சமுதாய தொழில்நுட்பம்

சமுதாய தொழில்நுட்பம்

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்.

Summary

மக்கள் கூடி வாழும் இடமே சமுதாயம். அத்தகைய சமுதாயத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்களிப்பும் இன்றியமையாதது. வளர்ச்சியின் முனைப்பால் தொழில்நுட்பங்கள் யாவும் சமுதாயத்தில் வாழும் மக்களின் அடிப்படையான, அத்தியாவசியமான தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தவும் பல்வேறு வகையில் உதவிபுரிகின்றன.

இன்றைய மாணவர்களுக்கு பேரிடர் காலங்களிலும் பேருதவியாக இருக்கும் கல்வி சார்ந்த தொழில்நுட்பமும். அலுவல் காரணமாக நோயாளிகள் பயனுறும் வகையில் தொழில்நுட்பத்தின் உதவியால் பெறும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பமும், குடும்பச்சூழல் மற்றும் வருமானம் ஈட்டுவதற்காக செயல்படும் வணிகம் சார்ந்த தொழில்நுட்பமும், துரித உணவுகளை துரிதமாக பெற்றுத்தரும் உணவு சார்ந்த தொழில்நுட்பமும், அத்தியாவசியக் காலங்களில் பாதுகாப்பாகவும், விரைவாகவும் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பமும், நடைமுறையில் நடக்கும் பல்வேறு இன்னல்களிலிருந்து விடுவிக்க திறம் வாய்ந்து செயல்படும் பாதுகாப்பு சார்ந்த தொழில்நுட்பமும், இயற்கைச் சீற்றங்களினால் ஏற்படும் பேராபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் அமையும் பேரிடர் சார்ந்த தொழில்நுட்பமும் எனப் பல்வேறு வகையில் பன்முகம் கொண்டு விளங்கும் சமுதாய தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகின் றது.

கல்வி சார்ந்த தொழில்நுட்பம் 

மானுட சமூகம் எத்தகைய பெருஞ்செல்வங்களைப் பெற்றிருந்தாலும் அவையெல்லாம் நிலையானது அல்ல என்றும் கல்வியே நிலையான செல்வமென்று கருதினர். கல்வி என்பது  இம்மைக்கு மட்டுமல்ல மறுமைக்கும் துணையாக வரும் என்பதை 

 ”மறுமைக்கும் அணிகலன் கல்வி”1 (திரிகடுகம் பா.எண்-52)   

என்கிறது. ”கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”2 

(ஔவை – மூதுரை-26) 

என்பார்கள். ஆனால் தற்பொழுது, “கற்பதற்கு சென்ற இடமெல்லாம் தொழில்நுட்பம்“ என்றானது. இயற்கை சீற்றத்திலும், பேரிடர் காலங்களிலும், தவிர்க்க முடியா சூழலிலும் கல்வி கற்கத் தடையில்லாது இருக்கும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் கல்வித்துறையில் வளர்ந்துள்ளன ஆரம்ப காலத்தில் ஓலைச்சுவடிகளில் இருந்த கல்வி நிலை தற்போது அச்சுப்பதிப்பாகி அச்சுத்துறையாக வளர்ந்துள்ளது கல்வியில் தொழில்நுட்பத்தின் முதற்கட்ட வளாச்சியாகும். இன்று பல்வேறு வடிவங்களில் புத்தமாககையில் கிடைக்கிறது. புத்தகத்தில் விடுபட்ட கிடைக்காத கருத்துக்களை இணையவழியில் தேட முயற்சி செய்ய தொழில் நுட்பங்கள் வளர ஆரம்பிக்கிறது. தேடிய மற்றும் தேவையான கருத்துக்களை பதிவிறக்கம் செய்து கொள்வதும், திறன்பேசியிலே படிக்க இயலவில்லையென்றால் அதனையும் அச்சு இயந்திரத்தின் வழி அச்சாக்கம் செய்து படிக்கவும், பாடம் கற்பிக்கவும் ஏதுவாக உள்ளது. திறன்பேசியில் மட்டுமல்லாது கணினி வழியில் பாடம் கற்க ஏதுவாக இருந்தாலும், அதை வாங்குவதற்கான பொருளாதாரம் இல்லையென்பதால், மடிக்கணினி, திறன்பேசி என்று பல்வேறு வகையில் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்களும், ஆசிரியர்களும் பல்வேறு செயலிகளை பயன்படுத்தி கலந்தாய்வு செய்வதும் கானொலி மற்றும் ஒலிப்பதிவு அனுப்புவதின் வழி கற்றும் கற்பித்தும் வருகின்றனர். இணையத்தில் இணையவழியிலான வகுப்பறை, வினாடிவினா, கருத்தரங்கம், உலகசாதனை நிகழ்வு எனப்பலவாறு கல்வித்துறையில் தொழில்நுட்பங்களின் செயல்பாடு அதிகரித்து உள்ளது. உதாரணமாக, கூகுள் படிவ வினாடி வினா (https://docs.google.com/forms/d) 

மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பம் 

மருத்துவம் என்பது நோய்களை குணப்படுத்தும் வகையில் அமைந்த அறிவியல் ஆகும்.  

”நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்”4 (பழமொழி) 

நோய்களுக்கான மருந்தும், கருவியும் இல்லாமல் மக்கள் அழிந்தகாலம் இன்றைக்கு மாறி உள்ளது. தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ச்சி பெறுகின்றதோ, அதே அளவு மனிதர்களிடம் நோய்பரவும் தன்மையும் அதிகரித்துள்ளது. தீராத நோய்களுக்கு மருந்துக்கண்டுபிடிக்க தொழில் நுட்பங்களின் பங்களிப்பு அவசியமானது. நோயாளிகளின் வருகையினை, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்த தகவல்களை கணினியில் பதிவு செய்வதும், 1000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நோயாளிக்குக் கூடமருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் வகையில் உள்ள தொலைத் தொடர்புசேவை தொலைவை பொருட்படுத்தாமல் மருத்துவம் செய்யபயன்படுகிறது. அவசரகாலங்களில் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலையிலோ, மருத்துவர் நோயாளியை காணமுடியாத நிலையிலோ இருந்தால் திறன்பேசி, கணினி, மடிக்கணினி வழி காணொளி காட்சி மூலம் கலந்துபேசி மருத்துவம் பார்க்க பயன்படுகிறது .உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை பரிசோதிக்க மின்பதிவு செய்யப்பட்ட பல்வேறு வகைப்பட்ட ஊடுகதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன .பலநோய்களுக்கு புதியவகை மருந்து கண்டுபிடிக்கவும் மருத்துவ தொழில்நுட்பம் பயன்படுகின்றது. மேலும், ஒவ்வொரு மருத்துவர்களும் அவரவா மருத்துவமனை சார்ந்த தகவல்களை வலைதளம் ஒன்றை நிறுவி நோயாளிகளுக்கு அவ்வப்போது தகவல் கிடைக்கும் வண்ணம் செய்வதும் சாலச்சிறந்ததாக உள்ளது. 

வணிகம் சார்ந்த தொழில்நுட்பம் 

வர்த்தகம் என்று அழைக்ககூடிய வணிகமானது லாபநோக்கிலும், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் பொருளதார அடிப்படையில் செயல்படுவதாகும். பொருளின் அவசியத்தை, 

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”3    குறள் எண் - 247 

என்ற குறள் எடுத்தியம்புகிறது. அத்தகைய பொருளை நேரத்தை வீணாக்காமல் எளிமையான முறையில் பல்வேறு சேகரிப்புகள் நிறைந்தது இன்றைய இ-வணிகம். இந்த இ-வணிகத்தில் நமக்கு பிடித்த ஆடைகளையோ, வீட்டிற்கு தேவையான பொருட்களையோ பதிவு செய்தால் இரண்டு நாள் மற்றும் மூன்று நாட்களில் நாம் இருக்கும் இடங்களுக்கே வருகிறது. இந்த இ-வணிகமானது இடம் சார்ந்த, காலம் சார்ந்த, நிதி சார்ந்த, இடா்ப்பாடு சார்ந்த, போக்குவரத்து சார்ந்த பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து உறுதுணையாக இருக்கக்கூடிய மிகச்சிறந்த தொழில்நுட்ப வளா்ச்சியாகும். உதாரணமாக, பிளிப்கார்ட், அமேசான், மீஷோ, பிக்பசார் என்ற எண்ணற்ற வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மக்கள் மத்தியில் வளா்ந்த தொழில்நுட்பமாக உள்ளது. ஆடைகள், பொருட்கள் மட்டுமல்லாது உணவுகளையும் வணிகம் நோக்கில் பல்வேறு செயலிகள் வழி விற்பனை செய்கின்றன. உழைப்பு நேரங்களில் இலகுவாக நேரத்தை வீண்விரயமாக்காமல், உணவுகளை துரிதமாக குறைந்த விலையில் வாங்கி உட்கொள்கின்றனா். உதாரணமாக, சுமேட்டோ, சுவிக்கி, கேஎஃப்சி இவ்வாறெல்லாம் சமுதாயத்தில் பல்வேறு தொழில்நுட்பங்களும், செயலிகளும் வளா்ந்துள்ளது என்பதை இதன் வழி அறியலாம். 

போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பம் 

ஆரம்பகாலத்தில் இடம் விட்டு இடம் செல்ல யாத்திரை மேற்கொண்டனர். நடைப் பயணத்தின் வழி பல்வேறு இடங்களை கண்டு களித்தனா். ஆனால், தற்போது சைக்கிள் முதல் விமானம் வரை வளர்ந்துள்ள தொழில்நுட்பங்களின் பங்கும் இன்றியமையாதது. மக்கள் கூட்ட நெரிசலில், வரிசையில் நின்று காத்திருந்து பயணச் சீட்டுகள் பெற்று வாழ்ந்த காலம் மாறி, வீட்டிலிருந்த படியே எந்த தேதியில், எந்த நேரத்தில் புறப்பட வேண்டுமோ அந்த நேரத்திற்கேற்றவாறு இருக்கைகள் இருக்கிறதா, இதில் இல்லையென்றால் மற்றொரு செயலியில் பயணச் சீட்டுக்களை பெற பதிவு செய்துக் கொள்ளலாம்.  

பேருந்து மட்டுமில்லாமல், ரயில் சேவை மற்றும் விமான சேவைகளிலும் தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரித்துள்ளது. நல்ல படுக்கை வசதி மட்டும் குளிர் சாதன வசதி கொண்ட இருக்கைகளை ரயில் மற்றும் விமானங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மக்களின் தேவைகளை நிறைவேற்ற போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்பங்களின் பங்கும் சாலச் சிறந்ததாக உள்ளது.  

தொகுப்புரை  

இன்றைய சூழலில் சமூகத்தில் வாழும் உயிர்களுடன் தொழில்நுட்பங்கள் யாவும் இணைந்து செயல்படுகின்றது. அன்றாடம் பயன்படுத்தும் உணவு, உடை என அத்தியாவசியமான பொருட்கள் யாவும் இருக்கும் இடங்களுக்கே தொழில்நுட்பங்களின் வழி கிடைக்கின்றது. கல்வி, மருத்துவம், உணவு, வணிகம், போக்குவரத்து என இன்னும் ஏராளமானத் துறைகளில் தொழில்நுட்பங்களின்  பங்கு இன்றியமையாதது என்பதை புலப்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது. 

துணைநூற்பட்டியல் 

  1. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் – பதிப்பாசிரியா் ச.வே.சு 

  1. ஔவையார் அருளிய அற நூல்கள் மூலமும் உரையும் 

  1. சி.ர.கோவிந்தராசன் 

  1. திருக்குறள் – கழக வெளியீடு 

  1. தமிழ் விக்கிப்பீடியா  

Author
கட்டுரையாளர்

சமுதாய தொழில்நுட்பம்

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூர்.