தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடத் தேவையான தளம்

முனைவர் மெய். சித்ரா

தலைவர், தமிழ்ப் பண்பாடு இயக்கம்

தலைவர், தமிழ்ப் பண்பாடு இயக்கம், ஆங்காங்

Summary

தமிழில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் கருத்தரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் நூல்களாகவும் பல தளங்களில், பெரும்பாலும் ஆய்வு இதழ்களாகவும் வருகின்றன. இப்போது உள்ள தளங்கள் வரையறைக்குட்பட்டு மிகச் சிலவே உள்ளன. எந்த மாநாட்டுக் கருத்தரங்க வெளியீடுகளைக் கண்டாலும், பொருண்மைகள் மீளுருவாக்கத்துடன் இருப்பதைக் காணும் போது ஆய்வாளர் மீண்டும் மீண்டும் ஒரே பொருண்மையை அதே வழியில் செய்து தங்கள் திறன்களை மற்ற பொருண்மைகளில் செலுத்தாமல் இருப்பதைக் காண முடிகிறது. ஓர் ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும்போது அந்த பொருண்மைகள் முன்பு எவ்வளவு தூரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ஏதுவாக ஒரு பொதுவான தளம் நம் தமிழ்மொழி ஆய்விற்குத் தேவை என்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்த விரும்புகின்றது. இக்கட்டுரை பிற மொழியில் இருக்கும் ஆய்வு தளங்களை அறிமுகப்படுத்தி, அதைப் போன்று தமிழிலும் இருக்க வேண்டும் என்று இதற்கு ஒரு வழியையும் நிறுவ முயல்கிறது.

அறிமுகம் 

கல்லூரி பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், ஆர்வலர்கள் என்ற நிலைகளில், ஆய்வாளர்கள் தங்கள் முடிவுகளைக் கட்டுரைகளாய் வெளியிடுவது பல ஆண்டுகளாக நடந்து வருவது. அவை பல வழிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.  தமிழில் பல்லாயிரக்கணக்கான கட்டுரைகள் கருத்தரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் நூல்களாகவும் பல தளங்களில், பெரும்பாலும் ஆய்வு இதழ்களாகவும் வருகின்றன. 

இவை எதிர்கால ஆய்வாளர்களுக்கு அடிப்படையாக அமைபவை.  ஆய்வுகளை அவற்றிலிருந்து தொடருவது, மேன்மேலும் ஆய்வுகளை மெருகேற்றும்.  ஆனால், எந்த மாநாட்டுக் கருத்தரங்க வெளியீடுகளைக் கண்டாலும், பொருண்மைகள் மீளுருவாக்கத்துடன் இருப்பதைக் காணும் போது ஆய்வாளர் மீண்டும் மீண்டும் ஒரே பொருண்மையை அதே வழியில் செய்து தங்கள் திறன்களை மற்ற பொருண்மைகளில் செலுத்தாமல் இருப்பதைக் காண முடிகிறது. 

ஆய்வாளர்கள் ஆய்வுகளை மீளுருவாக்கம் செய்யாது, அதற்கு அடுத்த நிலை ஆய்வினை தொடர வேண்டுமெனில், அக்கட்டுரைகள், இன்றைய உலகில் இணையதளத்தில் இருக்க வேண்டிய அவசியமாகிறது. தமிழ் ஆய்வுகள் எவ்வாறெல்லாம் வெளியிடப்படுகின்றன என்பதை முதலில் சுட்டி, பிற மொழிகளில் கட்டுரைகள் இணையத்தில் எப்படி வெளியிடப்படுகின்றன என்பதை விளக்கி, தமிழில் ஒருங்கிணைந்த ஆய்வுத் தளத் தேவை பற்றி இக்கட்டுரை விளக்க உள்ளது. 

ஆய்வு வெளியீடுகள் 

ஆய்வுகள் பல விதத்தில் அச்சு ஏற்றப்படுகின்றன. அரசாங்க இதழ்கள், தனியார் இதழ்கள், கருத்தரங்க நூல்கள், ஆர்வலர் ஆய்வு நூல்கள்என்று பலவிதமாகஆய்வு முடிவுகள்ஆய்வாளர்களுக்குகிடைக்கும் வண்ணம்இருக்கின்றன. 

இன்றைய ஆய்வாளர்கள் எந்த நிலையில் இருந்தாலும், தங்களது ஆய்வு முடிவுகளை,  கணினியில் அச்சில் ஏற்றி,  இதழ்களுக்கும் கருத்தரங்குகளும் அனுப்புவது இன்றியமையாததாகிவிட்டது.    

கருத்தரங்கஆய்வுகள்நூல்களாக வெளியிடப்படுகின்றன.  பல ஆர்வலர்கள்தங்கள் ஆய்வுகளைவிரிவான நூல்களாகவும்வெளியிட்டுள்ளனர்.  ஆய்வாளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் பொருண்மைகள்,  முன்பு ஏதேனும் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டுமெனில் இந்த கருத்தரங்கநூல்களையும்,  இணையத்தில் இருக்கும்ஆய்வு கட்டுரைகளையும், தனியாரின் நூல்களையும் சுட்டி, அதற்கு மேலான விவரங்களைத் தர வேண்டும் என்பதுஆய்வுக்கோட்பாடு.  

இன்றைய கருத்தரங்க ஆய்வேடுகளைப் பார்த்தால், பலரும் ஒரே தலைப்பில் கூறியவற்றை திரும்பத் திரும்ப கூறுவதை நாம் பல இடங்களில் காண முடியும்.  இது ஆய்வாளர்களின் நேரத்தையும்படிப்போரின் நேரத்தையும் வீணாக்குகிறது என்பது ஆசிரியரின் கருத்து.  ஆய்வுகளை மேற்படி எடுத்துச் செல்வதே ஆய்வாளர்களின் கடமையாக இருக்க வேண்டும்.  அதற்கு முந்தைய ஆய்வு கட்டுரைகள்அவர்களின் கைகளுக்கு எட்டும் வகையில் இருப்பது இன்றியமையாதது 

கடந்த நூற்றாண்டில் செய்யப்பட்ட ஆய்வு நூல்கள் பலவும், archive.org என்ற இணையதளத்தில்பதிவேற்றப்பட்டுள்ளதை ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்வது நலம்.சங்க இலக்கியங்கள், இலக்கியங்களின் உரைகள், அகழ்வாராய்ச்சிமுடிவுகள்,  அரசு உடைமை ஆக்கப்பட்ட நூல்கள்என்று பலதரப்பட்ட ஆய்வுக்கு தேவையான நூல்கள் இந்த தளத்தில் இலவசமாக கிடைப்பதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.மீளுருவாக்கப்பட்ட பொருண்மைகளைத்தவிர்த்தல் வேண்டும்.பேராசிரியர்கள் உதவிப் பேராசிரியர்கள், தங்களதுமாணவமாணவியரைபுதிய புதிய பொருண்மைகளைஆய்வுசெய்ய ஊக்கப்படுத்தல் வேண்டும். 

தமிழ் மொழி ஆய்வுத் தளங்கள் 

இது வரை செய்யப்பட்டஆய்வுகளின் முடிவுகள் சிலஇணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.  அத்தகையஇணைய தளங்களைஇப்பகுதியில்தரப்பட்டுள்ளது. 

தமிழ் பற்றிய ஆய்வுகள் தமிழ் நாட்டிலும், தமிழகம் விட்டு பல நாடுகளிலும் செய்யப்பட்டு வருகிறது.  ஆய்வு முடிவுகள் பல ஆய்விதழ்களில் வெளியிடப்பட்டு வந்துள்ளன. அதில் குறிப்பாக சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) வெளியிடும் தமிழியல் இதழ் (Journal of Tamil Studies) UGC Care Listed 1973இல் இருந்து வெளிவருகிறது. இதழ்கள் அனைத்தும் இணையதளத்தில் அனைவரும் பயன்படுத்தும்படி பதிவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் இ மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் வெளியிடும் உலகத்தமிழ்: பன்னாட்டு ஆய்வு காலாண்டு   மின்னிதழ்; (An international Tamil Research Journal) (ISSN:2581-9712), 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.  அவை அனைத்தும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

மலாயப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் (Journal of Tamil Peraivu) (eISSN :2636-946X, Print ISSN:2286-8379) எனும் அரையாண்டு ஆய்விதழ் 2015ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது.   

மலாய நாட்டின், பென்டிடிகன் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகம் (Universiti Pendidikan Sultan Idris, MALAYSIA வளர்தமிழ் ஆய்விதழ் (Journal of Valartamil) (eISSN:2821-3157) அரையாண்டு ஆய்விதழ் 2020ஆம் ஆண்டு முதல் இணையத்தில் வெளியிடப்பட்டு வந்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், ஆய்வு மாணவர்களின் முனைவர் பட்ட ஆய்வுகளின் பதிவை இணையத்தில் வெளியிட்டுள்ளன.   

மேலும் பல்வேறு தனியார் இணையதளங்களும் ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. 

 

 

பெயர் 

விதம்  

பதிவு எண் 

துவங்கிய வருடம் 

வெளியிடுபவர் 

நவீனத் தமிழாய்வு, பன்னாட்டு பன்முகத் தமிழ் ஆய்விதழ்  

Journal of Modern Thamizh Research  

காலாண்டு   மின்னிதழ் 

ISSN-2321-984X 

2013 

Raja Publications 

Shanlax International Journal of Tamil Research 

காலாண்டு   மின்னிதழ் 

P-ISSN: 2454-3993 

E-ISSN: 2582-2810 

2016 

S.Lakshmanan 

தமிழ் மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் 

International Journal of Tamil Language and Literary Studies (IJTLLS) 

அரையாண்டு 

 2581-7140 (ONLINE) 

2018 

Maheshwari Publishers 

 

 

சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்  

International Research Journal of Tamil 

மின்னிதழ் 

ISSN:2582-1113 (online) 

2019 

IOR Press 

அரண் பன்னாட்டு தமிழாய்வு மின்னிதழ் 

Aran International e-Journal of Tamil Research 

காலாண்டு   மின்னிதழ் 

ISSN:2582-399X 

2019 

முனைவர் பிரியா கிருஷ்ணன் 

தமிழ் ஆய்வு ஆராய்ச்சியின் சர்வதேச நடுவர் இதழ் 

IRJTSR - International Refereed Journal of Tamil Studies 

காலாண்டு   மின்னிதழ் 

ISSN 2582-5313 

2019 

Mahizhini publication 

International Research Journal of Tamil Literary Studies 

காலாண்டு   மின்னிதழ் 

E-ISSN: 2582-7030 

2020 

Vahai Publication 

 

இந்தியத் தமிழ் ஆய்விதழ் 

Indian Journal of Tamil (IJOT) 

காலாண்டு   மின்னிதழ் 

E ISSN 2582-662X 

2020 

Asian Research foundation 

ஆய்வுபன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் 

Aaivu – International Tamil Research Journal 

காலாண்டு   மின்னிதழ் 

 

2020 

Prabha Publishing House 

  1. மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் 

Maayan International Journal of Tamil Research (MIJTR) 

காலாண்டு   மின்னிதழ் 

E-ISSN: 2583-0449 

2021 

Maayan Publications 

 

பல்வேறு புதிய ஆய்விதழ்களும் 2022 முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. 

பிற மொழி ஆய்வுத் தளங்களின் அறிமுகம் 

முனைவர் பட்ட ஆய்வின் போது பல ஆய்வு இதழ்களைப் படிக்க வேண்டி இருக்கும். பல ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய ஆய்வு இதழ்கள் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அத்தனை இதழ்களும் இணையதளத்தில் கிடைக்கப்பெறுகின்றன. இதன் மூலம் பல ஆய்வுக் கட்டுரை இணையதளங்கள் இருப்பதைக் காண முடிகிறது. 

இவை அனைத்திற்கும் நாம் பல இணையதளங்களுக்கு சென்று பல விஷயங்களை பெற வேண்டி இருக்கும். இணையதளத்தில் ஒரு சிறந்த விஷயம் நாம் வீட்டில் இருந்து கொண்டே உலகம் முழுவதும் சுற்றிவர இயலும். உலகில் உள்ள பல அருங்காட்சியக இணைய தளங்களுக்குச் சென்று பல ஆதாரங்களை தேடி பார்க்கமுடியும்.   

  • Web of Science 

  • Scopus 

  • Google scholar 

  • Researchgate 

  • Academic.edu 

மேற்கூறப்பட்ட தளங்களில்,  நமக்கு தேவையானபொருண்மைகளை தேடுபொறியில் இட்டால், அந்தப் பொருண்மைகளில் பதிவேற்றப்பட்ட    கட்டுரைகள்ஒருங்கே அட்டவணைப்படுத்தப்படும்.இது ஆய்வாளர்களுக்கு,  மேற்படியான ஆய்வுகளைச் செய்ய மிகவும் உதவிகரமாக இருப்பது வெளிப்படை. 

ஒருங்கிணைந்த ஆய்வுத்தளத் தேவை 

முனைவர் பட்ட மாணவர்கள்பல ஆய்வு  அரங்குகளுக்கு சென்றுபல ஆய்வு இதழ்களை படித்துதாங்கள் தேர்வு செய்த தலைப்பில்இதற்கு  முன்னர்   செய்திருக்கும்   ஆய்வுகளை எல்லாம்ஆய்வு செய்துஅதற்கு அடுத்த நிலை ஆய்வினை செய்வதே நடைமுறையில் இருக்கும் வழக்கம்.  தற்போது பல அரங்குகளில்  வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் நூல்களாக மட்டுமே வெளியிடப்படுகின்றன.  அவை அனைத்தும் இணையதளங்களில் பதிவேற்றப்படும்முனைவர் பட்ட மாணவர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   அவர்களது ஆய்வுகளை  மேம்படுத்த உதவும்.  மாணவர்கள் தாங்கள் செய்யும் ஆய்வு காலத்தில்பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவது அவர்களது  ஆய்வினை மெருகேற்றும் என்பது வெளிப்படை. 

கருத்தரங்கம் நடத்துவோர், நூல்களாய் வெளியிடும் அதே நேரத்தில்,  அவற்றை இணையதளத்திலும் இடம் பெறும் வகையில் பதிவேற்றம்செய்தால், அது ஆய்வாளர்களுக்குப் பெரும்நன்மை பயக்கும். 

இன்றைய இணையதளங்களில் பல கட்டுரைகள் கட்டணமின்றி பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளன.ஆனாலும் ஏதோ ஒரு தலைப்பில் நாம் எதையாவது தேட வேண்டும் எனில்,  அதை செய்வது மிக கடினம் இருக்கிறது.அதை எளிமைப்படுத்த வேண்டும் எனில்,  இந்த இணையதளங்களை எல்லாம் இணைத்து ஒருங்கிணைந்த தளத்தை அமைத்து,  உரிய தேடுபொறியினைக் கொடுத்தால் நம்முடைய ஆய்வுகளை நாம் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல இயலும்என்று இக்கட்டுரை ஆசிரியர் நம்புகிறார். 

முடிவுரை 

ஓர் ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதும்போது அந்த பொருண்மைகள் முன்பு எவ்வளவு தூரம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய ஏதுவாக ஒரு பொதுவான தளம் நம் தமிழ்மொழி ஆய்விற்குத் தேவை என்பதை இந்தக் கட்டுரை வலியுறுத்த விரும்புகின்றது. இக்கட்டுரை பிற மொழியில் இருக்கும் ஆய்வு தளங்களை அறிமுகப்படுத்தி, அதைப் போன்று  தமிழிலும்  இருக்க வேண்டும் என்று  இதற்கு ஒரு வழியையும் நிறுவ முயல்கிறது. 

Author
கட்டுரையாளர்

முனைவர் மெய். சித்ரா

தலைவர், தமிழ்ப் பண்பாடு இயக்கம்

தலைவர், தமிழ்ப் பண்பாடு இயக்கம், ஆங்காங்