இலக்கியம் வளர்க்க 'பிரதிலிபி' தளம் வழங்கும் வாய்ப்புகளும் வழிமுறைகளும்
முனைவர் ப மங்கையற்கரசி, & கி. ராஜ்குமார்,
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம்.
Summary
பிரதிலிபி(Pratilipi) தளம் புதிய படைப்பாளர்களையும் வாசகர்களையும் அறிமுகப்படுத்தி இணைக்கின்றது. இது புதிய எழுத்தாளர்கள் தொடர்கதை எழுதும் முறைகளையும் புதிய வரைவை எழுதிப் பதிவிடுதலையும் செய்ய உதவி புரிகின்றது. மேலும் விழுதுகள்- எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் காணொளி தொடர்களையும், வாசகர் தேர்வு செய்யும் எழுத்தாளர்களின் படைப்புகளையும், எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் போட்டிகள் வாசிப்பாளர்களை ஊக்குவிக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் ஆகியன அளப்பரியது. மேலும் எழுத்தாளர்கள் பதிப்பித்தப் படைப்புகள், புதிய பின் தொடர்பாளர்கள்(New Followers) புதிய மதிப்பீடுகள் ,புதிய விமர்சனங்கள் , எழுத்தாளர்களுடன் வாசிப்பாளர்கள் தொடர்புகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வழங்கப்படும் வாய்ப்புகள் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. வாசகர்களால் படிக்கப்பட்ட படைப்புகளைத் தங்கள் நூலகத்தில் சேகரித்து வைக்கவும், நீக்கவும் பிரதிலிபி தளத்தில் வாய்ப்பு வழங்கப்படுகின்றன. மேலும் அதிகமாக வாசிக்கப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புகள் பார்வையாளர்களின் எண்ணிக்கை, படைப்புகளின் வகைகளான நாவல்கள், கவிதைகள், பெண்மை போற்றுவோம், குழந்தை இலக்கியம், குடும்பக் கவிதைகள், கட்டுரைகள், வாழ்க்கை கவிதைகள் போன்ற இன்னும் பலவற்றைப் பற்றியும் வாசகர்களை தக்கவைக்க பிரதிலிபி தளம் செய்யும் முயற்சிகளையும் வாசகர்கள் அத்தளத்திற்கு வழங்கும் ஆதரவையும் ஆய்வு செய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொள்கிறது.
முன்னுரை
படைப்பு என்பது மேம்பட்ட மனித சமூகத்தின் அடிப்படைக் கூறு. அது எழுத்துவழி படைப்பாகவும் அல்லது எழுதாக் கிளவி என்று சொல்லக்கூடிய பேச்சு வழி படைப்பாகவும் அமையும். தான் கண்டடைந்ததனையும்,அறிந்த தனையும், தாங்கள் அடைந்த அனுபவத்தையும் அடுத்தத் தலைமுறைக்கு கடத்திச் செல்ல வேண்டுமென்ற உந்துதலின் வெளிப்பாடு. இந்த உந்துதலே மனித இனம் இன்றைக்கு அடைந்திருக்கின்றன வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது. தமிழ் இலக்கிய வளர்ச்சி மிகுந்த கால பழமை உடையது. எழுத்து இலக்கியம் தோன்றிய காலத்திலிருந்து வாசித்தல் என்பதும் தோன்றி மலர்ந்திருக்கும் அவ்வகையில் இன்றைக்கு இருக்கிற வாசிப்புத் தளங்களில் ஒன்றாக உள்ள பிரதிலிபி தமிழ் இலக்கியம் வளர்க்க வழங்கும் வாய்ப்புகளையும் வழிமுறைகளையும் ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாக கொண்டுள்ளது.
வாசித்தல்:
சங்க இலக்கியம் தோற்றம் பெற்றதிலிருந்து தமிழ் மொழியில் வாசித்தல் பன்னெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு நீடித்த செயல்பாடு என்பதனை நம்மால் அறியமுடிகிறது. இதற்கு சிகரம் வைத்தாற்போல் 12 ஆம் நூற்றாண்டிற்கு பிற்பகுதியில் தமிழ் மொழிக் கல்விக்கு உந்துதல் தந்த இளம்பூரணர் முதற்கொண்டு தோன்றிய உரையாசிரியர்களால் இலக்கியங்களை பொருளுணர்ந்து அதன் நயம் உணர்ந்து வாசித்து இன்புறு கின்ற வாய்ப்புக்கிட்டியது
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே' 'சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்' போன்ற வரிகளால் கற்றல் நிகழ்ந்த வழியினையும் அதன் தொடர்ச்சியாக வாசித்தலை முதன்மையாக தமிழ் சமூகம் கொண்டிருந்தது என்பதையும் உய்த்துணர முடிகிறது.
தொடக்க காலத்தில் வாசித்தல் என்பது ஓலைச்சுவடிகள் செப்பேடுகள் கல்வெட்டுகள் முதலியனவற்றை மட்டுமே கொண்டிருந்தது. இடைக்காலத்தில் காகித உற்பத்தியின் காரணமாக புத்தகங்கள் பருவ இதழ்கள் நாளிதழ்கள் என புதிய உச்சம் தொட்டு வாசித்தல் என்பது பரவலாக எல்லோரிடமும் சென்றடைந்தது. இன்று வாசித்தல் தளம் விரிவடைந்து தாள்களில் புத்தகங்கள் வாசிப்பு குறைந்து முகநூல், கட்புலனம், இணையதளம் எனத் தொடங்கி கணினி ,அலைபேசி மடிக்கணினி,என கருவிகளால் விரிவடைந்துள்ளது.
பிரதிலிபி (Pratilipi)தளம்:
'பிரதிலிபி' தளம் பெங்காலி , குஜராத்தி, கன்னடம், மராத்தி ,தெலுங்கு, பஞ்சாபி ,ஆங்கிலம், மலையாளம் தமிழ், உருது, ஒடியா ஆகிய 12 மொழிகளில் உள்ள எழுத்தாளர்கள் வாசகர்களை இணைக்கின்ற தளமாகும். பிரதிலிபி கதைகளின் உலகம் என வர்ணிக்கப்படுகிறது.
பிரதிலிபி(Pratilipi) தளம் வழங்கும் இலக்கிய வகைகள்:
தமிழில் 'பிரதிலிபி' தளம் வழங்கும் இலக்கிய வகைகளாவன, நாவல்கள், காதல்,திகில்,குடும்பம், மர்மம், நகைச்சுவை, உறவு, ஆடியோ கதைகள், கவிதைகள், ஆன்மீகம், தங்கள் அனுபவம், சமூக கவிதைகள், கதைகள், சமையல், பெண்மை போற்றுவோம், அரசியல், சமூகம், காதல் கவிதைகள், அறிவியல் புனைவு, வாழ்க்கைக் கதைகள், பொது அறிவு, புனைவு, குழந்தை இலக்கியம், கடிதங்கள், குடும்ப கவிதைகள், கட்டுரைகள், கவிதைகள் முதலிய தலைப்புகளில் வகை பிரிக்கப்பட்டு படைப்புகள் உள்ளன.
பிரதிலிபி தளம் வழங்கும் வாய்ப்புகள்:
பிரதிலிபி(Pratilipi) தளத்தின் முகப்பில் பரிந்துரைகள், முன்னணி எழுத்தாளர்களுக்கு சப்ஸ்கிரைப் செய்ய, உரையாடலில் பங்கேற்க, வரலாறு, குட்டி கதைகள், வாசகர் தேர்வுகள், புதியவை, தினசரி தலைப்பிற்கு வந்த படைப்பு, போன்ற தலைப்புகளில் வாசகர்கள் தங்களின் விருப்பத்தை பதிவு செய்யவும் திறந்து பயிலவும் வாய்ப்புகளை பிரதிலிபி வழங்குகின்றது.
வாசகர் தேர்வில் அனைத்துப் படைப்புகள், சிறு கதைகள், பெரிய கதைகள், தொடர் கதைகள் போன்ற தலைப்புகளில் வரிசை இடப்பட்டு வாசகர்கள் தாங்களே தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்ந்தெடுத்து வாசிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பிரதிலிபி தளத்தில் பொதுவாக நாவல்கள் பெரிய கதைகள் அதிக நபர்களால் வாசிக்கப்படுகின்றன.
சான்றாக:
எழுத்தாளர் தமிழ் "வெண்பா"எழுதிய- தென்றலே திரும்பி விடு - பாகங்கள் 60 , வாசித்தவர்கள்-888k+.
எழுத்தாளர் நந்தினி "நந்து" எழுதிய- எனக்குள் துடிக்கும் என் இதய துடிப்பானவளே-பாகங்கள் 93, படித்தவர்கள் 760k+.
எழுத்தாளர் பிரவீனா தங்கராஜ் எழுதிய -காதலாழி- பாகங்கள் 101, வாசித்தவர்கள்-753k+.
எழுத்தாளர் ஸ்ரீ ராஜந் ஷாலினி எழுதிய- நினைவோடு கலந்தவள்- பாகங்கள் 85, படித்தவர்கள் 739k+.
விருதுகள்:
பிரதிலிபி(Pratilipi) தளம் விழுதுகள் என்ற தலைப்பில் வழங்கும் எழுத்தாளர்களுடனான நேர்காணல்களின் காணொளி தொடரில் எழுத்தாளர்களை தொடர்ந்து நேர்காணல் செய்து வெளியிடுவதன் மூலம் புதிய படைப்பாளர்களுக்கு ஆர்வமும் தாங்களும் படைக்க வேண்டும் என்ற முனைப்பினையும் விதைக்கிறது.
போட்டிகள்:
வாசகர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தவும் வேகப்படுத்தும் பிரதிலிபி தளம் போட்டிகளை வைக்கிறது. வாசிப்புக்கான கால எல்லைக்குள் முடிப்பவர்களுக்கு நாணய குறியீடு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது இந்த நாணய குறியீடு கொண்டு புதிய தொடர்களை நூல்களை தரவிறக்கம் செய்து வாசிக்க இயலும்.
எடுத்துக்காட்டு: ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு படைப்பு என தொடர்ந்து ஏழு நாட்கள் வாசித்து ஐந்து நாணயங்கள் பெறுங்கள் நான் வாசித்தனவற்றை நீங்கள் வாசித்தவை, என் நூலகம், அனைத்தும் எனும் தலைப்புகளில் நாம் சேகரித்து வைக்க இயலுகிறது.
புதிய எழுத்தாளர்களுக்கான வாய்ப்பு:
பிரதிலிபி தளம் புதிய எழுத்தாளர்களுக்குத் தொடர் கதை எழுதுவது எப்படி? என்னும் தலைப்பின்கீழ் கற்றுத்தந்து புதிய வரைவு எழுதுவதற்கான வாய்ப்பினையும் அதனை பதிப்பிப்பதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. மேலும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு படைப்பு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. கொடுத்து கதைகள் அனுபவங்கள் பெறப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: தினமும் ஒரு புதிய தலைப்பை கொடுக்கப் போகிறோம் உங்களது அனுபவங்களை கதைகளையோ எழுதுங்கள் என்ற அறிவிப்பின் கீழ் குணம் என்ற தலைப்பில் 156 கதைகள், அர்ப்பணிப்பு என்ற தலைப்பின்கீழ் 196 கதைகள் கல்வெட்டு என்னும் தலைப்பின்கீழ் 248 கதைகள் விருப்பம் என்ற தலைப்பின்கீழ் 269 கதைகள் அறிவு என்ற தலைப்பின்கீழ் 220 கதைகள் வரப் பெற்றுள்ளன .
முன்னணி எழுத்தாளர்கள் படைப்பு விவரம்:
கடந்த வாரம் மற்றும் கடந்த மாதங்களில் அவர்களின் படைப்பு விவரம், மொத்த வாசகர்கள், அவர்களுக்கு கிடைத்து இருக்கக்கூடிய சராசரி மதிப்பீடு, மொத்த விமர்சனங்கள், மொத்த பின்தொடர்பவர்கள் உள்ளிட்டவற்றை கண்டு அவர்களின் படைப்பு நிலையினையும் அதற்கு வாசகர்களின் ஆதரவையும் காண இயலும்.
சான்றாக:
தேன் நிலாவின் படைப்புகளைப் படித்தவர்கள் 2412004 பேர்.
நிர்மலா தேவியின் படைப்புகளை படித்தவர்கள் 1378413 பேர்.
கௌசல்யா வெங்கடேசன் படைப்புகளை படித்தவர்கள் 709706 பேர்.
ராஜலட்சுமி நாராயணசாயின் படைப்புகளை படித்தவர்கள் 105364 பேர்.
முடிவுரை:
புத்தக வாசிப்பு அருகி வருகின்ற இன்றைய காலத்தில் தொழில் நுட்ப வழியாக வாசித்தல் விரிவடைந்து வருகிறது.அதன் நீட்சியாக தமிழ் இலக்கியமும் தொழில்நுட்பத்தின் பலனைப் பெற்று வளர்ச்சியுறுவதே காலத்தேவை. அவ்வகையில் தமிழ் இலக்கியங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்று மிளிர பிரதிலிபி(Pratilipi) தளம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. எழுத்தாளர்கள் புத்தகம் அச்சிட்டு அது விற்கவில்லை என்று சோர்வுறாமல் வாசிப்புத் தளம் நவீன தொழில்நுட்பத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உணர்ந்து தங்களின் படைப்புகளை அவற்றின் வாயிலாக வெளியிட்டு மொழி வளர்ச்சிக்கும் தங்கள் நூல்களின் மூலம் சமூகத்தில் விளைவிக்க என்னும் பலன்களையும் கொண்டு சேர்க்க பிரதிலிபி(Pratilipi) தளம் சிறந்த தீர்வுகளில் ஒன்றாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.
பார்வை:
. Pratilipi தளம்(app) -06/12/2021
.புறநானூறு-183 , https://www.diamondtamil.com. 06/12/2021
இலக்கியம் வளர்க்க 'பிரதிலிபி' தளம் வழங்கும் வாய்ப்புகளும் வழிமுறைகளும்
மூதுரை-13 , https://thamizhppanimanram.blogspot.com. 06/12/2021