கல்வி, வணிக வளர்ச்சியில் இணையதளங்கள்

முனைவர் மா.பத்ம பிரியா & முனைவர் ச.மாசிலாதேவி

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை & உதவிப்பேராசிரியர்,தமிழ் உயராய்வு மையம்

தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),

சிவகாசி

&

ஜிடி.என்கலைக்கல்லூரி(தன்னாட்சி),

திண்டுக்கல்

Summary

இணையத்தில் தமிழ்மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்குக் கணினி சார் பணிவாய்ப்புகள் இலகுவாக கிடைக்கின்றன.கல்விகற்றவர்கள் இலக்கியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்தி தமது படைப்பாற்றலை வணிகமாக மாற்றி வெற்றிபெறுகின்றனர்.கல்விகற்காதவர்கள் தமிழ்மொழி மட்டுமே தெரியும் என்றளவில் மொழித்திறனால் கணினிசார் பணிவாய்ப்புகளை உருவாக்கி மின்வணிகம் என்னும் ஆன்லைன்வணிகம் (E-business) வாயிலாக பொருளாதாரத்தை வளர்க்கின்றனர். இல்லத்தரசிகள்அன்றாட நிகழ்வுகளை உள்ளடக்கமாக (content) வைத்துக்கொண்டு தமக்குத் தெரிந்த தமிழ்மொழி வழி தொடர்பாடலை நிகழ்த்தி வலையொளித் (Youtube) தளத்தில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் பெற்று பணம்ஈட்டி வருகின்றனர்.

இல்லறத்தரசிகள் மட்டுமின்றி பள்ளிக்குழந்தைகள்,கல்லூரி மாணவிகள் என்றில்லாமல் அனைத்துத் தரப்பினரும் சமையல்குறிப்புகள், பயணங்களின் பதிவுகள், நகைச்சுவைத்துணுக்குகள் என்று தமது தமிழ்மொழியறிவால் ஊதியம் ஈட்டி வருகின்றனர். இக்கட்டுரை இணையதளங்கள் தமிழ்மொழியின் இலக்கிய இலக்கண வளங்களை பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி வீட்டிலிருந்தபடியே இணையவணிகம் குறித்த ஆலோசனைகள் வழங்கி தமிழ் மொழி மட்டுமே தெரிந்தவர்களுக்குப் பணிவாய்ப்பினை நல்குவதனை எடுத்துரைக்கின்றது.

இணையமும் தமிழும்
இணையத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சி  நாள்தோறும் முன்னேற்றம் கண்டுவருகின்றது. இணையத்தமிழ் புதிய தொழில்நுட்பக் கருவிகளுக்கு ஏற்றவாறு தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வருகின்றது.கல்விநிறுவனத்திற்குச் சென்று கல்விகற்க இயலாமல்,அஞ்சல் வழி கல்வி கற்றவர்கள் இன்றைய இணையவளர்ச்சியால் இணைய நூல்வாசிப்பாளர்களாக மாறி வருகின்றனர். கல்விகற்கும் ஆர்வமில்லாதவர்கள் ஏதாவது ஒருவகையில் தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணப்போக்கு உள்ளவர்களுக்குத் தமிழ்மொழி தெரிந்தாலே போதும் இணையவழியிலான மின்வணிகம் என்னும் ஆன்லைன்வணிகம் (E-business) செய்து பொருளாதாரத்தை வளர்க்கும் வழிமுறைகள் இணையசந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. இத்தகைய வணிக ஆர்வலர்கள் இணையம் வழியாகத் தமக்குத் தெரிந்த தமிழ்மொழி அறிவினைக் கொண்டு வலையொளித் (Youtube) தளத்தில்  தமக்கான  சேனல்கள் நடத்தி வருகின்றார்கள்.  
  • https://www.google.com/search?q=தொல்காப்பியம்+எழுத்ததிகாரம்
  • https://www.google.com/search?q=திருக்குறள்
  • https://www.google.com/earch?sca_esv=ba43a7b205416dca&q=பதினெண்+ 
  • மேற்கணக்கு+நூல்கள்

“இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடும் வளர்ச்சியும் (2016–17) என்ற தலைப்பில் கூகுள் நிறுவனமும் 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்திய ஆய்வில், உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழிகளில் தமிழ் முதன்மையாக இருக்கிறதென அறியப்பட்டது.

https://qph.cf2.quoracdn.net/main-qimg-ecfc742bc094b3ac83b9e3aa83e8512e-lq

இந்த ஆய்வு, இணையத்தில் தமிழ் வளர்ச்சிக்கான ஒரு குறியீடு!1 எனலாம்.
உலகம் சமூக வலைதளத்தின் முன் தான் காலையில்  கண்விழிக்கின்றது. யூடியூப் வலைத்தளத்தை தாண்டி கைபேசி செயலி மூலம் உலகச்சாளரத்தை திறக்கும் கோலம் போடுவதில் ஆரம்பித்து கல்வி,வேலை ஏன் ஓய்வு கூட உள்ளடக்கமாக (content) மாறி பணம் சம்பாதிக்கும் வழிமுறையாக உருவெடுத்துள்ளது.  இந்தத் தளத்தில் தன்னை உயர்த்தியவர்கள் ஏராளம். யூடியூப் சேனல் ஆரம்பிப்பவர்களின் எண்ணிக்கையும்  அதிகரித்துக்கொண்டே உள்ளது.

யூடியூப் சேனல் ஆரம்பிப்பதற்கு, youtube.comக்கு சென்று, அந்த பக்கத்தில் வலது மூலையில் உள்ள ’உள்நுழை’ ஆப்ஷனை க்ளிக் செய்யவும். இப்போது, உங்கள் சேனலை நீங்கள் இணைக்க விரும்பும் Google கணக்கை (ஏற்கெனவே Gmail அக்கவுன்ட் இருப்பவர்கள்) பயன்படுத்தி உள்நுழையவும். என்ற எளிய தமிழ்மொழியில் விவரங்கள்  கூட  அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. மேலும்,”How to: யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி?”2  என்ற வழிகாட்டும் இணையதளங்களும் உள்ளன. 

2005  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட யூடியூப் என்னும் அமெரிக்க நாட்டு கண்டுபிடிப்பு 2024 ஆம்ஆண்டில் உச்சகட்ட வளர்ச்சியினை அடைந்துள்ளது என்று அமெரிக்க ஆய்வு எடுத்துரைக்கின்றது. “ இது ஒரு சிறிய காணொளி ஸ்ட்ரீமிங் தளத்திலிருந்து பிரபலமான கலாச்சாரம், இணையப் போக்குகள் மற்றும் பல மில்லியனர் பிரபலங்களை உருவாக்கும் ஒரு சமூக ஊடகம் ஆகும். ஒரு நிறுவனமாக யூடியூப் 2020 ஆம் ஆண்டில் $19.8 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது. அதனால் கூகிளுக்குப் பிறகு யூடியூப் உலகளவில் அதிகம் பார்வையிடப்பட்ட வலைத்தளமாகும், இதில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மாதப் பயனர்கள் உள்ளனர்.”3 அரசியல், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என்று அனைத்து தரப்பு நிகழ்வுகளும் அனைவராலும் உள்ளடக்கமாக எடுத்துக்கொள்ளப்பட்டு குறிப்பாக தமிழ்மொழியில் பேசப்பட்டு பணம் ஈட்டும் வழிமுறையாக உயர்ந்துள்ளது தமிழ்மொழி பேசும் மக்களுக்கு பெருமைக்குரிய வளர்ச்சியாகும். 

கவிதை,சிறுகதை,கட்டுரை,நூல்விமர்சனம் போன்ற படைப்பாற்றல் உள்ளவர்களுக்கு இணையம் வழிகாட்டியாக அமைந்துள்ளது. Android தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களில்  தங்களின்  இணையவழி இலக்கிய சேவையை ஆற்றுகின்றனர்.

மின்னணு வர்த்தகம்
இணைய வணிகம் அனைத்தையும் மின்னணு முறையில் நடத்தும் வணிகம் மின் வணிகம் என அழைக்கப்படுகிறது. விளம்பரம் அல்லது இணைய வணிகம் உட்பட எதையும் தகுதி பெறலாம். மின் வணிகம் ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர்களுடன் இணைக்க முடியும், செலவு குறைந்த மற்றும் நிகழ்நேரத்தில் செயல்படுகிறது. ( https://www.javatpoint.com/advantages-and-disadvantages-of-e-business)
ஈ-பிசினஸின் நெகிழ்வுத்தன்மை என்பது உங்கள் சொந்த நிறுவனத்தை எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தும், உங்கள் வீட்டின் வசதியில் தொடங்கும் திறன் ஆகும். டொமைன் பெயர் மற்றும் இணையதள ஹோஸ்டிங்கைப் பெற்று, உங்கள் கலைப்படைப்பைச் சேர்க்கத் தொடங்குங்கள். ஆன்லைன் இ-காமர்ஸ் தளமும் உங்களுக்குக் கிடைக்கும். கூடுதலாக, மின் வணிகம் என்பது வணிகத்தை நடத்துவதற்கான தற்போதைய முறையாகும். இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் வழங்குவதற்கு நிறைய உள்ளது. மின் வணிகம் தற்போது மிகவும் மலிவு மற்றும் விரைவாக விரிவடையும் வணிக வகையாகும்.



இணையம் வழி வணிகம் செய்வதற்கான ஆலோசனைகளை https://www.tamilvu.org/courses/extras/p2034/html/p203421.htm என்ற இணையதளம் தமிழ்மொழியில் பதிவேற்றம் செய்துள்ளமை மிகவும் பயனுடைத்தாக அமைந்துள்ளது.
  • https://www.tamilvu.org/courses/extras/p2034/html/p203421.htm
  • https://www.iifl.com/ta/blogs/business-loan/what-is-e-business

மின் வணிகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள்

இணையம் சந்தைகளை உருவாக்குவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கற்பனை செய்ய முடியாத வகையில் சேவை செய்வதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பலர் மின்னணு வர்த்தகத்தை ஆன்லைன் நெட்வொர்க்குகள் மற்றும் EDI (எலக்ட்ரானிக் டேட்டா இன்டர்சேஞ்ச்) பயன்படுத்தி வர்த்தகம் என்று பார்த்தனர். அவர்களைப் பொறுத்தவரை, இணையம் "முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் மின்னணு வர்த்தகத்திற்குப் பொருத்தமற்றது". அவர்களின் பார்வை மாறிவிட்டது! …. பல வர்ணனையாளர்கள் "இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கான" வழிகளில் கவனம் செலுத்தியுள்ளனர். ”4  வீட்டுத்தயாரிப்புகள்,வேளாண் விளைபொருட்கள்,தமது ஊரின் சிறப்பு அடையாளங்கள் என்று அனைத்து விதமான பண்டங்களும் இணையச்சந்தையில் விற்பனையாகின்றன.



“ஆடம்பரப் பொருட்களிலிருந்து அத்தியாவசியப் பொருட்கள் வரை அனைத்துமே, மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகிவிட்டது. இருந்த இடத்திலிருந்து கொண்டு, நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் எதை வேண்டுமென்றாலும் கொண்டு  சேர்க்கக்கூடிய அளவுக்கு, மின் வணிகத்தின் வளர்ச்சி, அபரிமிதமடைந்துள்ளது. கடந்த சில வருடங்களில், மிகப் பிரசித்தம் பெற்ற வணிகமுறை எதுவெனக் கேட்டால், யாராயினும் தயங்காமல் கைக்காட்டக்கூடிய வணிகமுறையாக, மின் வணிகம் (E-Business) வளர்ச்சியடைந்துவிட்டது. ”5  இத்தகைய வணிகம் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளம்பெண்களுக்கு உதவியாக இருக்கின்றது. ஆடை, அலங்காரப்பொருட்கள், கைவினைக் கலைபொருட்கள், விதவிதமான உணவுப்பதார்த்தங்கள்  என்று  அனைத்துமே இடம்பெற்றுள்ளது. இதனை தான் விற்பனை செய்யவேண்டும் என்ற வரைமுறையின்றி இணையச்சந்தையில் முன்வைக்கப்படுகின்றன.குண்டூசி முதல்  வாகனங்கள் வரை,நில விற்பனை முதல் பெரிய கட்டிடம் வரை விற்பனை செய்யவதற்கு தமிழ்மொழி பேசினால் போதும் என்ற நிலை வந்துள்ளது. 

பாமரர்களுக்கும் உதவும் வகையில் இணையத்தில் பாரத்-இ-மாா்ட்-வணிக-தளம் இணையவழி வணிகத்தை மேம்படுத்தும் தளமாகும்.“மனிதஇனத்தின் அன்றாட வாழ்க்கையில் தொழில்நுட்பம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.விரல்நுனியில் உலகத்தைக் கொண்டுவந்திருப்பது மட்டுமல்லாமல்,அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் பங்களிக்கும் நிலைக்கு  இணையம் உயர்ந்திருக்கிறது.கொள்ளை நோய் தொற்றுக்குப் பிறகு அபரிதமான வளர்ச்சிக் கண்டிருக்கிறது இணையவணிகம்.”6 என்பது இத்தளத்தின் நோக்கமாகும்.

முடிவுரை
தமிழ்மொழியின் வளர்ச்சியால் தமிழ்பேசும் மக்களுக்கான வாழ்வாதாரத்தை இணையதளங்கள் ஏற்படுத்தி தந்துள்ளன.கல்வி கற்றவர்கள், கல்வி கற்காதவர்கள் என்ற பாகுபாடு இணையதளத்தில் இல்லை. திறமை உள்ளவர்கள் தங்களின் தமிழ்மொழித்திறனால் பணம் ஈட்டும் வழிமுறையை அறிந்து முன்னேற்றம் கண்டுள்ளனர். இணையத்தில் அனைத்து ஆங்கில பகுதிகளும் எளிதான தமிழாக்கம் பெற்றுள்ளதால் அனைவரும் எளிதாக கற்று விவரங்களைப் புரிந்துகொள்கின்றனர். இணையத்தில் தமிழ் மொழியின் ஆதிக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டுகின்றது எனலாம்.மேலும்,இணையதளங்கள் கல்வி மற்றும் வணிக வளர்ச்சிக்கு ஆலோசனை மையங்களாகச் செயல்படுகின்றன எனலாம்.

குறிப்புகள்
  1. இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் முன்னேற்றம் உள்ளதா? இணையத்தில் தமிழை மேம்படுத்த ஆய்வுகள் ஏதேனும் நடைபெறுகின்றதா? https://ta.quora.com/inaiyattil-tamil-moliyin-valarcciyil-munnerram-ullata-inaiyattil-tamilai-mempatutta-ayvukal-etenum-nataiperukinrata 
  2. வெ.கௌசல்யா, How to: யூடியூப் சேனல் ஆரம்பிப்பது எப்படி? I How to start a YouTube channel? Published:23 Jun 2022 6 PMUpdated:23 Jun 2022 6 PM 
  3. https://www.vikatan.com/technology/how-to-start-a-youtube-channel#google_vignette 
  4. Top 100: The Most Visited Websites in the US [2024 Top Websites Edition] n the US%2C as well as uncovering the top players across various industries https://www.semrush.com/website/top/united-states/all/
  5. இணைய வர்த்தகம்: சந்தைகளை உருவாக்குவதற்கான புதியவழிகள், https://www.skyrme.com/insights/23intc.htm
  6. அனுதினன் சுதந்திரநாதன் ,இணைய வணிகமும் அதன் அடிப்படைகளும்,2018 செப்டம்பர் 11,https://www. tamilmirror.lk/வணிக-ஆய்வுகளும்-அறிமுகங்களும்/இணைய-வணிகமும்-அதன்-அடிப்படைகளும்/145-221507
  7. இணைய வணிக தற்சார்பு ‘பாரத் இ-மாா்ட்’வணிகதளம்,அக்டோபர் 7,2022  https://www.tnpscthervupettagam.com/ta/articles-detail/இணைய-வணிக-தற்சார்பு-பாரத்-இ-மார்ட். வணிக-தளம்?cat=newspaper-articles

Author
கட்டுரையாளர்

முனைவர் மா.பத்ம பிரியா & முனைவர் ச.மாசிலாதேவி

உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை & உதவிப்பேராசிரியர்,தமிழ் உயராய்வு மையம்

தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்னம் மகளிர் கல்லூரி(தன்னாட்சி),

சிவகாசி

&

ஜிடி.என்கலைக்கல்லூரி(தன்னாட்சி),

திண்டுக்கல்