள் , கல்வியாளர்கள், பேராசிரியர்கள் போன்றோi உறுப்பினராகக் கொண்டு கணித்தமிழ்ச் சங்கம் என்ற இவ்விணையம் செயல்படுகிறது. துமிழ் மென்ம தயாரிப்பு நிறுவனங்களின் செய்திகள் மற்றும் கணித்தமிழ்ச் சங்க செய்திகள் ஆகியன இவ்விணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன6. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இச்சங்கம் ஆண்டுதோறும் இணையத் தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.
தமிழ் மென்ம இணையம்
தமிழ் மென்மங்கள், கணித்தமிழ் சார்ந்த புத்தகங்கள் , கணித்தமிழ் அறிஞர்கள் குறித்த செய்திகள் ஆகியன இவ்விணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தால் நடத்தப்பெறும் இவ்விணையம் உலகின் முதல் தமிழ் மென்பொருட்களின் கடை என்று தம்மை அழைத்துக் கொள்கிறது.7 தமிழ் எழுத்துருக்கள், சொற்செயலிகள் , அகராதிகள், சோதிட மென்மங்கள், தமிழ் மின்னஞ்சல் பட்டியல் எனப் பலப் பகுதிகள் இவ்விணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
கணித்தமிழ் சொல் இணையம்
தமிழ் கம்ப்யூட்டிங் வேர்ட்ஸ் என்பதன் சுருக்கமே டிசி.வேர்ட்ஸ்.டாட்காம் என்பதாகும். கணிப்பொறிச் சாதனங்கள், மென்மங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின்; தமிழ்ச் சொற்களை இவ்விணையத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.8 தமிழ்க்கணினி கலைச்; சொல்லாக்கப் பணியில் இவ்விணையம் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்கிறது. தமிழக அரசின் கலைச் சொற்குழு தொகுத்த ஏழாயிரத்துக்கும் அதிகமான கணினி சார்ந்த ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ்ச் சொற்களை இவ்விணையம் தொகுத்துள்ளது.9 ஆங்கிலச் சொல்லுக்குப் பொருந்தாத தமிழ்ச் சொற்களை அடையாளம் காட்ட விரும்புவோர் எவரும் இதில் தமது கருத்தைப் பதிவு செய்யலாம் என்பது இதன் தனிச் சிறப்பாகும்.
உத்தமம்
உலகத் தமிழ் இணைய மாமன்றம் என்ற அமைப்பின் இணையத்தளமே உத்தமம் ஆகும். சிங்கப்பூரிலிருந்து இயங்கி வரும் இவ்வமைப்பானது உலகிலுள்ள தமிழர்கள் அனைவரையும் இணைக்கும் விதத்தில் பணியாற்றி வருகிறது.10 இதுவரை நடை பெற்றுள்ள இணையத் தமிழ் மாநாட்டுச் செய்திகள் அனைத்தும் இவ்விணையத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்விணையத்தின் முதல் தலைவராக டாக்டர் மு.ஆனந்தகிருஷ்ணனும் இயக்குநராக சிங்கப்பூரின் அருண் மகிழ்நனும் பணியாற்றி உள்ளனா11;. இவ்வமைப்பில் கணினித் தமிழை வளர்க்க ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டு கணினித்தமிழ் தரக் குழுக்களாகப் பணியாற்றி மின்பதிப்பு செய்யும் பணி குறிப்பிடத்தக்கது.
யூனிக்கோட் வளர்ச்சி
யூனிக்கோட் என்பது உலக மொழிகள் அனைத்தின் எழுத்துகளையும் குறியீடுகளையும் ( வரிவடிவங்கள் ) ஒரே கணினிக் குறியீட்டு முறையில் இணைத்து வடிவமைக்கும் ஒரு முறையாகும்12. இதில் உலகின் பெரும்பாலான மொழிகள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. யூனிக்கோட் முறைகளின் மூலம் ஜப்பான் சீனம் போன்ற சிக்கலான வரிவடிவங்களைக் கொண்ட மொழிகளைக் கூட எளிதில் கணினியில் பயன்படுத்த முடிகிறது.
எழுத்துருக்கள் தான் கணினியில் ஒரு மொழியின் வரிவடிவங்களை வெளிப்படுத்த அடிப்படையானவை தற்போது யூனிக்கோட் பெற்றது. பின் அதனை உலகமொழிகள் அனைத்தும் பயன்படுத்த ஆரம்பித்தன13. மொழிசார் கணினிப் பயன்பாடுகள், கணினி மொழியியல் என்ற புதிய பெயரைக் கொண்டு மெல்ல வளர ஆரம்பித்தன.
கணினியில் மொழிப் பயன்பாடுகளின் தேவைகயையும் , அவற்றின் மூலம் பெறக்கூடிய வளர்ச்சி நிலைகளையும் உணர்ந்த மொழியியலாளர்கள் யூனிக்கோட்டை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்தனா14;. இணையப் பயன்பாட்டில் பல்வேறு வகைகளில் யூனிக்;கோட் பயன்படுகிறது.
யூனிக்கோட் உள்ளீடு முறைகள்
யூனிக்கோட் எழுத்துருக்களை உள்ளிட தனியான விசைச்செயல்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறு தமிழ் மொழியிலும் யூனிக்கோடில் உள்ளிடப் பல விசைச் செலுத்திகள் இன்று கிடைக்கின்றன15. அவற்றின் மூலம் இன்றுவரை தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதற்கென்று பயன்பட்டு வந்த உள்ளீட்டு முறைகளின் மூலமே யூனிக்கோட் எழுத்துருக்களில் தட்டச்சு செய்யமுடிகின்றது.
முடிவுரை
மனித செயல்பாடுகளில் மாற்றத்தை கொண்டு வந்த கணினிக்குள் எத்தனையோ மாற்றங்கள்; நிகழ்ந்துள்ளன. கணினியோடு இணையம் இணைந்தது. இணையத்தோடு வையவிரிவலை வந்து சேர்ந்தது. இதனோடு தமிழ் மொழியும், தமிழ் எழுத்துருக்களும் தோன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்தது. ஒவ்வொரு மனிதனும் மொழியோடு இணைந்திருப்பது போல் தமிழ் மொழி இணையத்தோடு இணைந்துள்ளது. இவ்வாறு இணைந்துள்ளதால் தமிழ் மொழி , இலக்கியம், பண்பாடு போன்றவை புலம்;பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழ் ஆர்;வாளர்க்கும், இணையத்தின் வழியாக அறிவார்கள் எனவே இணையம் ஒன்று இல்லையேல் நாம் இணைந்து இருக்க முடியாது.
அடிக்குறிப்புகள்
- கணியன்.காம் தமிழ்ச்செய்தி ,ஆகஸ்ட்2001).
- .(WWW.tamil.net)
- (WWW.sas.ppenn.edu/-vasur/bharathi.htm)
- (W.W.W.Kanian.com)
- WWW.kanithamizh.org)
- (WWW.tamilsoftware.biz)
- (WWW.tewords.com)
- (WWW.infitt.org)
- WWW.tamilnux.com
- . WWW.tamilworld.com
- .WWW.tamillite.com
- .WWW.learntamil.com
- .WWW.kural.org
- .துரைமணிகண்டன்,இணையமும் தமிழும்,2008,ப.60.
- .மேலது,இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்,2010,க.49.
Author