கணினியும் இனிமைத் தமிழும்
- 2024
- கட்டுரை
- By பி. ஸ்ரீதர்
பி. ஸ்ரீதர்
உதவிப்பேராசிரியர் (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறை
ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி)திண்டுக்கல்.
Summary
அறிவியல் வளர்ச்சியினால் உலகில் பல கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்த வண்ணம் உள்ளனர். அவற்றில் கணினியின் ஆதிக்கமும் அடங்கும். கணினி மனிதனின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கணினி மனிதனுக்குப்பல துறைகளில் உதவுகிறது. கணினி தனிமனிதனின் வாழ்க்கை முன்னேற்றத்திற்குப் பெரிதும் பங்காற்றுகின்றது.
கணினியின் தோற்றம்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக அபாகஸ் என்ற கணக்கிடும் முறையைச் சீனர்கள் பயன்படுத்தி வந்தனர் அவ்வாறு உருவாக்கப்பட்ட அபாகஸ் இயந்திரமே இன்றையக் கம்பியூட்டரின் முன்னோடி ஆகும்.
லீபினிட்ஸ் கணித மேதை கண்டறிந்த இயந்திரமே முதல் கணக்கிடும் கருவியாக பயன்பாட்டில் இருந்;தது. பிறகு சார்லஸ் பாப்பேஜ்; கண்டறிந்த கருவியே பயன்படுத்தப்பட்டது.
சார்லஸ் பாப்பேஜ் டிசம்பர் 26 தேதி 1791 பிரிட்டாணியப் பல்துறையறிஞர், கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர், தத்துவவாதி, இயந்திரப் பொறியாளர் என்ற பல பரிமாணங்களைக் கொண்டவர்.
பின்பு 1990களில் முற்பகுதியில் “மங்கிண்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (வுயஅட குழவெள)அறிமுகப்படுத்தப்பட்டது.
கணினியின் பயன்பாடு:
கணியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே. இக்காலப் பகுதியில் தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக் கணினிகள் விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயங்கு தளங்களைக் கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ், மைக்ரோசாப்ட் , ஓ.எஸ் வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983 -84 அளவில் இவை வெளிவந்து கொண்டிருக்கும் போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.
கணினி – விளக்கம்:
கணினி ஒரு மின்னணு சாதனமாகும் இது இயந்திர மொழியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றது. இவ்வியந்திர மொழி அடிமான எண்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது.
மையச் செயலகம் எனும் செயலக அமைப்பு இந்த இயந்திர மொழியால் மட்டுமே இயங்கக்கூடியது.
இணையம் செலுத்தும் கணினி தமிழ்
கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். கணின் வருகையால் ‘கற்றது கையளவு கல்லாதது கடுகளவு” எனும் புதுமொழியாக உருவெடுத்துள்ளது. இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப்பை இணைத்துவிடுகிறது.
“வெறுங்கை என்பது மூடத்தனம்- உன்
விரல்கள் பத்தும் மூலதனம்” – எனும்
தாராபாரதியின் தாரக மந்திரத்தைக் கொண்டு பார்க்கும் போது அறிஞர், வல்லுநர், ஆர்வலர் போன்றோரின் உழைப்பினால் உதிர்ந்த பூக்களாய் சிப்பிக்குள் முத்தாய் கிடைக்கும் மூலதனமே நம் கணினித் தமிழாகும்.
மொழியே அனைத்து செயல்பாடுகளுக்கும் பரிமாற்றும் செய்யும் பெட்டகம் மனிதனால் சாதிக்க முடியாத சாதனைகளையும் மனித மூளைக் கொண்டு கணினியில் சாதிக்க முடிகிறது. ஏனெனில் தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றாகவும் என்றுமே ஓயாமல் ஓடிக்கொண்ருக்கிற நதியாகவும் மனித வாழ்க்கையின் மகத்துவத்தை அழியாமல் காத்துக்கொள்ளும் பெட்டகமாக கணினியின் பயன்பாடு இயங்கி வருகின்றன.
தமிழ் வளர்ச்சியில் கணினியின் பயன்கள்:
அகத்தியர் வரலாறும் நூலும் நமக்கு முறையாகக் கிடைக்கப் பெறவில்லை. அவரது மாணவருள் ஒருவரான தொல்காப்பியர் வாழ்ந்த வாலம் இன்றளவும் தெளிவாக இல்லை. பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி.மு 200) முற்பட்டவர் என்று கே.எஸ் சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தொல்காப்பியத்தை முதல் பதிப்பாக வெளியிட்டவர் முதலியார் சிங்கார வேலு என்பவர் தமிழ் இலக்கியத்தில் என்செக்லோபிடியா (1931)ல் செய்ததை இரண்டாம் பதிப்பாக ஆசியன் கல்விக் கழகம் புதுதில்லி 1983ஆம் ஆண்டு இவரல் புதுப்பிக்கப்பட்டது. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராவர்.
1946ல் அறிமுகப்படுத்தப்பட்ட கணினிதான் உலகில் முதல் பொதுப் பயன்பாட்டுக் கணினி எனக் கருதப்படுகிறது. ஜீன் மாதம் 1999ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, தமிழ் 99 என்ற விசைப் பலகையை அறிமுகம் செய்தது. அது ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிட்டு தமிழ் எழுத்துக்களைப் பதிவு செய்தது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் விளைவாக கணினியிலும் புதுமையாக அமைப்புகள் தோன்றிய வண்ணம் உள்ளன. இப்போது தமிழ் விசைப்பலகைகள் நிறையப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்மூலம் தமிழிலக்கிய நூல்களின் வரலாறு, சிற்றிலக்கிய வரலாறும் தெள்ளத்தெளிவாக அறியவும் இணையம் பயன்படுகின்றன.
தமிழ் வளர்ச்சியில் இணையத்தின் பயன்கள்:
தமிழ் வளர்ச்சியில் கணினியைப் பயன்படுத்திக் கற்கும் கல்வி வீட்டில் இருந்தபடியே பலமொழிப்பாடங்கள் கற்றுக் கொள்ள இயலும். தொலைதூரக் கல்வியை இணையத்தின் உதவியால் கணினி வழியாகப் பலரும் கற்று வருகின்றனர்.
இணையத்தின் வாயிலாக ஒருவருக்கு ஏற்படும் ஐயங்கள், சிக்கல்கள், தேவைகள், வழிகாட்டுதல்கள் பெற இயலும்.
உலகெங்கும் வாழும் தமிழர்க்கும் தமிழறிய விழைவோர்க்கும் இவ்வாய்ப்பினைத் தமிழ் இணைய பல்கலைக் கழகம் வழங்குகிறது. தமிழ் என்னும் இணையத்தளம் தமிழ் எழுத்துக்களை எழுதவும் ஒலிக்கவும் கற்றுத் தருகிறது.
முடிவுரை:
வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் கணினிப் பயன்பாடுகள் மிக இன்றியமையான பங்கு வகிக்கின்றது.
கணினியின் பயனை வெறும் வார்த்தைகளால் மட்டுமே விவரிக்க முடியும் என்பது மலையை முடியால் அளப்பது போன்றதாகும். எந்தத் துறையில் கணினி தன் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை என்று யாராலும் கூற முடியாது
Author