தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள்

திருமதி ச.சுதா

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூா்.

Summary

கணினி மனித வாழ்கையில் இருந்து பிரிக்க முடியாத பொருளாக மாறிவிட்டது. கையெழுத்து பிரதிகள் என்ற நிலை மாறி அனைத்து துறைகளிலும் எல்லா செயல்பாடுகளுக்கும் கணினி இன்றிமையாததாக பயன்பட்டு வருகின்றது. இணையத்தின் செயல்பாடுகள் அனைத்திற்கும் கணினி ஆதாரமாக இருக்கின்றது. அவ்வகையில் தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்கள் குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

மின் தமிழ் அறிமுகம்  

கணினியின் செயல்பாடுகள் அனைத்தும் ஆரம்ப காலத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. படித்தவா்களை தவிர கணினியை உபயோகிக்க முடியாத நிலை இருந்தது. ஆரம்பத்தில் கணிணியில் தமிழை உள்ளீடு செய்வதற்கு வசதி இல்லை. தமிழ் எழுத்துருக்களுக்கான விசைப் பலகைகளும் இல்லை. தமிழ் எழுத்துகளுக்கான ”ஆத்மி” என்ற மென்பொருள் முதலில் உருவாக்கப்பட்டது. அதை தொடர்ந்து மைக்ரோசாப்வோ் வோர்டு (Microsoftware Word) போன்ற பல மென்பொருட்களில் தமிழைப் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது ”ஒருங்குறிக் குறியேற்றம்” (Unicode Encotingபல நாடுகளில் உள்ள கணினி நிறுவனங்களின் முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்டது1. (இந்துதமிழ்.இன் – கணினித்தமிழ் வளர்ச்சி) 

 இவ்வாறு கணினியில் தமிழின் வளா்ச்சி படிப்படியாக உயா்ந்தது.  

தமிழ் இலக்கியங்களுக்கான வலைதளங்கள் 

தமிழ் இலக்கியங்களுக்கென பல வலைதளங்கள் இணையத்தில் உள்ளது. இலக்கிய தரவுகளுக்கு நூல்களை தேடி பார்த்து படித்து குறிப்புகள் எடுத்த காலம் சென்றுவிட்டது. தற்போது கணினியில் இணையதளம் வழி தமிழ் செவ்வியல் இலக்கியங்கள் முதல் தற்கால இலக்கியங்கள் வரை இணையம் வழி பார்த்து பயன் பெற பல தமிழ் வலைதளங்கள் உள்ளது. சான்றாக, தமிழ் விக்கிபீடியா (Tamil wikipedia), தமிழ் விச்சுவல் (Tamil Virtual), பிளாக்ஸ்பாட் (Blogspot), தமிழ்சுரங்கம்.காம், தமிழ் இலக்கிய விமா்சனக் கலை களஞ்சியம், சிறகு.காம், இலக்கியம்.காம் என்ற பல வலைதளங்கள் உள்ளது. 

தமிழ் மின் நூலகங்கள் 

ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்கள் அச்சுகளில் நூலாக தொகுக்கப்பட்டது. நூல்களுக்கென்று பல நூலங்களும் செயல்பட்டு வருகின்றது. தற்காலத்தில் கணிணியில் இணையம் வழியாக எங்கிருந்தாலும் தேவையான நூல்களை பார்த்து பயன்பெறும் வகையில் மின் நூலகங்கள் உள்ளது. மின் நூலகற்கள் வழி தமிழ் இலக்கியங்களை உலகெங்கிலும் உள்ள தமிழா்களுக்கும், தமிழ் ஆர்வலரா்களுக்கும் பயன் உள்ளதாக அமைகின்றது. மேலும் நூல்களை தேடி அலையும் வேலையும் குறைந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கான மின் நூலகங்கள், எண்ணிம மின் நூலகம் (Electronic Library), மெய்நிகா் நூலகம் (Virtual Library), தமிழிணையம் மின் நூலகம், சென்னை மின் நூலகம், நூலகம்.நெட்  போன்ற மின் நூலகங்கள் இணையத்தில் உள்ளது இதை கணினி உதவியுடன் பார்த்து பயன்பெற இயலும் 

தமிழ் மின் இதழ்கள்  

தமிழ் இலக்கியங்களை பொருண்மைகளாக கொண்டு எழுதப்படும் இலக்கிய கட்டுரைகள் புத்தமாக தொகுக்கப்பட்டது. கல்லூரிகள், பல்கலைகழங்கள் வழி கருத்தரங்கம் நடத்தபட்டு ஆய்வு கோவை, கருத்தரங்க கட்டுரை தொகுப்பு என நூலாக்கப்பட்டது. தற்போது கணினி உதவியுடன் இணைய வழியில் இருந்த இடத்தில் ஆய்வுக்கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய பல மின்னிதழ்கள் உள்ளது. மின்னிதழ்களில் பதிவு செய்யப்படும் கட்டுரைகள் தமிழ் மாணவா்கள், ஆய்வாளா்கள், மற்றும் உலகமெங்கிலும் உள்ள தமிழ் படிக்கும் ஆய்வாளா்களுக்கும் பயன் உள்ளதாக அமைகின்றது. தமிழ் இலக்கியங்களுக்கான மன்னிதழ்கள், முத்துகமலம் (தமிழ் ஆய்வு இதழ்), வார்ப்பு, வரலாறு.காம், நிலாச்சாரல், பதிவுகள், தமிழோவியம், ஆய்வுச்சுடா் (பன்னாட்டு பன்முகத்தமிழ் ஆய்விதழ்), உலகத்தமிழ் பன்னாட்டு ஆய்வு மின்னிதழ் (உலக தமிழ் சங்கம் மதுரை)  போன்ற பல மின்னிதழ்கள் உள்ளது. 

 

தமிழ் மின் செயலிகள் 

செயிலிகள் (App) தற்காலத்தில் பல துறைகளுக்கும் உதவியாக உள்ளது. செயலிகள் திறன் பேசி வழி செயல்பாட்டில் இருந்தாலும், அவற்றிக்கான உருவாக்கமம் கணினி வழியில் தான் செய்யப்படுகின்றது. விளையாட்டு, சினிமா, சமூக ஊடங்கள் மட்டுமல்லாது தமிழ் இலக்கியங்களுக்கான பல செயலிகள் உள்ளது. சான்றாக, தமிழ் இலக்கியங்களுக்கான செயிலிகள் சங்க இலக்கியம், இலக்கியம் – பதிணென் கீழ் கணக்கு, தமிழ் இலக்கணம், தமிழ் களஞ்சியம், அந்தமிழ் புக்ஸ் (Andhamil Books), பாரதியார் கவிதைகள், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழி வரலாறு என பல செயலிகள் செயல்படுகின்றது. 

தமிழ் மின் நூல்கள்  

மின் நூலகங்கள் தவிர பல தமிழ் இலக்கிய நூல்கள்  கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) வடிவில் தற்காலத்தில் கணினியில் இணையம் வழி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ”கையடக்க ஆவண வடிவமைப்பு என்பது ஆவண பரிமாற்றத்துக்காக 1993 இல் அடோப் சிஸ்டம்ஸ் உருவாக்கிய ஒரு கோப்பு வடிவமைப்பு (File) ஆகும்”2. ( தமிழ் விக்கிப்பீடியா – கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF)) 

தற்காலத்தில் இணைய வழியிலான வகுப்பு என்ற நடைமுறைக்கு மின் நூல்கள் பேருதவியாக இருந்தது. இணைய வழியிலான வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்த சூழலில் மாணவா்களுக்கு பாட சம்பந்தமான பல நூல்கள் கையடக்க ஆவண வடிவமைப்பு முறையிலேயே வழங்கப்பட்டது. தமிழ் மாணவா்கள், ஆய்வாளா்கள், தமிழ் ஆராய்ச்சியாளா்கள் மற்றும் தமிழ் .இலக்கிய நூல்களை கற்க விரும்பும் உலகமெங்கும் உள்ள அனைவருக்கும்  இருந்த இடத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளவும் உதவியாக உள்ளது. 

தொகுப்புரை 

தமிழும் தமிழ் இலக்கியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். செவ்வியல் பண்புகள் கொண்ட தமிழ் .இலக்கியங்கள் கணினி வளங்களினாலும் உச்சத்தை அடைந்துள்ளது. கணினி என்றாலே ஆங்கிலம் என்ற நிலைமாறி தமிழ் மொழிக்கும் உரியதாக தற்காலத்தில் உயா்ந்துள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கான கணினி வளங்களாக  மின் தமிழ் அறிமுகம், தமிழ் இலக்கியங்களுக்கான வலைதளங்கள், தமிழ் மின் நூலகங்கள், தமிழ் மின் இதழ்கள், தமிழ் மின் செயலிகள், தமிழ் மின் நூல்கள், இவற்றின் வழியிலும் பயன்பெறும் வகையில் உள்ளது. என்பதனை புலப்படுத்துவாக இக்கட்டுரை அமைந்துள்ளது. 

சான்றெண் விளக்கம் 

  1. இந்துதமிழ்.இன்கணினித்தமிழ் வளர்ச்சி  

  1. தமிழ் விக்கிப்பீடியா – கையடக்க ஆவண வடிவமைப்பு (PDF) 

 

பன்முகத் துறையும் தொழில்நுட்ப வளர்ச்சியும்  

திருமதி.க.அருணா தேவி 

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி  

P2866#y1, Shapeமேட்டமலை - சாத்தூா்  

 

தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு ஆகும். ஆதிகாலத்தில் மனிதர்கள் அனைவரும் தன்னுடைய உணவு தேவைக்காகவும் பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். அத்தொழிலினை செய்ய கருவிகள் தேவைப்பட்டன. அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயம், கல்வி, மருத்துவம், வணிகம், போக்குவரத்து போன்ற அனைத்து துறைகளிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயத்திற்கு தேவைப்படும் அனைத்து தொழில்களுக்கும் கருவிகள் வந்துள்ளன. கல்வி மனிதன் இணையதளம் வழியாக தான் இருக்கும் இடத்தில் இருந்து கல்வி பயிலும் அளவிற்கு தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மருத்துவம் துறையிலும் பல்வேறு கருவிகள் மற்றும் மருந்துகள் அனைத்து வகையான நோய்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து துறைகளிலும் தரைவழி, கடல்வழி, வான்வழி போன்ற பாதைகளின் வழியாக இயங்கும் அளவிற்கு போக்குவரத்து துறை வளர்ச்சி கண்டுள்ளது. இதனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆய்வாக இக்கட்டுரை அமைய உள்ளது. 

விவசாயம் 

மனிதன் விவசாயம் செய்ய தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு வகையான கருவிகளை பயன்படுத்தி வந்துள்ளான். வேளாண்மைக்காக மண்வெட்டி.  ஏர்கத்தி(அரிவாள்), கோடாரி, உழவு இயந்திரம்துலா, கடப்பாரை போன்ற கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். வேளாண்மை - வேள் + ஆண்மை , வேள் - மண், ஆண்மை - ஆளுதல் (மண்ணை ஆளுதல்) என்பதாகும். 

உழவர்கள் பண்டை காலத்தில் உழவிற்காக பயன்படுத்திய கருவிகள் இயற்கை கலப்பை, சட்டிக்கலப்பை, சட்டிபப்பலுகுகள், சுழல்கலப்பை போன்ற பெரும்பாலானவற்றை விவசாயிகள் பயன்படுத்தியுள்ளார்கள். நாற்றுநடுவதற்கு, களை எடுப்பதற்கு, பயிர்; வகைகளை விதைக்க கோனாவீடர் மற்றும் இயந்திர களையெடுப்பனை பயன்படுத்துகிறார்கள். மினி டிராக்டர் என்னும் இயந்திரம் களையெடுக்கவும், மண் அணைக்கவும், பருத்தி, மரவள்ளி போன்ற பயிர்களுக்கும் பயன்படுத்தியுள்ளார்கள். ‘ஜப்பான் நாட்டில் யான்மார் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. இந்த இயந்திரம் ஆறுவரிசை மற்றும் எட்டுவரிசை அமைத்து உழவரின் தேவைக்காகவும் பயன்படுத்துகின்றனர்’1; என்பதை அறிய முடிகின்றது. (உ.வ.வே.ப.13, உழவரின் வளரும் வேளாண்மை – ஹெ.பிலிப் – பக்கம்.13) 

இதன்மூலம் விவசாயத்திற்க்காக பல்வேறு கருவிகள் வந்துள்ளதையும் மனிதர்களின் வேலை  பளு குறைந்துள்ளதையும் விவசாயத்துறையின் முன்னேற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிகின்றது. 

கல்வி 

கல்வி  என்பதற்கு ‘கல் என்பது வேர்ச்சொல் ஆகும். கல்வி; என்ற சொல்லிற்க்கான ஆங்கிலசொல் Edcation என்பதாகும். இச்சொல் edcatio என்ற இலத்தின் சொல்லில்’2 இருந்து பெறப்பட்டதாகும். (ta.m.wikipedia.org) 

அரசர்கள் காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக குருவின் வீட்டில் சென்று கல்வி கற்று வந்துள்ளர்கள்.  பின்பு அவர்களுக்கு கோயில்கள், மடங்கள்  போன்ற இடங்களில் பாடம் கற்றுள்ளார்கள். இன்றைய தகவல் தொடர்பின் வளர்ச்சியால் கல்வியினை மாணவர்கள் தங்களுடைய வீட்டிலிருந்து கல்வி கற்கும் அளவிற்கு கல்விதுறை வளர்ச்சி கண்டுள்ளது. மாணவர்களுக்கு தேவையான தகவல் தெரிந்து கொள்ள வானொலி, தொலைகாட்சி, தொலைபேசி, இணையதளம், கணினி பல்வேறு மின்னணு பொருட்கள் மூலம் தகவலை அறிந்து கொள்ள முடிகின்றது. 

மனிதன் முந்தைய காலத்தில் ஒரு தகவலை தெரிந்து கொள்ள நூலகம் நூலகமாக சென்ற காலம் போய் இன்றைய வளர்ச்சியால் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து தகவலை தெரிந்து கொள்ளும் அளவிற்கு கல்வி துறை வளர்ச்சி கண்டுள்ளதை அறியமுடிகின்றது. 

மருத்துவம் 

மருத்துவத்துறை என்பது மற்ற  துறைகளைப்போன்று வளா்ச்சி கண்டுள்ளது. ‘மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும் அறிவியலும் ஆகும். இதனை நோய் கண்டுபிடிக்கவும், அவை வராமல் தடுக்கவும் உதவும் அறிவியல் அல்லது செயல்பாடு ஆகும். இவ்வகையான செயல்பாடுகள் மூலம் மனிதா;களின் உடல்நலத்தைப் பேணுதல், மீள்வித்தல் ஆகியவற்றிற்க்காக உருவாக்கப்பட்ட பல்வேறு உடல்நலம் பேணற்செயல்முறைகள்’3 உள்ளடக்கும். (ta.m.wikipedia.org) 

மருத்துவம் நம்முன்னோர்கள் காலத்தில் மருத்துவச்சி கொண்டு நோய்க்கு கைவைத்தியம் மற்றும் பெண்களுக்கு பிரசவம் பார்த்தார்கள்.இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சியால் மருத்துவத்துறை வளா்ச்சி கண்டுள்ளது. கற்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கவும், புற்றுநோய், காசநோய், மாரடைப்பு, இருதயநோய், கண்பார்வை குறைபாடு, அறுவைசிகிச்சை, முடிவளருதல் போன்ற அனைத்து நோய்களுக்கும் இயந்திரங்களும், மருத்துவப் பொருட்களும் அறிவியலாளா்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடிகின்றது. 

வாணிபம் 

வணிகம் அல்லது வா்த்தகம் என்ாது மனிதனது தேவைகளையும், விருப்பக்கங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்க ஒரு பொருளாதாரச் செயற்பாடு ஆகும்.  

ஒரு பொருளையோ சேவையோ பஒணத்திற்கு விற்பனை செய்வது எணிகம் ஆகும். இவ்வணிகத்தை வணிக வளாகம், கடல் வணிகம், தடையிலா வணிகம், மரபு வணிகம், சில்லரை வணிகம், உலக வணிகம், உள்நாட்டு வணிகம், வெளிநாட்டு வணிகம் என்று பல்வேறு முறைகளில் அமைந்துள்ளன. “சில்லறை வணிகம் என்பது உற்பத்தியாளா்களிடமிருந்து பொருட்களை மொத்த வியாபாரிகள் பொருட்களை பெறுகின்றனா். மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் அந்த பொருட்களை பெறுகின்றனா். நுகா்வோா்கள் தத்தம் தேவைகேற்ப பொருட்கள் சில்லறை வியாபாரிகளிடமிருந்து வாங்கி கொள்கின்றார்கள்“4 (ta.m.wikipedia.org) என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. 

வணிகத்துறையில் நாம் நேரடியாக சென்று பொருட்களை வாங்கி வந்துள்ளோம். இன்றைய வணிகத்தின் வளா்ச்சியால் மனிதன் தான் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு தனக்கு தேவையான பொருட்களை வாங்கும் அளவிற்கு வணிகத்துறை வளா்ச்சி அடைந்துள்ளதை அறிய கொள்ள முடிகின்றது. 

போக்குவரத்து 

முந்தைய காலங்களில் ஒருவா் மற்றொருவருக்கு ஒரு தகவலை சொல்லவேண்டுமானால் அவா் யாரிடம்தகவலை தெரிவிக்க வேண்டுமோ அவரை தேடி அந்த இடத்திற்கு கால்நடையாக சென்று சொல்லுவர்கள். அடுத்த கட்டமாக தோ், குதிரை, கழுதை, மாடு போன்ற வண்டிகள் மனிதனின் அறிவு வளா்ச்சியால் தோன்றியுள்ளன. 

“மோட்டார் வாகனங்கள் சைக்கிள்கள், பேருந்துகள், தொடர் வண்டிகள், லாரிகள், விமானங்கள், உலங்கு வானூர்திகள், கப்பல்கள், விண்வெளி ஊர்திகள் உள்ளிட்டவை அறிவியல் வளர்ச்சியால் கண்டுபிடித்து மக்கள் பயன்படுத்தியுள்ளார்கள்“5 (ta.m.wikipedia.org)    என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது..  

இன்றைய அறிவியல் வளா்ச்சியால் மனிதன் மின்சார வழியாக இயங்கும் வாகனங்களை பயன்படுத்தும் அளவிற்கு போக்குவரத்துத்துறை வளா்ச்சி கண்டுள்ளது. 

தொழிநுட்ப தீமைகள் 

தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் வெற்றி கண்டிருந்தாலும் அவை அனைத்தும் நமக்கு நன்மை என்று கூறிவிட முடியாது. இதனால் மக்கள் விவசாயத்தில் வெலை பார்க்கமுடியாமல் போகிறது. இணையதளம் எந்த அளவிற்கு மனிதனுக்கு நன்மை தருகிறதோ அதே அளவிற்கு தீமையும் தருகிறது. தொழிலுக்காக பல்வேறு இயந்திரங்களை பயன்படுத்துவதள் மூலம் நிலத்தடிநீா், நிலம் , மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் உருவாகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது. 

தொகுப்புரை 

தொழில்நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல்நுட்பம் ஆகும். இத்தொழில்நுட்பமானது அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டுள்ளது.விவசாயத்துறையில் மனிதா்களை விவசாயத்திற்கு பயன்படுத்திய காலம் சென்று இன்றைய தொழில்நுட்பத்தால் இயந்திரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்தும் அளவிற்கு வளா்ந்துள்ளது. கல்வியை மனிதன்தான் இருக்கும் இடத்தில் இருந்து பயிலும் அளவிற்கு இணையதளத்தில் கல்விமுறை முன்னேற்றம் கண்டுள்ளது. மருத்துவம் கைவைத்தியம் பார்த்த காலம்போய் இன்றைய மருத்துவம் இயந்திரங்களும் மருந்துப் பொருட்களும் அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்க்கும் அளவிற்கு மருத்துவத்துறை முன்னேற்றம் கண்டுள்ளது. வாணிபம் நேரடியாக சென்று பொருட்களை வாங்கிய காலம் சென்று அவா்களின்வீட்டிற்கு வந்து பொருட்களை தரும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.மனிதன் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கால்நடையாக சென்ற காலம் சென்று இன்றைய அறிவியல் வளர்ச்சியால் மின்சாரத்தின் வழியாக வாகனங்களை இயக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது. 

சான்றெண் விளக்கம் 

  1. .உழவரின் வளரும் வேளாண்மை – ஹெ.பிலிப் – பக்கம்.13 

  1. . ta.m.wikipedia.org 

  1. .ta.m.w;kipedia.org 

  1. .ta.m.wikipedia.org 

  1. .ta.m.wikipedia.org  

Author
கட்டுரையாளர்

திருமதி ச.சுதா

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்

ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டமலை, சாத்தூா்.