செயற்கை நுண்ணறிவு மூலம் சங்க இலக்கியத்தில் உள்ள அறிவியல் சிந்தனைகள் கற்பித்தல்

Dr. சே.. தங்கப்பிரியா

Assistant Professor of Chemistry

The Standard Fireworks of Rajarathnam college for women,Sivakasi

சுருக்கம்

               தமிழில் உள்ள பல்வேறு அறிவியல் கருத்தை விளக்க கணினியைப் பயன்படுத்துவது இன்றைய கல்வியியல் புரட்சியை ஏற்படுத்துகிறது. நாம் தாய்மொழி மூலம் கருத்தைக் கற்றுக்கொண்டால், நம் இளைய தலைமுறையினருக்கு நமது கலாச்சாரம், பண்பு மற்றும் நமது புராணத்தின் மதிப்பை வலியுறுத்துவோம். இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் றிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் நம்முடைய பழந்தமிழர் படைப்புகளாகிய முல்லைப்பாட்டு, நற்றிணைப் பாடல், குறட்பா, ஐம்பெருங்காப்பியங்கள், அன்னைத் தமிழ் வெளியிட்டுள்ளனர்.

அறிமுகம்

            செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பல்வேறு துறைகளில்தடம்பதிக்க ஆரம்பித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் மைல்கல்லாகக் கருதப்படும் ‘சாட்ஜிபிடி’ (ChatGPT), 2022இன் இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு இந்தத் தொழில்நுட்பம் மனித மூளையை விஞ்சும் நுண்ணறிவாகவே பார்க்கப்பட்டுவருகிறது. செயற்கை நுண்ணறிவால் மனித அறிவுக்கு எட்டாத செயல்பாடுகளைக்கூடச் செய்யவைக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு வருவது உண்மைதான். ஏனென்றால் செயற்கை நுண்ணறிவானது, ஏற்கெனவேவலைதளங்களில் இருக்கும் கணினி நிரல்கள், தரவுகளைத் திரட்டி அவற்றை ஒருங்கிணைப்பதன் அடிப்படையிலேயே கணித்துத் தீர்வுகளை முன்வைக்கிறது; இன்றைய நிலைமையில் பல்வேறு கணினி செயலிகள் அதாவது அகரம் தமிழ் டீச்சர், தமிழில் வீடியோ பாடங்களுடன் ‘மணற்கேணி’ என்ற மொபைல் செயலியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மொபைல் கருவிகளில் படிப்படதற்கேற்ப PDF கோப்புகள், அளவில் குறுக்கப்பட்டுள்ளன. மேலும், PDF கோப்புகளின் அளவு 10 MB முதல் 200 MB வரை கூட இருக்கும். எனவே, அதற்கேற்ற இணைய இணைப்புடன் செயலியைப் பயன்படுத்துங்கள். செயலியைப் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்புகள். டாக்டர் ஆர்ஆர் தமிழ் அகாடமி என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகர எட்-டெக் ஆப் ஆகும். இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் இலக்கியம் உட்பட தமிழ் மொழி கற்றலின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான படிப்புகளை எங்கள் பயன்பாடு வழங்குகிறது. எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த கல்வியாளர்கள் தமிழ் கற்பிப்பதில் பல வருட அனுபவத்தைக் கொண்டுள்ளனர் மற்றும் கற்றலை எளிதாகவும் வேடிக்கையாகவும் செய்ய பாடநெறி உள்ளடக்கத்தை வடிவமைத்துள்ளனர். பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது.  இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முல்லைப்பாட்டில் அறிவியல் சிந்தனைகள்

மழையின் வருகையைப் பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும், விலங்கினங்களின் தன்மைகள் பற்றியும், அணுக்கள் பற்றியும் தம்முடைய படைப்புகளில் பழந்தமிழர் வெளியிட்டுள்ளனர். கடல் நீரானது ஆவியாகி மேலெழுந்து பின் குளிர்ந்த காற்றால் மீண்டும் மழையாக வருகின்றது. இதனைக் கதைவடிவில் முல்லைப் பாட்டில் சொல்லியுள்ளனர். திருமால் வாமன வடிவம் எடுத்து உலகளந்தது போன்ற கரிய மேகம் கடல் நீரை முகந்து கொண்டு மேலெழுந்து மழை பெய்கிறது. இதனை,

”நனந்தலை உலகம் வளை நேமியொடு

நீர் செல நிமிர்ந்த மால் போல”

என்று முல்லைப்பாட்டில் நப்பூதனார் அவர்கள் மழை தோன்றுவதற்கான அறிவியற் காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் உள்ள இலண்டன் மாநகரில் 1925 ஆம் ஆண்டு இந்திய அலுவலகக் கட்டடத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் திரு.ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்கள் தாவரங்களுக்கும் உயிருண்டு என நிரூபித்தார். இவர் தாவரப் பேரறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. தாவரத்திற்கும் உயிர் உண்டு என்பதோடு மட்டுமல்லாது அவையும் தம் உடன் பிறந்தவையாகக் கருதி தமிழ் மக்கள் வாழ்ந்தமையை நற்றிணைப் பாடல் தெளிவுபடுத்துகிறது. தன் காதலன் அருகில் வந்து பேசுவதற்கு நாணி விலகிச் செல்கிறாள் தலைவி. காதலனுக்கு ஏதும் புரியாது காரணத்தைக் கேட்கிறான். தன் தமக்கை உடன் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறாள். சுற்றிப் பார்த்த தலைவனுக்கு அங்கு யாரும் காணாது கண்டு வியக்கிறான். தலைவியே காரணத்தைச் சொல்லுகிறாள்.

திருக்குறளில் அறிவியல் சிந்தனைகள்

 மனித உயிர்களும் பிற உயிர்களும் வாழ்வதற்கு முதல் ஆதாரமாக விளங்குவது நீராகும். நீர் இல்லையெனில் வாழ்வது சாத்தியமாகாது. 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் 46 கிலோ கிராம் நீர் இருக்க வேண்டும் என்பர். நீர் அத்தகைய இன்றியமையாதது ஆகும். ஆகவே,

”நீரின்றமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுகு

எனும் குறட்பா அறிவியற் கருத்தோடு கலந்து வருகிறது.

ஐம்பெருங்காப்பியங்களுள் அறிவியல் சிந்தனைகள்

            ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் விண்ணில் பறக்கும் மயிற்பொறி ஒன்றைச் சச்சந்தன் வடிவமைத்தான். அதனை இயக்கும் முறையைத் தன் மனைவி விசையைக்கு கற்றுத் தருகிறான். இம்மயிற் பொறியில் தப்பித்துச் செல்லும் விசையைக்கு இயக்கத் தெரியாததால்  மயானத்தில் இக்கருவி இறங்கி விடுகிறது. இராம காதையில் இடம்பெறும் புஷ்பக விமானம் விரைவாகவும், அதிக நபர்களைச் சுமந்தும் நீண்ட தூரம் செல்லும் தன்மை உடையதாகும். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பான ஆகாய விமானம் போன்று இலக்கியத்திலும் சுட்டப்பட்டுள்ளவை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூற்றாண்டை ஆளும் சக்தி மிகுந்த ஆற்றல் பிரிவாக அணுவியல் திகழ்கிறது. அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பும் பின்பும் தமிழ் இலக்கியத்தில் அணுவைப்பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அன்னைத் தமிழில்   அறிவியல் சிந்தனைகள்

1803-ஆம் ஆண்டுதான் ஜான் டால்டன் என்பவர் அணுக்கொள்கையை வெளியிட்டார். தாம்சன், அர்னால்டு, ரூதர் போர்டு, ஜேம்ஸ் சாட்விக் என்பவர்கள் அணுவின் மையத்தில் உள்ள நியூக்ளியஸைச் சுற்றி எதிர் மின்துகள்கள் சூழல்கின்றன என கண்டறிந்தார். அணுவைப்பற்றி பல இலக்கியங்களில் பாடப்பெற்றுள்ளன.

சாணிலும் உளன் ஓர் தண்மை

அணுவினைச் சதகூறு இட்ட

கோணிலும் உளன் – கம்பன்

அண்டங்கள் எல்லாம் அணுவாக அணுக்கள் எல்லாம்

அண்டங்களாகப் பெரிதாய்ச் சிறிதாயினானும்

அண்டங்களுள்ளும் புறம் புங்கரியாயினானும்

அண்டங்கள் ஈன்றாள் துணை என்பர் அறிந்த நல்லோர் – பரஞ்சோதி

இடையின்றி அணுக்கள் எல்லாம் சுழலும் என

இயல் நூலார் இசைத்தல் கேட்டோம் – பாரதி

இவ்வாறு அணுவின் தன்மைகளை அன்னைத் தமிழ் குறிப்பிட்டுள்ளது. பாரத தேசம் எனும் பாடலில் பாரதியின் பொறியியல் அறிவு புலனாகிறது. சிங்களத் தீவிற்குப்பாலம் அமைத்தல், வங்கத்தில் வரும் நீர்ப்பெருக்கை மைய நாடுகளுக்கு பயன்படும் வகையில் நதிநீர் இணைப்பை பற்றிப் பேசினான்.

கண்ணீ­ர்ப் பூக்களில் அறிவியல் சிந்தனைகள்

பூமிக்கு வெளியே நிற்க இடம் தந்தால் இந்த உலகை நெம்பிக் காட்டுவேன் என்று கூறிய ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தை நினைவுபடுத்தும் வண்ணம்

இந்த

பூமி உருண்டையை

புரட்டி விடக்கூடிய

நெம்புகோல் கவிதையை

உங்களில்

யார் போடப் போகிறீர்கள்

என்று கண்­ணீர் பூக்களில் மு.மேத்தா. கேட்கிறார். காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று எதிர்க்கும் எனும் தத்துவத்தை எஸ். சிவராஜ் தம்முடைய கவிதையில்

நாம் ஒத்தவர்கள்தானே

பின்பு ஏன்

விலகுகின்றாய்

விலகி ஓடுகின்றாய்

ஓ…… ஒத்த துருவங்கள்

விலக்கிக்கொள்ளும் அல்லவா? – என்று குறிப்பிடுகின்றார்.

புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பிறவியல் கூறப்பட்டு எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்று மாணிக்கவாசகப் பெருந்தகை கூறியது டார்வின் பரிணாமக் கோட்பாட்டின் கூறே ஆகும்.

அமிபா செல்லிலிருந்து

குரங்காய்

பரிணாமம் எய்தி

என்று மனித அவதாரம்

எடுத்ததாய்

அப்ரூவர் ஆன

டார்வின் சாட்சியம்

எனும் சாகுல் அமீது என்பவரின் கவி வரிகள் பரிணாமக் கோட்பாட்டைப் பேசுகிறது. விலங்கிலிருந்து மனித நிலை எய்தியவன் மீண்டும் விலங்காய் மாறி அழியும் நிலையை வைரமுத்து சிகரங்களை நோக்கி எனும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். 

            இவ்வாறு நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றைய நிலைமையில் அறிவியல் கோட்பாடுகளைப் பல்வேறு கணினி செயலிகள் அதாவது அகரம் தமிழ் டீச்சர், தமிழில் வீடியோ பாடங்களுடன் ‘மணற்கேணி’ என்ற மொபைல் செயலியை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது, மொபைல் கருவிகளில் படிப்படதற்கேற்ப PDF கோப்புகள். டாக்டர் ஆர்ஆர் தமிழ் அகாடமி என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு புரட்சிகர எட்-டெக் ஆப் ஆகியவை பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழியை திறம்பட கற்பிக்க உதவியாக இருக்கிறது.. இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் இலக்கியம் உட்பட தமிழ் மொழி கற்றலின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான படிப்புகளை வழங்குகிறது. கற்றலை எளிதாகவும் வேடிக்கையாகவும் செய்ய பாடநெறி உள்ளடக்கத்தை வடிவமைத்துள்ளனர். பழந்தமிழரின் வாழ்வில் அணுவில் தொடங்கி அண்டம்வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது.  இலக்கியம் காலத்திற்கு ஏற்பத் தன் பாடுபொருளையும், பரிணாமத்தையும் விரிவுபடுத்திக் கொண்டு வருகிறது. நாம் வாழும் உலகம் அறிவியல் உலகமாக மாறிக்கொண்டிருக்கும் வேளையில் நம்முடைய இலக்கியமும் அறிவியலைப் படைப்பிலக்கியத்தில் பயன்படுத்தி வருகிறது. நம் முன்னோர்கள் பழந்தமிழ் இலக்கியத்திலிருந்தே அறிவியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கணினி செயலி மற்றும் செயற்கை நுண்ணறிவு சங்கைலக்கியத்தில் அறிவியல் அறிவை கற்பிக்க ஒரு புதிய வழியை வழங்குகிறது. இதை கற்பிக்க இந்த வழியை நாம் பின்பற்றினால், அது மாணவர்களுக்கு பயனுள்ள கற்றலுடன் அறிவியல் சிந்தனைகளை கற்றுக்கொள்வதோடு, பள்ளியில் உள்ள அனைத்து வகையான மாணவர்களுக்கும் தார்மீக ஆதரவை அளிக்கிறது. இந்த கற்பித்தல் முறையானது கடினமான அறிவியல் சிந்தனைகளை மாணவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்வதோடு, அவர்களின் சொந்த தாய்மொழியில் கருத்தை நினைவில் கொள்ளச் செய்கிறது.

மாணவர்கள் தங்கள் சொந்த தாய்மொழியில் கருத்தைக் கற்றுக்கொண்டால், அது அவர்களின் துறையில் திறம்படவும் எளிதாகவும் வளர்ச்சி அடைய அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. பள்ளியில் அறிவியல் ஆசிரியர் அறிவியல் சிந்தனைகளை கற்பித்தால், அவர்கள் தங்கள் கருத்தை புத்தகம் மூலம் சங்க இலக்கியம் மூலம் விளக்குவதற்கு உதாரணம் கொடுத்தால் அனைத்து மாணவர்களுக்கும் புரியாது, ஆனால் அதே கருத்தை கணினி தமிழ் செயலி மூலம் கற்பித்தால் செயற்கை நுண்ணறிவு. உதாரணமாக ஒரு அறிவியலில், தாவரங்கள் கூட நம்மைப் போலவே உயிர் வாழ்கின்றன என்பதை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் சொன்னால் அது மாணவர்களின் மனதில் பதிக்கிறது. அன்று அது பழமொழி மூலம் நிரூபிக்கப்பட்டது“பசுமரத்தானி போல பதித்தாள்”

பொதுவாக அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் கற்பிப்பது குழந்தைகளின் மனதில் என்றென்றும் எளிதில் புரியும். இந்த கற்பித்தல் முறை மாணவர்களுக்கு அறிவியல் கருத்தைப் புரிய வைக்கிறது. இந்த கற்பித்தல் முறை ஆசிரியரை கருத்தை எளிதாக விளக்குகிறது, மேலும் அவர்கள் கருத்தை புரிந்து கொள்ள எடுத்துக்காட்டுகளை வழங்குகிறார்கள், இது மாணவர்கள் கேட்கும் கேள்விக்கு தீர்வையும் வழங்குகிறது. வருங்காலத்தில் இம்முறையை தமிழகத்தில் கடைபிடித்தால் அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்குச் செல்வதுடன், கல்வியில் எந்த இடையூறும் ஏற்படாது. அனைவரும் கல்வி கற்று, அப்துல் கலாமின் கனவுகள் நிச்சயம் நனவாகும்.

error: Content is protected !!