சாட் ஜிபிடியில் பாட்டும் தொகையும் Paattum Thogaum in Chat GPT
- 2025
- கட்டுரை
- By முனைவர்.இரா.தனசுபா
முனைவர்.இரா.தனசுபா
சைவபானு சத்திரிய கல்லூரி,அருப்புக்கோட்டை- 626101
Summary
இலக்கியங்கள் புது வடிவம் பெறும்போது அவ்விலக்கியத்தின் நோக்கமும் பொருண்மையும் தன்மையும் அழகும் சிதைந்து விடக்கூடாது. ஓலைச்சுவடிகளிலிருந்து பல பரிணாமங்களைப் பெற்று தனிச் சிறப்புடன் திகழும் சங்க இலக்கிய நூல்கள் இன்று செயற்கை நுண்ணறிவு வடிவிலும் வளர்ந்து வருகிறது. தற்போது தமிழ் இலக்கியங்கள் பற்றிய தரவுகள் பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் கிடைக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களும் தமிழ் ஆர்வலர்களும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான இலக்கியச் செயதிகளை அறிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பல பயன்பாட்டில் இருப்பினும் பெரும்பாலான மக்களால் சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ‘பாட்டும் தொகையும்’ என்ற பெருமைக்குரிய மேற்கணக்கு நூல்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பற்றிய தகவல்கள் சாட் ஜிபிடியில் எவ்வகையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அதில் உள்ள குறை நிறைகளையும் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
When literature takes on a new form, the purpose, substance, character and beauty of that literature should not be distorted. Sangam literature, which has undergone many evolutions from manuscripts and is unique, is today also growing in the form of artificial intelligence. Currently, data on Tamil literature is available in many artificial intelligence tools. Tamil people, Tamil enthusiasts and students all over the world have started using artificial intelligence tools to find out the literary works they need. Although many artificial intelligence tools are in use, SAT GBT is used by most people. In this situation, the purpose of this article is to examine how information about the above-mentioned books, Patu Pat and Ettu Togyum, which are proud of being ‘Patum Togyum’, has been entered in Chat GBT and the shortcomings in it.
ஆய்வுச் சுருக்கம்:
இலக்கியங்கள் புது வடிவம் பெறும்போது அவ்விலக்கியத்தின் நோக்கமும் பொருண்மையும் தன்மையும் அழகும் சிதைந்து விடக்கூடாது. ஓலைச்சுவடிகளிலிருந்து பல பரிணாமங்களைப் பெற்று தனிச் சிறப்புடன் திகழும் சங்க இலக்கிய நூல்கள் இன்று செயற்கை நுண்ணறிவு வடிவிலும் வளர்ந்து வருகிறது. தற்போது தமிழ் இலக்கியங்கள் பற்றிய தரவுகள் பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகளில் கிடைக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களும் தமிழ் ஆர்வலர்களும் மாணவர்களும் தங்களுக்குத் தேவையான இலக்கியச் செயதிகளை அறிந்து கொள்ள செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பல பயன்பாட்டில் இருப்பினும் பெரும்பாலான மக்களால் சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் ‘பாட்டும் தொகையும்’ என்ற பெருமைக்குரிய மேற்கணக்கு நூல்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பற்றிய தகவல்கள் சாட் ஜிபிடியில் எவ்வகையில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் அதில் உள்ள குறை நிறைகளையும் ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
முன்னுரை:
ஒரு இனத்தின் தொன்மையையும் பெருமையையும் அவ்வினத்தின் வரலாற்றுச் சிறப்பினையும் அறிந்துகொள்ள வேண்டுமானால், அம்மக்கள் வாழ்ந்த இடம், பயன்படுத்திய மொழி, அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள், கலை மற்றும் கலாச்சாரப் பண்பாட்டுக்கூறுகள் போன்றவை வழியாகவே அறிந்துகொள்ள முடியும். தமிழர்கள் மூவாயிரமாண்டுகளுக்கு முன்பே சிறந்த நாகரிகமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்தவர்கள் என்பதைப் பழந்தமிழ் நூல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சங்க இலக்கிங்களைத் தமிழர் வாழ்வியலின் அடையாளங்கள் எனலாம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.மூன்றாம் நூற்றாணடு வரை தோன்றிய இலக்கியங்களின தொகுப்பே சங்க இலக்கியங்கள் எனப்படுகிறது. மேற்கணக்கு நூல்கள் வரிசையில் இடம்பெறும் நூல்கள் ‘பாட்டும் தொகையும்’ என அழைக்கப்படுகின்றன. அதாவது பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள் என்பவையாகும். இன்றைய செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சாட் ஜிபிடியில் பாட்டும் தொகையும் பெற்றுள்ள இடம் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
பாட்டும் தொகையும்:
பத்துப்பாட்டு நூல்கள்:
தமிழ் இலக்கிய வரலாறுபடியும், இலக்கண வரன்முறைப்படியும் “பத்து நீண்ட நெடும் பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என அழைக்கப்படுகின்றது. “பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது.கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர் பத்துப்பாட்டு என்ற பெயரைப்பயன்படுத்தியுள்ளார்.” (தமிழ் இணையக் கல்விக் கழகம் 2025 )
இப்பத்துப்பாட்டு நூல்களைக் குறிப்பிடும் பழம்பாடல் ஒன்றுண்டு.
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து. (தமிழ் இணையக் கல்விக் கழகம் 2025)
இப்பாடல் 1. திருமுருகாற்றுப்படை, 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை, 4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல்வாடை, 8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப் பாலை, 10. மலைபடுகடாம் ஆகிய நூல்களைக் குறிப்பிடுகிறது. (தமிழ் இணையக் கல்விக் கழகம் 2025
பிரபல செயற்கை நுண்ணறிவின் பலவகைப் பதில்கள்:
‘ பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய பழம் பாடல்’ என்று சாட் ஜிபிடியிடம் தரவுகளைத் தேடியபோது கீழ்க்கண்ட செய்திகளை தொகுத்துத் தந்தது.
“இங்கே, பத்துப்பாட்டு நூல்களைப் பற்றி குறிப்பிடும் ஒரு பழமையான பாடல் அல்லது பாடல் வடிவத்தில் தொகுக்கப்பட்ட விளக்கம் தருகிறேன். இது தமிழ் மாணவர்கள் அல்லது இலக்கிய ஆர்வலர்கள் எளிதில் மனப்பாடம் செய்ய உதவும் வகையில் அமைக்கப்படுகிறது”(சாட் ஜிபிடி 2025)
பத்துப்பாட்டு பாடல் (விளக்கப் பாடல் வடிவம்)
“பத்துப் பாடல் பாசுரங்கள், பணிப்பாட்டு பெருமைகள்,
முற்காலத் தமிழினத்தின் முத்தான வரலாறுகள்.
திருமுருகாற்றுப்படை திருக்கடவுள் முருகற்கு,
பொருநர் பாடல் பொருநனுக் காப்பான புகழுக்கு.
பெரியாணச் சாற்றுப்படை, சிறுப்பாண் பாடும் செல்வம்,
முள்லைப்பாட்டின் மென்மைமொழி மதுரையின் பாண்டிக்கு.
மதுரைக் காஞ்சி நகர்த் தொழில் மருதனார் உரை,
நெடுநல்வாடை நக்கீரர் நெஞ்சினை நன்கு நனைக்கும்.
குறிஞ்சிப் பாட்டு காதலுக்கு, கபிலரின் கிளியுரை,
பாடிறுப்பற்று பாடி உயரும் புறக் காவியம்.
மலையமாற்றுப்படை மலையை ஒத்து விளங்க,
பதினெண் கீழ்க்கணக்கு புகழும் பத்துப்பாட்டே மகுடம்” (சாட் ஜிபிடி 2025)
பாடல் விளக்கம்:
ஒவ்வொரு வரியிலும் பத்துப்பாட்டு நூல்களின் பெயரும் அவை யாரைப் பற்றி பேசுகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பாடல் மூலமாக, மாணவர்கள் நூலின் பெயர், புலவர், தலைவன் அல்லது மையக் கரு ஆகியவற்றை நினைவில் வைக்கலாம்.(சாட் ஜிபிடி 2025)
பயனரின் தேவையை அறிய விரும்பும் செயற்கை நுண்ணறிவு.
‘பத்துப்பாட்டு நூல்கள் பற்றிய பழம் பாடல்’ என்றக் குறிச் சொல்லின் தேடலில் பயனருக்கு மேலும் விளக்கம் அளிக்கும் வகையில் கீழ் கண்டவாறு கேட்கிறது கணினித் திரை
“விரும்பினால், இந்தப் பாடலை கிழக்கு ராகத்தில் பாடும் ஒரு மெட்டு மற்றும் படக் காட்சிகள் உடனும் அமைத்துக் தர முடியும். கூறுங்கள், தொடரலாம்!” சாட் ஜிபிடி 2025) இவ்வாறு மிகவும் குழப்பமான செய்திகளைத் தவறாகத் தொகுத்தளிக்கிறது . பயனருடன் தன்னை உரையாடும்படி ஊக்குவிப்பதே இத் தொழில்நுட்பத்தின் நோக்கமாக இருக்கின்றதே தவிர , சரியானத் தகவல்களைக் கொடுக்க இது முயலவில்லை.
மேலும் பத்துப்பாட்டு நூல்கள் எனத் தேடும்போது பத்துப்பாட்டு நூல்களில் இல்லாத சிலவற்றைத் தானாக உருவாக்கித் தவறாகக் கொடுத்தது. அவ்வாறு தவறான பகுதிகள் கீழே உள்ளா அட்டவணையில் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
“பத்துப்பாட்டு என்பது எட்டுத்தொகை உடன் சேர்ந்து சங்க காலத்திலுள்ள பழையதமிழ் இலக்கிய தொகுப்புகளில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆகும்.
பத்துப்பாட்டு (பத்து + பாட்டு) என்பது "பத்து பாடல்கள்" எனும் பொருள் கொண்டது. இதில் பத்து முக்கியமான நீண்ட காப்பிய/பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை பெரும்பாலும் அரசர்களின் புகழைப் பாடும் பணிப்பாட்டு வகையிலானவை” ( சாட் ஜி பி டி 2025)
பத்துப்பாட்டு நூல்களின் பட்டியல்:
மேலே உள்ளத் தவறானப் பட்டியலைத் தயாரித்தும் செயற்கை நுண்ணறிவு தான். மேலும் பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகளையும் செயற்கை நுண்ணறிவு தவறாகவே கொடுக்கின்றது.
“பத்துப்பாட்டு நூல்களின் சிறப்புகள்:
இவை அகம் மற்றும் புறம் துறைகளைச் சேர்ந்தன.
பெரும்பாலான நூல்கள் ஆட்சியாளர்களைப் புகழும் பணிப்பாடல்களாகும்.
இலக்கிய, பண்பாட்டுச் செய்திகள், சங்ககால அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், சமூக நிலை ஆகியவற்றைப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
திருமுருகாற்றுப்படை மட்டும் இறைவனை (முருகன்) புகழும் தேவாரம் போன்ற பக்திப் பாடலாகும் உள்ளது.
ஒவ்வொரு பாடலும் நீளமானது (பாடல்கள் பல செய்யுள்களைக் கொண்டவை).” (சாட் ஜி பி டி 2025)
முக்கிய இலக்கிய வரலாற்றுப் பயன்
பத்துப்பாட்டு, சங்க இலக்கியத்தில் மிகப் பழமையான தரவுகளைக் கொண்ட நூலாக கருதப்படுகிறது.
தமிழ் நாட்டின் பழம்பெரும் வழிபாட்டு முறைகள், மக்களின் வாழ்வியல்கள், பருவ நிலை, நகரங்கள், படைகள் பற்றிய முக்கிய தகவல்களைத் தருகிறது.
விருப்பமிருந்தால், ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், செய்யுள் வடிவம் மற்றும் பகுப்பாய்வு பற்றி தனித்தனியாக விளக்கமளிக்கலாம். தேவைபட்டால் கூறுங்கள்!” ( சாட் ஜிபிடி 2025)
இங்கு திருமுருகாற்றுப்படை, பொருணராற்றுப்படை, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகிய நூல்களின் பெயர்கள் மட்டும் பிழையில்லாமல் அமைந்துள்ளது.
மற்ற நூல்கள்,
பெரும்பாணாற்றுப்படையை பெரியாணச்சாற்றுப்படை, என்றும் சிறுபாணாற்றுப்படையை சிறுப்பாணாற்றுப்படை
முல்லைப் பாட்டு - முள்லைப்பாட்டு
பட்டினப்பாலை - பாடிறுப்பற்று
மலைபடுகடாம் – மலையமாற்றுப்படை
என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சில நூல்களின் ஆசிரியர் பெயரும் பாட்டுடைத் தலைவனின் பெயரும் தவறாக உள்ளது
பத்துப்பாட்டு நூல்கள் முழுவதும் சங்ககால மக்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதற்கான வரலாற்றுப் பெட்டகங்கள். அத்தகைய அரிய நூல்களின் பெருமைகள் அழிந்து போவதற்கு செயற்கை நுண்ணறிவு ஒரு கருவியாக அமைந்துவிடக் கூடாது. எனவே தமிழ் கற்றவர்கள் அனைவரும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் சரியான இலக்கியத் தரவுகளைத் தருகின்றனவா என்பதை உற்றுநோக்கி ஆராய்ந்து அவற்றைச் சரிசெய்ய முன் வரவேண்டும்.
எட்டுத்தொகை நூல்கள்:
'பாட்டும் தொகையும்' என்ற தொடரில் 'தொகை' என்ற சொல் எட்டுத்தொகையைக் குறிப்பிடுகிறது. எட்டுத்தொகை நூல்களை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் விதத்தில் பழம்பாடல் ஒன்று அமைந்துள்ளது.
அப்பாடல்
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்குபரி பாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம்
என்று இத்திறத்த எட்டுத் தொகை
இவ் வெண்பா எட்டுத்தொகை நூல்கள் இவைகள் என்பதைக் குறிக்கின்றது. இது ஒரு பழைய வெண்பா. இந்த எட்டுத் தொகை நூல்களிலே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய ஆறு நூல்களும் ஆசிரியப் பாக்களால் அமைந்தவை. சங்க நூல்களிலே பெரும்பாலானவை ஆசிரியப் பாக்களால் அமைந்தவை என்பதற்கு இவைகளே போதும். பண்டைத் தமிழ் நூல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களால் இயற்றப்பட்டதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றிப் ‘‘பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்’’ என்னும் நூலின் விளக்கத்திலே எழுதப்பட்டுள்ளது.
பரிபாடல் என்பது ஒருவகைப் பாட்டு. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நால்வகைப் பாடல்களின் உறுப்புக்களும் கலந்து வருவது. இத்தகைய பாடல்களின் தொகுப்பே பரிபாடல். இது இசையுடன் பாடக் கூடியது. கலிப்பா என்பது நால்வகைப் பாடல்களில் ஒன்று. இதையும் பல இசைகளில் பாடலாம். ஒரு செய்தியைத் தொகுத்தும். விரித்தும், சுருக்கியும் கூறுவதற்கேற்ற பகுதி”( தமிழ் இணையக் கல்விக் கழகம் 2025)
சாட் ஜிபிடியில் எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள் பற்றிய பழம்பாடல் என்று சாட் ஜிபிடியில் தேடியபோது அதிலும் தவறானத் தகவல்கள் ஒரு கட்டுரை வடிவிலேயேக் கொடுக்கப்பட்டுள்ளது. தேடலுக்கான பதிலாக செயற்கை நுண்ணறிவுக் கொடுத்தை அப்படியே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
“எட்டு முத்து எட்டுத்தொகை,
தமிழ்க்கடல் போல் தெளிவுத்தொகை!
குறுந்தொகை நற்றிணை கூட,
அகநானூறு அஃகமும் ஓடு,
நறையுறுத் திரடுகையும்,
களித்தொகை பாடும் கவியும்,
ஐங்குறும் பதிற்றுப்பத்தும்,
பழம் தமிழின் பெருமை சொல்வும்!” ( சாட் ஜி பி டி 2025)
இந்தப் பாடல் எட்டுத்தொகை நூல்களின் பெயர்களைச் சொல்லும் விதமாகவும், அவை தமிழின் பெருமை என்பதை உணர்த்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
வேண்டுமெனில் இதை மெட்டில் பாடும் விதமாகவும் அல்லது குழந்தைகள் மனதில் பதியும் வகையில் மாற்றவும் செய்யலாம். வேண்டுமா?” என சாட் ஜிபிடி தானாகவே ஒரு பாடலைத் தவறாகத் தயாரித்துத் தருகிறது. இவற்றை உடனடியாக நாம் திருத்தம் செய்யாவிட்டால் எட்டுத்தொகை பற்றிய தவறான தகவல்கள் உலகம் முழுவதும் பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்.
எட்டுத்தொகை நூல்கள் என்பது சங்க கால அகத்திணைச் சான்றோர்கள் எழுதிய எட்டு சிறந்த தமிழ் இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் அகம் (உள் உணர்வுகள் – காதல், காதல்பாடு) சார்ந்த பாடல்களை கொண்டவை. ( சாட் ஜி பி டி 2025)
மேலும் எட்டுத்தொகை நூல்கள் என்று சாட் ஜிபிடியில் தரவுகளைத் தேடியபோது, நூல் பட்டியல், சிறு குறிப்பு
எட்டுத்தொகை நூல்கள் பட்டியல்:
நற்றிணை
குறுந்தொகை
அகநானூறு
அிங்குறுநூறு
நறையுறுத்திரடுகை
களித்தொகை
பதிற்றுப்பத்து
பரிபாடல்
சிறு விளக்கம்:
எட்டுத்தொகை முக்கியத்துவம்:
சங்ககாலத்துக்குரிய காதல், உணர்வு, திணை (முல்லை, குரிஞ்சி, மருதம், நெய்தல், பாலை) பற்றிய எழுத்துகள்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியில் முக்கியமான பங்களிப்பு.
பலரும் பள்ளி மற்றும் பட்டப்படிப்புகளில் இதை தமிழ் இலக்கியப் பாடமாகக் கற்றுக் கொள்கிறார்கள். ( சாட் ஜி பி டி 2025)
“நீங்கள் இதற்கான பாடல், கதை அல்லது விளக்கவுரை விரும்பினால் தயார் செய்து தரலாம்! “
( சாட் ஜி பி டி 2025)
என்று பல தவறுகளுடன் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய செய்திகளைத் தந்தது. மேலே தவறான பகுதிகள் அடிக்கோடிட்டு சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஐங்குறுநூறு-அிங்குறுநூறு என்றும் கலித்தொகை - களித்தொகை என்றும் புறநானூறு என்ற நூலுக்குப் பதிலாக நறையுறுத்திரடுகை எனத் தவறாக உள்ளது. மேலும் பரிபாடலில் உள்ள 70 பாடல்களில் நமக்குக் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 22 ஆகும். இங்கே 24 எனத் தவறாக உள்ளது. ஆனால் அிங்குறுநூறு என்பதை மட்டும் தனியாகத் தட்டச்சு செய்து சாட் ஜிபிடியில் தேடியபோது ஐங்குறுநூறு எனச் சரியான பெயரைத் தருகிறது. இப்படி முன்னுக்குப்பின் முரணான செய்திகளைத் தருவதால் இதனைப் பயன்படுத்தி இலக்கியங்களைக் கற்க முற்படுபவர்கள் குழப்பமடைய நேரிடும்.
சிக்கலுக்கான தீர்வுகள்:
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுள் தமிழ் இலக்கியங்களை உள்ளீடு செயயும் பணியில் தமிழ் கற்றவர்கள் ஈடுபட வேண்டும்.
அதற்கு நாம் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை நன்கு கற்றுத் தேர்ச்சியடைய வேண்டும்.
தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்குத் தமிழ்ப் புலமையும் இருக்க வேண்டும்.
தமிழ்ப் புலமை உள்ளவர்களுக்கு தொழில்நுட்பமும் தெரிந்து இருக்க வேண்டும்
தமிழ் பாடத்திட்டத்தில் கணினித் தமிழ், இணையத் தமிழ் போன்ற பாடத்திடங்கள் தற்போது இருப்பினும் செய்முறைப் பயிற்சியளிப்பதற்குத் தேவையான மெய்நிகர் ஆய்வக வசதிகள் இல்லை.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழ் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
தமிழ் மொழியைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்உம்
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுள் பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ்மொழி சார்ந்த தகவல்கள் சரியாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க நிபுணர் குழுக்கள் அமைக்க வேண்டும்.
முடிவுரை:
தொழில்நுட்ப வசதிகள் இல்லாத சங்க காலத்தில் ஓலைச்சுவடிகளில் இருந்த பழைய இலக்கிங்களைப் பாதுகாத்து வருங்கால தலைமுறைக்குக் கொடுப்பதற்கு அரும்பாடுபட்டனர் நம் முன்னோர்கள். இன்று மனிதனுக்கு இணையாகச் செயல்படும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்துவிட்டோம். எனினும் தமிழில் செயற்கை நுண்ணறிவு குறிப்பிடத்தக்க வள்ச்சியடையவில்லை. தமிழ்மொழியின் மீது நமக்கிருக்கும் அக்கறையின்மையே சாட் ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுள் தவறாகப் பதிவேற்றமாவற்குக் காரணமாகும். மொழியின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. எனவே தமிழ்மொழியைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தை அனைவரும் கற்க வேண்டியது அவசியமானதாகும்.
பயன்படுத்தப்பட்ட இணையத்தளங்கள்
https://www.tamilvu.org/courses/degree/a041/a0411/html/a0411
https://chatgpt.com/c/6890e9b3-be38-8010-8e69-d60c312a5474
2. https://www.tamilvu.org/slet/l4330/l4330pd1.jsp?bookid=264&pno=1







