காப்புரிமை என்றால் என்ன?

இந்தியக் காப்புரிமைச்சட்டமும் கணினித் தொழில்நுட்பமும்

ஒருவருடையக் காப்புரிமம் என்பது  ஒரு படைப்பாளியின் பெயரை மட்டும் படைப்பில் இடாமல் அப்படைப்பைச்சார்ந்த  தனிப்பட்ட உரிமை.

   படைப்பைச்சார்ந்த   உரிமையை, தனது படைப்பை ஒரு படைப்பாளி தானேக் கொண்டாடும் வகையில்   இந்தியக் காப்புரிமைச் சட்டம்வி1957ம் வருடம் ஜீன் நான்காம் தேதி, இயற்றப்பட்டு 1958ம் ஆண்டு ஜனவரித் திங்கள்  21ம் நாள் அமலுக்கு வந்துள்ளது.   வந்துள்ளது. அதன் பின் 2013ம் ஆண்டு சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இச்சட்டத்தின்  தனது பிரிவு 14,என்ன கூறுகிறது என்றால்.

ஒரு படைப்பாளி மட்டுமே  தனது படைப்பை எந்த ஒரு விதத்திலும் பொது மக்களுக்குக் கொண்டு செல்லலாம்.

 இலக்கியம் நாடகம் இசை ஆகியப் படைப்புக்களை எந்த ஒரு விதத்திலும் மீண்டும்  எந்த வகையிலும்  எக்கருவி கொண்டும் உருவாக்கவும் சேமிக்கவும் படைப்பாளிக்கு மட்டுமே உரிமை உள்ளது மேலும் பொதுமக்களிடம் ஏற்கனவே இருக்கும்  நகல்களைத் தாண்டி, மீண்டும் நகல்களை  உருவாக்கிப் பொதுவில் விநியோகிக்கவும் படைப்பாளியே உரிமை பெற்றவர்.

 தனது படைப்பை எந்த ஒரு வகையிலும் செயல்படுத்திக் காட்டவும் படைப்பாளிக்கு மட்டுமே உரிமை உண்டு. தனது படைப்ப்பினை, திரைப்படமாகவும் திரை இசையாகவும் மாற்றவும்,  மற்ற மொழிகளில் மொழி பெயர்க்கவும். படைப்பைத் தழுவி மற்றோரு  படைப்பை உருவாக்கவும், அவ்வாறு உருவாக்கியப்படைப்புக்களுக்கும், அசல் படைப்பிலிருந்து கிடைக்கும் எல்லா உரிமையும் கிடைக்கும்

  ஒரு கணினி மென்பொருள்  என்று சொல்லும்போது, மேற்கொண்ட உரிமைகளுடன் மென்பொருளை நிறுவனங்களுக்கு  வாடகைக்கு விடுவதற்கும், விற்பதற்கும் உரிமையை அவர் மட்டுமேக் கொண்டுள்ளார்.

     ஒரு  கலைஞருக்கே அவரது படைப்பினை, மீண்டும் உருவாக்கவும், அதை எல்லா வடிவங்களிலும் சேமித்து வைப்பதும், அதை இரு பரிமாண அல்லது முப்பரிமாண வடிவங்களாக மாற்றுவதற்கும் உரிமை உண்டு.

 திரைப்படம் என்று சொல்லும்போது அப்படத்தை வியாபரத்திற்காக வாடகைக்கு விடுவதும், அத்திரைப்படங்களை நகல் எடுப்பதும் அவருக்கே உரிமையாகும்ஒரு இசையமைப்பாளருக்கும் இதேப் போலத்தான் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது இசையை வேறொரு கருவி கொண்டு  உருவாக்கவும், சேமிக்கவும்அதை வாடகைக்குக் கொடுக்கவும் விற்கவும் பொதுவிநியோகமும்  அந்த இசையமைப்பாளரே செய்யலாம்.

  இந்தச் செய்திகளெல்லாம் புதிய செய்திகள் அல்ல. கல்விக் கட்டமைப்பில் உள்ள ஒவ்வோரும் நன்கு தெரிந்து இருக்க கூடியதும் அனுபவத்தில் உணர்ந்ததும் தான். ஆனால் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளில் இந்தக் காப்புரிமம் எவ்வளவு எளிதாக  மீறப்படுகிறது. அது ஒரு நடைமுறைப் பழக்கங்களாகவே ஏற்றுக் கொள்ளவும் பட்டுவிட்டது. அதுவும் இணையத்திலிருந்து படங்கள் எடுக்கப்பட்டு மீண்டும்  மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன

  ஒரு காப்புரிமையாளரின் அனுமதி பெற்ற பின்பு தான்  மற்றோருவர் அதைப்பயன் படுத்தி முடியும்.  இணையத்தில் படைப்பாளரைத் தேடி கண்டு பிடிக்க  முடியுமா?  நமது வலைப்பூவிலோ அல்லது ஆய்வு நூலிலோ இருக்கப் போகும் படங்களை யார் கண்டு கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்துச் செயல்படுபவர்கள் உண்டு.

     அது சரியா?

 கண்டிப்பாக இல்லை.  அதுவும்   காப்புரிமை மீறலைக் கல்வியாளர்களே கண்டிக்காததன் விளைவு இன்று  புதுப் படைப்புக்கள்   மிகவும் குறைந்து விட்டன.  இருக்கிறது தான், ஆனால் காப்புரிமையை நிலை நிறுத்தி செயல் படும் போது ஓவ்வஓரு படைப்பளின்  ஒவ்வரு விதமாக மாறுபட்டு இருக்கும், இன்று எத்தனையோக் கோடி படைப்புகள் வந்திருக்கும்.

ஆனால் பேராசிரியர்களுக்கு மாணவர்களை வழிநடத்தி, வகுப்புக்களை மேலாண்மை செய்து, நிருவாகங்களுக்குப் பதில் சொல்லி  இடையே தேர்வுகளையும் நடத்தி அதன் பின் வளங்களையும் உருவாக்க வேண்டும் என்றால்  எப்படி முடியும் என்றுக் கல்வியாளர்கள் திணறத்தான்  செய்கின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!