இன்றைய கல்வித் தொழில்நுட்பம்
- 2022
- கட்டுரை
- By மு.விஜயலட்சுமி
மு.விஜயலட்சுமி
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி.
Summary
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில்நுட்பங்கள் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில் பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக் கல்வி அவசியமாகிறது. சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை புரிகின்றன . பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன. இணையத்தில் இல்லாதவை எதுவும் இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது. ஊரோடு ஒத்து வாழ் என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பழையன கழிதலும்
புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதை பலரும் உணர்ந்து தொழில்நுட்பங்கள்
வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். பசுமரத்தாணி போல் பாடங்களை தெளிவாய் மனதில்
பதிய வைப்பதற்கு தொழில்நுட்ப வழிக் கல்வி அவசியமாகிறது. சமூக ஊடகங்களான தொலைக்காட்சி, அலைபேசி, வாட்ஸ்அப், YOUTUBE முதலான சாதனங்கள் கல்வி வளர்ச்சிக்கு
பெரிதும் உறுதுணை புரிகின்றன . பாடங்கள் கற்பிப்பதோடு மட்டுமல்லாது மருத்துவம், சமையல், ஆன்மீகம், சோதிடம், கல்வி உதவித்தொகை
பற்றிய தகவல்கள் பலவற்றையும் கற்றுத் தருகின்றன. இணையத்தில் இல்லாதவை எதுவும்
இல்லை என்கிற அளவிற்கு அறிவியல் வளா்ச்சியடைந்துள்ளது. ஊரோடு ஒத்து வாழ்
என்பதற்கேற்ப இன்றைய கல்வியும் தொழில்நுட்பங்களின் துணைகொண்டு
கற்றுத்தரப்படுகின்றன. இத்தகைய சிறந்த
தொழில்நுட்பங்களைக் கொண்டு எவ்வாறு கல்வி கற்றுத்தரப்படுகின்றன என்பதை பற்றி
ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கற்றுத் தருவது கல்வி.
தொழில் + நுட்பம்
= தொழில்நுட்பம் . தொழில் செய்யும் பொழுது பயன்படுத்தப்படும் நுட்பமே
தொழில்நுட்பமாகும். நுட்பம் என்பதற்கு நுணுக்கமாகச் செய்வது”1 என்று பொருள்.
தொழில்நுட்பத்தினை ஆங்கிலத்தில் Technology என்பர்.
கணிப்பொறியையும்
மின்னணுக் கருவிகளையும் பயன்படுத்தி கற்றுத் தருவதே கல்வித் தொழில் நுட்பமாகும்.
தொழில்நுட்பங்களின் வழி எளிய
கற்றல் முறை யினைக் கொண்டு வர வேண்டும் என்றெண்ணிய பல
அறிஞர்களின் கனவு பலித்து விட்டது. கனவு மெய்ப்பட வேண்டும் என்ற பாரதியின்
கூற்றும் உண்மையாகி விட்டது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கற்பிக்கும் முறையினை,
·
PPT மூலம் கற்றல்
·
தொலைக்காட்சி வழி கற்றல்
·
YOUTUBE மூலம் கற்றல்
·
வலைப்பதிவுகளின் வழி கற்றல்
·
இணையதளம் வழி கற்றல்
·
அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் வழி கற்றல்
முதலான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
·
இவ்வாறான முறைகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள்
பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
PPT
மூலம் கற்றல்: (POWERPOINT):
கிளைமரப்படங்கள்(mind map), சொல்ல வேண்டிய கருத்துக்களை சுருக்கமாகச்
சொல்லுதல், இடைஇடையே பாடம் தொடர்பான காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் முக்கியமானவற்றிற்கு வண்ணமிட்டுக் காட்டல் என்னும்
முறைகளில் PPT -யை அமைக்கலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் PPT மூலம் பாடப்பொருளை புகட்டி வருகின்றனர். இவ்வாறு PPT அமைத்து சொல்லித் தருவதால் பாடப்பொருளை மாணவா்கள் எளிமையாக புரிந்து கொள்வா்.
ஆா்வத்தோடு கவனிப்பார்கள். கவனச் சிதறலும் ஏற்படாது. ஆசிரியா்கள் சொல்வது
புரியவில்லை என்றாலும் பாடம் தொடா்பான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தே
மாணவா்கள் ஆசிரியா்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்வார்கள்.
வகுப்பறையும் அமைதியாக இருக்கும். ஒருமுறை PPT போட்டு வைத்துக் கொண்டால் போதும். அடுத்தடுத்து வரும் மாணவா்களுக்கு அதை
வைத்தே சொல்லிக் கொடுக்கலாம். இதனால் காலமும் நேரமும் விரயமாகாது. வணிகம் (ம)
கல்வி சார்ந்த கருத்தரங்குகளில் உரையாற்றுபவா்களும் பயிற்சி பட்டறைகளில்
பயிற்சியளிக்கும் பயிற்றுநரும் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரையாளா்கள் எனப் பலரும் PPT வாயிலாகவே தங்கள் கருத்துக்களை மற்றவருக்கு எளிமையாக புரிய வைக்க
முயற்சிக்கின்றனா். மாணவர்களும் இதே போன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட
ஒப்படைவுகளையும் வாய்மொழிப் பயிற்சியையும் வழங்கி வருகின்றனர்.
ஊரடங்கு காலங்களில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்வி, பொதிகை முதலான தொலைக்காட்சிகளின் வழி பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்
தரப்பட்டன. இன்றளவும் கல்வித் தொலைக்காட்சி பாடங்களை நடத்தி வருகிறது. பொதிகை
தொலைக்காட்சியும் பாடம் நடத்துவதற்கென குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கி கல்விப்
பணியாற்றி வருகின்றன.
YOUTUBE மூலம் கற்றல்:
தேடியவற்றை உடனே
கொண்டு வந்து கொடுக்கும் சாதனமாக YOUTUBE விளங்குகிறது. ஆசிரியர்கள்
பாடம் கற்பித்துத் தரும் வீடியோக்களை அவர்களே YOUTUBE-ல் பதிவேற்றம் செய்யலாம். இதனால் உலகம்
முழுவதிலும் உள்ள மாணவர்கள் பயன்பெற முடியும். YOUTUBE மூலம் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகள் தொடர்பான மாதிரி வினாக்களையும்
அவற்றிற்கான விடைகளையும் படித்து பயன்பெறலாம். மாணவர்கள் தங்கள் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு சரியான விடையளிக்கும்
தளமாகவும் YOUTUBE விளங்குகிறது.
தொலைக்காட்சி , YOUTUBE ஒப்புமைகள்:
காட்சியின் ஒளி, ஒலியை பதிவு
செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பும் சாதனமாக தொலைக்காட்சியும் YOUTUBE –யும்
விளங்குகிறது.
வ.எண் |
தொலைக்காட்சி |
YOUTUBE |
1 |
காட்சிகளை
பார்க்கவும் ஒலிகளை கேட்கவும் முடிவதால் எளிதில் மனதில் பதியும். |
காட்சிகளை
பார்க்கவும் ஒலிகளை கேட்கும் விதத்திலும் அமைக்கப்படுவதால் எளிதில் மனதில்
பதியும். |
2 |
ஒளிபரப்பு
செய்யப்படும் நேரங்களில் மட்டுமே பாடங்களை கவனிக்க முடியும். |
எப்பொழுது
வேண்டுமானாலும் நமக்குத் தேவையானவற்றைத் தேடி படித்துக் கொள்ளலாம். பதிவிறக்கம்
செய்து கொண்டு தேவைப்படும் சமயங்களில் பார்த்துக் கொள்ளலாம். |
3 |
அலைபேசியின்
வாயிலாக மாணவா்கள் தங்கள் ஐயப்பாடுகளை கேட்கலாம். |
மாணவா்கள்
தங்கள் ஐயங்களை comment box –ல் பதிவு செய்யலாம். |
4 |
தொலைக்காட்சியில்
பணிபுரியும் ஆசிரியா் மட்டுமே பாடம் நடத்த இயலும். |
யார்
வேண்டுமானாலும் தமக்குத் தெரிந்த பாடங்கள், பாடங்கள் தொடா்பான தகவல்களை பதிவிட
முடியும். |
தொலைக்காட்சிக்கும்
YOUTUBE -க்குமான
ஒப்புமைகளை விளக்குவதாக மேற்கண்ட அட்டவணை அமைகிறது.
அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் வழி கற்றல்:
தெரியாத
சொல்லுக்கு பொருளை அறியவும் வார்த்தையை சரியாக உச்சரிக்கவும் அலைபேசியிலுள்ள தேடல்
என்னும் பகுதி உதவுகிறது.Google Meet, Google Zoom, Google Classroom முதலான குறுஞ்செயலிகளைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம்
எடுக்கின்றனர். மாணவர்களை காணொளியில் பார்வையிடவும், அவர்களது வருகையினை பதிவு செய்யவும், YOUTUBE ல் உள்ள பாடம் தொடர்பான வீடியோக்களை
பகிரவும், PPT வழி கற்றுத் தருவதற்கும் ஏற்ற களமாக Google Meet,
Google Zoom ஆகிய
குறுஞ்செயலிகள் உதவுகின்றன. ஆசிரியர் கற்பிப்பதை பதிவு
செய்து எப்பொழுது வேண்டுமானாலும் பார்வையிடலாம்.
சில கல்லூரிகளில்
ஆய்வுத் தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் தொடர்பான கூட்டங்கள்
மற்றும் இணைய வழிப் பயிற்சி வகுப்புகளும் கூகுள் மிட்டில் நடத்தப்படுகிறது. வாட்ஸ்அப் மூலம் ஆசிரியர் மாணவர்களுடன் ஒரு குழுவினை
உருவாக்கி, பாடம் தொடர்பான தகவல்களை காணொளி மற்றும் ஒலிப் பதிவு செய்து குழுவில் பகிரல், பாடம் தொடர்பான
சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவடைதல், மாணவர்களுடைய ஒப்படைப்புகளைப் பகிரல்
போன்றவற்றிற்கு உதவி புரிகிறது.
வலைப்பதிவுகளின் வழி
கற்றல்:
வலைப்பதிவை
ஆங்கிலத்தில் BLOGSPOT என்பர். வலைப்பதிவுகளில் பல கட்டுரைகள், கவிதைகள்
முதலானவை இடம்பெற்றிருக்கும். அவற்றினை படிக்கலாம். நாமும் நமக்கென ஒரு
வலைப்பக்கத்தை உருவாக்கி அதில் நம்முடைய கவிதை, கதை முதலான படைப்புகளை வெளியிடலாம். இது
மாணவர்களின் படைப்பாக்கத் திறனை ஊக்கப்படுத்துவதாக அமைகிறது.
இணைய தளங்கள் மூலம் கற்றல்:
கற்றல்
கற்பித்தலில் அதிகமாக இன்று இணைய தளங்கள் பயன்படுகின்றன. அதில் முதன்மையானது தமிழ்
இணைய கல்விக் கழகம். இந்த இணையப் பக்கத்தில் அடிப்படைக் கல்வி முதல் பட்ட
மேற்படிப்புக் கல்வி வரை சென்று படித்துக் கொள்ளலாம். ஓலைச்சுவடிகளின் தொகுப்பும்
தமிழ் நூல்களின் தொகுப்பும் மின்னணு முறையில் இதில் இடம்பெற்றுள்ளது. தமிழ்
மொழியினை எளிமையாய் இத்தளங்கள் கற்றுக் கொடுக்கின்றன.
உலகில் இருக்கும்
பல்வேறு நாட்டுக் குழந்தைகள் மற்றும் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த
தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்க் கற்றுக் கொடுக்க தள்ளாடிய
பொழுது பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தது போல தமிழ் இணையக் கல்விக் கழகம் பல தமிழ்க் குழந்தைகளுக்குத்
தமிழ்த்தேர் கொடுத்தது.”2 என்று தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள் என்னும் புத்தகத்தின்
ஆசிரியா்கள் குறிப்பிடுவதிலிருந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்தின்
முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
தொழில்நுட்பக் கல்வி யினால் ஏற்படும் நன்மைகள்:
மாணவர்கள்
பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ளவும் ஆர்வத்தோடு கற்பதற்கும் உதவிபுரிகின்றன.
ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்களை காணொளிக் காட்சிகளின் வழி கற்றுத் தருவதால்
பசுமரத்தாணி போல் நினைவில் நிற்கும். மாணவர்கள் வீட்டிலிருந்த படியே பல அரிய
தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கு YOUTUBE
போன்ற சாதனங்கள் பல பேருதவி புரிகின்றன.
அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தயக்கமும் பயமும் இன்றி கலந்து
கொள்வதற்கான பயிற்சிகளை இணையதளங்கள் நமக்குத் தருகிறது.
மாணவர்கள் ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்த
வேண்டும் என்ற அடிப்படை அறிவினை இத்தொழில்நுட்பக் கல்வி வழங்குகிறது. நன்மை
இருக்கும் இடங்களில் தீமையும் இருக்கும். தொழில்நுட்பக் கருவிகளை மாணவர்கள்
நன்முறையில் பயன்படுத்தும் பட்சத்தில் நல்லதோர் எதிர்காலம் அமையும்.
கணிப்பொறியையும் மின்னணுக் கருவிகளையும்
பயன்படுத்தி கற்றுத் தருவதே கல்வித்தொழில்நுட்பம் ஆகும். அதீத பக்கங்கள்
கொண்ட (ம) கடினமான பாடங்களையும் எளிமையாக புரிய வைக்க ppt உதவுகிறது. அடிப்படைக் கல்வி
முதல் பட்டப்படிப்பு வரை சென்று படித்துக் கொள்ள இணையதளம் பயன்படுகிறது. எந்த நேரத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் தேவையானவற்றைத்
தேடி பெற்றுக் கொள்ளும் தளமாக YOUTUBE விளங்குகிறது. மாணவா்களின் படைப்பாக்கத் திறனை ஊக்கப்படுத்த வலைப்பதிவுகள் பேருதவி
புரிகின்றன. ஊரடங்கு காலம் முடிந்த பிறகும் பாடங்களை எளிமையாக புரியும் படி மாணவா்களுக்கு
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் கல்வித் தொலைக்காட்சியின் பணி அளப்பற்கரியது. இன்றைய கல்வித்
தொழில்நுட்பத்தில் YOUTUBE, தொலைக்காட்சி, இணையதளம், வாட்ஸ்அப், வலைப்பதிவு, அலைபேசி மற்றும் குறுஞ்செயலிகள் போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதை இக்கட்டுரையின் வழி அறிய
முடிகிறது.
முனைவர்
த.துரைமணிகண்டன், த.வானதி– தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்- ப-236.கமலினி பதிப்பகம், கச்சமங்கலம்
அஞ்சல் தோகூர் வழி,தஞ்சாவூர். முதற்பதிப்பு – டிசம்பர் 2012.