தமிழ் மொழி வளர்ச்சியில் மென்பொருட்களின் பங்கு

முனைவர் ஜெ.சவிதா

உதவிப் பேராசிரியர்

ஜி.டி.என்.கலைக்கல்லூரி,

திண்டுக்கல் - 5.

Summary

அறிவியல் உலகில் மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய அரிய கண்டுபிடிப்பு கணினி. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கணினியே ஆகும். மனிதனின் மூளையைப் போன்று அதிவேக நுண்ணறிவுடன் செயல்படக்கூடியது. இன்றைய உலகில் எல்லா துறைகளிலும் கணினியின் தேவை இன்றியமையாதது. கணினி இல்லையென்றால். இந்த உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது கணினியில் ஏராளமான உலக மொழிகள் மிக எளிதாக செயல்படும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்திய மொழிகளுள் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளுள் ஒன்றுமான நமது தமிழ்மொழியும் கணினி தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளது. கணினி தொழில் நுட்பம் என்ற டிஜிட்டல் டெக்னாலஜி பயன்படுத்துகின்ற பல்வேறு தளங்களிலும் தேவையான வடிவங்களில் தமிழ் மொழியும் மாற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

முன்னுரை:
அறிவியல் உலகில் மனிதன் கண்டுபிடித்த மிகப் பெரிய அரிய கண்டுபிடிப்பு கணினி. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது கணினியே ஆகும். மனிதனின் மூளையைப் போன்று அதிவேக நுண்ணறிவுடன் செயல்படக்கூடியது. இன்றைய உலகில் எல்லா துறைகளிலும் கணினியின் தேவை இன்றியமையாதது. கணினி இல்லையென்றால். இந்த உலகம் இயங்காது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது கணினியில் ஏராளமான உலக மொழிகள் மிக எளிதாக செயல்படும் அளவிற்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இந்திய மொழிகளுள் ஒன்றும் உலகளவிலான ஆறு செம்மொழிகளுள் ஒன்றுமான நமது தமிழ்மொழியும் கணினி தொழில்நுட்பத்தில் தனக்கான இடத்தைப் பெற்றுள்ளது. கணினி தொழில் நுட்பம் என்ற டிஜிட்டல் டெக்னாலஜி பயன்படுத்துகின்ற பல்வேறு தளங்களிலும் தேவையான வடிவங்களில் தமிழ் மொழியும் மாற்றம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

கணினியின் தோற்றம் வளர்ச்சி:
அறிவியல் வளர்ச்சியால் உலகம் செயல்பட முக்கிய காரணம் கணினி. அத்தகைய கணினியானது 1833 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த சார்லஸ் பாபேஜ் என்பவரால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தான் கணினியின் தந்தை என்று போற்றப்படும் பெருமைக்கு உரியவர். முதன் முதலில் 1946 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ENIAC (Electronic Numerical Integrator and Computer) என்ற கணினி தான் உலகின் முதல் பயன்பாட்டுக் கணினியாகும். இது பிரம்மாண்டமான கணினி ஆகும். இது 27,000 கிலோ கிராமுக்கு மேல் எடை கொண்டது. அபேக்ஸ் எனப்படும் சீனர்களின் அறிவியல் சாதனம் தான் கணினியின் முன்னோடி என்று சொல்லப்படுகிறது. அதுபோல 1824 ஆம் ஆண்டு டாக்டர் ஆலன் எம் டூரிங் என்பவர் மின்னணுக் கணினியைக் கண்டுபிடித்தார். மேலும் தற்போது பயன்படுத்தி வரும் கணினியை ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஹோவன்ட் என்பவர் தான் கண்டுபிடித்தார். ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகளான "லேடி லவ்வேஸ்" என்பவர் கணிதச் செயல்பாட்டிற்குத் தேவையான கட்டளைகளை வடிவமைத்தமையால் முதல் செயல் திட்ட வரைவாளர் எனப் போற்றப்படுகிறார். ஆரம்ப காலத்தில் இருந்தே கணினியானது காலத்திற்கேற்ப பல வடிவங்களை பெற்றுக் கொண்டே வருகின்றது. இன்றைய நிலையில் கணினிகள் பல அளவுகளிலும் பல திறன்களிலும் தயாரிக்கப்படுகின்றன. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக கணினியில் பல புதிய அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று கணினிகள் பல வகைகளில்வடிவமைக்கப்படுகின்றன. மேசைக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, பணி நிலையக் கணினி என்று பல வகைகள் உள்ளன. தற்போது அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் மீத்திறன் கணினியை உருவாக்கி சாதனை படைக்க முயற்சித்து வருகின்றன. 

கணினி தொழில் நுட்பத்தின் பயன்பாடுகள்:
நம் அன்றாட வாழ்வில் கணினி இன்றியமையாத சாதனமாக செயல்பட்டு வருகிறது. வணிகம், அறிவியல், கல்வி, போக்குவரத்து, பாதுகாப்பு, மருத்துவம், தொலைத்தொடர்பு, மற்றும் விண்வெளி போன்ற பல துறைகளிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பேருந்து நிலையங்கள், வங்கிகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இடங்களிலும் கணினியின் ஆட்சி நிலவுகின்றது. உடனுக்குடன் தகவல்களை பரிமாறவும்;, பெறவும் கணினி பயன்படுத்தப்படுகின்றது. வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தொழில் சார்ந்து பொருளாதரத்தை மேம்படுத்தவும் அலுவலங்களில் தேவையான முக்கிய விவரங்களைச் சேர்த்து வைக்கவும் பாதுகாக்கவும் கணினி பயன்படுகின்றது. இணையதளம் மூலம் நாம் அனைத்துத் துறை சார்ந்த செய்திகளை பெறுவதற்கும், அந்த செய்திகளை அழியாமல் சேமித்து வைப்பதற்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் பயன்படுகின்றது.

கணினியில் தமிழ் மொழி:
மனிதனின் மூளையால் கண்டுபிடிக்கப்பட்ட கணினி மனிதனின் மூளையையும் விஞ்சிவிட்டது. 1983 ஆம் ஆண்டு தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர். "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்திடல் வேண்டும்" என்ற பாரதியின் கனவை இன்று 'கணினி' நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. கல்வெட்டுகளில் எழுதப்பட்டு வந்த தமிழ் கணிப்பொறிகளில் எழுதப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கல்லிலிருந்து ஓலைக்குத்தாவி, அங்கிருந்து காகிதங்களுக்கு தாவிய தமிழ் இப்போது கணினிக்குள் நுழைந்திருப்பது தமிழ் வளர்ச்சியின் அடுத்த நிலையாகும். இணையத்தின் வழிவகையடகக் கணினியால் தமிழரின் இணைப் இணைத்துவிடுகிறது.

தமிழில் மென்பொருள்:
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கணினியில் தமிழை உள்ளீடு செய்வதற்கான வசதிகளே கிடையாது. தமிழ் எழுத்துருக்க விசைப்பலகைகள் உருவாக்கப்படவில்லை. தமிழ் உரையை ரோமன் எழுத்துகளில் உள்ளீடு செய்து, அதைத் தமிழ் எழுத்துருக்களில் மாற்றும் வசதி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று தமிழ் எழுத்துகளில் மாற்றிக் கொள்ளக் கூடிய வளர்ச்சியும் தமிழ் எழுத்துகளையே நேரடியாக தட்டச்சு செய்து கொள்ளக்கூடிய வளர்ச்சியை எட்டியது. தற்போது உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகு தரமான யூனிகோடு (ருniஉழனந) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இந்த யூனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும் பெறவும் மின்னஞ்சல்களை எளிதாக அனுப்பவும் முடியும். யூனிகோடு முறை என்பது தமிழ் இணையப் பயன்பாட்டில் மிகச்சிறந்த வளர்ச்சியாகும். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச்சிறந்த மாற்றத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

 1984 ஆம் ஆண்டு கனடாவில் வாழும் முனைவர் ஸ்ரீனிவாசன் என்பவரால் தமிழில் முதன் முதலில் மென்பொருள்களில் ஆவணங்கள் எழுதும் ஆதமி (யுனயஅi) உருவாக்கப்பட்டது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக 'ஆதவின்' என்ற மென்பொருளும் ஆளு றுனெழறள இயங்கு தளத்தில் பயன்படக்கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. தமிழ்த் தட்டச்சுப்பலகை தமிழ் எழுத்துகளை ஒருங்குறிமுறையில் கணினியில் என்.எச்.எம்., அழகி போன்ற மென்பொருட்களின் வழி தட்டச்சு செய்தாலும், தட்டச்சுப் பலகை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். தமிழில் தட்டச்சு செய்வோர் தமிழ்த் தட்டச்சு முறையிலோ, தமிழ்ஆங்கில முறையிலோ, ஆங்கில முறையிலோ தம் கருத்துகளை வெளியிடுகின்றனர். அதற்கேற்ப அரசே தமிழ் தட்டச்சுப் பலகைகள் வெளியிட ஆவணச் செய்ய வேண்டும்

தமிழ் தட்டச்சு இடைமுக மென்பொருள்:
கணிப்பொறியை பயன்படுத்தி சொற்செயலிகளில் ஆவணங்களை தட்டச்சு செய்யவும்,இணையத்தின் வழியே தகவல்களை தேடவும், பெறவும் மட்டுமே தமிழ் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. கணிப்பொறியில் தமிழில் தட்டச்சு செய்ய பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில், தமிழ் இடைமுக மென்பொருட்களை பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறை தற்போது மிகவும் பிரபலமான ஒன்றாகும். கணிப்பொறிகள் மட்டுமின்றி கைப்பேசிகளிலும், இம்முறையில் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும். 

பிரபலமான தமிழ் இடைமுக விசைப்பலகைகள்:
NHM Writer, e-கலப்பை மற்றும் லிப்பிகார் போன்றவை ஆங்கில ஒலியியல் முறையில் தமிழ் யுனிகோட், தமிழ் 99 போன்ற தட்டச்சு முறையில் வேலை செய்யும் தமிழ் விசைப் பலகை இடைமுக மென்பொருட்கள் ஆகும்.
செல்லினம் மற்றும் பொன்மடல் கைப்பேசிகளில், ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இயக்க அமைப்பில், ஆங்கில ஒலியியல் முறையில் பயன்படுத்தப்படும் இடைமுக விசைப்பலகை மென்பொருட்கள் ஆகும்.

பிரபலமான அலுவகை மென்பொருட்களான மைக்ரோசாப்ட் ஆர்ஃபிஸ், ஒபன் ஆஃபீஸ் போன்றவை தமிழில் பயன்படுத்தும் வகையில் தமிழ் ,டைமுக வசதியை வழங்குகிறது. ,வ்வசதிகளை ,ணையத்தின் பதிவிறக்கம் செய்து, நிறுவிக் கொள்ள முடியும். தமிழ்,டைமுகம் நிறுவப்பெற்றபின்னர், அலுவலக மென்பொருட்களின் (மைக்ரோசாப்ட் ஆஃபீஸ், ஒபன் ஆஃபீஸ்) பட்டிப்பட்டை, குறும்படங்களின் பெயர்கள் போன்ற அனைத்தும் தமிழில் தோன்றும்,மேலும், கோப்புகள் மற்றும் கோப்புரைகளின் பெயர்களை  தமிழிலேயே உருவாக்க முடியும்,
இவை மட்டுமின்றி, முழுவதும் தமிழிலேயே இயங்கும் அலுவலக மென்பொருட்களும் பயன்பாட்டில் உள்ளது. அவற்றில் தமிழ் லிபரே ஆஃபீஸ், தமிழ் ஒபன் ஆஃபீஸ், அழகி யுனிகோட் எடிட்டர், பொன்மொழி, மென்தமிழ், கம்பன், வாணி போன்ற அலுவலக மென்பொருட்கள் முழுவதும் தமிழில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி பெயர்ப்பு பயன்பாடுகள்:
"தமிழ்பொறி " என்ற மென்பொருள், சுமார் 30000 க்கும் அதிகமான ஆங்கில சொற்களுக்கு ஈடான தமிழ் சொற்களை உள்ளடக்கிது. ,தன் மூலம், சிறிய ஆங்கில சொற்றொடர்களுக்கு ,ணையான தமிழ் மொழி பெயர்ப்பை பெறலாம்.
மேலும், கூகுள் நிறுவனம், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கும் மொழிபெயர்ப்பு நிகழ்நேர பயன்பாட்டை வழங்கிவருகின்றது.
கணிப்பொறி மற்றும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் மென்பொருட்களை வடிவமைக்க பயன்படும் நிரலாக்க மொழிகள் இதுவரை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்துவந்த நிலையில், தமிழிலும், நிரலாக்க மொழி வடிவமைக்கும் முயற்சிகள் அதனடிப்படையில், நடைபெற்றுவருகின்றன. பைத்தான் நிரலாக்க மொழியை அடிப்படையாக கொண்டு, முதல் தமிழ் நிரலாக்க மொழி "எழில் "வடிவகைக்கப்பட்டுள்ளது. இந்த நிரலாக்க மொழியை பயன்படுத்தி, சிறிய அளவிலான நிரல்களை தமிழிலேயே எழுதமுடியும்.

தகவல் பரிமாற்றத்திற்கான தமிழ் குறியீட்டு முறை:
TSCII (Tamil Script Code for Information Interchange)
கணிப்பொறி இருநிலை அடிப்படையாக கொண்டது கணிப்பொறியில் உள்ளிடப்படும் எண்களை எனவும், தரவுகள் இருநிலை எண்களாக மாற்றப்படும் என்பதையும், இந்த பாடப் புத்தகத்தின் முதல் அலகில் கற்றீர்கள். கணிப்பொறியில் கொடுக்கப்படும் தரவுகளும், தகவல்களும் கையாள ASCII என்ற குறியீட்டு முறை பயன்படுத்தப்பட்டு வந்தது.இந்த குறியீட்டு முறை ஆங்கில மொழியை மட்டுமே கையாளும் திறன் பெற்றது. எனவே, ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளை கணிப்பொறி உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் எளிதில் கையாள பொருத்தமான ஒரு குறியீட்டு முறை பற்றிய ஆய்வில், நமது தமிழ் மொழியை கையாள உருவாக்கப்பட்ட முதல் குறியீட்டு முறை TSCII (Tamil Script Code for Information Interchange)) என்பதாகும். இந்த குறியீட்டு முறை 2007 , ICANN- IANA (Internet Assigned Numbers Authority)  செய்யப்பட்டது. இந்த குறியீட்டு முறை தழுவியே தமிழுக்கான Unicode முறையும் வடிவமைக்கப்பட்டது. 
தகவல் பரிமாற்றத்திற்கான இந்திய குறியீட்டு முறை

ISCII (Indian Script Code for Information Interchange):
இந்திய மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை. இந்த முறையை ஒருங்குறி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒருங்குறி (Unicode):
தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு குறியீட்டு முறை தான் ஒருங்குறி என்று அழைக்கப்படும் யுனிகோட் இதன் முதல் பதிப்பான யுனிகோட் 1.0.0 என்பது அக்டோபர் 1991ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்ட போது, தமிழ் உள்ளிட்ட 23 மொழிகளை கையாளும் திறன் பெற்றிருந்தது. தமிழை கையாள பல குறியீட்டு முறைகள் இருப்பினும், இன்று ஒருங்குறியே சிறந்த ஒன்றாக திகழ்கிறது.

தமிழ் இயக்க அமைப்புகள்:
கணிப்பொறி அல்லது ஸ்மார்ட் கைப்பேசி போன்ற மின்னணு சாதனங்களை இயக்க ஏதேனும் ஒரு இயக்க அமைப்பு வேண்டும். தனியாள் கணிப்பொறிகளில் மிகப்பிரலமான இயக்க அமைப்பு மைக்ரோசாப் நிறுவனத்தின், விண்டோஸ் ஆகும். விண்டோஸ் இயக்க அமைப்புக்கு அடுத்த இடத்தில், திறந்த மூல இயக்க அமைப்பான லினக்ஸ் உள்ளது.
ஒரு கணிப்பொறியை எளிதில் இயக்க இயக்க அமைப்பு பயன்படுகிறது. ஒரு இயக்க அமைப்பு பயன்படுத்துவதற்கு எளிதாகவும், பயன்படுத்துவோர் புரிந்துகொள்ளும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற வகையில், கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் விண்டோஸ், விளக்ஸ் போன்ற இயக்க அமைப்புகளையும், ஸ்மார்ட் போன்களில் பரவலாக பயன்படுத்தப்படும் ஆண்டிராய்டு இயக்க அமைப்பும் தமிழ் மொயில் வழங்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் இயக்க அமைப்பின் பணிப்பட்டை, திரை முகப்பு, பணிக்குறிகள், கட்டளைகள் அனைத்தும் தமிழிலேயே காணக் கிடைக்கும், விண்டோஸ்-ன் தமிழ் இடைமுக வசதி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, நிறுவிக்கொள்ளலாம்.

தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும், திட்டங்களும்:
தமிழ் இணையக் கல்விக்கழகம்:
தமிழை உலகெங்கிலும் இணையத்தின் வழியே கொண்டு சேர்க்கும் நோக்குடன், 2001ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் நாளில், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், தமிழக அரசால் தொடங்கப்பட்டது. தற்போது தமிழ் இணையக் கல்விக் கழகம் என்ற பெரியில் செயல்பட்டு வரும் இந்திறுவனம் இணையத்தின் வழியை தமிழ் மொழி, தமிழர் கலாச்சாரம், பண்பாடு போன்றவை உலகெங்கிலும் வாழும் மக்களுக்கு வழங்குவதற்காக, மழலையர் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
இணைய முகவரி: http://www.tamilvu.org/ index.php

வளர் தமிழ் இயக்கம், சிங்கப்புர்:
சிங்கப்பூரில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, வயதினரையும் அனைத்து தமிழால் ஒன்றிணைத்து, சிங்கப்பூரில் தமிழ்மொழியை ஓங்கச் செய்யும் நோக்கத்துடன் 2001ம் ஆண்டில், சிங்கப்பூர் தகவல் கலை அமைச்சகத்தின் மேற்பார்வையில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
இணைய முகவரி: http://tamil.org.sg/ta 

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்;
தமிழில் உள்ள அனைத்து நூல்களையும் இணையத்தில் மின்னணு வடிவி வெளியிடுவதற்கான ஒரு தன்னார்வ அரசு சா திட்டம் ஆகும்.அதாவது தட்டச்சு செய்தல், பழை புத்தகங்களை ஸ்கேன் செய்தல் மற்று அணைத்து பிரபலமான மான கணினிகளிளு பயன்படுத்துவதற்காக எளிதில் அணுகக்கூ வடிவங்கள் ஒன்றில் உரையை காப்பகப்படுத்துக போன்றவை ஆகும். இத்திட்டத்தின் மூலம் 199 ஆண்டு முதல், இது வரை தமிழில் வெளிவந்துள்ள அனைத்து நூல்களையும் இணையத்தில் ஏற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 2004 முதல் தமிழ் ஒருங்குறியிலும் இணைய புத்தகங்கள் வெளியிடுவது தொடங்கப் பட்டது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் தன்னலமற்ற முயற்சியால் இத்திட்டத்தில் இதுவரை பல நூல்கள் இணைய வெளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இணைய முகவரி : http://www.projectmadurai.org/

தமிழ் விக்கிபீடியா:
விக்கிபீடியா ஒரு திறந்த நிலை களஞ்சியமாகும். விக்கிபீடியாவில் எவரும், எந்த தலைப்பிலும் கட்டுரைகளை எழுதலாம். தமிழ் விக்கிபீடியா தமிழில் ஒரு இலட்சத்திற்கும் மேலான கட்டுரைகளை உள்ளடக்கிய ஒரு மிகப் பெரிய கலைக் களஞ்சியமாகும்.
இணைய முகவரி: https:// ta.wikipedia.org/
தமிழை, வாழும் மொழியாக்க வேண்டுமெனில், தொழில்நுட்பத்தில் வளர்ச்சியில், தமிழை பங்குபெற செய்ய வேண்டியது தமிழராகிய நமது கடமை, தனது இனத்தின் மதிப்புகளை மறந்தவர்,"நோமட்ஸ்" (ழெ அயனநள) நாம் எத்தனை பெரிய தொழிநுட்பங்களை கற்றாலும், அதனுள் நமது இனத்தின் அடையாளமான தமிழை கொண்டு சேர்க்க வேண்டும். உலகின் முதல் மொழி, மூத்த மொழி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் வாழும் மொழியை, கணினி தொழில்நுட்பத்துடன் இணைப்பது நமது கடமை.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்:
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் (செம்மொழித் தமிழாய்வு) தமிழ் மொழியின் ஆழமான ஆய்வுக்கும், அதன் வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றும் ஒரு முக்கியமான நிறுவனம். இந்த நிறுவனத்தில் கணினிகள் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு, தமிழ் மொழியின் ஆய்வு மற்றும் பாதுகாப்புக்கு பெரிதும் உதவுகின்றன.

செம்மொழித் தமிழாய்வின் கணினி பயன்பாடுகளின் சில முக்கிய அம்சங்கள்:

 * தமிழ் மொழி கார்பஸ் உருவாக்கம்:
 பழைய இலக்கியங்கள், கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றிலிருந்து பெரிய அளவிலான தரவுகளை சேகரித்து, ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுத்தளமாக மாற்றுவது. இது மேலதிக ஆய்வுகளுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளிக்கிறது.

 * தமிழ் மொழி பகுப்பாய்வு: 
இயற்கை மொழி செயலாக்கம் (NLP) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தமிழ் மொழியின் இலக்கணம், சொல்லாடல், பொருள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இது மொழிபெயர்ப்பு, இயந்திர மொழிபெயர்ப்பு, உணர்வு பகுப்பாய்வு போன்ற பயன்பாடுகளுக்கு உதவுகிறது.

 * தமிழ் மொழி கருவிகள் உருவாக்கம்:
 தமிழ் மொழியில் எழுதுதல், திருத்தம் செய்தல், மொழிபெயர்ப்பு செய்தல் போன்றவற்றுக்கு உதவும் கணினி கருவிகள் உருவாக்குதல். இதில் தமிழ் மொழி உள்ளீட்டு முறைகள், தமிழ் சொற்களஞ்சியம், தமிழ் மொழி சரிபார்ப்பு கருவிகள் போன்றவை அடங்கும்.

 * தமிழ் மொழி கற்பித்தல்:
 கணினி அடிப்படையிலான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தி தமிழ் மொழியை கற்பித்தல். இதில் ஆன்லைன் கற்பித்தல் தளங்கள், மொழி கற்றல் பயன்பாடுகள் போன்றவை அடங்கும்.

 * தமிழ் இலக்கிய ஆய்வு: 
பழைய இலக்கியங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, அவற்றைத் தேடுதல், ஒப்பீடு செய்தல் போன்ற பணிகளை எளிதாக்குதல். இது இலக்கிய ஆய்வாளர்களுக்கு ஒரு வலுவான கருவி ஆக செயல்படுகிறது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற ஒரு முன்னணி ஆய்வு மையத்தில், கணினிகள் மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கின்றன. தமிழின் பல்வேறு அம்சங்களை ஆழமாக ஆராய்ந்து புரிந்துகொள்ளவும், அதை எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாக்கவும் கணினிகள் உதவுகின்றன.

கணினிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன?
 * தரவு சேமிப்பு மற்றும் மேலாண்மை: 
பண்டைய தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், கையெழுத்துப் பிரதிகள் போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் சேமித்து, பாதுகாக்கின்றனர்.ஆராய்ச்சி கட்டுரைகள், தரவுத்தளங்கள், ஆவணங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்து, எளிதாக அணுகுவதற்கான வசதிகளை செய்கின்றனர்.

 * மொழி பகுப்பாய்வு: 
தமிழ் மொழியின் இலக்கணம், சொல்லாடல், பொருள் ஆகியவற்றை கணினி நிரல்களைப் பயன்படுத்தி ஆராய்கின்றனர். மொழிபெயர்ப்பு, மொழி உருவாக்கம் போன்ற பணிகளில் கணினி உதவியைப் பெறுகின்றனர்.

 * தரவு பகுப்பாய்வு: 
பெரிய அளவிலான தரவுகளை (உதாரணமாக, இலக்கியப் படைப்புகள், கல்வெட்டுகள்) பகுப்பாய்வு செய்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனர். புள்ளியியல் கருவிகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி முடிவுகளை நிரூபிக்கின்றனர்.

 * வெளியீடு: 
ஆராய்ச்சி கட்டுரைகள், புத்தகங்கள், இதழ்கள் போன்றவற்றை எளிதாக வெளியிடவும், பரவலாக்கவும் கணினிகள் உதவுகின்றன.

 *தொடர்பு: 
உலகெங்கிலும் உள்ள தமிழறிஞர்களுடன் தொடர்பு கொண்டு, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கணினிகள் பயன்படுகின்றன. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் சில கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள்

 * மொழி செயலாக்க மென்பொருட்கள்: 
தமிழ் மொழியை கையாளும் திறன் கொண்ட மென்பொருட்கள் (உதாரணமாக, தமிழ் ஓட்டோகிராஃப், தமிழ் வார்த்தைச் செயலி)

தரவுத்தளங்கள்: 
ஆராய்ச்சி தரவுகளை சேமித்து, நிர்வகிக்கப் பயன்படும் தரவுத்தளங்கள்

புள்ளியியல் கருவிகள்: 
தரவுகளை பகுப்பாய்வு செய்யப் பயன்படும் புள்ளியியல் கருவிகள 
(உதாரணமாக, SPSS, R)

இணையதளங்கள்: 
நிறுவனத்தின் செயல்பாடுகளை பரவலாக்கவும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் இணையதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?
செயற்கை நுண்ணறிவு: 
தமிழ் மொழி பகுப்பாய்வு, மொழிபெயர்ப்பு போன்ற பணிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இன்னும் விரிவாகப் பயன்படுத்தப்படும்.
பெரிய தரவு:
 பெரிய அளவிலான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும்.
கொடுமுடி மொழியியல்: 
தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி, பரவல் போன்றவற்றை கணினி உதவியுடன் ஆழமாக ஆராய முடியும்.

சிக்கல்களும் தீர்வுகளும்
பொதுவாக தமிழ் உயராய்வு மையங்களின் கணினியின் செயல்பாடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் மொழியியல் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தமிழ் மொழியினை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் மிக குறைவாக செயல்படுகிறது. உயராய்வு மையங்களில் நடத்தப்படும் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் தமிழ் இலக்கியங்கள் சார்ந்ததாக உள்ளதே தவிர தமிழ் மொழியின் அடுத்தக்கட்ட நகர்விற்கு வழிவகுப்பதில்லை. இந்நிலையினை மாற்றும் பொருட்டு அனைத்து மாணவர்களுக்கும் கணினித்தமிழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வண்ணம் கணித்தமிழ் சார்ந்த விழாக்கள் நடத்துதல், தமிழ்த் தரவுத்தளங்களைக் கொண்டு புதிய புதிய செயல்திட்டங்களை உருவாக்குதல், போட்டிகள் நடத்துதல், கணித்தமிழ் வளர்ச்சியில் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளோடு உரையாடல் மேற்கொள்ளுதல், பேரவைக் கூட்டங்கள் மற்றும் கணித்தமிழ் ஆய்வுக்கூடங்கள் நிறுவுதல் போன்ற செயல்களை செயல்படுத்துதல் வேண்டும். 

தமிழ் மொழியை கணினியில் பயன்படுவதற்கான மென்பொருட்களை உருவாக்கி அவற்றை மேம்படுத்துவதற்கான உத்திகளை உருவாக்க வேண்டும். தமிழ் மொழியில் உள்ள பழமையான நூல்களை டிஜிட்டல் வடிவில் மாற்ற முயற்சி செய்தல் தமிழ் மொழிக்கான தரவுத்தளங்களை உருவாக்கி பராமரித்தல் போன்றவற்றை உருவாக்குதல் வேண்டும்.
தமிழ் சொல் தேடல், தொடரியல் பகுப்பாய்வு போன்ற ஆராய்ச்சி கருவிகளை உருவாக்குதல். ஆராய்ச்சி தரவுகளை பகுப்பாய்வு செய்யும் கருவிகளை உருவாக்குதல்.ஆன்லைன் தமிழ் கற்பித்தல் தளங்களை உருவாக்குதல். தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு தேவையான தகவல்களை விரைவாகக் கண்டுபிடிக்க உதவும் கருவிகளை உருவாக்குதல் போன்ற இத்தகைய பணியினை ஆசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் கணினி ஆசிரியர்களின் துணையோடு பல சிறப்பான மென் பொருட்களை உருவாக்கி தமிழ் மொழியினை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல முடியும்.

முடிவுரை:
கணினி சார் தொழில் நுட்பத்தில் தமிழ் மொழியானது ஈடு இணையில்லா அந்தஸ்தைப் பெற்று வேகமாக வளர்ந்து வருகின்றது. தமிழ் மொழிக்கு என்று மென்பொருள் உருவாக்கப்பட்டு அதன் வழியே செய்திகளை உலகமெங்கும் பரப்பி வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டினை பரப்புவதற்குரிய ஒரு கருவியாக கணினியும் இணையமும் செயல்பட்டு வருகின்றது என்றால் அது மிகையாகாது என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது.

துணைநூற் பட்டியல்:
1. தகவல் தொழில்நுட்பம், புனிதா-2016, சென்னை.
2. தமிழ்க்கணினி-இணைய பயன்பாடுகள்-துரை.மணிகண்டன்.
3. http://aclanthology.org/2021.acl-demo.3/
Author
கட்டுரையாளர்

முனைவர் ஜெ.சவிதா

உதவிப் பேராசிரியர்

ஜி.டி.என்.கலைக்கல்லூரி,

திண்டுக்கல் - 5.