சாட் ஜிபிடியும் தமிழ் இலக்கியமும்

ர.காயத்திரி, முனனவர் ஆ.மகாலட்சுமி

முழுநேர முனனவர் பட்ட ஆய்வாளர், (நெறியாளர்) உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

நல்ல முத்துக்கவுண்டர்மகாலிங்கம் கல்லூரி பொள்ளாச்சி-642001

Summary

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஓபன் ஏஐ என்னும் நிறுவனம் உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு மாடலாக வலம் வருகிறது சாட் ஜிபிடி. பெரிய மொழி மாதிரிகளில் உருவான சாட் ஜிபிடி இணையத்தில் உள்ள அனைத்து தரவுகளையும் மொத்தமாகச் சேர்த்து பயனர்களின் கேள்விக்குத் தகுந்தவாறு இயற்கை மொழி செயலாக்கத்தைப் பயன்படுத்தி உணர்வு சார்ந்த ஒரு நீண்ட உரையாடலைத் தருகிறது. இது இலக்கணம், பண்டைய கால இலக்கியம், இக்கால இலக்கியம், சிற்றிலக்கியம் போன்ற தமிழ் இலக்கியங்களின் தரவுகளை பயன்படுத்திப் தமிழ் மொழியின் தொன்மை, வளர்ச்சி ,பாரம்பரியம் கட்டிடக்கலை போன்ற தமிழ் இலக்கிய தரவுகளின் அடிப்படையில் பயனர்களின் வினாவிற்கு ஏற்ற வகையில் உரை வடித்திலும் காட்சி வடிவத்திலும் தரவுகள் வெளிப்படுகின்றது என்பதையும், தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமல்லாமல் புதிதாகத் தமிழ்மொழி கற்பவர்களுக்கும் பயன்படும் வகையில் சாட் ஜிபிடி. இடம் தரவுகள் உள்ளது என்பதையும், உள்ளீடு தரவுகள் வாயிலாக வெளியிடப்படும் தகவல்கள் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும், வளர்ச்சிக்கும், பாரம்பரியத்துக்கும் பயன்படுகின்றனது என்பதையும் ஆராய்வதின் நோக்கமாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.

Information technology has developed a conversational AI model called ChatGPT, created by a company named OpenAI in the 21st century. ChatGPT, which is based on large language models, aggregates all data available on the internet and uses natural language processing to provide a nuanced and lengthy dialogue in response to users' queries. It utilizes data from various forms of Tamil literature, including classical, contemporary, and short literature, enabling it to showcase the richness, evolution, and architectural tradition of the Tamil language. Furthermore, ChatGPT caters not only to those learning Tamil but also to beginners, offering both text and visual data tailored to users' questions. It is also important to note that the information generated through the input data serves the development, growth, and heritage of the Tamil language.

முன்னுரை 

சாட் ஜிபிடி யில் தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த வினாக்களை உள்ளீடு செய்வதன் வாயிலாக வெளியிடப்படும் தரவுகள் பயனர்களின் வினாவிற்கு சரியாக விடையளிக்கின்றன என்பதை சில கேள்விகளின் மூலம் ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.

சாட் ஜிபிடி தரவுகளின் மூலம்

  • பயனர் கேள்வி: பதினெண் கீழ்கணக்கில் அக நூல்கள் எத்தனை ?

  1. சாட் ஜிபிடி: “பதினெண் கீழ்கணக்கு இலக்கியங்களில் அக நூல்கள் எனப்படும் நூல்கள் 6 உள்ளன. இவை நெறி, ஒழுக்கம், அறம் ஆகியவற்றைப் பற்றிய பாடல்களை உள்ளடக்கியவை”. 

  2. “இயற்கை மொழி செயலாக்கத்தில் பெரிய மொழி மாதிரிகள் சமீபத்தில் மனித சவால்களின் கற்றல், உருவாக்கம் மற்றும் பகுப்பாய்வு அளவில் கணிசமான வளர்ச்சியைக் காட்டுகிறது. இயற்க்கை மொழி மாதிரிகள் தரவுகளின் அடிப்படையில் பயனர்களின் வினாவிற்கு ஏற்றவாறு விடைகளை உருவாக்கும் திறனை பெற்றுள்ளன.”(குரானா மற்றும் பலர்.,2023:2024).

  3. இயற்கை மொழி செயலாக்கத்தில் உள்ள பெரிய மொழி மாதிரிகள் மேற்கண்ட வினாக்களை புரிந்து கொண்டு பதினெண் கீழ்கணக்கு நூல்களில் உள்ள அக நூல்களை பகுப்பாய்வு செய்து பயனர்களின் வினாவிற்கு தகுந்த தரவுகளை தருகின்றது.

  4. பயனர் கேள்வி: சங்கம் வைத்து தமிழ் வளத்தார்கள் என்று கூறும் உரை நூல் எது?

  5.  சாட் ஜிபிடி: இறையனார் அகப்பொருள் உரை,

  6. இந்த உரை நூலில் நக்கீரர் சங்கம் பற்றிய தகவல்களை வழங்குகிறார். 

பெரிய உரை வடிவ மாதிரிகள் இயற்கை மொழி செயலாக்கத்தின் மூலம் நீண்ட ஒரு பகுதியை புரிந்து கொண்டு பயனர்களின் கேள்விற்கு தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து விடைகளை இணையத்தில் உள்ள தரவுகளின் அடிப்படையில் சாட் ஜிபிடி துல்லியமாக தருகிறது.  

  1. பயனர் கேள்வி: தமிழ் மொழியின் தொன்மைக்கான சான்றுகளை சுருக்கமாக தருக ?

சாட் ஜிபிடி: 1. தொல்காப்பியம்

  • தமிழ் மொழியின் முதல் இலக்கண நூல்

  • கி.மு. 5ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தையது

2 சங்க இலக்கியங்கள்

  • 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான இலக்கியங்கள்

  • புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்றவை

3. உலக நாகரிகங்களுடன் தொடர்பு

  • சுமேரியர், எகிப்து, கிரேக்கம் போன்ற நாகரிகங்களுடன் வாணிகம்

  • தமிழர் பொருட்கள் உலகம் முழுவதும் பரவியிருந்தன

செம்மொழி என்ற அடையாளம்

  • உலகின் சில செம்மொழிகளில் ஒன்றாக தமிழ்

  • இன்றும் பேசப்படும் மொழியாகத் தொடர்கிறது

தொல்திராவிட மொழியின் மூத்த உறுப்பினர்

  • இந்தியா முழுவதும் பரவிய தொல்திராவிட மொழிக்குடும்பத்தில் தமிழ் முதன்மை

மேற்கண்ட சாட் ஜிபிடி  தரவுகளில் தமிழ் மொழியின் தொன்மைக்கான சான்றுகளாக தொல்காப்பியம் ,சங்க இலக்கியம், உலக நாகரிகளுக்கு இடையேயான தொடர்பு ,செம்மொழி அடையாளம் மற்றும் தொல்திராவிட மொழியின் மூத்த உறுப்பினர் போன்ற மேலோட்டமான கருத்துக்களை வழங்கி உள்ளது .அதில் தொல்காப்பியம் ஐந்தாம் நூற்றாண்டு என கூறுகிறது. சங்க இலக்கியங்களில் சில நூல்களை மட்டுமே தந்துள்ளது. மேலும் தொல் திராவிட மொழியின் மூத்த உறுப்பினர் என  தமிழ்  மொழியை பலவின்பால் விகுதியில் கூறியுள்ளது. சில இடங்களில் சாட் ஜிபிடி இது போன்ற தகவல்களை சரியாக தருவதில்லை.

“இயற்கை மொழி புரிதல் என்பது மனித மொழியை இயந்திரம் படிக்கக்கூடிய வடிவமாக மாற்றுவதை உள்ளடக்கியது. இது முக்கிய வார்த்தைகள், உணர்ச்சிகள், உறவுகள் மற்றும் சொற்பொருள் போன்ற பெரிய தரவுகளிலிருந்து உரையைப் பிரித்தெடுப்பதன் மூலம் இயந்திரம் மனித மொழியைப் புரிந்துகொண்டு பகுப்பாய்வு செய்ய உதவுகிறது”(Natural Language Processing , B.tech IV Semester -Cse, Pg:1)

தமிழ் மொழியின் தொன்மைக்கான சான்றுகளாக கல்வெட்டுகள் , இலக்கியங்கள் இலக்கணங்கள் , மொழியியலாளரின் கருத்துகள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் தொன்மைக்கான சான்றுகள் கிடைத்து கொண்டே வருகின்றன .இவ்வாறு வருகின்ற பெரிய தரவுகளில் இருந்து பயனர்களின் கேள்விக்கு தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து பெரிய உரையை பிரித்தெடுத்து சுருக்கமாக தருகின்றது 

4) பயனர் கேள்வி: தமிழர்களின் கட்டிடக்கலை வளர்ச்சியை படங்கள் மூலம் காட்டுக?

Architecture of Tamil Nadu - WikipediaA stone structure with stairs with Angkor Wat in the background

AI-generated content may be incorrect.A stone temple with a blue sky with Mahabalipuram in the background

AI-generated content may be incorrect.A stone building with pillars and a stone staircase

AI-generated content may be incorrect.

(சாட் ஜிபிடி:,2025)

“சமீபத்தில் பிரபலமடைந்த இயற்கை மொழி செயலாக்கத்தின் ஆராய்ச்சி மூலம்  அதில் அவர்கள் ஆய்வு மாதிரியாக்க செயல்திறனை மேம்படுத்த வரைபட கட்டமைப்புகளை பயன்படுத்துவதற்கான அணுகுமுறைகளை விவரித்து, அதே நேரத்த்தில் அளவிடுதல் மறைக்கப்பட்ட பாதைகளின் விளக்கத்தன்மை மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் இயற்கை மொழி செயலாக்கத்தின் பிரதிநித்துவ அடிப்படையிலான வரைபடங்களை ஒருங்கிணைத்தல் போன்ற சவால்களை எதிர் கொண்டு வருகின்றது” (கியோவா மற்றும் பலர், A large language model consulted grapg newal network traning framework.ar Xiv preprint arXiv:2405.13902)

 மேற்கண்ட படத்தில்' தமிழர்களின் கட்டிடக்கலை படங்கள் மூலம் காட்டுக ' என்ற பயனர்களின் கேள்விற்கு சாட் ஜிபிடி பல்வேறு இணையங்களில் உள்ள கட்டிடக்கலையை  தொகுத்து எடுத்துக்காட்டி உள்ளது. தமிழர்களின் கட்டிடக்கலை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல் வேறு நாடுகளில் உள்ள கட்டிடக்கலை படங்களையும்  இங்கு  காட்டப்பட்டுள்ளது. 2024 -2025 தரவுகளின் அடிப்படையில் பயிற்சியாக  அளிக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் பதில்  அளிப்பதால் சில கேள்விகளை தவறாக மொழி மாதிரிகள் புரிந்து கொள்கின்றன. அதனால் நாம் அதை உறுதி படித்துக்கொள்ள பல்வேறு சான்றுகளை கேட்பதன் மூலமாக  உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். (சாட் ஜிபிடி:,2025)

5) பயனர் கேள்வி: தமிழர்களின் வீர விளையாட்டுகளை படங்கள் மூலம் சுருக்கமாக தருக?

(சாட் ஜிபிடி:,2025)

A collage of images of men fighting

AI-generated content may be incorrect.A group of people practicing martial arts

AI-generated content may be incorrect.

இந்த படத்தில் தமிழர்களின் வீர விளையாட்டுகள் எது என்பதை இயற்கை மொழி செயலாக்கத்தை மூலம் புரிந்து கொண்டு வீர விளையாட்டுகள் சார்ந்த படங்களை  வேறு இணையத்தில் உள்ளபடங்களின்  தரவுகளின் அடிப்படையில் காட்டுகிறது.

முடிவுரை 

இக்கட்டுரையில்  இயற்கை மொழி செயலாக்கத்தை பயன்படுத்தி தமிழ் மொழி சார்ந்த தரவுகளை சில கேள்விகளின் மூலம் பயனர்களின் வினாவுக்கு தகுந்தவாறு பதில் அளிக்கிறது என்பதை அறியமுடிகிறது. இதில் சில கேள்விகளை தவறாக புரிந்து கொண்டு தவறான தகவல்களை அது வெளியிடுகிறது.  இலக்கியங்களில் உள்ள அடிப்படையான தகவல்களை தருகின்றது என்பதனையும், புராணம், இதிகாசம் போன்ற தமிழில் உள்ள தொன்மையான கருத்துகளை சரியாக வெளியிடுவதில்லை  என்பதனையும் தமிழ் மொழிக்கான ஆழமான கற்றல் முறைகள் சாட் ஜிபிடி யிடம் போதுமானதாக இல்லை   என்பதனையும் அறிய முடிகிறது.

ஆழமான கற்றல் முறை மற்றும் தமிழ் மொழிக்கான தரவுகளையும்  சரியாக உள்ளீடு செய்தால் மட்டுமே வருங்காலத்தில் இந்த செயலில் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என  அறிய முடிகின்றது. மேலும் தமிழ் மொழியின் தரவுகளை தொடர்ந்து உள்டுவதன் மூலமாகவும் ,கேள்விகள் கேட்பதன் வாயிலாகவும் அறிய தகவல்களை வருங்காலத்தில்  சிறந்த செயலியாக தமிழ் மொழிக்கு பயன்பெறும் வகையில் சாதகமாக உள்ளது என்பதை இவ்ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது .  

Reference 

  1. ) Khurana,D.,KOLI,A.,KHATTER,K.,$SINGH,S (2023) Natural Lnaguage Processing: State of thr art, current trends and challenges. Multimedia tools and Application,82(3),3713-3744

  2. https://doi.org/10.1007/s11042-022-13428-4 ,Natural language processing: state of the art, current trends and challenges | Multimedia Tools and Applications

  3. Dr.G.L.N Jaya prada.,Malla Reddy College of Engineering $Tecnology, NATURAL LANGUAGE PROCESSING (R20A6609),B.Tech (R-20 Regulation)

  4. qiao,Y.,Ao,x.,Lio,Y.,XU,J.Sun,X.,$ He, Q.(2024)

  5. LOGIN: A large language model consulted grapg newal network traning framework.ar Xiv preprint arXiv:2405.13902.

  6. https://doi.org/10.48550/arXiv.2405.13902



Author
கட்டுரையாளர்

ர.காயத்திரி, முனனவர் ஆ.மகாலட்சுமி

முழுநேர முனனவர் பட்ட ஆய்வாளர், (நெறியாளர்) உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை

நல்ல முத்துக்கவுண்டர்மகாலிங்கம் கல்லூரி பொள்ளாச்சி-642001