இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் கணிப்பொறி கலைச் சொல்லாக்கத்தின் பங்கு
- 2025
- கட்டுரை
- By முனைவர் கா. இரவிக்குமார்
முனைவர் கா. இரவிக்குமார்
தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
Summary
தொழில்நுட்ப கலைச்சொல்லாக்கமும் அறிவியல் தமிழ் அமைப்பும் என்னும் தமிழ் மொழியின் மொழி நடையை எவ்வாறு கணிப்பொறி அறிவியலுக்கு தக்கவாறு மாற்றி அமைத்துக்கொண்டு அறிவியல் தமிழினையும் கலைச்சொற்களையும் வளர்க்க வேண்டும் என்பதை விரிவாக ஆராய்ந்துள்ளது. ஒரு சொல்லை ஆக்கும் போது அத்துறை சார்ந்த வல்லுநர்களையும், மொழி வல்லுநர்களையும் ஒன்றிணைந்து செயல்படுதல் வேண்டும். அறிவியல் தமிழாக்கத்தில் இலக்கண விதிகளுக்குத் தளர்வு தந்து மொழி நடையை அமைத்துகொள்ள வேண்டும். உருவாக்கப்படும் கலைச்சொற்களை மூலச்சொற்களின் கருத்தை தெளிவுபடச் உணர்த்துதல் வேண்டும். தமிழாக்கம் செய்யப்பட கலைச்சொல் வெறும் மொழிபெயர்ப்புச் சொல்லாக அமையக்கூடாது என அறிவுறுத்துகிறது. தொழில்நுட்ப அறிவியல் தமிழ்ப் பாடங்கள் மொழித் திறன்களையும், அறிவியல் திறன்களையும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் தமிழ்ப் பாடநூல்களில் கலைச்சொற்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைக் கூறுகின்றது. அறிவியல் தமிழ்ப்பாட கலைச்சொற்கள் ஒவ்வொறு பாடத்தின் முடிவிலும் அமைதல் மாணவர்களுக்கு இன்றியமையாததாக அமையும். தவறான மொழிப்பெயர்பினைத் தவிக்க கருத்தை உள்வாங்கி மொழி பெயர்க்கப்படல் வேண்டும். சொல்லுக்குச் சொல், வரிக்கு வரி மொழிப்பெயர்ப்பதனால் பாடநூலில் பொருளற்ற பல வாக்கியங்கள் அமையும். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்படும் போது தமிழ் மொழியின் உச்சரிப்பில் பெயர்த்தல் கூடாது. வழக்கில் உள்ள சொல்லை விடுத்து புதிய சொற்களை பயன்படுத்த வேண்டும். செப்பமான கலைச்சொற்களை மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.
முன்னுரை(Introduction):
இயந்திர மொழிபெயர்ப்பு(Machine Translation) மற்றும் கணிப்பொறி கலைச் சொல்லாக்கம்(computational terminology) தமிழ் மொழியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்களிப்புகளை வழங்குகின்றன. இவை குறைந்த வளங்கள் கொண்ட மொழிகளான தமிழ் போன்ற மொழிகளுக்கு சிறப்பாக செயல்படுகின்றன. தமிழ் போன்ற திறனியல் மொழிகளில் சுயமொழி பேச்சு பிரச்சினையாக வருகிறது. இதற்கு எதிராக மேற்பரியாக செயல்பட்டு, சோர்க்கப் பிரிவில் உள்ள இழப்புகளை குறைக்கும் வகையில் மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன.இவற்றின் முன்னேற்றம் முக்கியமாக தமிழ் அடிப்படையிலான ஊடகக் கோப்புகள் மற்றும் முதன்மை மொழி கோப்புகளால் உள்ளது.
இயந்திர மொழிபெயர்ப்பு(Machine Translation):
இயந்திர மொழிபெயர்ப்பு என்பது கணினி அல்லது ஓர் இயந்திரத்தால் மாந்தர்களின் இயல்மொழி ஒன்றில் இருந்து மற்றொரு இயல்மொழிக்குத் தானியங்கியாய் மொழிபெயர்ப்பதுஆகும்.இன்று பெரும்பாலும் கணினிவழியாகத் தக்க மென்பொருளைப் பயன்படுத்தி எழுத்துவடிவில் உள்ள உரையையோ, பேச்சையோ ஒருமொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஆகும்.இது பழங்காலத்தில் இருந்து வரும் பொதுவான மொழிபெயர்ப்புக் கலையின் ஒரு கூறாகவும், தற்கால கணிப்பீட்டு மொழியியலில் (computational linguistics) ஒரு முக்கிய உள்துறையாகவும் இருக்கும் ஒரு துறை ஆகும். கணினியின் துணையால் மாந்தர்களும் சேர்ந்து உருவாக்கும் கூட்டு மொழிபெயர்ப்பு ஆகிய இயந்திரத்துணையோடு செய்யும் மாந்த மொழிபெயர்ப்பு (machine-aided human translation) என்பது போன்ற துறைகளில் இருந்து சற்று வேறுபட்ட துறை ஆகும்.ஒரு மொழியில் கூறப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும், இன்னொரு மொழியில் அதே பொருள் சுட்டும் சொற்களை ஈடாக இடுவதால் மட்டும் மொழிபெயர்ப்பு நிறைவு தருவதாக அமைவதில்லை. ஒரு மொழியிலே பல சொற்கள் சேர்ந்து அதில் முழுப்பொருள் தரும் ஒரு சொற்றொடராகும் முறையானது மற்றொரு மொழியில் வேறு அடுக்கில் அல்லது வரன்முறையில் வந்து ஈடான சொற்றொடராகும். ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மொழிபெயர்ப்புச் செய்யலாம் என்னும் கருத்து, முதன் முதல் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரான்சிய அறிவியலாளர் இரெனே இடேக்கார்ட்டு அவர்களால் 1629 இல் முன் வைக்கப்பட்டது.நவம்பர் 20, 1629 இல் டேக்கார்ட் பியர் மெர்சென் (Pierre Mersenne) என்பாருக்கு எழுதிய பொதுமொழி (universal language) என்னும் கருத்தை முன் வைத்தார்;
அதன்படி எல்லா மொழிகளிலும் ஒரு சொற்கருத்தைக் கூறும் சொற்களைப் பொதுமொழியில் ஒரு குறியீடு தந்து, அதனையே எல்லா மொழிகளிலும் இட்டு, இயந்திரத்தைக் கொண்டு சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கலாம் என்னும் கருத்து நிலவியது. இதனைப் பயன்படுத்தி 1661 இல் பெக்கர் என்பார் 10,000 இலத்தீன் சொற்கள், சொற்கூறுகளுக்குக் குறியீடுகள் தந்து அகராதியையே உருவாக்கினார். ஆனால் கிரேக்கம் , எபிரேயம், இடாய்ச்சு போன்ற மொழிகளுக்கும் தரவில்லை. சொற்றொடர் சிக்கல்கள் பற்றியவற்றையும் எதிர்கொள்ளவில்லை. இது போல சான் வில்க்கின்சும் வேறு பலரும் இந்தப் பொதுமொழிக் கருத்து பற்றி கருத்துகள் முன்வைத்துள்ளனர். சூலை 22, 1933 இல் அருமேனியப் பின்புலம் உள்ள பிரான்சிய பொறியியலாளர் சியார்ச்செசு ஆர்ட் என்பாருக்கு மொழிபெயர்ப்பி இயந்திரம் ஒன்றிற்கு புத்தாக்க உரிமம் (patent) வழங்கப்பட்டது. இயந்திர மொழிபெயர்ப்பின் வகைகள்:
Rule-Based Machine Translation (RBMT)
இலக்கண விதிகள் அடிப்படையில் மொழிபெயர்ப்பு செய்கிறது.
Statistical Machine Translation (SMT)
புள்ளியியல் தரவுகள் (corpus) அடிப்படையில் மொழிபெயர்ப்பு செய்கிறது.
Neural Machine Translation (NMT) (இப்போது அதிகம் பயன்படுத்தப்படுகிறது)
செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் (Neural Networks) அடிப்படையில் இயங்கும்.
அதிகத் துல்லியத்துடன் மொழிபெயர்ப்பு செய்கிறது.
கணிப்பொறி கலைச்சொல்லாக்கம் (Computational Terminology)
கணிப்பொறி கலைச்சொல்லாக்கம் என்பது தினசரி ஆங்கில கணினித் தொழில்நுட்பச் சொற்களை துல்லியமான தமிழில் மொழிபெயர்க்கும் முறையாகும். இதன் மூலம், கணினி, மென்பொருள், தரவுத்தளம் போன்ற சொற்களுக்கு ஒரேநிலை தமிழ் சொற்கள் அமைத்து, மொழிக் கட்டமைப்பின் தெளிவு உறுதி செய்யப்படுகிறது. “கலைச் சொல்லாக்கம்” என்பது புதிய தமிழ் தொழில்நூற்களுக்கான தற்கால உகந்த சொற்றொடர்கள் உருவாக்கம், குறித்த சொற்றொடரின் வேற்றுமைக்கு ஏற்ப அவற்றை மொழிபெயர்த்தல் என்று வரையறுக்கலாம் .1995-ஆம் ஆண்டில், “தமிழும் கணிப்பொறியும்” கருத்தரங்கத்தில் கணிப்பொறிச் சொற்களுக்கான தமிழ் சொற்பிரசங்க அகராதி உருவாக்க ஆரம்பிக்கப்பட்டது. இதில் சுமார் 4000 கணிப்பொறி சொற்கள் சேர்க்கப்பட்டன.கலாச்சாரமான பொருள், மொழியியல் அழகு மற்றும் உணர்ச்சிப் பண்புகள் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு மொழிபெயர்க்கும் முனைகளில், மொழியியல் கூறு (suffixes) மற்றும் உயிரியலின் மாற்றங்களை உணர AI-இல் சேர்க்க முயற்சிகள் இடம்பெறுகின்றன. து கணினி மொழிபெயர்ப்பு மென்பொருள் அல்லது எய்ஐ (AI) அடிப்படையிலான மாடல்களைப் பயன்படுத்தி, ஒரு மொழியில் உள்ள தகவலை மற்றொரு மொழிக்கு மனித தலையீடு இல்லாமல் மாற்றுகிறது. கணிப்பொறி கலைச்சொல்லாக்கம் (Computer Terminology Translation in Tamil) என்பது, கணிப்பொறி துறையில் பயன்படுத்தப்படும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்குத் தமிழாக்கம் செய்வதைக் குறிக்கும். இது தொழில்நுட்பத்தைத் தமிழ் மொழியில் புரிந்துகொள்ள உதவுகிறது.
கணினி உதவியுடன் தமிழை கற்றலும், கற்பித்தலும் - Computer Assisted Learning and Teaching of Tamil.
புலத் தமிழர்கள், தமிழ் மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தலும், தொழில்நுட்பத்தின் தாக்கமும் - Tamil Diaspora, Teaching Tamil as a second-language and impact of Technology
தமிழ் வலைவாசல்: வலைப்பதிவு, வலைப்பதிவுத் திரட்டி, விக்கிப்பீடியா - Tamil Portal: Blogger, Aggregator, Wikipedia etc.
தமிழ் தன்மொழியாக்கம், தமிழ் தட்டச்சு, கட்டற்ற திறமூல மென்பொருட்கள் - Tamil localization, Tamil keyboard, open-source software
இயற்கை மொழி முறையாக்கம், ஒளி எழுத்துணரி , தகவல் மீட்டெப்பு, செயற்கை அறிவாண்மை - Natural Language Processing: OCR, Information Retrieval, Artificial Intelligence
கைக்கருவிகளில் தமிழ், நகர்பேசி, சிறப்புத் தேவைகள் உடையோருக்குத் தமிழ் - Tamil in handheld, mobile phones, Tamil for special needs
மின்பதிப்பின் ஒருங்கிணைப்பு, களஞ்சியம், தேடு பொறிகள் - Preparation E-Texts, Corpora, Search Engines
கணிமை மொழியியல் - Computational Linguistics
இயற்கை மொழி முறையாக்கம்: - உருபனியல் அடையாளம்காட்டிகள் - Natural Language Processing: Morphological Tagger
தமிழ் கலைச்சொற் தரவுத்தளம் - Database of Tamil technical terms and glossaries
இணையத் தமிழ் இலக்கியத் தரவுத்தளம், தமிழ் அகராதிகள், தேடு பொறிகள் - Online Database of Tamil literature, Tamil Dictionaries and Search Engines.
முடிவுரை:
கணிப்பொறி கலைச்சொல்லாக்கம் என்பது தொழில்நுட்ப மொழிகளுக்கு தமிழின் சாசனம் மிகுந்து கானப்படுகின்றன. சரியான சொல் தேர்வு, மொழியியல் அமைப்பு, சமூக ஆதரவு ஆகியவற்றின் மூலம் தமிழ் தொழில்நுட்பக் கலைச்சொற்கள் மேலும் செழிக்க வாய்ப்புள்ளது.இயந்திர மொழிபெயர்ப்பு மற்றும் கணிப்பொறி சொல்லாக்கம் தமிழ் மொழியை தொழில்நுட்பத்தின் முன்னணி மொழியாக மாற்றும் முக்கிய அம்சங்கள் ஆகும். சரியான தொகுப்பு, மொழியியல் ஆதரவு, சமுதாய அழைப்பு, மற்றும் நிதியுதவி இணைந்தால், தமிழ் உலகளாவிய அளவில் பன்மொழி அணுகலை சிறப்பான, செயல்திறன் வாய்ந்த தமிழ் கலைச்சொற்கள் உருவாக்கப்படும். கணிப்பொறி துறையில் பயன்படுத்தப்படும் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு செய்வது என்பது அறிவை democratize செய்வதற்கான ஒரு முக்கியமான அடிகல்லாகும். இதன் மூலம்:
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தொழில்நுட்பத்தைக் துல்லியமான தமிழில் புரிந்து கொள்ள முடிகிறது.
அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தாய்மொழியில் கல்வி பெறும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
மொழி பாதிப்பின்றி தொழில்நுட்ப உலகில் சமபங்கு பெற முடிகிறது.
கலைச்சொல்லாக்கம் என்பது ஒரே மொழிபெயர்ப்பு செயலல்ல. அது ஒரு மொழிக்குரிய பார்வை மற்றும் பண்பாட்டு பாங்குடன் தொழில்நுட்பத்தை அணுகும் முயற்சியாகும். இச்சுற்றுப் சூழலை உருவாக்குவதே நம் மொழியின் வளர்ச்சிக்கான வழியைக் காட்டும்.எனவே, கணிப்பொறி கலைச்சொல்லாக்கம் என்பது தமிழ் மொழியில் தொழில்நுட்பத்தைப் பரப்பும் முக்கிய முயற்சியாக திகழ்கிறது. இது தொழில்நுட்பக் கல்வியை எல்லோருக்கும் எட்டிக்கொள்ளச் செய்யும் ஒரு மேம்பட்ட முன்னேற்ற வழியாகவும் அமைகிறது.
துணைநூற் பட்டியல்:
முனைவர் இல.சுந்தரம்,கணினித் தமிழ்,விகடன் பிரசுரம்,மே 2015
. Roger S.Pressman, Software Engineering, McGraw Hill International Editions, 2017
Fundamentals of Software Engineering, 4Th Edn by Rajib Mall, Phi, 2014
Bob Hughes and Mike Cotterell, “Software Project Management”, McGraw Hill, Second Edition, 2016
Walker Royce, “Software Project Management”, Addition Wesley, 2015.







