தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்
- 2025
- கட்டுரை
- By முனைவர். சி. தீபா
முனைவர். சி. தீபா
பிஎஸ்ஜி ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி
Summary
Artificial Intelligence tools for Tamil are taking the Tamil language to new frontier. In this context the AI tool called Jenny AI is designed to improve academic and professional writing, research papers in Tamil. This article discusses the uses of Jenny AI and it's pros and cons.
தமிழுக்கான செயற்கை நுண்ணறிவுக் கருவி தமிழ் மொழியைப் புதிய எல்லைகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அந்நிலையில் ஜென்னி ஏஐ என்பது கல்வி மற்றும் தொழில் முறை எழுத்தை மேம்படுத்தவும், தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வடிவமைக்கவும் பயன்படுத்தும் ஒரு கருவியாகும்.ஜென்னி ஏஐ பயன்பாடுகள் குறித்தும் அதன் நிறை குறைகளும் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன.
முன்னுரை
உலகில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆய்வுகள் ஆங்கில மொழியையே அதிகம் மையப்படுத்தி உள்ளதைக் காணலாம். பெரிய மொழி மாதிரிகளைப் ( LLM-Large Language Models) புரிந்து கொள்ளவும், செயலாக்கவும் வடிவமைக்கப்பட்ட நுண்ணிய அமைப்புமுறையாகும். இது பல்வேறு புத்தகங்கள்,இணைய தளங்கள் போன்ற மூலங்களிலிருந்து பல்வேறு வகையான சொற்களைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன. இது மொழியின் கூறுகளையும் உள்ளடக்கியது. தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத ஜென்னி ஏஐ கருவி எவ்வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த பதிவாக இக்கட்டுரை அமைகின்றது.
ஜென்னி ஏஐ
ஜென்னி ஏஐ கருவியை விக்டர் ஐ. ஒசோரோ நிறுவினார். அதிகமாக எழுதும் கருவிகளைக் கற்பனை செய்து வேகமாகவும் துல்லியமாகவும் எழுத உதவும் ஒரு ஏஐ எழுத்து உதவியாளரை உருவாக்க அவர் விரும்பியது தான் ஜென்னி ஏஐ.
ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுத ஜென்னி ஏஐ கருவியை எவ்வாறு பயன்படுத்தித் திறம்பட எழுதுவது, கட்டுரைகளை மேம்படுத்துவது என்பதை அறிந்து கொண்டால் ஆய்வில் நாம் எந்த அளவு பின்தங்கி உள்ளோம் என்பதை உணர முடியும்.
ஜென்னி ஏஐ பரந்த அளவிலான கல்வி மற்றும் எழுத்தாக்கப் படைப்புப் பணிகளைத் திறம்படக் கையாளுகிறது. கூகுளைப் பயன்படுத்தி, உள் நுழைந்து, பெயர், மின்னஞ்சல், கடவுச்சொல்லை நிரப்பி புதிய கணக்கை முதலில் உருவாக்கிக் கொள்ளலாம் .ஜென்னி 80 விழுக்காடு அளவிற்கு ஒரு துல்லியத்தைத் தர முயற்சிக்கிறது. ஏஐ கட்டளைகள்,, ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகளை விரைவாக எழுத இது உதவுகிறது.
Grammarly,Jasper, Paperpal மற்றும் copy ai போன்ற பல ஜென்னி ஏஐ மாற்றுகள் இன்று கிடைக்கின்றன. அவைகள் ஜென்னி ஏஐ ஆய்வறிக்கை உண்மையானதா என்று உறுதி செய்கின்றன. இதில் நிறைய சலுகைகள் உள்ளன. பயன்படுத்தவும் எளிதான அமைப்பாகும். மலிவு விலையில் கிடைக்கிறது
ஜென்னி ஏஐ செயல் திறன்
வேகமாகவும் புத்திசாலித்தனமாகவும் எழுத உதவுகின்றது. இவைகளை கவனத்தில் கொள்ளும்போது ஜென்னி ஏஐ ஒரு மிகச் சிறந்த எழுத்து உதவியாளர் என்பதைக் கருத்தில் கொள்ளலாம். ஆய்வறிக்கை, ஆய்வுக் கட்டுரை ஒரு எளிய மின்னஞ்சலுக்காக சிரமப்படும் சொற்கள் ஆகிய தரவுகளை இது தருகிறது .
இதன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஒருவருக்கு வழிகாட்ட, வாதிட ,சம்மதிக்க வைக்கப் போராடுகிறது. ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புகளோடும் பிரிவுகளோடும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதன் மொழி நடை புரியும் நிலையிலும் சுருக்கமான உண்மையை எடுத்துச் சொல்லும் வகையிலும் அமைகின்றது.
தரவு விளக்கக் காட்சி, நம்பகமான ஆதாரங்களைக் கண்டுபிடித்துத் தருதல், பரிந்துரைக்கப்பட்ட முடிவுரைகள் ஆகியவற்றை நமக்கு வழங்க உதவுகிறது.
ஆங்கிலக் கட்டுரை, தமிழ்க் கட்டுரை வரலாற்றுக் கட்டு,ரை எதுவாக இருந்தாலும் ஜென்னி ஏஐ யின் செயற்கை நுண்ணறிவு அதன் தேவைக்கேற்ப வடிவமைக்க உதவுகிறது. இலக்கணப் பிழைகளைச் சரி செய்யவும், மேற்கோள்களைச் சேர்க்கவும் உதவும் வகையில் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க ஜென்னி ஏஐ உதவுகின்றது.
முனைவர் பட்ட மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு ஏஐ சிறந்த எழுத்து உதவியாளராக உதவி செய்கிறது.
வலைப்பதிவு இடுகைகள் மற்றும் பேச்சுகள் (Paraphrasing):
விளக்கக் காட்சிக்கு உரிய வலைப்பதிவுகள் மற்றும் சிறந்த உரைகளை எழுதும் செயல் முறையை இது எளிதாக்குகிறது. ஜென்னி ஏஐ 30க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை ஆதரிக்கிறது. Pdf களை ஒரே இடத்தில் சேமித்து நிர்வகிக்க நூலகம் என்ற பகுதி உதவுகிறது. ஜென்னி ஏஐ, பயனர்கள் எந்த நேரத்திலும் தங்கள் சந்தாவை ரத்து செய்ய அனுமதிக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரை, ஆய்வறிக்கை எதுவாக இருந்தாலும் அதைத் தேர்வு செய்து வழிகாட்டுதல்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இலவசத்திட்ட ஜென்னி ஏஐ ஒரு நாளில் 200 சொற்களை மட்டுமே எழுதுகிறது.வரம்பற்ற pdfகளை பதிவேற்றம் செய்யலாம் .இதழ்கள் மேற்கோள்களையும் பதிவிட்டுக் கொள்ளலாம் .கட்டணத் திட்டத்தில் நுழைந்து விட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதே வேளையில் கல்வியாளரால் பெரும் அளவில் ஆதரிக்கப்படும் பேப்பர் பால், ஜென்னி ஏஐ க்கு மாற்றுக் கருவியாகும். இது விரிவான எழுத்துக் கருவித் தொகுப்பாகும்.
தொல்காப்பியம்- மொழிமரபு என்று தலைப்பைத் தட்டச்சு செய்து விட்டால் போதும் .அதன் கீழ் பல்வேறு தலைப்புகளை நமக்குக் காட்டுகிறது .வாக்கிய அமைப்பு, சொல்தேர்வு ,மற்றும் சீரான பரிந்துரைகளைத் துல்லியமாக வழங்க உதவுகிறது. ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரையை சுருக்கமாகக் கூற வேண்டும் அல்லது சிக்கலான ஆய்வறிக்கையை ஜென்னி ஏஐ ன் pdf பதிவேற்ற ஆவணங்களில் பெறலாம்.
தடையற்ற மேற்கோள்கள்
“துல்லியமான மேற்கோள்களை உருவாக்குவது, உரையில் மேற்கோள்களை சேர்ப்பது துணை நூல் பட்டியலை உருவாக்குவது போன்ற சிரமங்களை இது நீக்குகிறது வாக்கியங்களைத் தானாக நிரப்பவும் ஜென்னி ஏஐ உதவியாக இருக்கின்றது. வடிவமைக்கப்பட்ட கட்டுரைக்கேற்ப மேலும் மேற்கோள்களைச் சேர்க்க உதவுகின்றது. ஆராய்ச்சி நூலகங்கள் மற்றும் பிடிஎஃப் பதிவேற்றத்திலும் ஒருங்கிணைக்கிறது”¹ (2025ல் பதிவு செய்யப்பட்ட வலையொளி - தமிழால் இணைவோம் -உலகத் தமிழ்ப் பேரியக்கம்.)
சாட் ஜிபிடி உடன் ஒப்பிடுகையில் இது அதிக செலவு .இருந்த போதிலும் கல்வி எழுத்துக்கு ஜென்னி ஏஐ மிகவும் திறமையானது என்று பயனர்கள் கருதுகின்றனர்.
பிற ஏஐ கருவிகளுடன் ஒப்பிடும்போது
+இலக்கணம், நடை இவற்றைச் செம்மைப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
* உரை உருவாக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* மேற்கோள் ஆதரவுடன் உதவுகிறது.
* ஆராய்ச்சி மையக்கருத்தை அறிய முடிகிறது.
* எழுத்து நடை திருந்திய மொழியில் அமைகின்றது.
*இலக்கிய மதிப்பாய்வு ஆராய்ச்சியை நெறிப்படுத்துவதை வலியுறுத்துகிறது.
நன்மை
*ஏஐக்கு புதியவராக இருந்தாலும் பயன்படுத்த எளிதானது
.*எழுதுவதை வேகமாக்குகிறது.
*புதிய சிறப்பம்சங்களுடன் வெளிப்படுத்துகிறது
தீமைகள்
ஜென்னி ஏஐ ஆல் உருவாக்கும் உரை, உரைத்திருட்டு சரி பார்ப்பவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படலாம். இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.ஏஐ அடிப்படையிலான தொழில்நுட்பங்களின் வாய்ப்புகள் இருந்த போதிலும் அவற்றிற்கு நெறிமுறைச் சிக்கல்களும் உள்ளன. சில நேரங்களில் ஏஐ கருவிகளின் முடிவுகளைப் புரிந்து கொள்வது என்பது ஆசிரியர்களுக்கு சவாலான ஒன்றாகும்.
ஜென்னி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் அணுகுமுறை மற்றும் தொழில்நுட்பக் கருவிகளுக்கான நெகிழ்வான கட்டமைப்பாகக் கருதப்படுகிறது. ஆசிரியர்களின் அறிவை அளவிடுவதற்கான ஒரு அளவுகோலாக ஏஐ கருவிகள் உருவாக்கப்படுகின்றன. ஏஐ முடிவுகளைப் புரிந்து கொள்ள, மதிப்பீடு செய்ய ஆசிரியர்கள் முனைய வேண்டும்
முடிவுரை
நிறைய சலுகைகளைக் கொண்ட ஒரு ஏஐ எழுத்துக் கருவி பயன்படுத்த எளிதாகவும், மலிவான விலையிலும் பெற முடிகிறது. நமது எழுத்தை நெறிப்படுத்த ஜென்னி ஏஐ ஒரு மிகச் சிறந்த உதவிக் கருவியாக இடம்பெறுவது ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும். ஜென்னி ஏஐ ஆங்கிலத்தை முதன்மையாக ஆதரிக்கின்றது. மேலும் பல மொழிகளை விரிவபடுத்துவதில் தனது முயற்சிகளைச் செய்து வருகிறது
மேற்கோள்
https://www.youtube.com/live/8_-0MDt8404?si=n3PRH2xFmSiggcZA
தமிழால் இணைவோம் - உலகத் தமிழ்ப் பேரியக்கம்







