தமிழ் மின் உள்ளடக்கங்கள்

முனைவர் சி. மாசிலா தேவி and சோ. அனிதா

நெறியாளர் உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம் and முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்

Summary

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் கூற்றுக்கு ஏற்ப அனைத்து ஊர்களிலும் கணினியே உறவினர் ஆகிவிட்டது. மேலும் தமிழ் மொழியில் கணினியின் பயன்பாடு குறித்தும் கணினி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு உறுதுணையாக இருந்துள்ளது என்பற்றைக் குறித்தும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

திறவுச் சொற்கள்: இணையம், கணினி, தொழில்நுட்பம்

முன்னுரை:

கல்லை உரசி நெருப்பை உருவாக்கிய மனிதனுக்கு அதுவே முதல் தொழில்நுட்ப கருவி தன் வாழ்வியல் சார்ந்த தகவல்களைப் பிறர் அறியக் கற்சிற்பங்கள், நாணயங்கள், பாறை ஓவியங்கள், செப்பேடுகள், பனை ஓலைகள், அச்சு ஊடகங்களாக வளர்ச்சி கண்டது. மனித மூளையின் வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கிறது அம்மூளையின் நவீன தொழில்நுட்பத்தில் மலர்ந்ததே கணினியாகும்.

கணினித்தமிழ்:

தமிழ்மொழிக் கணினியில் 1980 ஆம் ஆண்டிலேயே தோன்றிவிட்டது. இந்தக் காலக் கட்டத்தில் தான் தனிமேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக் கணினிகள் தோன்றி விற்பனைக்கு வந்தது. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு மாற்ற முயன்றன. இவைகளும் தமக்கென தனித்தனியான இயங்கு தளங்களைக் கொண்டிருந்தன.

 தமிழில் முதன் முதல் மென்பொருளினைத் தொகுத்து பயன்களைப் பெற முயன்றனர். தமிழ் வல்லுநர்கள் எடுத்த முயற்சிகளின் விளைவாக முதலில் தோன்றிய மென்பொருட்களின் ஓர் ஆவணங்கள் எழுதும் ஆதமி என்பதும் ஒன்றாகும். இது 1984இல் கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீநிவாசன் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தமிழில் எழுதவும் அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய “IBMDOS 2” இயங்கு தளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருள் ஆளு MS WINDOWS இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கப்பட்டு இந்த மென்பொருட்களே தமிழ் வளர்ச்சியில் கணினியின் பங்கை உறுதிப்படுத்தியது.



கணினியில் தமிழ் மொழி  தட்டச்சுப் பலகை:

தமிழ் எழுத்துக்களை ஒருங்குறி முறையில் கணினியில் என்.எச்.எம், அழகி போன்ற மென்பொருள்களின் வழி தட்டச்சு செய்தலும் தட்டச்சுப் பலகை வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும். தமிழில் தட்டச்சுச் செய்வோர் தமிழ் தட்டச்சு முறையிலோ ஆங்கில முறையிலோ தம் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

கணினித் தமிழ்;

1980 களில் தனிமேசைக் கணினிகளின் பயன்பாடுகள்  அதிகரித்த காலத்தில் தான் கணினியில் தமிழின் தேவை உணரப்பட்டது. கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (Operation Commands) கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பாவனைப் பொருள்களும் கணினியின் திறமையைப் பாவித்து சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருட்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம் மென்பொருட்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன. இம்மாதிரியான ஆங்கில மொழியில் இயங்கும் மென்பொருட்களின் பயன்களைத் தமிழ்க் கணினி வல்லுநர்கள் தமிழிலும் பெற முயன்றனர். இதன் பயனாக, தமிழுக்கென விசைப்பலகைகள், ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி, உள்ளீட்டு மென்பொருட்கள், தமிழ் எழுத்துருக்கள் என வேகமாக முன்னேறி இறுதியில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்குறிக் குறியேற்றம் (Unicode encoding) போன்றவற்றால் கணினியில் தமிழ் என்பது சாத்தியமாகியது.

தமிழ் வளர்ச்சியில் கணினியின் பங்கு:


25 ஆண்டுகளுக்கு முன்பு கணினியில் தமிழ் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய முடியாத நிலையிலிருந்து ரோமன் எழுத்துகளில் தமிழை எழுத முடிந்தது. தமிழ் எழுத்துக்களில் மாற்றிக் கொள்ளக்கூடிய வளர்ச்சியும் தமிழ் எழுத்துக்களையே நேரடியாகத் தட்டச்சுச் செய்து கொள்ளக்கூடிய வளர்ச்சியை எட்டியது.

தற்போதைய உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தரமான ஒருங்குறி (Unicode) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இந்த ஒருங்குறி (Unicode) முறை மூலம் பாதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும் பெறவும் மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். ஒருங்குறி முறை (Unicode) தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினிப் பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இன்று ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.

கணினியில் - தமிழ் கலைச்சொல்லாக்கம்:

சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் (Dr. Samuvel Fisk Green) அக்டோபர் - 10, 1822 – மே 28, என்பவர் அமெரிக்காவில் மருத்துவராகவும், கிறிஸ்தவ மத ஊழியராகவும் இருந்தவர். இவர் 1844 – 1872 இடைப்பட்டக் காலத்தில் மேனாட்டு மருத்துவக் கலையை யாழ்ப்பாணத்தில் தமிழிலே வளர்க்கப்படுவதற்கு அச்சாணியாக இருந்து செயற்பட்டவர்.

மருத்துவக் கல்வி, தமிழியற்கல்வி, நூலாக்கம், கலைச் சொல்லாக்கம் எனப் பல்வேறு முயற்சிகளில் வெற்றி பெற்றார். இவரே அறிவியல் சார்ந்த சொற்களைத் தமிழில் கலைச்சொல்லக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கலைச்சொற்களைப் படைத்து கொள்வதின் மூலம் தமிழ் மொழியைப் பல்வேறு தளங்களில் வளர்த்தெடுக்க முடியும் என்ற நோக்கில் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டன. வினை, பண்பு, பெயர், தொழில், அடை என்ற கூறுகளின் அடிப்படையில் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டன. அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் தமிழில் கொண்டுவர தமிழகத்தாரும், புலப்பெயர்ந்தாரும் எண்ணற்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் செயலியும் தமிழ் சமுதாயமும்:

தமிழுக்கான எழுத்துருக்களை மட்டும் உருவாக்கி அதை  தட்டச்சுச் செய்வதோடு கணினித் தமிழ் வளர்ச்சி நிற்கவில்லை. தற்போதைய சூழலில் தமிழ்ச் செயலிகள் மூலமாகத் தமிழை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நகர்த்தி கொண்டு இருக்கிறோம். இருந்த போதிலும் தமிழுக்கான செயலி வடிவமைப்பில் தமிழ்ச் சமுதாயமும் தமிழ் மற்றும் கணினி வல்லுநர்களும் இன்றளவில் ஓர் ஆரம்ப நிலையையே எட்டி உள்ளனர்.

இரா. சண்முகம் என்ற கணினி வல்லுநர் கணினி தொழில்நுட்பத்தில் தமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கூறும்போது தமிழ்ச் சங்க இலக்கியத்திற்கென நம்மிடம் எத்தனை கருவிகள் உள்ளன என்றும், சங்க இலக்கியச் சொற்களுக்கென நம்மிடம் தனிப்பட்ட இணைய அகராதி, ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு, சொல்லடைவு, தொடரமைவு, உரையாசிரியர் வழி பொருள் விளக்கம், மொழிபெயர்ப்பு எனப் பல்வேறு வசதிகள் உள்ளதா என்றும்  வினவியுள்ளார். மேலும் தமிழ் அறிஞர்களின் இலக்கியத் திறனாய்வை மேம்படுத்தி அவர்களுக்கு மட்டுமின்றி தமிழ்ச் சமுதாயத்திற்குத் தேவையான மென்பொருள்கள் உருவாக்கினால், அது தமிழில் பல சிறந்த படைப்புக்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை எனவும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளார்.

பெரும்பாலும் தமிழ் இணையமும் செயலியும் நவீன இலகத்தியத்தின் வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றுகின்றன. ஏனெனில் ஆசியா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் பரந்து இருக்கும் பல தமிழ் மக்களையும் அறிஞர்களையும் வல்லுநர்களையும் ஒருங்கிணைப்பதில் தமிழ் இணையம் மட்டுமின்றி செலிகளும் பெரும்பங்கு ஆற்றுகின்றன.

முடிவுரை:

இக்கட்டுரையின் மூலம் தமிழ் எழுத்துருக்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி தொடக்க காலம் முதல் இன்றைய காலக்கட்டம் வரை எவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது என்பதை நம்மால் அறிய முடிகின்றது. இவ்வாறு உருவாக்கப்பட்ட தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சி இன்றைய கணினி, கைப்பேசி, திறன்பேசி உள்ளிட்ட கருவிகளில் இடம்பெற்று உலகெங்கும் ஒரு குடையின் கீழ் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்ப் பேசுபவர்களின் தொடர்பு எல்லை இந்த உலகம் எங்கும் பரவி நிற்கிறது. இவற்றிற்கு எல்லாம் அடிப்படையாக உள்ளது எழுத்துரு. கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகளைத் தமிழ் மொழிச் சார்ந்து பயன்படுத்த வேண்டும். இதற்கு அடிப்படையாகத் தரவுகளைத் திரட்டுதல், சேமித்தல், பரப்புதல், கண்டெடுத்துக் கொணர்தல் ஆகியவற்றின் அடிப்படைக் களங்கள் முழுமையாகத் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

துணைநூற்பட்டியல்:

  1. http://www.tamilvu.org/

  2. துரை மணிகண்டன் - த.வானதி தமிழ்க்கணினி இணையப் 

  3. பயன்பாடுகள், கமலினி பதிப்பகம், இ.பதிப்பு 2016.

  4. தமிழ் விக்கிப்பீடியா வலைத்தளங்கள்

  5. இராதா செல்லப்பன் - கலைச்சொல்லியல், தாமரை பப்ளிகேஷன், ஏ.இ.5 (103) அண்ணாநகர், 

சென்னை – 40

  1. ச.பாஸ்கரன் 2004, தமிழில் கணிப்பொறியியல், கணிப்பொறியில் தமிழ், உமா பதிப்பகம், தஞ்சாவூர்

Author
கட்டுரையாளர்

முனைவர் சி. மாசிலா தேவி and சோ. அனிதா

நெறியாளர் உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம் and முனைவர் பட்ட ஆய்வாளர்,

ஜி.டி.என் கலைக்கல்லூரி (தன்னாட்சி), திண்டுக்கல்