தமிழியல் ஆய்வுகளை மேம்படுத்த உதவும் செயற்கை நுண்ணறிவு
- 2025
- கட்டுரை
- By முனைவர் இரா. அருணா
முனைவர் இரா. அருணா
செயற்குழு உறுப்பினர்,தமிழ் இணையக்கழகம்,கோபிசெட்டிபாளையம்.
Summary
மனிதர்களின் அறிவை மேம்படுத்த உதவுவதே செயற்கை நுண்ணறிவு(AI). மனிதர்களை போல் சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும், பிரச்சனைகளைத் தீர்வுகாணவும் பயன்படுவது செயற்கை நுண்ணறிவு. ஆனால், மனிதர்களைப் போல் மன உணர்வுகளை உணர்ந்து கொள்ள தகுதியற்றது. மனிதர்களின் மன உணர்வுகளுக்கேற்ப கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை அளிப்பது செயற்கை நுண்ணறிவின் சிறப்பு. இச்செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கபடும் செயலிகள் தமிழியல் ஆய்வுகளை மேம்படுத்த உதவுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
Artificial Intelligence (AI) is a tool to improve human knowledge. Artificial intelligence is used to think, learn, make decisions, and solve problems like humans. However, it is not capable of understanding human emotions. The specialty of artificial intelligence is to provide appropriate answers to questions asked according to human emotions. In this article, we will see how applications developed using this artificial intelligence help improve Tamil studies.
முன்னுரை
ஆராய்ச்சியாளர்கள் துறைசார்ந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், ஆதாரங்கள், தரவுகள், கோப்புகள் ஆகிய அனைத்தும் மிக நுட்பமாக ஓரளவு நம்பகத்தன்மையுடன் தேட உதவுவது செயற்கை நுண்ணறிவு செயலிகள் ஆகும். இச்செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்தி ஆய்வுக்கான தரவுகளை சேகரிப்பது பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் விரிவாக இனி காணலாம். இக்கட்டுரையில் ஆய்வுக்குப் பயன்படுமு முக்கியமான ஐந்து செயலிகள் பற்றி தெளிவாக இங்கு ஆராயப்படுகிறது.
தமிழியல் ஆய்வுகளுக்கு உதவும் செயற்கை நுண்ணறிவு செயலிகள்
https://www.google scholar.com/
செயற்கை நுண்ணறிவு செயலி – 1
https://www.researchrabbit.ai/
இந்த செயலியைப் பயன்படுத்தி ஆய்வாளர்க் கட்டுரைகளைச் சேகரிப்புகளில் சேர்த்து வைத்துக்கொள்ளலாம். ஆய்வாளர்கள் தேடுதம் குறிப்பிட்ட தலைப்பிற்கேட்ப புதிய கட்டுரைகளை பரிந்துரைகளை வழங்குகிறது. தலைப்பிற்கேற்ற தகவல்களைக் கொண்ட கட்டுரைகளை மட்டும் பரிந்துரைக்கு இச்செயலி எடுத்துக்காட்டுகிறது. இதனால், தேவையற்ற தகவல்கள் தவிர்க்கப்படுகிறது.
Researchrabbit – செயலியின் பயன்கள்
தகவல்கள் சேகரிப்பு
ஆய்வுகளை மேம்படுத்த தேவைபடும் தரவுகளை மட்டும் கொடுத்தல்
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுதல்
ஆய்வுகளைப்பற்றி கருத்துக்களை ஊடாடும் காட்சிகளை பயன்படுத்தும் வசதி
Researchrabbit செயலியை பயன்படுத்தும் முறை
Researchrabbit செயலியில் கணக்கை உருவாக்குதல்
ஆய்வுக்குத் தொடர்புடைய ஆய்வுக்கட்டுரைகளை கண்டறிதல்
பிற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை கண்காணித்தல் மற்றும் புதிய தரவுகளை பெறுதல்
ஆய்வுக்கு தேவையான புதிய சேகரிப்பை சேர்த்தல்
சேகரித்த தரவுகளை ஏற்றுமதி செய்தல்
செயற்கை நுண்ணறிவு செயலி – 2
Consensus - https://consensus.app/search/
Consensus என்ற செயற்கை நுண்ணறிவு செயலி ஆய்வுக்கட்டுரைகளைச் சுருக்கவும், ஆய்வுத் தரவுகளை ஆய்வுக்கு ஏற்றவாறு வடிவமைப்பு செய்ய உதவுகிறது. மேலும், இச்செயலி பல துறைகளுக்குத்தேவையான ஆய்வுக்கேள்விகளுக்கு எடுத்துக்காட்டுகளை வழங்குகிறது.
Consensus செயலியின் பயன்கள்
பிற ஆய்வுக்களின் ஆதாரங்களைக் கண்டறிதல்
ஆய்வுக்கட்டுரைகளை சுருக்குதல்
ஆய்வுக் கட்டுரையின் ஆய்வு வடிவமைப்பை மதிப்பிடுதல்
பல்வேறு துறைசார்ந்த ஆராய்ச்சிக்கான தரவுகளை கண்டறிய உதவுகிறது.
படம் 1 - Consensus செயலியில் கணக்கை உருவாக்குதல்
செயற்கை நுண்ணறிவு செயலி – 3
Google Scholar
Google Scholar என்ற செயலி ஆராய்ச்சி கட்டுரைகளைத் தேடுவதற்கான கூகிளின் இலவச செயலி ஆகும். மேலும், ஆய்வுக்கான மேற்கோள்களை கண்டறியவும் உதவுகிறது. இச்செயலியில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரைகளின் ஆசிரியர்களின் சுய விவரங்களை காணமுடியும். எனவே, இது ஆய்வுக்குத் தேவையான ஒன்றாக அமைகிறது. இச்செயலியில் பல துறைகள் சார்ந்த நூல்களைக்கொண்ட நூலகங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Google Scholar செயலியின் முக்கிய பயன்கள்
விரைவான ஆய்வுத்தேடல்
இலவச அணுகல்
மேற்கோள் கண்டறிதல்
ஆசிரியரின் சுயவிவரத்தை காணும் வசதி
ஆய்வுக்குத்தேவையான கட்டுரைகளைக் கண்டறிதல்
நூலக ஒருங்கிணைப்பு
செயற்கை நுண்ணறிவு செயலி – 4
Paper Digest - Quick analysis - https://www.paperdigest.org/review/
Paper Digest என்ற செயலி பல்வேறு தலைப்புகளில் முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உதவுகிறது.
முக்கிய அம்சங்கள்
இலக்கியங்கள் உருவான காலம் வாரியாக ஆய்வுகளை வரிகைப்படுப்பட்டுள்ளது.
காப்புரிமைக்கு உட்பட்ட ஆய்வுகளை தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தியுள்ளது.
ஆய்வுக்கான ஆவணங்களை படிக்கவும் திருத்தி அமைக்கவும் ஏற்றது.
ஆழமான ஆராய்ச்சிக்கு உதவுகிறது.
நேரத்தை சேமிக்க உதவகிறது.
பன்முகத்தேடலுக்கு ஏதுவாக அமைகிறது.
செயற்கை நுண்ணறிவு செயலி – 5
Chat PDF - To understand Research Paper - https://www.chatpdf.com/
Chat PDF என்ற செய்ற்கை நுண்ணறிவு செயலி PDF ஆவணங்களுடன் உரையாட அனுமதிக்கிறது. இச்செயலி PDF-காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. PDF ஆவணங்களை உள்ளீடகக் கொடுத்து கேள்விகளுக்கான பதில்களைப்பெற ஏதுவாக அமைந்துள்ளது. PDF ஆவணங்களை உள்ளீடக்கொடுத்து சுருக்கமாக பெற வசதியும் உள்ளது.
ஒரே நேரத்தில் பல PDF ஆவணங்களுடன் உரையாடும் வசதி உள்ளது. PDF ஆவணத்திற்கேட்ப மேற்கோள் ஆதாரக் குறிப்புகளை வழங்குகிறது. ஆய்வுக்குத் தேவையான மொழிகளில் செயல்படும் செயலியாக உள்ளது.
முடிவுரை:
ஆராய்ச்சியாளர்கள் துறைசார்ந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள், ஆதாரங்கள், தரவுகள், கோப்புகள் ஆகிய அனைத்தும் மிக நுட்பமாக ஓரளவு நம்பகத்தன்மையுடன் தேட உதவுவது செயற்கை நுண்ணறிவு செயலிகள் ஆகும். இச்செயற்கை நுண்ணறிவு செயலிகளை பயன்படுத்தி ஆய்வுக்கான தரவுகளை சேகரிப்பது பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் ஆய்வுக்குப் பயன்படும் முக்கியமான ஐந்து செயலிகள் பற்றி தெளிவாக தக்க படங்கள் கொண்டு இங்கு விளக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குத் துணை கொண்டவை:
செயற்கை நுண்ணறிவு பற்றிய ஓர் அறிமுகம்(மாணவர்களுக்கானது) – ப.முகுந்தன் – வைகாசி,2025 – சிருஷ்டி,207 B,ரத்தோட்டை வீதி, மாத்தளை.
ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட செயலிகள்
https://www.google scholar.com/
Chat GPT
Gemini
Canva







