ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை (admin@tamilcomputingjournal.org) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20 மே, 2024 திங்கட்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். ஆய்வுச்சுருக்கத்தின் முழுக்கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 05.06.2024
- தமிழ்மொழி வளர்ச்சியில் கணினித் தொழில்நுட்பங்கள்
- கணினித் தமிழும் பணிவாய்ப்புகளும்
- தமிழ் மின் உள்ளடக்கங்கள்
- தமிழ்த் தரவுத்தளங்கள்
- கணினித்தமிழ் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
- பல்துறைக் கற்றல் கற்பித்தலில்கணினித் தொழில்நுட்பங்கள்
- செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் வழி பாரம்பரியப் பாதுகாப்பும் மேம்படுத்துதலும்
போன்ற மேற்கண்ட பொருண்மைகளில் ஆய்வுக்கட்டுரை அமையலாம் “பல்துறைக் கற்றல் கற்பித்தலில் கணினித் தொழில்நுட்பப் பயன்பாடுகளையும், வாய்ப்புகளையும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தை மையக்கருத்தாகக் கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் அமைந்திருத்தல் வேண்டும் .
- அனைத்துத் துறைகளையும் சார்ந்த பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், கணினியியல் , மொழியியல், கல்வியியல் சார்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள், நிரலாளர்கள், முனைவர்ப் பட்ட ஆய்வாளர்கள் (Ph.D.), மொழி ஆர்வலர்கள் அனைவரும் கட்டுரை வழங்கலாம்.
- ஆய்வுச்சுருக்கத்தினை ஆங்கிலத்திலும், தமிழிலும் அனுப்ப வேண்டும். இரு மொழிகளிலும் குறிச்சொற்கள் இருக்க வேண்டும்.
- ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரை அமையலாம்.
- ஆய்வு மாணவர்கள் தங்கள் நெறியாளரின் ஒப்புதலுடன் அவரது கையொப்பத்தினைப் பெற்று அனுப்ப வேண்டும்.
- ஆய்வுக் கட்டுரையை A4 தாளில் 1.5 வரி இடைவெளியுடன் ஒருங்குறி (மருதம்) (Unicode) எழுத்துருவில் 12 புள்ளி அளவில், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
- ஆய்வுக்கட்டுரையின் சுருக்கத்தை (admin@tamilcomputingjournal.org) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20 மே, 2024 திங்கட்கிழமைக்குள் அனுப்ப வேண்டும். ஆய்வுச்சுருக்கத்தின் முழுக்கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 05.06.2024
- கட்டுரையின் தலைப்புக்குக்கீழ் கட்டுரையாளரின் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல், ஆங்கில ஆய்வுச்சுருக்கம், ஆங்கிலக் குறிச்சொற்கள், தமிழ் ஆய்வுச்சுருக்கம், தமிழ்க் குறிச்சொற்கள், அதனை அடுத்து கட்டுரை இருத்தல் வேண்டும்.
- கட்டுரையில் உள்ள கருத்துகள் கருத்துத் திருட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும், கட்டுரையின் பொருண்மைககு ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும்
- நூலாக்கம் கருதிக் கட்டுரையைச் சுருக்கவும், திருத்தவும் பதிப்புக் குழுவிற்கு உரிமை உண்டு.
- ஆய்வுக் கட்டுரைகள் உரிய மேற்கோள்களுடன், துணை நூற்பட்டியலுடன் இருத்தல் வேண்டும் (APA Style)
- கட்டுரையில் பிற நூலாசிரியர்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தும் போது (APA Style) பயன்படுத்தி மேற்கோள் காட்ட வேண்டும்.
- கட்டுரைகள் ஆய்வு வல்லுனர் குழுவால் மதிப்பீடு செய்யப்பெற்று மாநாட்டு இதழ் Kalviyiyal Manattu Ayvukkovai என்னும் பெயரில் ISSN 2767 – 0597 என்னும் எண்ணுடன் அச்சு இதழாகவும் Kalviyiyal Manattu Ayvukkovai என்ற பெயரில் ISSN 2767 – 0600 என்ற எண்ணுடன் இணைய இதழாகவும் வெளிவரும். Tamil Computing Journal என்ற இணையத்தளத்திலும் மாநாட்டுக் கட்டுரைகள் வெளியிடப்படும்
- கருத்தரங்கில் பங்கேற்றுக் கட்டுரை வாசிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்
- ஏற்றுக்கொள்ளப்படாத கட்டுரைகள் மின்சுவரொட்டிகளாக வழங்க வாய்ப்புக் கொடுக்கப்படும்.
- கட்டுரை எழுதாமல் பங்கேற்க மட்டும் வரும் பங்கேற்பாளர்கள் தங்கும் வசதிகளைத் தாங்களே பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்களுக்கு மதிய உணவும், சான்றிதழும் வழங்கப்படும்.
.
முக்கிய விவரங்கள்:
- கட்டுரை வழங்கக் கட்டணம் இல்லை.
- பாமினி எழுத்துருவில் அனுப்பப் படும் கட்டுரைகள் ஏற்கப்படாது.( இது தமிழ்கணிமை விழிப்புணர்வு பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க உதவுகிறது)
- தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கட்டுரைகள் வழங்கலாம்.
- இரு மொழிகளிலும் குறிச்சொற்கள் இருக்க வேண்டும்.
- கட்டுரையின் தலைப்புக்குக் கீழ் கட்டுரையாளரின் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் இருத்தல் வேண்டும்.
- கட்டுரையில் உள்ள கருத்துக்கள், படங்கள், கருத்துத் திருட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்படும்.
- நூலாக்கம் கருதிக் கட்டுரையைச் சுருக்கவும், திருத்தவும் பதிப்புக்குழுவிற்கு உரிமை உண்டு.
- ஆய்வுக் கட்டுரைகள் உரிய மேற்கோளுடன், துணைநூற்பட்டியலுடன் APA Style – இல் இருத்தல் வேண்டும்.
- கட்டுரையில் பிற நூலாசிரியர்களின் மேற்கோள்களைப் பயன்படுத்தும்போது, APA Style -ஐப் பயன்படுத்தி மேற்கோள் காட்ட வேண்டும்.
- ஆய்வு மாணவர்கள் தங்களின் நெறியாளரின் ஒப்புதலுடன் அவரது கையொப்பத்தினைப் பெற்று ஆய்வுச்சுருக்கத்தினைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் அனுப்ப வேண்டும்.
- ஆய்வுக் கட்டுரையை A4 தாளில் 1.5 வரி இடைவெளியுடன் ‘மருதம்’ / ஒருங்குறி (unicode) எழுத்துருவில் மட்டும் 12 புள்ளி அளவில், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்.
- சொற்செயலி ஆவணங்களில் கட்டுரையைச் சமர்ப்பிப்பது, வரவேற்கப்படுகிறது.(இது தமிழ்கணிமை விழிப்புணர்வு பற்றிய புள்ளிவிவரங்களைச் சேகரிக்க உதவுகின்றது)
வார்ப்புரு
பேராசிரியர்கள், கணினியியல், மொழியியல், கல்வியியல் சார்ந்த தொழில் நுட்ப வல்லுநர்கள், நிரலாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் (M.Phil), முனைவர் பட்ட ஆய்வாளர்கள் (Ph.D), மொழி ஆர்வலர்கள் அனைவரும் கட்டுரை வழங்கலாம். ஆய்வுச்சுருக்கத்தின் மாதிரி இங்கு இணைக்கப் பட்டுள்ளது. அதற்கான வார்ப்புரு