தமிழ்மொழி வளர்ச்சியில் கூகுள் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் பங்களிப்பு
- 2025
- கட்டுரை
- By முனைவர் ந. பிரதீபா
முனைவர் ந. பிரதீபா
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர்
Summary
In today's machine-driven world, the role of machines in our lives is very important. One of the most important of these is artificial intelligence, the pinnacle of science in the advanced development of computers. Modern computer science researchers are constantly discovering what is needed in every field that is connected to humans. They are investigating various tools and which one works best, considering factors such as its usability, speed, and cost of development. Artificial intelligence manufacturing companies are introducing many artificial intelligence tools in competition. This article aims to examine the contribution of these tools to the Tamil language
முன்னுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கிய வளத்தினை கொண்டுள்ள தமிழ் மொழி செயற்கை நுண்ணறிவு என்னும் புதிய அணுகுமுறை மூலம் சிறக்க முன்னெடுப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. தமிழ் மொழியை பல நிலைகளில் பரவலாக்கிடவும், சமகாலத்தில் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு என்னும் கணினி தொழில்நுட்பம் பயன்படுகிறது. தமிழ் மொழியின் செவ்வியல் பண்புகளை மேலும் அறிந்து கொள்ளவும், உலகம் முழுமைக்கு பரவலாக்கிடவும் இந்த தொழில்நுட்பம் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆயினும் தற்போதைய நிலை என்பது தொடக்க நிலைக்கு அடுத்த வளர்நிலையில் இருப்பதால் மொழி வளர்ச்சி என்பதில் இயங்கு நிலை மற்றும் செயற்தன்மை குறித்த ஆய்வானது அவசியமாகின்றது.
கூகுளின் தயாரிப்புகளான செயற்கை நுண்ணறிவு கருவிகள் கற்றல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சவாலான சிக்கல்களைத் தீர்க்கவும் இயந்திரக் கற்றலுக்கும் உதவுகின்றது. கூகுள் சிறந்ததொரு தேடலுக்கும், புகைப்படங்கள் சேகரிப்புக்கும், மொழிபெயர்க்கவும், ,ஆவணப்படுத்தவும், ஒலிப்பெயர்க்கவும், குறிப்பெடுக்கவும், குரல் உள்ளீட்டு உருவாக்கவும், நிழற்படம் தயாரிக்கவும், காணொளி உருவாக்கவும், கணினிமொழி குறியீடு கற்க்கவும் என பல்வேறு வகைகளில் கற்றலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. கூகுள் பல மொழிகளில் சேவையை வழங்குவது போல தமிழ் மொழிக்கும் பல அளப்பரிய சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு தமிழை எவ்வாறு கற்பிக்க முடியும் என்பதை பற்றி ஆராய்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும். இவ்வாய்வானது கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவிகளான கூகுள் ஏஐ ஸ்டுடியோ (Google AI Studio), கூகுள் நோட்புக் LM(Google notebook LM) பற்றியும் விரித்துரைக்கின்றது.
கூகுள் ஏஐ ஸ்டுடியோ (Google AI Studio) ;
கூகுள் ஏஐ ஸ்டுடியோவில் நான்கு படிநிலைகள் உள்ளன.
Chat Stream Generate Media Build
கூகுள் ஏஐ ஸ்டுடியோ செயற்கை நுண்ணறிவைக் கொண்டு chat செய்தல், படம் உருவாக்குதல், காணொளி உருவாக்குதல், வலைதளம் உருவாக்குதல், கணினி மொழிக்கான குறியீடு கற்றல் போன்றவற்றை விரிவாகவும் நுட்பமாகவும் கற்றுத்தரும் செயற்கை நுண்ணறிவு கருவி தான் கூகுள் ஏஐ ஸ்டுடியோ என்பதாகும். இது மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்நுட்பவல்லுநர்கள், வியாபாரதளத்தில் இருப்பவர் என அனைவருக்கும் பயன்படக்கூடியதாக இருக்கின்றது. “கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவிகளை கூகுளின் டீப்மைன்ட் எனும் பிரிவே உருவாக்கித் தருகின்றது” (AI Coach John,2025)
அரட்டை (Chat) :
Google AI Studio கூகுள் ஏஐ ஸ்டுடியோவில் அரட்டைப் (chat) பகுதியில் சரியான வினாவினை (Prompt) கொடுத்தால் அதற்கான விடையினைத் தருகின்றது. தமிழ்மொழியில் சிலப்பதிகாரம் குறித்து கேட்டேன் அதனைக் குறித்த செய்திகளை அளித்துள்ளது.
நேரலை (Stream) :
Talk to Gemini live - டாக் டு ஜெமினி லைவ் கருவினை இன்னும் எந்த ஒரு நிறுவனமும் அறிமுகப்படுத்தவில்லை. கூகுள் தான் முதன்முதலில் இதனை அறிமுகம் செய்துள்ளது. இக்கருவி குரல் உள்ளீட்டியின் வாயிலாக தமிழ் மொழியில் பேச முடியும். தமிழ் மொழி இலக்கியம் சார்ந்த செய்திகளையும் கொடுக்கின்றது. வினாவினை தட்டச்சு மற்றும் குரல் உள்ளீடு இரண்டினையும் செய்யலாம். நமக்கான பதிலினைக் குரல் உள்ளீடு மற்றும் தட்டச்சு இரண்டு முறையிலும் வழங்குகின்றது. இம்முறையில் திரைப்பகிர்வு (screenshare) செய்தும், வெப்கேம் (webcam) வாயிலாகவும், நாம் நமக்கான விடையினை பெற்றுக்கொள்ளலாம். படங்களுக்கான விளக்கத்தையும் தருகின்றது.
Gemini 2.5 flash preview native audio dialogue தேர்வு செய்தால் தமிழ்மொழியில் பேசலாம்.(AI buddy , 2025)
சோதனை ஓட்டமாக ஔவையார் விரதத்திற்கான படத்தினைத் கொடுத்த போது அதற்கான விளக்கத்தைக் Gemini 2.5 flash preview native audio dialogue குரல் உள்ளீடு மற்றும் உரைவடிவமாகவும் தந்துள்ளது.
Google AI Studio - ஜெனரேட் இமேஜ் (Generate Image) பகுதி படம் உருவாக்குதல், படத்திற்கான வினாவினை (Prompt) வழங்கினோம் என்றால் அதற்கான படத்தினை நமக்கு உருவாக்கி கொடுக்கிறது. இலவசமாக ஒரு குறிப்பிட்ட அளவே படங்களைத் தரும். படங்கள் எந்த அளவீட்டு முறையில் இருக்க வேண்டும் என்பதை அமைப்பு முறையில் (Settings) இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
Google AI Studio கூகுள் ஏஐ ஸ்டுடியோவில் ஜெனரேட் மீடியா காணொளி உருவாக்கம் ஜெனரேட் வீடியோஸ் VEO2 கருவினை பயன்படுத்தி எட்டு வினாடிக்குள் உள்ளான காணொளியினை உருவாக்கம் செய்து கொள்ள முடியும். நம் தமிழ் மொழி பாடத்திற்கான காணொளிகளையும் உருவாக்கம் செய்யலாம். காணொளி உருவாக்கத்தில் நாம் புகைப்படத்தினை கொடுத்தும் உருவாக்கம் செய்ய முடியும். தற்போதைய இலவச வழங்கலில் ஒலி அமைப்பு இல்லாத காணொளி மட்டுமே உருவாக்க முடியும்.
Build - இப்பகுதி வலைத்தளத்தை உருவாக்கியும், கணினி மொழி குறியீடுகளை உருவாக்கியும் தருகின்றது.
Google notebook LM
ஒருவர் படிப்பதற்கு தேவையான பாடங்களை சுருக்கமாக குறிப்பெடுக்கவும், மூளை வரைபடம் வாயிலாக கற்கவும், படிப்பதற்கு நேரம் இல்லாத போது உரையாடலாக கேட்கவும், ,காணொளியின் வாயிலாக பார்க்கவும் உதவுகின்ற ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும். .இதனுள் பாடத்திற்கு தேவையான ஆவணங்களைப் பிடிஎஃப் (PDF) கோப்பாக அல்லது இணையதள இணைப்பாகவும், youtube இணைப்பாகவும் கொடுத்தால் நாம் கேட்கும் விதத்தில் நமக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொடுக்கிறது.” உதாரணமாக youtube இணைப்பினை தந்தால் அதனுள் இருக்கக்கூடிய குரல் ஒலியினை நமக்கு உரையின் வடிவமாக நமக்கு மாற்றித் தருகின்றது( Akash,2025)
முடிவுரை
செயற்கை நுண்ணறிவு கருவி தமிழ் மொழிக்கு பல புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த வண்ணம் இருந்து கொண்டிருக்கிறது தமிழ் மொழியின் செழுமையை உலக அளவில் கொண்டு செல்ல உதவுகிறது. தமிழ் மொழியின் தனித்துவத்தையும் பண்பாட்டையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலமாக கொண்டு செல்ல முடியும் என்பதை செயற்கை நுண்ணறிவு கருவி நமக்கு அளித்த வண்ணம் உள்ளது. தமிழ் பண்பாட்டின் அடையாளத்தையும் நவீன உலகத்திற்கும் புதிய தலைமுறைக்கும் அதன் சிறப்புகளை எளிமையாகக் கொண்டு சேர்க்கும் கருவியாகவும் இருக்கின்றது.
துணைநூற்பட்டியல் பட்டியல்
AI Coach John https://youtu.be/kljx12mGM5k?feature=shared







