இணையவழிக் கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும்

முனைவர் வி.வசுமதி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்

ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)

உடுமலைப்பேட்டை..

Summary

ஆசிரியர் – மாணவர் உறவென்பது தீயும் அனலும் போல அனுகியும் அஞ்சியும் இருத்தல் வேண்டும் என்கிறது நன்னூல். குருகுல கல்வியும், வகுப்பறைக் கல்வியும் போதித்தததும் அதுவே. ஆனால் இன்று ஆசிரியர் – மாணவர் உறவுமுறை சற்று மாற்றம் கண்டுள்ளது. காலச்சூழலே இதற்குக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. பார்வைக்குள் பார்வை வைத்து மாணவர்களைக் கண்ணால் கட்டிப்போட்டு பாடம் நடத்திய காலத்தைக் கடந்து இன்றைய கொரோனா காலம் அலைபேசியில் நமக்குநாமே பார்த்துக் கொண்டு பாடம் நடத்தும் நிலை வந்துவிட்டது. இத்தகைய சூழலிலும் மாணவர்கள் கவனிக்கும் பொருட்டு பாடம் நடத்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இச்சூழலில் இணையவழிக் கற்றல் கற்பித்தல் என்பது பன்னாட்டு கல்விக்கு இணையான கல்வித்திறத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்கிறது. இதில் உள்ள சிக்கல்களையும் தீர்வுகளையும் ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

“அழலின் நீங்கா அணுகான் அஞ்சி
நிழலின் நீங்கா நிறைந்த நெஞ்சமொடு
எத்திறத் தாசா னுவக்கும் அத்திறம்
அறத்திற் றிரியாப் படர்ச்சிவழி பாடே”

(பவணந்தி முனிவர் – நன்னூல் - பாயிரம்)


ஆய்வுப் பொருள்  

மாறிவரும் சூழலுக்கேற்ப மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் தங்களின் மேலான கணினிவகைச் செயல்களை வளர்த்துக் கொண்டு கற்றல் கற்பித்தல் திறனை மேம்படச் செய்வது இக்கட்டுரையின் ஆய்வுப் பொருள்.

ஆய்வின் கருதுகோள்

இணையவழி கற்றலில் ஏற்படும் சிக்கல்கயையும் இணையத்தில் காணலாகும் பல்வேறு செயலிகளின் வாயிலாக மாணவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையால் கற்றல் சிக்கலைத் தவிர்த்து தீர்வு காணுவதே  இக்கட்டுரையின்  கருதுகோள்.

கற்றல் கற்பித்தல்

நெஞ்சுகள னாகச் செவிவா யாக
தொல்காப்பியர் – தொல்காப்பியம் - சிறப்புப் பாயிரம்)

இருந்த கற்றல் கற்பித்தலில் இன்று கற்பித்தல் மட்டும் நடக்கிறது. கற்றல் கேள்விக்குறிதான். உலகம் கொரோனாவின் பிடியில் சிக்கினாலும் மாணவர்கள் அகப்பட்டது என்னவோ இணையவழிக் கல்விதான் என்று உள்ளுகின்றனர். ஏனெனில் வகுப்பறைச் சூழல் வேறு.  இணைய வகுப்பறைச் சூழல் வேறு.


வ.எண்

கல்லூரி வகுப்பறை

இணையவழி வகுப்பறை

1

பார்வை மாறாது

பார்வை மாறும்

2

குறும்புகள் குறையும்

குறும்புகள் அதிகம்

3

உடனடி பதில்கள் வராது

உடனடி பதில்கள் வரும்

4

கட்டாய கவனம் உண்டு

கட்டாய கவனம் இல்லை

5

புத்தகங்களின் தேவை உண்டு

மின் புத்தகங்களின் தேவை

6

ஆசிரியர் தன்னிலையை மாணாக்கர்களுக்கு உணர்த்தல்

ஆசிரியர் தன்னிலையை மாணாக்கர்களுக்கு உணர்த்தல் இல்லை

7

மாணவர் மனநிலை அறிதல் உண்டு

மாணவர் மனநிலை அறிதல் இல்லை



 இக்காரணங்களை நோக்கும் போது வகுப்பறையை நேரில் பார்த்துப் புரிந்து கொண்ட ஆசிரியரால் மட்டுமே இணையவழிக் கல்வியைக் கற்றுக் கொடுக்க சாத்தியப்படும் என்பது வெளிப்படை.


இணையம் அன்று முதல் இன்று வரை

1960களின் பின்பு இரண்டு வலையமைப்புகளிலிருந்து மாறிய இணையம் கணினி மைய அமைப்புக்கு மாறி  உருவானது. ஆல்பாநெட் மற்றும் x.25 நெறிமுறை பொதிநலை மாற்றம், யுனிக்ஸ் டு யுனிக்ஸ் (UUCP) மற்றும் ஃபிட்டோநெட் வளர்ச்சியானது தளவலையமைப்புகளை உருவாக்கியது. இவ்வளர்ச்சிகள் தங்களுக்குள் இணைந்து கட்டமைப்பு வலையமைப்பாக மாறியது. இந்த நெறிமுறைதான் இணையம்.

1982-இல் அதிகாரப்பூர்வ நடைமுறையால் உலக வலையமைப்புச் (www) சிந்தனை உருவானது. விரைவான காலஓட்டம், பன்னாட்டுக்கு இணையான நடைமுறை வாழ்க்கை, வளர்ச்சிப்பாதையை நோக்கும் வணிகம், தனியார்மயமாக்கல், போட்டி மனப்பான்மை, உலகமயமாக்கல் போன்ற பல்வேறு நிலைகளில் இணையம் தனது சேவைகளை வழங்கியது. இச்சேவை வழங்கிகள் 1990 களில் பயன் சார்ந்து வளர்ச்சி பெற்றது.

இப்படி வளர்ந்த இணையத்தில் Google மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் தகவல்களை ஒருங்கிணைப்பது Google - இன்; நோக்கம். எனவே பல்வேறு சேவை நிறுவனங்கள் Google க்கு சேவைகள் வழங்குகின்றன. இதனால் Google இணையத்தில் பிரிக்க முடியாததாகிவிட்டது. googol என்ற எழுத்தில் தொடங்கி Google என்று மாற்றம் பெற்ற இவ்வெழுத்து இன்று வரை 6 முறை எழுத்து வடிவ மாற்றம் பெற்றுள்ளது என்பதை நாம் ஈண்டு நோக்க வேண்டும். இத்தகு சிறப்பினைப் பெற்ற Google வழி கற்றல் கற்பித்தல் செயலிகளும் இடம்பெறுகின்றன என்பது சிறப்பு. இதன்வழியே உலக அளவில் நாம் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கிறோம்.

இன்றைய காலமும் கல்வியும்

கொரானாவின் தொடக்கம் மாணவர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது. நாள்பட நாள்பட  மாறிய மாணவப் பருவத்தில் மாணவர்கள் குடும்பச் சூழலில் இணைந்தனர். பொருளாதார சீர்கேடு பல்வேறு மாணவ சமூகத்தைப் புரட்டிப் போட்டது. படிப்பை மறந்து தொழிற்சாலைகள் சென்றனர். சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கினர். பணம் தேடி படிப்பை விட்டனர். இம்மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி என்பது யோசிக்க வேண்டியதாகிறது. இணைய வசதி இருப்பினும் அதனை மாணவர்கள் தங்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்த முன்னுரிமை அளிக்கின்றனர். அதன்பின்பே படிப்புக்கு. தன்னால் தன் குடும்பம் முன்னேறும் வகையில் மகிழ்ச்சியுற படிப்பு நின்றுவிடுகிறது. மற்றொன்று கையில் சம்பாதித்த பணம் படிப்பை நிறுத்தி விடுகிறது. கல்வியைக் கற்கும் ஆர்வம் மாணவனுக்கு ஏற்பட்டால் எந்தவொரு சூழ்நிலையிலும் அவன் படிப்பைக் கைவிட மாட்டான். இந்த ஆர்வமிகு தன்மையை உருவாக்குவது இன்றைய ஆசிரியரின் கையில் மட்டுமே உள்ளது.

இணையவழிக் கல்வி காட்டும் கற்பிக்கும் வழிகள்

இணையவழிக் கற்றலில் காணலாகும் சிக்கல்களில் முக்கியமாக பாதிப்புக்குள்ளாவது அடித்தட்டு மக்களே. அவர்கள் தம் நலன் நோக்கில் சமூக உணர்வாளர்களும், மற்றும் அரசும் ஏற்பாடு செய்தால் இவர்களும் இணையவழிக் கற்றல் கற்பித்தலில் தேர்ச்சி பெறுவார். இவர்களுக்கென்றே இணையத்தில் பல்வேறு செயலிகள் இடம்பெறுகின்றன.


Popular LMS

CAMU

Google classroom

Canvas

Blackboard learning

Talent LMS

VSLMS

Student Information System (SIS )

Power school SIS

Grade link

Infinitive campus

Ellucian Banner Student

Skyward Student Management suite

Munis

CMS (Classroom Management System)

Class Dojo

Dy know

MC Graw – Hill connect

Power school unifried classroom

Nearpod

Education Software Categories

Academic Advising Software

Assessment Software

Curriculum Management Software

Digital Learning Platform

Education ERP Software

Language Learning Software

Online course Providers

Scholarship Management  Software

Technical Skill Development Software

Virtual Classroom Software

இவை போன்ற கணினி  தளங்கள் மற்றும் செயலிகள் மாணவர் நலனுக்காக இன்று பெருமளவில் இணையத்தில் உள்ளன. இதனைக் கொண்டு ஆசிரியர் மாணவர் – கற்றல் கற்பித்தல் திறனை வெளிப்படுத்த முடியும்.

சிக்கல்களும்  தீர்வுகளும்

வ.எண்

சிக்கல்கள்

தீர்வுகள்

 1

கணினி பற்றிய அறிவு முதற்கண் ஆசிரிய மக்களுக்குத் தேவை

ஆசிரிய பயிற்சி மற்றும் அது தொடர்பான படிப்புகளில் கணினி மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய பாடங்கள்கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

 2

எழுத்துரு, ஒருங்குகுறி – பற்றி ஆசிரியர் மாணவர் சிந்தித்தல் வேண்டும்.

பாடத்திட்டத்தில் கட்டாயம் ஒருபாடம் தமிழில் இணைய வழிப் பாடமாக அமைக்கப் பரிந்துரைக்க வேண்டும்.

 3

இளைஞர்களுக்கு மட்டும் சாத்தியம்

தொழில்நுட்பத்தைப் புரிந்து கொண்டால் எல்லாருக்கும் சாத்தியம்

 4

சமத்துவம் இருக்காது

ஏற்பாடு செய்து கொடுத்தால் அனைவருக்கும் சமமாகும்.

 5

மாணவர்கள் நேரடிக் கற்றலை பெரிதும் விரும்புகின்றனர்.

புதுப்புது தேடலை விரும்பும் மாணவர்களால் இணையவழிக் கற்றலையும் விரும்புகின்றனர்.

 6

நேருக்கு நேர் கற்பது போல திறன் வாய்ந்தது அல்ல

ஓர் ஆசிரியர்  சூழ்நிலைக் கேற்ப ஒரு நல்ல பாடத்தை வடிவமைப்பார்

 7

ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொண்டு இணையவழிக் கல்வியைத் தரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தடையற்ற இணையவழி சேவை, மின்சாரம், கணினி இத்துடன் அரசின் மானியமும் தகுந்த பயனாளிகளைச் சென்றடைந்தால் வெற்றி பெறும்



முடிவுரை

இணையவழி கற்றல் கற்பித்தலில் உள்ள சிக்கலில் ஆசிரியர் தன் திறமையை இணையத்தின் வழி செயல்படுத்தும் வகையில் தீர்வு இருக்கிறது. மேலும் மாணவர் அதனைக் கையாளும் வகையில் கற்றல்திறன் மாணவர்களுக்கு மேம்படும். குருகுல கல்வியிலிருந்து கல்விக்கூட கல்விக்கு சமூகம் மாறியது போல வகுப்பறைக் கல்வியிலிருந்து  இணையவழிக் கல்விக்கு மாறுவது இன்றைய காலத்தின் தேவை. செயலிகளும் அதனைக் கையாளும் வகையயை ஆசிரியரும் மாணவரும் அறிந்து நன்முறையில் பயன்படுத்தினால்  வரும் சமூகம் இணையக் கல்வி வழியாக வளரும் சமூகமாக மாறும். இதற்கு அரசின் இணைய வழிக் கல்விக் கொள்கை வகுக்கப்படல் கட்டாய தேவையாகிறது. அப்பொழுது பிற்காலத்தில் மொழி வளர்ச்சி, மொழி ஆளுமை வளர்ச்சியை கணினிவழி உணர்வூட்டி மாணவ சமூகத்தை வளர்த்தெடுக்க முடியும் என்பது  திண்ணம்.

துணைநூற் பட்டியல்

  1. தொல்பாப்பியர்  தொல்காப்பியம் சிறப்புப்பாயிரம்,

  2. பாவை பப்ளிகேஷன்ஸ்,  சென்னை. 2007

  3. பவணந்தி முனிவர்  நன்னூல் - மணிவாசகர் பதிப்பகம்சென்னை .1992 

  4. பொதுவான செய்திகள் இணையத்தின் வாயிலாக பெறப்பட்டன. 


Author
கட்டுரையாளர்

முனைவர் வி.வசுமதி

இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர்

ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி (தன்னாட்சி)

உடுமலைப்பேட்டை..