தமிழ் கற்பித்தலில் AI - Gaming கருவிகள்

முனைவர் மு.அன்பரசி

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு)

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி

Summary

தேசிய பயிற்சி ஆய்வகம் வெளியிட்டுள்ள (National Training Laboratories) அறிக்கையின்படி கற்பித்தல் முறை என்பது செயலற்ற கற்பித்தல் முறை (Passive Teaching Learning Methods), பங்கேற்கும் கற்பித்தல் முறையென (Participatory Teaching Methods) இரண்டு வகையாக நடைபெறுகிறது. இதில், பங்கேற்கும் கற்பித்தல் முறையிலேயே மாணவர்களின் ஈடுபாடு அதிகமாக உள்ளதாக கற்றல் கூம்பகம் (Learning Pyramid) காட்டுகிறது. மனிதனின் ஏழாம் அறிவாக AI மாறிப் போகுமா? அல்லது, இருக்கின்ற அறிவுத்திறனை குறைத்து விடுமா? என்ற விவாதங்கள் நடைபெறுகின்ற இவ்வேளையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைக் கல்வி தளத்தில் சாதகமாகவே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வகையில் வகுப்பறையில் மாணவர்களின் பங்கேற்பினை அதிகமாக்கவும் ஆர்வத்தைத் தூண்டவும் விளையாட்டு முறை கற்பிதல் பெரிதும் உதவுகிறது. எவ்வயதினரையும் ஈர்க்கும் விதமாக AI-யில் விளையாட்டு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இணையம் என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தகவல் தொடர்புத் துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலுமே  வளர்ச்சி என்பது உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு துறை வளர்ச்சி அடைய அரை நூற்றாண்டு , முழு நூற்றாண்டு என கால அளவு எடுத்துக்கொண்ட இதே உலக்கத்தில் ஓரிரு ஆண்டுகளில், மாதங்களில், இன்னும் ஏன் ஒருசில வாரங்களிலேயே  நினைத்ததைவிட பன்மடங்கு வளர்ச்சியினை அடைய இந்த செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence) மனித இனத்திற்குப் பயன்படுகிறது. மனிதன் கொடுக்கக் கூடிய தரவுகளின்  தொகுப்பு அடிப்படையில் (Data Based Decisions)  AI செயல்பட்டாலும் மனிதர்களின் அனுபவம், உணர்வு, உணர்ச்சி என்ற நிலையிலிருந்து சற்று விலகியதாகவே உள்ளது. இதனாலேயே,   செயற்கை நுண்ணறிவு குறித்து நேர்மறையான கருத்தியல் பலராலும் முன்வைக்கப்பட்டலும் எதிமறையான கருத்துகளும் வந்துகொண்டே உள்ளன.   தற்கால கற்றல் கற்பித்தல் நிகழ்வில் AI புதிய வரவாக பார்க்கப்படுகிறது. எதனையும் AI மூலம் கற்பிக்கலாம் என்ற நிலையில் தமிழ் கற்பித்தலில் விளையாட்டு சார் செயற்கை நுண்ணறிவு (Gaming AI Tools) பயன்பாடு குறித்தும் அவற்றின் நன்மை தீமை குறித்தும் இக்கட்டுரை விளக்குகிறது.

தமிழ் கற்பித்தல்

“வானை அளப்போம் கடல் மீனையளப்போம்

சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” 1 (பாரதியார் கவிதைகள், பக்.298)

என்ற பாரதியின் கனவுகளை எட்டிபிடிக்க ஏதுவானச் சூழலை உருவாக்கித்தருன்ற வல்லமையை இன்றைய அறிவியல் வல்லுநார்கள் தொழில்நுட்ப செயலிகள் மூலம் சாத்தியப்படுத்தியுள்ளனர். கணினி, கணிதம், அறிவியல், மேலாண்மைப் போன்று மொழிப் பாடங்களையும் செயற்கை நுண்ணறிவு (AI) – கருவிகள் (Tool) மூலம் கற்பிக்க முடியும். தமிழ் மொழிப் பாடங்களை எளிமையாகவும் மாணவர்கள் ஆர்வமாகவும் கற்கும் வகையில் பல AI கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறன கருவிகளை கேமிங் AI – கருவிகள் என்ற வகைபாட்டிற்குள் அடக்கலாம். விளையாட்டு மூலம் ஒரு பாடம் கற்பிக்கப்படும் போது கற்றல் நிலை மிகுந்த ஈடுபாடு (Engagement) கொண்டதாக  மாற்றப்படுகிறது.  AI கருவிகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளையாட்டுகள், இன்டராக்டிவ் கற்றல் (Interactive Learning),  மற்றும் தானியங்கி மொழிபெயர்ப்பு கற்றல் (Automated translation) போன்ற பல்வேறு நுட்பங்களைக் கொண்டதாக உள்ளன. 2 (Futurepedia - இணையவழிச் செய்தி) வழக்கமான கரும்பலகைக் கொண்ட வகுப்பறைக் கற்பித்தல் மாணவர்கள் மத்தியில் உற்சாக்கத்தை வரவழைப்பதாக இருப்பதில்லை. இதற்குக் காரணம் உட்சகட்ட அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டுள்ள இன்றைய காலகட்டத்தில் இம்மணவர்கள் பிறந்து வளர்வதோடு தடையின்றிப அதனைப் பயன்படுத்தியும் வருவதே ஆகும். கற்பித்தல் முறையில் காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு மாறுதல்களை உள்வாங்கிச் செயல்படுத்தும் நடைமுறைக்கு ஆசிரியர்கள் தற்போது பயிற்சி எடுத்து வருகின்றனர்.   அவ்வகயில், தமிழ் கற்பித்தலுக்கான AI கேமிங் கருவிகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.  

தமிழ் கற்பித்தலுக்கான AI-சார்ந்த கேமிங் கருவிகள்

  1. அ. மொழி அடிப்படையிலான கல்வி விளையாட்டுகள் (Language Learning Games)

  1. 1. Duolingo (AI-powered) – தமிழ் கற்றல் முறையைக் கேமிபை (gamify) செய்ய உதவும்.
    2.  Memrise – தமிழ் சொற்களையும்  வசனங்களையும் மனதில் பதிக்க AI கொண்டு கேமிங் செயல்பாடுகள்.
    3.  Quizizz – கேமிங் பாணியில் வினாக்கள், தேர்வுகள் மூலம் தமிழ் கற்றல்.
    4. Kahoot! – AI-ஐ கொண்டு தமிழ் வகுப்புகளுக்கான கேமிங் கற்றல் அனுபவம்.

  1. ஆ. AI-வழிப்படுத்தப்பட்ட கதை & உரையாடல் கேம்கள் (Story-based & Conversational AI Games)

  1. 5.  ChatGPT-powered தமிழ் கதைகள் – AI மூலம் மாணவர்கள் சொந்த கதைகளை உருவாக்கலாம்.
    6.  Charisma.ai – AI அடிப்படையிலான கதைகள், உரையாடல் NPCகள் மூலம் மொழிப் பயிற்சி.
    7. RPG Maker + AI NPCs – மாணவர்கள் கதைகளை எழுத, கேமாக உருவாக்கலாம்.

  1. இ. AI விளையாட்டுகள் மூலம் எழுத்து & உச்சரிப்பு பயிற்சி (Writing & Pronunciation Learning)

  1. 8. Speech Recognition AI (Google’s Read Along) – தமிழ் வார்த்தைகளை சரியாக உச்சரிக்க பயிற்சி.
    9. Voiceflow (AI Chatbots for Learning) – AI பேச்சாளர் மூலம் உரையாடல் விளையாட்டுகள்.

  2. 10. QuillBot & Grammarly (தமிழுக்கு AI Grammar Assistants) – தமிழ் எழுத்து & தானியங்கி திருத்தம்.

  1. ஈ. AI அடிப்படையிலான தமிழ் மொழிபெயர்ப்பு & விளையாட்டுகள் (AI Translation & Game-based Learning)

  2. 11. Google’s Wordcraft – AI எழுத்து உதவியுடன் தமிழ் கதை வடிவமைப்பு.
    12. Google Lens + AI Translation – தமிழில் உள்ள வார்த்தைகளை விளையாட்டாக மொழிபெயர்த்தல்.3 (Tamilogy- இணையவழிச் செய்தி)

தமிழ் பாடங்களை விளக்கிச் சொல்லுதல், கலந்துரையாடல், நழுவல், வாசித்தல், எழுதுவித்தல் , வரைபடங்களாகக் கொடுத்தல் போன்ற முறைகளில் கரும்பலகையை மட்டுமே பயன்படுத்தி கற்றல் முறை இருந்து வந்தது, பின்னர் கணினித்துறையின் அறிமுகத்தால் Word document, PDF, PPT என கற்பித்தல் ஏறுமுகத்தைக் கண்டது. அடுத்தகட்டமாக கல்வித்துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு தொடங்கியப்பின் Smart Board, Filiped class, Blaned Learning, Gaming என அடுத்தடுத்த வளர்சியினை கண்டுவருகிறது. இவ்வாறன AI கருவிகளை மடிக்கணினி, கணினிகளில் மட்டுமல்லாது எளிமையாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய திறன்பேசிகளின் வழியாகவும் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது.  மின்னஞ்சல் கணக்கு மட்டுமே செயலிகளில் பயனராவதற்குறிய (log in) தேவையாக உள்ளது. AI கருவிகளைப் பயன்படுத்தும் வழிமுறைகள் அந்தந்த செயலிகளின் முகப்பிலேயே பெரும்பாலும் கொடுக்கப்பட்டுள்ளது. யூட்டூப் செயலியின் மூலமாகவும் சமூக வலதளங்களின் மூலமாகவும் இவ்வகையான செயலிகள் விளம்பரபடுத்தப் படுகின்றன. 4 (விக்கிபீடியா- இணையவழிச் செய்தி) இவற்றை இலவசமாகவும் சிலவற்றை கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம்.

நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய கட்டணத்துடனான, கட்டணமில்லா AI கருவிகள். 5 (யூடூப் - இணையவழிச் செய்தி)


வ.

எண்

பயன்பாடு

AI கருவி

கட்டணத்துடன் கூடிய AI  கருவிகள்


கட்டணமில்லா AI  கருவிகள்

1

ஆய்வு (Research)

Minsk, Belarus - 03-27-2023. OpenAI and ChatGPT logo. artifical chatbot ...Breaking Down DeepSeek: Costs, Collaboration, and Global Implications ...

chatGPT

Deepseek

2

படங்கள் உருவாக்கம்

(Images)

Midjourney : découvrez 20 images de design intérieur incroyables ...Ideogram - Is This The Best AI Image Tool in 2025? ????

Midjourney

Ideogram

3

ஒப்படைப்புகள்

(Presentation)

Microsoft PowerPoint logo and symbol, meaning, history, PNGGoogle Slides Logo, symbol, meaning, history, PNG, brand

PowerPoint

Google Slides

4

காட்சிப்பாடங்களை உருவாக்குதல் (Video Generator)

Runway Ai Black Symbol Logo PNGThis New AI Video Tool is Blowing Minds — See How Pika Art is ...

Runway

Pika Art

5

எழுத்துப் பயிற்சி (Writing)

Grammarly Logo, symbol, meaning, history, PNG, brand7 Errors Grammar Checkers Miss

Grammarly

ProWritingAid

6

புதிய உருவாக்கம் (Desing)

Canva Logo PNG Images For Free Download - FreelogopngMicrosoft Announced Designer: A New Design Tool with Generative AI ...

Canva

Microsoft Designer

AI- Gaming கருவிகளின் பயன்பாட்டினால் ஏற்படும் நன்மை தீமைகள்

  • மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும் பங்கேற்பு விகித்ததையும் அதிகப்படுத்துகிறது. 

  1.  பாடங்களைக் கற்பிதல் சுலபமாகிறது.

  2. கற்றல் கற்பித்தல் என்ற இருநிலையாளர்களும் முழு ஈடுபாட்டினை காட்டுவர். அத்தோடு, இருநிலையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான புரிதலும் ஏற்படும்.

  3. அனைவரின் பங்களிப்பும் AI கருவிகளின் திரையினால்  உறுதிசெய்யப்படுகிறது. சலிப்புத்தன்மை ஏற்படாது.

  4. பாடத்தை தாண்டிய புதிய தகவல்களை மாணவர்களிடமிருந்து பெற முடியும்.

  5. மாணவர்களின் எண்ணவேட்டத்தினை எளிதில் அறிந்துகொள்ள முடியும். பாடங்களை திணிக்கும் உணர்வு ஏற்படாது.

  6. புதிய உள்ளடக்கங்களை உருவாக்குதல் (content generation ability)

  7. மொழி மற்றும் கலைகளில் புதிய முயற்சிகளை செய்யலாம்.

  8. படைப்புத்திறன் மேம்படுவதோடு தன்னிச்சையான படைப்பாற்றல் (Creative Freedom) வளரும்.

  9. தொடர் விளையாட்டு அல்லது ஒரே மாதிரியான விளையாட்டு முறை கற்றல்ஆர்வத்தைக் குறைக்கலாம்.

  10. உடல் நலம், மனநலம் பாதிக்கப்படும் அபாயம் உண்டு. இணையப்பயன்பாடு பாதுகாப்பை கேள்விக்குறியாகிறது.

  11.  விளையாட்டுகளை முன்கூட்டியே தயாரிக்க வேண்டியுள்ளாதால் கூடுதல் வேலைப்பளு ஏற்பட வாய்ப்புள்ளது. தானியங்கித் தன்மையால் வேலையிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

  12. விளையாட்டுகளில் பொருத்த முடியாத பாடங்களைப் பயிற்றுவிப்பதில் சிக்கல் ஏற்படும்.

  13. இணைய வசதி இல்லாத கிராமப்புற பகுதிகளும், கல்வி நிலையங்களும் இன்றளவும் உள்ளன.

  14. மனிதர்களுடான தொடர்பைக் குறத்து தனிமையினை அதிகப்படுத்துகிறது.

முடிவுரை

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது மிகவும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாகும். இதனை ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துவதும் அழிவிற்கானதாகப் பயன்படுத்துவதும் நமது கையில்தான் உள்ளது. நாள்தோறும் பலவிதமான AI கருவிகளும், விளையாட்டு கருவிகளும் உருவாக்கப்பட்டு கொண்டே வருகின்றன. அவற்றுள்  கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான நல்ல  கருவிகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு பரிந்துரைக்க வேண்டும். உள்ளீடுகளைப் புரிந்து கொண்டால் கல்வித்துறையில் மீண்டும்  மீண்டும் மறுமலர்சி காணலாம்.

துணை நின்றவை:

  1. 1.பாரதியார் கவிதைகள், பாரதியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை பக்.298

  2. 2.  https://www.futurepedia.io/ai-tools/gaming

  3. 3.  https://www.tamilogy.com/ai-tools-in-tamil/

  4. 4. https://ta.wikipedia.org/s/1l12

  5. 5.  https://youtube.com/shorts/mh0R8xbFdnE?si=cM5bhn1YUPtG7o


Author
கட்டுரையாளர்

முனைவர் மு.அன்பரசி

உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை(சுயநிதிப்பிரிவு)

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி